செவ்வாய், 31 அக்டோபர், 2017

பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் பிருகு மஹரிஷிக்கு குரு பூஜை விழா



சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மருதேரி கிராமத்தில் பிருகு மகரிஷி அருள் நிலையம் அமைந்துள்ளது.பிருகு மகரிஷி,ஸ்ரீ அகத்தியர் ,ஸ்ரீ நந்தி தேவர் ஜீவ நாடியில் இடப்படும் உத்தரவுப்படி ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரம் அன்று சித்தர் மற்றும் ஜோதி வழிபாடுகள் நடைப்பெற்று பின் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இந்த பூஜையில் ஏற்றப்படும் ஜோதியில் சித்தர்கள் எழுந்தருளி மற்றும் அதை தொடர்ந்து ஜீவ நாடியிலும் சித்தர்கள் எழுந்தருளி ஆசி வழங்குவார்கள்.

வரும் ஹேவிளம்பி வருடம் தனுர்(மார்கழி) மாதம் 16 ஆம் நாள் ரோகிணி நட்சத்திரம் அன்று (31/12/2017) .  பிருகு மஹரிஷிக்கு குரு பூஜை விழா நடைப்பெற உள்ளது.அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

பிருகு மஹரிஷி வரலாறு 

உலகம் தோன்றிய காலத்தில் படைக்கும் கடவுளான பிரம்மதேவரால் உருக்கப்பட்டவர் பிருகு முனிவர். "பிருகு என்னும் சொல்லுக்கு, "கடுமையான தவசக்தியால் பாவங்களைப் பொசுக்குபவர் என்று பொருள். பஞ்சபூதங்களில் அக்கினியுடன் பிருகு மகரிஷி பிறந்ததாக வேதங்கள் கூறுகின்றன.

பிருகு மகரிஷி கியாதி என்ற பெண்மணியை மணந்து கொண்டார். இந்த தம்பதிக்கு மகாலட்சுமியே மகளாகப் பிறந்தாள். பின் விஷ்ணுவை மணந்து கொண்டாள். இதனால் உலகத்தைக் காக்கும் ஸ்ரீவிஷ்ணுவுக்கு ""மாமனார் என்ற பெருமை பெற்றவர் இவர். பிருகுவின் பெயரால் தான் லட்சுமிக்கு "பார்கவி என்ற பெயர் ஏற்பட்டது.
மகாபாரதத்தில் பிருகு மகரிஷிக்கும் பரத்வாஜ முனிவருக்கும் நடந்த வாக்குவாதம் மிகவும் சிறப்பானது. இதற்கு"" பிருகு பரத்வாஜ சம்வாதம் என்று பெயர். இப்பகுதி தத்துவக் கருத்துக்களை எடுத்துச் சொல்லும் பகுதியாக அமைந்துள்ளது. கடவுளைப் பற்றி சொல்வதில் இவர் தனிப்பெயர் பெற்றவராக இருக்கிறார்.

சூதபவுராணிகர் என்ற முனிவர் புராணக் கதைகளை உலகிற்கு வழங்கினார். இந்தக் கதைகளைக் கேட்டு உலகிற்கு தந்தவர் பிருகு வம்சத்தில் பிறந்த சவுனகர் என்பவர் ஆவார். இவர் இல்லாவிட்டால் புராணக்கதைகளே நமக்கு கிடைத்திருக்காது. என்றும் பதினாறு வயது என்ற பெருமைக்கு உரிய மார்க்கண்டேய மகரிஷியும் பிருகு வம்சத்தவர் தான். விஷ்ணு எடுத்த தசாவதாரங்களில் பரசுராமரும் இவரது வம்சத்தில் தான் அவதரித்தார். பிருகு எனப்படும் பார்கவ வம்சத்தில் அவதரித்ததால் பரசுராமருக்கு "பார்கவ ராமன் என்ற பெயரும் உண்டு. விருத்திராசுரனைக் கொல்ல தன் முதுகெலும்பினையே இந்திரனிடம் கொடுத்து, தன்னையே மாய்த்துக் கொண்ட ததீசி முனிவரும் பிருகுவம்சத்தில் தோன்றியவரே. ஜனமேஜயர் செய்த சர்ப்பயாகத்தை நடத்தி வைத்த உதங்கமுனிவர் இவ்வம்சத்தவர் தான். இப்படி புராணங்களில் இடம்பெற்ற எத்தனையோ மகரிஷிகள் பிருகுவம்சத்தில் அவதரித்துள்ளனர்.

பிருகு மகரிஷி புலோமா என்ற பெண்ணையும் மணந்தார் . இவள் குழந்தையாக இருந்தபோது மிகவும் சுட்டியாக இருந்தாள். அவளைக் கட்டுப்படுத்த எண்ணிய பெற்றோர், ""அதோ பார்! அந்த மரத்தில் இருக்கும் பிரம்மராட்சதனிடம் உன்னைக் கொடுத்துவிடுவோம் என்று சொல்லி பயமுறுத்தினர். விளையாட்டாக சொன்ன சொல்லை அவர்கள் மறந்து விட்டனர். ஆனால், மரத்தில் இருந்த பிரம்மராட்சதன் இந்நிகழ்வை மறக்காமல் தக்க தருணத்திற்காகக் காத்திருந்தான்.

புலோமாவிற்கு திருமணவயது வந்தது. பிருகு மகரிஷிக்கும் புலோமாவுக்கும் திருமணம் சிறப்பாக நடந்தது. இதை அறிந்த ராட்சதனுக்கு கடும் கோபம் உண்டானது. புலோமா இருந்த பிருகுவின் ஆஸ்ரமத்திற்கு அருகில் வந்து ஒரு மரத்தில் தங்கிக் கொண்டான். இவ்விஷயத்தை அறிந்த பிருகு தன் மனைவிக்கு பாதுகாப்பு தேடினார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த புலோமாவை, தான் இல்லாத நேரத்தில் பாதுகாக்கும்படி தன்னோடு பிறந்த தன் சகோதரன் அக்னிதேவனுக்கு உத்தரவிட்டார். அதனால் அவன் ஆஸ்ரமத்திலேயே தங்கவேண்டியிருந்தது.
ஒருநாள் பிருகு மகரிஷி ஆசார அனுஷ்டானங்களுக்காக நதிக்கரைக்கு கிளம்பினார். அக்னிதேவன் ஆஸ்ரமத்தில் காவல் காத்துக் கொண்டிருந்தான் . இதுதான் சரியான சந்தர்ப்பம் என்று எண்ணிய ராட்சதன், ஆஸ்ரமத்தின் உள்ளே நுழைந்தான். எதிர்ப்பட்ட அக்னியிடம் பவ்யமாக பணிந்து, ""சுவாமி! நீங்களே எனக்கு நியாயத்தைச் சொல்லுங்கள். புலோமாவின் பெற்றோர் தன் பெண்ணை எனக்கு தருவதாக வாக்களித்துவிட்டு உமது சகோதரருக்கு திருமணம் செய்துவைத்தது சரியா? இவள் குழந்தையாக இருந்த போதே என்னுடையவளாகிவிட்டாள்! என்று நியாயம் பேசினான். அவனது விதண்டாவாதத்தைக் கேட்ட அக்னி, ""தன் அண்ணியார் பிருகு மகரிஷிக்குத் மட்டுமே உரியவள், திருமணமான பெண்ணை அவனுடன் அனுப்பஇயலாது, என்று மறுத்துவிட்டார். பிரம்ம ராட்சதன் கோபாவேசமாக எழுந்தான்.

""இவள் என் மனைவி! நான் இவளைத் தூக்கிச் செல்வேன்! என்று புலோமாவைப் பலவந்தப்படுத்தினான். அந்த சமயத்தில் பயத்தில் புலோமா அலறித் துடித்தாள். அவள் ராட்சதனின் பிடியில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு ஓரிடத்தில் போய் விழுந்தாள். அப்போது பிரசவவலி ஏற்பட்டு குழந்தை பிறந்தது. அந்த குழந்தையின் முகம் மின்னலைப் போல இருந்தது. அந்த ஒளியை தாங்க முடியாத பிரம்மராட்சதன் அந்த கணமே சாம்பலானான்.

பிருகு தன் அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு ஆஸ்ரமம் திரும்பினார். நடந்த விஷயங்கள் அவருடைய ஞானதிருஷ்டியில் தெரிந்தன. தன் மனைவி புலோமாவையும், தேஜஸ் நிறைந்த குழந்தையும் வந்து பார்த்தார்.
தன் மனைவியைப் பாதுகாக்கத் தவறிய அக்கினிதேவன் மீது கோபம் உண்டானது. ""ஏ! அக்னி! நீ யாகத்தீயாகவும், அடுப்புத்தீயாகவும் இருந்து நற்பெயர் பெற்றாய். இனி ஆங்காங்கே திடீர் திடீரெனப் பிடித்து அகப்பட்டவர்களை எல்லாம் பஸ்பமாக்கி தன் இரையாக்கிக் கொள்ளும் இழிந்த நிலையை அடைவாய். மக்கள் உன்னைத் திட்டித் தீர்ப்பார்கள், என்று சாபமளித்தார். மனம்வருந்திய அக்னிக்கு ஆறுதல் சொல்ல ஓடோடிவந்தார் பிரம்மா.

"" அக்னியே! உனக்கு கிடைத்த சாபம் பற்றி கவலைப்படாதே. இவ்வுலகில் நீ பற்றி அழிக்கப்போகும் பொருட்களும், மனிதர்களும் உலகத்திற்கு தேவையில்லாதவர்களாகவே இருப்பர். அவரவர் முன்வினை மற்றும் செய்த பாவத்தின் அடிப்படையில் உன்னால் பொருட்களையும், உயிரையும் இழப்பர். எனவே உலகத்தைத் தூய்மைப்படுத்தும் பணியை விருப்பத்தோடு செய். உன்னால் உலகம் நன்மை பெறுவதாக, என்று ஆறுதல் சொல்லி தேற்றினார்.

புலோமாவிற்குப் பிறந்த குழந்தைக்கு ""சியவனர் என்று பெயரிட்டு வளர்த்தனர். சிசுவாக இருந்தபோதே தேஜஸால் பிரம்ம ராட்சதனைக் கொன்ற இவருக்கு தனிச் சிறப்பிடம் உண்டு. ஒருமுறை பிருகு மகரிஷி, மும்மூர்த்திகளில் சாந்த குணம் கொண்ட மூர்த்தி யார் என்பதை அறிய பிரம்மா, விஷ்ணு, சிவன் மூவரையும் காணச் சென்றார். பிரம்மாவும், சிவனும் பிருகு மகரிஷி வைத்த சோதனையில் தோற்றதால் சாபம் பெற்றனர். பிரம்மாவுக்கு கோயில் இல்லாமல் போனது. சிவன் லிங்கவடிவம் பெற்றார்.

ஆனால், விஷ்ணு பிருகு மகரிஷி காலால் உதைத்த போதும் கோபப்படாமல் புன்சிரிப்புடன் பிருகுவின் பாதங்களைப் பணிந்து நின்றார். அதனால், மும்மூர்த்திகளில் விஷ்ணுவே சாந்தமூர்த்தி என்ற முடிவுக்கு வந்தார் பிருகு. ஜோதிடம், ஆயுர்வேதம் போன்ற சாஸ்திரங்களில் பிருகு மகரிஷியின் அரிய நூல்கள் பல காணப்படுகின்றன. பிராமண சமுதாயத்தில் ""ஸ்ரீவத்ஸ கோத்ரம் என்ற கோத்திரத்திற்கு மூலபுருஷராக இருப்பவர் இவர்.


பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் மாமகரிஷி மரீசி சித்தர் எழுந்தருள சித்தம்



சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மருதேரி கிராமத்தில் பிருகு மகரிஷி அருள் நிலையம் அமைந்துள்ளது.பிருகு மகரிஷி,ஸ்ரீ அகத்தியர் ,ஸ்ரீ நந்தி தேவர் ஜீவ நாடியில் இடப்படும் உத்தரவுப்படி ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரம் அன்று சித்தர் மற்றும் ஜோதி வழிபாடுகள் நடைப்பெற்று பின் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இந்த பூஜையில் ஏற்றப்படும் ஜோதியில் சித்தர்கள் எழுந்தருளி மற்றும் அதை தொடர்ந்து ஜீவ நாடியிலும் சித்தர்கள் எழுந்தருளி ஆசி வழங்குவார்கள்

வரும்  ஹேவிளம்பி வருடம் ஐப்பசி மாதம் 20 ஆம் நாள் ரோகிணி நட்சத்திரம் அன்று (06/11/2017) காலை 8.00 மணியளவில் மாமகரிஷி மரீசி சித்தர் மருதேரியில் எழந்தருள உள்ளார். அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

மாமகரிஷி மரீசி அவர்களின் வரலாறு 

மரீசி என்பவர் இந்து தொன்மவியலின் அடிப்படையில் பிரம்மாவின் குமாரன் ஆவார். மரீசி மகரிஷியின் மனைவிக்கு கலை என்றுபெயர். இவர்களுக்கு காசியப மகரிஷி என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர். மேலும் மரீசி சப்த ரிஷிகள் எனப்படும் ஏழு பெரும் ரிசிகளுள் ஒருவரும், பிரம்மாவின் படைப்பு தொழிலை செய்ய உருவாக்கப்பெற்ற பிரஜாபதிகளுள் ஒருவருமாவார்

பிரம்மா தன் படைப்புத் தொழிலுக்கு உதவியாக இருக்க சனகர், சனந்தர், சனாதனர், சனத்குமாரர் ஆகியோரைத் தோற்றுவித்தார். ஆனால், அவர்கள் சிவபெருமானை நோக்கி தவமிருந்து மெய்ஞானத்தினை அடைய சென்றதால், நாரதர், தட்சன், வசிட்டர், பிருகு, கிரது, புலஸ்தியர், ஆங்கிரசு, அத்திரி, மரீசி ஆகியோரை பிரம்மா தோற்றுவித்து தனக்கு உதவியாக இருக்கும்படி செய்தார்

ஒரு முறை மரீசி சிவபெருமானை 12 ஆண்டுகள் தாந்திரீக முறைப்படி வணங்க முடிவுசெய்தார். ஆனால் கையிலை முழுவதும் நீர்நிலைகள் பனியாக உறைந்து நின்றன. தாந்திரீக முறைப்படி குளித்து ஈர உடையுடனே வழிபடவேண்டும் என்ற நியதியுள்ளதால் மரீசியால் சிவபெருமானை வணங்க இயலவில்லை. எனவே தனது தந்தையான பிரம்மாவிடம் அபயம் வேண்டினார்.

பிரம்மாவும் கைலாயம் மலையிலுள்ள பனிக்கட்டிகளை உருகச் செய்து அதிலிருந்து மானசரோவர் என்ற ஏரியை உருவாக்கி தந்தார்.


பார்கவ புராணத்தில் மரீசி மகரிஷி..... 

பிரமனிடம் கேட்டான் அவர் மகன் மரீசி,
“பரம்பொருள் என்பவர் உண்மையில் யார்?

முத்தொழில் புரியும் மும்மூர்த்திகளின்
உத்தமமான தலைவன் யார் தந்தையே?”

“மும் மூர்த்திகளைப் படைத்தவர் விநாயகர்;
முத்தொழில்களை அளித்தவரும் விநாயகர்.

முழுமுதற் கடவுள் ஆவார் விநாயகர் – அண்டம்
முழுவதும் வியாபித்து இருப்பவர் விநாயகர்.”

பக்தி பூண்டார் மரீசி விநாயகப் பெருமான் மீது;
மிக்க அன்புடன் தவம் புரிந்தார் விநாயகர் மீது.

காட்சி தந்தார் கனிவுடன் விநாயக பெருமான்,
“கேட்பாய் மரீசி நீ விரும்பும் வரங்களை!” என

“பார்வதி தேவி பிறக்க வேண்டும் என் மகளாக;
ஆர்வத்துடன் தரவேண்டும் அவளை உமக்கே!”

அனுக்ரஹம் செய்து அருளினார் விநாயகர்;
அங்கிருந்து மறைந்து அருளினார் பின்னர்.

சத்தியலோகம் திரும்பினார் மரீசி – தான்
சாதித்துப் பெற்ற வரங்களைக் கூறினார்.

வேதவல்லி என்ற கன்னியைப் படைத்தான்;
வேதநாயகன் மணம் செய்வித்தான் உடனே!.

 பகவத்கீதையில் மரீசி மகரிஷி........... 

ஆதித்யாநாமஹம் விஷ்ணுர்ஜ்யோதிஷாம் ரவிரம்ஸுமாந்
மரீசிர்மருதாமஸ்மி நக்ஷத்ராணாமஹம் ஸஸீ

ஆதித்யாநாம் விஷ்ணு-ஆதித்யர்களில் நான் விஷ்ணு, ஜ்யோதிஷாம் அம்ஸுமாந் ரவி:-ஒளிகளில் நான் கதிர்களுடன் கூடிய சூரியன், மருதாம் மரீசி:-வாயு தேவர்களில் நான் மரீசி, நக்ஷத்ராணாம் அஹம் ஸஸீ அஹம் அஸ்மி-நட்சத்திரங்களுள் சந்திரனாக நான் இருக்கிறேன்.

பொருள் : ஆதித்யர்களில் நான் விஷ்ணு; ஒளிகளில் நான் கதிர் சான்ற ஞாயிறு; காற்றுகளில் மரீசி; நக்ஷத்திரங்களில் சந்திரன்.

பதினென் சித்தர்களில் முதல்வரான திருமூலர் பெருமானுக்கு குரு பூஜை





63 நாயன்மார்களில் ஒருவரும், 18 சித்தர்களில் முதல்வருமான திருமூலரின் குரு பூஜையை வருடம்தோறும் ஐப்பசி மாத அசுபதி நட்சத்திர நாள் அன்று இறைஅன்பர்கள் பல ஊர்களில் வழிபாடு செய்து கொண்டாடி வருகின்றனர்.

இந்த ஆண்டு திருமூலர் குருபூஜை நவம்பர் மாதம் 3ஆம் தேதி வெள்ளிக்கிழமை 3/11/2017 அன்று வருகின்றது.

1) திருவாவடுதுறை ஆதீனம் குருமகா சன்னிதானம் தலைமையில், திருக்கோயிலில் அமைந்துள்ள திருமூலர் தனி சன்னதியிலும்,

2) கும்பகோணம்-மயிலாடுதுறை சாலையில் ஆடுதுறைக்கு அருகேயுள்ள 69, சாத்தனூர் கிராமத்தில் திருமூலர் சன்னதியிலும்,

3) ஆத்தூர்- சின்னசேலம் சாலையில் தென் பொன்பரப்பி, சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்திலும்,

4) சென்னை, எம்.ஜி.ஆர் நகரில் இறைதூதர் திருமூலர் குருபூஜை
தமிழ்நாடு தெய்வீக மக்கள் கூட்டமைப்பு நடத்தும் 4 நாள் திருமந்திர வேள்வி சக்தி விநாயகர் ஆலயத்திலும்,

5) சென்னை தாம்பரத்தில் மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தில் அமைந்துள்ள திருமூலர் ஆலயத்திலும்,

6) சென்னை மைலாப்பூர், கற்பகாம்பாள் நகரில் இரண்டு நாள் திருமந்திர மாநாடும்,

7) திருச்சியில் திருவரங்கம், அம்மா மண்டபம் அருகில் திருமந்திரம் அருட்சபை அறக்கட்டளை நடத்தும் குருபூஜை சிருங்கேரி சங்கர மடத்திலும்

சிறப்புடன் கொண்டாடப்பட உள்ளது. திருமந்திர ஆர்வலர்கள், சைவ- தமிழ் அன்பர்கள் அருகே நடக்கும் நிகழ்வுகளில் பங்கேற்றிட அன்புடன் வேண்டுகிறோம்.

-நன்றி
திரு.செந்தில்குமார் சித்தய்யன்.





புதன், 25 அக்டோபர், 2017

திருமண தோஷம் நீங்க ஸ்ரீ அகத்திய பெருமான் ஜீவ நாடியில் கூறிய வழி



இறைவன் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் இஃதொப்ப திருமண நிகழ்வு குறித்து யாம் கூற வருவது யாதென்றால் சிலருக்கு மிக, மிக சிறிய வயதிலேயே மணம் நிகழ்ந்து விடுகிறது. சிலருக்கோ எல்லா வகையான தக்க சூழல் இருந்தும் திருமணம் என்பது தடைபட்டுக் கொண்டே செல்கிறது. பொதுவாக ஒவ்வொரு விதமான ஜாதகத்திலும் திருமணத் தடைக்கு விதவிதமான தோஷங்கள் காரணமாக இருந்தாலும் ஒட்டுமொத்தமாக அதனை களத்திர தோஷம் என்று ஜோதிடம் கூறுகிறது. இஃதொப்ப நிலையிலே பொதுவாக இது குறித்து இந்தத் தருணத்திலே பரிகாரங்களை தெரிந்து கொள்ள விரும்பும் சேய்கள், நவக்ரக தம்பதியரை நாடிச்சென்று இயன்றவரை நல்ல முறையில் வழிபாடு செய்வதும், வழிபாடு என்றால் என்ன ? என்று அடுத்து ஒரு வினா வரும் சமயத்திலே வாய்ப்பு உள்ளவர்கள், மனம் உள்ளவர்கள் உயர்வான பொருள்களைக் கொண்டு அபிஷேகமோ, நல்ல நறுமணமிக்க மலர் ஆரங்களை சாற்றி வழிபாடு செய்வதும் அஃதொப்ப வாய்ப்பு உள்ளவர்கள், மனம் உள்ளவர்கள், ஏழை ஆண், பெண்களுக்கு திருமண உதவி செய்வதும், ஆலயங்களில் தெய்வத் திருமண விழா வைபவம் நிகழும்பொழுது அதில் இயன்ற அளவு பங்கெடுத்துக் கொள்வதும் இந்தத் திருமண தோஷம் நிவர்த்தி ஆவதற்கு வழியாகும். இவையெல்லாம் கடினம் என்று எண்ணக்கூடியவர்கள் அருகில் உள்ள ஆலயம் சென்று குறைந்த பட்சம் ஏக மண்டலம், ஒரு பொழுது விரதத்தோடு, சப்த வதன தீபம் அஃதாவது ஏழு முக நெய் தீபம் இறைவனுக்கோ, இறைவிக்கோ, பொதுவாகவே கூறுகிறோம். சிவன் ஆலயமாக இருந்தாலும், மகாவிஷ்ணு ஆலயமாக இருந்தாலும், மகாலக்ஷ்மி ஆலயமாக இருந்தாலும், அம்பாளாக இருந்தாலும், எஃதொப்ப இறை வடிவமாக இருந்தாலும் பரிபூரண சரணாகதியோடு இஃதொப்ப சப்த வதன நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்வதும், தீபம் ஏற்ற இயலாத நிலையிலே தக்கதொரு மலர் ஆரம், தெய்வ ரூபத்திலே திருவடி வரை அந்த மலர் ஆரம் இருக்கும் வண்ணம் தொடர்ந்து சுக்ர வாரம் அல்லது மங்கல வாரம் அல்லது அவரவர்கள் ஜென்ம நக்ஷத்திரம் வருகின்ற பொழுது, இஃது எதுவும் நடைமுறையில் சாத்தியம் இல்லாதவர்கள் இயன்ற பொழுது சென்று வழிபட்டு வர கட்டாயம் திருமண தோஷம் அகன்று நல்விதமாய் திருமணம் நடப்பதற்கு வாய்ப்பாக அமையும். இஃதொப்ப தொழில் தோஷமோ, திருமண தோஷமோ அல்லது திருமணம் நடந்து கருத்து வேறுபாட்டால் பிரிந்து இருக்கக்கூடிய தம்பதியரோ இஃதொப்ப வழிபாட்டை செய்யலாம்.

இஃதொப்ப தருணத்திலே யாங்கள் மீண்டும், மீண்டும் கூறுகிறோம். கேட்கின்ற மனிதர்களுக்கு இஃதொப்ப அயர்வைத் தரலாம், சலிப்பைத் தரலாம். இருந்தாலும் கூற வேண்டியது எமது கடமை என்பதால் கூறுகிறோம். ஒரு மனிதனின் துன்பங்களுக்கு அவன் மட்டுமே காரணம் என்பதை ஒவ்வொரு மனிதனும் உணர வேண்டும். பிறர் மூலம் ஒரு துன்பம் வருவது போல் தோன்றினாலும் அதற்கு மூல காரணம் என்றோ செய்த வினை என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இதனைப் புரிந்து கொண்ட பிறகு கூடுமானவரை மனம், வாக்கு, காயம் – இவற்றால் பிறருக்கு எந்தவிதத் துன்பமும் செய்யாமல் வாழப் பழக வேண்டும். வெறும் வார்த்தைதானே என்று வார்த்தையால் பேசி யாரையும் துன்புறுத்தாமல் கூடுமானவரை பேசினால் இறை நாமம் அல்லது சத்செயல் அல்லது நாம சங்கீர்த்தனம் அல்லது ஏற்புடைய சொல் என்று வைத்துக் கொண்டு இயன்றளவு உடல் ரீதியாகத் தொண்டும், வாய்ப்பும், மனமும் உள்ளவர்கள், தனந்தனை இழந்தாவது தர்மத்தையும் சேர்த்துக் கொண்டால் கட்டாயம் எல்லா வகையிலும் வருகின்ற துன்பம் குறையும். ஆனால்   “ இது நான் ஈட்டிய பொருள். நான் எதற்கு பிறருக்குத் தர வேண்டும் ? “ என்ற மனப்பான்மையோடு இருப்பவர்கள், “ அவன் செய்த பாவம், அவன் வறுமையில் வாடுகிறான். அதில் தலையிட்டு அவன் விதியை நான் ஏன் மாற்ற வேண்டும் ? “ என்று விதண்டாவாதம் செய்பவர்கள் , “ இப்படியே எல்லோருக்கும், எல்லாவற்றையும் இலவசமாகத் தந்தால், அவன் சோம்பி இருக்க மாட்டானா ?” என்று அறிவு பூர்வமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு பேசக்கூடியவர்கள், அவரவர்கள் வழியில் செல்லலாம்.  இஃதொப்ப இந்த ஜீவ அருள் ஓலையிலே வாக்கைக் கேட்க வேண்டும். தொடர்ந்து இந்த வழியில் வர வேண்டும் என்றால், யாங்கள் கூறுகின்ற வழிமுறை, நடைமுறைக்கு ஏற்றதாக இருக்கலாம். சில சமயம் அறிவுக்கு புறம்பு போல் தோன்றலாம். இவற்றையெல்லாம் நினைத்து மனம் குழப்பம் அடையாமல் எமது வழியில் வந்தால் தொடர்ந்து பாவ வினைகளிலிருந்து விடுபட்டு மெல்ல,மெல்ல ஒவ்வொரு மனிதனும் எதிர்பார்க்கின்ற நிம்மதி என்பது கிட்டும், இறைவனருளால். 

ஜீவநாடி கட்டளைப்படி திருவானைக்காவல் ஸ்ரீ அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில் 1008 சக்திகள தீப விழா


அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக திருவானைக்காவல்  ஸ்ரீ அருள்மிகு அகிலாண்டேஸ்வரி  சமேத ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் ஆலயத்தில்  வரும் 03.11.2017 அன்று1008 சக்திகள தீப விழா  நடை பெற உள்ளது.

உலக மக்களின் நன்மைக்காக  அட்ட வீரட்ட தலங்கள் மற்றும் பஞ்ச பூத தலங்களில் தீப வழிபாடு செய்ய வேண்டும். இதனால் இயற்கை சீற்றம் கணிசமாக  குறையும் என முருகப் பெருமான் ஜீவ அருள் நாடியில் உரைத்துள்ளார்கள்.

அதன்படி அட்ட வீரட்ட தலங்கள்,திருக்காளகஸ்தி,காஞ்சி மற்றும் திருவண்ணாமலையில் தீப வழிபாடு நடைபெற்றது. வருகிற 03.11.17 திருவானைக்காவலில் நடைபெற  உள்ளது. அனைவரும் வருக.

தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும் ,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும்,புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு  புத்திரன் கிட்டும்,ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம்,அனைத்து குறைகளும் நீங்கும்,என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார்.

ஆகவே அனைவரும் கலந்து கொள்க.








திருவானைக்காவல் தல வரலாறு

பஞ்சபூத ஸ்தலங்கள் - ஜம்புகேசுவரர் கோயில் ( நீர் ) 

மூலவர்: ஜம்புகேஸ்வரர், திருவானைக்கா உடையார், திருவானைக்கா உடைய நாயனார், மகாதேவபட்டர்.
உற்சவர்:சந்திரசேகரர், சோமாஸ்கந்தர்
தாயார்:அகிலாண்டேஸ்வரி
தல விருட்சம்:வெண்நாவல்
தீர்த்தம்:நவ தீர்த்தங்கள், காவிரி, இந்திர தீர்த்தம், சந்திர தீர்த்தம்
ஆகமம்:சைவாகமம்

திருவானைக்காவல், அல்லது திருஆனைக்காவல் எனப்படும் திருவானைக் கோவில் திருச்சிக்கு அருகே காவிரி வட கரையில் அமைந்துள்ள மாபெரும் சிவன் கோவில் நகரமாகும். இதனை திருவானைக்காவல் என்றும் அழைப்பர். சிலர் திருவானைக்கா என்றும் அழைக்கின்றனர்.

அப்பர், திருஞானசம்பந்தர், சுந்தரர், அருணகிரிநாதர், தாயுமானவர், ஐயடிகள் காடவர்கோன் ஆகியோரால் பாடல் பெற்றதால் இதை பாடல் பெற்ற தலம் என்பர். இச்சிவாலயம் சிவனின் பஞ்சபூத தலங்களில் ஒன்றான நீருக்கு உரியது. காவேரி வடகரை சிவத்தலங்களில் இது அறுபதாவதாக அமைந்துள்ளது.

திருச்சியில் உள்ள தலம் திருவானைக்கா. இந்த தலத்தின் தல விருட்சம் ஜம்பு நாவல் மரம். இதை தமிழில் வெண்ணாவல் என்பர். முன்னொரு காலத்தில் ஜம்பு முனிவர் இங்கிருந்து தவம் செய்தார். அவரை மூடி புற்று எழுந்து மரஞ் செடிகளும் வளர்ந்தன. அங்கு எழுந்த மரம்தான் தல விருட்சமான ஜம்பு நாவல் மரம். இது இற்றைக்கு நூறாண்டுகளுக்கு முன்னர் பட்டுப்போய் வெறும் பட்டையே எஞ்சியிருந்த காலத்தில் கோவிலுக்கு திருப்பணி செய்த கனாடுகாத்தான் செட்டியார் ஏகாதசருத்ர ஜபம் செய்வித்து இம்மரத்துக்கு அபிஷேகம் செய்வித்தனர். அன்றிலிருந்து தளைத்து வளர்ந்துள்ள மரம் தான் நாம் இன்று காணும் தலவிருட்சம்.

இங்கு முன்னர் ஜம்பு முனிவர் பூசை செய்த லிங்கத்துக்கு மேலே அங்கிருந்த சிலந்தி தினமும் விதானம் போல வலை பின்னி அதையே தன் வழிபாடாகச் செய்து வந்தது. அங்கு ஓர் யானையும் தினமும் நீரினால் லிங்கத்துக்கு அபிஷேகம் செய்து வழிபட்டு வந்தது. யானையின் நித்திய வழிபாடு சிலந்தி பின்னிய வலையைத் தினமும் சிதைத்தது. இதனால் ஆற்றாது கோபம் கொண்ட சிலந்தி ஒரு நாள் யானையில் துதிக்கையினுள் புகுந்து கடிந்துவிட்டது. வலி தாங்காத யானையும் துதிக்கையை அடித்து மோதி இறந்தது. அதனுள் இருந்த சிலந்தியும் மாண்டது. இச் சிலந்தியே அடுத்த பிறப்பில் சோழ இராஜ குடும்பத்தில் பிறந்தது.

இவன் தாய் இவனைப் பிரசவிக்கும்போது சோதிடர்கள் காலம் கணித்து இன்னும் சில நாழிகை காலம் தாழ்த்திப் பிறந்தால் இவன் சக்கரவர்த்தியாக உலகாள்வான் என்று கூறினர். இதனால் பிரசவத்தை இயற்கைக்கு மாறாக தள்ளிப்போடுவதற்கு தாய் சம்மதித்தாள். அவளை தலைகீழாக்க் கட்டித் தூக்குமாறு பணித்தாள். இதனால் பிரசவமும் தாமதமாகி ஆண் குழ்ந்தை பிறந்தது. காலந் தாழ்த்திப் பிறந்ததனால் அவன் கண்கள் இரத்தச் சிவப்பாக இருந்தன. இன்றைய மருத்துவத்தில் காலந்தாழ்த்திப் பிறக்கும் குழந்தைகளுக்கு ஏற்படும் இச் செங்கண்ணை Sub-conjunctival haemorrhage என்று கூறுகின்றனர். இவ்வாறு சிவந்த கண்ணுடன் பிறந்த காரணத்தால் இக் குழந்தைக்கு கோச் செங்கணான் என்று பெயரிட்டனர். சமஸ்கிருதத்தில் இவனை 'ரெக்தாக்ஷ சோல' என்று அழைப்பர். தாயும் பிறந்த குழந்தையைப் பார்த்துவிட்டு இறந்துவிட்டாள்.

இவனே பின்னால் கோச்செங்கட் சோழன் என்ற பெயருடன் அரசாட்சியேறி சோழ நாட்டை ஆண்ட மன்னன். இவன் எழுபது கோவில்களைக் கட்டியதாகச் சரித்திரம் கூறுகின்றது. அத்தனை கோவில்களும் யானை ஏற முடியாத கட்டட அமைப்புடன் கட்டப்பட்டவை. இந்த கட்டட அமைப்புக் கோவில்களை மாடக்கோவில்கள் என்று அழைப்பர். இவன் விஷ்ணு ஆலயங்களும் கூட அமைத்துள்ளான். வைணவ ஆழ்வார்களினால் பாடப்பட்ட ஒரேயொரு சைவ நாயன்மார் இந்த கோச்செங்கட் சோழனே.

தலபெருமை:

திருவானைக்கா ஜம்புகேஸ்வரர் ஆலயம் ஒரு மிகப்பெரிய கோவில். சுமார் 18 ஏக்கர் நிலப்பரப்பில் நீண்ட உயரமான மதில்களும் நான்கு திசைகளிலும் கோபுரங்களும் ஐந்து பிரகாரங்களும் உடையது,அம்மன் அகிலாண்டேஸ்வரியின் சந்நிதி நான்காம் பிரகாரத்தில் உள்ளது. தனி சந்நிதியில் கிழக்கு நோக்கியவாறு அகிலாண்டேஸ்வரி என்னும் அகிலம் ஆண்ட நாயகி காட்சி தருகிறாள். மூலவர் ஜம்புகேஸ்வரர் ஐந்தாம் உள் பிரகாரத்தில் சுயம்புவான அப்புலிங்கமாக எழுந்தருளியுள்ளார். சிவபெருமான் எழுந்தருளியிருக்கும் இடத்தில் நீர் ஊறி வருவது இன்றும் காணத்தக்கது.

அம்பாள் முன்னொரு காலத்தில் மிக உக்கிரமான உருவத்துடன் கொடூரமாக இருந்ததாகவும் பக்தர்கள் வழிபாடு செய்ய மிகவும் அச்சமுற்றதாகவும் இருக்க ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்ரீசக்ர ரூபமான காதணிகளைப் பிரதிஷ்டை செய்து அம்பாளின் உக்கிரத்தைத் தணித்தார் என்று தல வரலாறு கூறுகிறது.( அகிலாண்டேஸ்வரி அம்மையின் காதுகளில் இருக்கும் காதணிகள் பெரிதாக பக்தர்களின் பார்வைக்கு மிக நன்றாக பளிச்சென்று தெரியும். இந்தக் காதணிகளை தாடகங்கள் என்று அழைப்பார்கள்). அன்னையின் உக்ரத்தை தணிப்பதற்காக முன்புறம் விநாயகரையும், பின்புறம் முருகனையும் பிரதிஷ்டை செய்துள்ளனர்.

அதிகாலையில் கோபூஜையும், உச்சிக் காலத்தில் சுவாமிக்கு தினமும் அன்னாபிஷேகமும் நடைபெறுகிறது. உச்சிக்கால பூஜையின் போது சிவாச்சாரியார் அன்னை அகிலாண்டேஸ்வரி போல பெண் வேடமிட்டு கிரீடம் அணிந்து கொண்டு மேள வாத்தியங்களோடு யானை முன்னே செல்ல சுவாமி சந்நிதிக்கு வந்து சுவாமிக்கு அபிஷேக ஆராதனைகளைச் செய்வது இத்தலத்தின் தனிச் சிறப்பாகும்.

ஜம்பு லிங்கம் :

இங்கு இருக்கும் ஜம்பு லிங்கம் அன்னையால் செய்யப்பட்டது. ஒரு முறை பூமிக்கு வந்த அம்பிகை சிவனை வழிபட சித்தம் கொண்டார். அழகிய காவேரியில் சிறிது நீர் எடுத்து லிங்கம் வடித்தார். அம்பிகை கையில் நீர் லிங்கமாக மாறியது. அம்பிகை அந்த லிங்கத்தை வழிப்பட்டு ஆனந்தம் அடைந்தார். நீரால் செய்யப்பட்டதால் லிங்கம் ஜம்புகேஸ்வரர் என வழங்கப்படுகிறது.

குபேர லிங்கம் :

மற்றொரு சந்நிதியில் குபேர லிங்கம் உள்ளது. மிகப்பெரிய வடிவாகவும், பலமுக ருத்திராச்சம் தாங்கியும் உள்ளது. இந்த குபேர லிங்கத்தை குபேரன் வழிப்பட்டததால் தான் சிவன் அருள் பெற்று செல்வேந்தன் ஆனான் என்ற வரலாறு எல்லோருக்கும் தெரிந்ததே. இப்போது மக்கள் கூட்டம் அதிகம் வரும் இடங்களில் ஒன்றாக குபேர லிங்க சந்னதியும் ஆகிப்போனது.

சிற்பங்கள் :

பல அரிய சிற்பங்களும் இத்தளத்தில் காணக் கிடைக்கின்றன. அதில் முக்கியமானது மூன்று கால் முனிவர் சிலை. சிவலிங்க சன்னதிக்கு இடது புரம் அமைந்துள்ள வெளிப்பிரகாரத்தூண்களில் இந்த சிற்பம் காணக் கிடைக்கின்றது. அது மட்டுமின்றி ஏகநாதர் திருவுருவம் அன்னையின் சந்ததிக்கு வெளியே உள்ள தூணில் காணக் கிடைக்கிறது. ஏகநாதர் என்பது மும்மூர்த்திகளும் சமமானவர் என்றும், எல்லோரும் ஒருவரே என்ற மாபெரும் தத்துவத்தை விளக்கவும் வல்லது.

அது மட்டுமின்றி நான்கு கால் தூணில் உள்ள மங்கைகள் எல்லோர் மனதையும் கவருகின்றார்கள். அவர்களின் கூந்தல் அலங்காரம் பிரம்மி்க வைப்பதாக உள்ளது. அதிலும் ஒரு சிறு குழந்தையை ஏந்திக்கொண்டு இருக்கும் பெண் மிக தத்திரூபமாக செதுக்கப்பட்டுள்ளாள்.

கல்வெட்டுகள் :

பல்வேறு சோழ மன்னர்கள் இக்கோயிலுக்கு பல கொடைகளை வழங்கியுள்ளனர், இதை இதுவரை இங்கு கிடைத்துள்ள 156 கல்வெட்டுகள் மூலம் அறியலாம். இவற்றுள் பராந்தக சோழன் பற்றிய கல்வெட்டுகளே மிக தொன்மையானவை.

ஆயிரங்கால் மண்டபம் உண்டு.

திருஈங்கோய்மலை அடிவாரத்தில் ஐப்பசி மாத குரு பரணி யாகம்




 இந்த மாதம் குருபரணியாகம் வரும் நவம்பர் மாதம் அதாவது 04/11/2017 சனிக்கிழமை செய்யப்பட உள்ளது. அன்றைய தினம் பௌர்ணமி திதியும் வருவது கூடுதல் விசேஷம்.

கடந்த மாத பரணி யாகத்தில் அதிசயங்கள் பல நடந்த அதே திருஈங்கோய் மலைப்பகுதியிலேயே இந்த மாதமும் யாகம் நடத்த உத்தரவு கிடைத்துள்ளது.

அன்றைய தினம் குரு பெருமானுக்கு அனைத்து வகையான அபிஷேகங்கள் மற்றும் ஆராதனைகளுடன் குருபரணியாகமும் சிறப்பாக செய்யப்படவுள்ளது.

அன்பர்கள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு குருவருள் பெற அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் பூஜைக்கும் யாகத்திற்கும் தேவையான பொருட்கள் பூக்கள் கொடுக்க விரும்புபவர்கள் கொடுக்கலாம். தங்களின் பங்களிப்பை அளிக்க நினைக்கும் அன்பர்கள் தொடர்பு கொள்ளலாம்.

அனைவரும் வருக.குருவருள் பெருக

இடம்- திருஈங்கோய் மலை. குளித்தலை. ( மலைக்கு நேர் பின்பக்கம் )
நாள் - 04/11/2017
நேரம் - 8.00 காலை

அன்புடன்
வசீகரன்
9842780095
9488008816

செவ்வாய், 24 அக்டோபர், 2017

போளூர் ஸ்ரீமத் விடோபா சுவாமிகள் 108 வது குருபூஜை மற்றும் ஆராதனை பெருவிழா



போளூர் ஸ்ரீமத் விடோபா சுவாமிகள் 108 வது குருபூஜை மற்றும் ஆராதனை பெருவிழா  நிகழும் ஹேவிளம்பி ஆண்டு ஐப்பசி திங்கள் 22-ஆம் நாள் (08-11-2017) அன்று புதன்கிழமை  அன்று  நடைப் பெறுகிறது .அது  சமயம்  அனைவரும் கலந்து கொள்ளுமாறு  அன்புடன் கேட்டுக் கொள்கிறோம் .

இடம் :ஸ்ரீமத் விடோபா சுவாமிகள் மடம் ,தனியார் தர்ம அறக்கட்டளை , மார்க்கெட் அருகில் , போளூர் - 606 803,திருவண்ணாமலை .

போளூர் ஸ்ரீமத் விடோபா சுவாமிகள் வரலாறு 

சென்னை திருவல்லிக்கேணியைச் சேர்ந்த கொண்டல்ராவ், புஸிபாய் தம்பதியருக்கு பிறந்தவர் விடோபா. இவரது நான்கு வயதில் தாயார் காலமானார் . குழந்தையை வளர்க்கவேண்டும் என்பதற்காக கொண்டல்ராவ் இரண்டாம் திருமணம் செய்தார். "லிங்கார்' எனப்படும் தையல்கலையில் ஈடுபட்ட ராவ் பஜனைமடம் ஒன்றை நடத்தி வந்தார். அங்கு தினமும் பாடுவது வழக்கம்.

விடோபா யாரிடமும் பேசுவதில்லை. மடத்தின் ஒரு மூலையில் அமர்ந்திருப்பான். சில சமயங்களில் மோன நிலையில் ஆழ்ந்து விடுவதும் உண்டு. எப்போதாவது கைகளால் தாளம் போட்டுக் கொண்டு, ""விடோபா விடோபா ஜயஜய விடோபா' என்று பாடுவார். பத்து வயது வரை பள்ளிக்குச் செல்லவில்லை ஆனாலும், படிப்பு வேண்டுமே என்பதற்காக மகனைப் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார் ராவ். ஆனால், பயனில்லை.
பள்ளியிலும் ஒரே அமைதி தான்.

சக மாணவர்களிடமோ, ஆசிரியர்களிடமோ "மவுனமொழி' பேசினார் விடோபா. பெற்றோரும், ஆசிரியரும் கண்டித்தும் பலனில்லை. இருப்பினும், பள்ளி வாழ்க்கை நான்கு ஆண்டுகள் தொடர்ந்தது. 14 வயது இளைஞனாக இருந்த விடோபா பசி, தாகத்தையும் பொருட்படுத்தியதில்லை. பைத்தியக்காரனைப் போல வீதியில் இங்கும் அங்கும் அலைந்த மகனைக் கண்ட தந்தைக்கு வருத்தம் ஏற்பட்டது. அவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள் விழலுக்கு இறைத்த நீராக வீணானது. தலைவிரிகோலமாகத் திரிந்த விடோபாவைக் கண்ட சிறிய தாயார் ஒருநாள், எண்ணெய் தேய்த்துக் குளிக்க கட்டாயப் படுத்தினாள்.

அந்த நேரத்தில் தலையை அசைத்து, கைகளால் தாளமும் போட்டபடி, ""விடோபா விடோபா ஜயஜய விடோபா'' என்று பாட ஆரம்பித்தான். ஆத்திரம் பொங்கியவளாய் அவன் கன்னத்தில் ஒரு "பளார்' என்று விட்டாள்.
""வீட்டை விட்டு எங்காச்சும் போய் தொலையேன்! ஏன் என் உயிரை வாங்குற!'' என்று கூச்சல் போட்டாள்.

இது தான் சரியான தருணம் என்று முடிவெடுத்த விடோபா, கால் போன போக்கில் நடக்கத் தொடங்கினார். மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்த கொண்டல்ராவ், விடோபாவைத் தேடினார். ஆனால், கண்டுபிடிக்க முடியவில்லை. விடோபா, வாலாஜா வழியாக வேலூர் வந்து சிலநாட்கள் தங்கினார். பின் போளூர் அருகில் உள்ள திருச்சூர் கிராமத்தை அடைந்தான். அந்த கிராமத்து இளைஞர்கள், விடோபாவின் உருவம் கண்டு பரிகாசம் செய்தனர். ஆனால், அவர்களிடமும் விடோபா பேசவில்லை.

ஊருக்குப் புதிதாக வந்துள்ள இளைஞரை எப்படியாவது பேச வைக்க சிலர் முயற்சித்தனர். அவருடைய இரு கன்னங்களையும் குறடு கொண்டு பலமாக அழுத்தினர். வலி தாங்க முடியாத அவர், ""ஹரே விடோபா!'' என்று கதறினார். கன்னத்திலிருந்து ரத்தம் பீறிட்டது. அதைக் கண்ட இளைஞர்பட்டாளம் பயந்து போய் அவரை விட்டு ஓடியது. அந்த காயத்தால் உண்டான வடு அவரை விட்டு மறையவே இல்லை.

அப்பாவியான விடோபாவை துன்புறுத்தியதன் பலனை இரண்டே வாரத்தில் அந்த கிராம மக்கள் அனுபவிக்க ஆரம்பித்து விட்டனர். கொடிய காலரா பரவியது. இருபது பேர் இறந்து விட்டனர். குறிப்பாக, விடோபாவை இம்சித்த இளைஞர் ஒருவர் கூட உயிர் தப்பவில்லை.

இந்த நிகழ்ச்சிக்குப் பின் விடோபா திருச்சூரை விட்டு போளூர் வந்தடைந்தார். அங்கே ஆடையின்றி அவதூதராக தெருக்களில் அலைந்து திரிந்தார். யாராவது உணவு அளித்தால் உண்பதைத் தவிர, யாரிடமும் கை நீட்டியதில்லை.

போளூரில் சிரஸ்தாராக பணியாற்றியவரின் மனைவி ஒருநாள் விடோபாவைக் கண்டு இரக்கப்பட்டாள்.

தினமும் சாப்பாடு போடுவது என்று தீர்மானித்தாள். அதன்படி உணவு அளித்தாள். அவதூத ஞானியாக விடோபா வாசலில் வந்து நின்று கை தட்டி அழைப்பார். அந்த அதிகாரியின் மனைவியும் உணவு கொடுத்து மகிழ்வாள். இப்படியே நாள் சென்று கொண்டிருந்தது. இந்த விஷயம் அதிகாரிக்குத் தெரியாது. ஒருநாள் அவர் வீட்டில் இருந்த சமயம், விடோபா வாசலில்வந்து நின்று கைதட்டினார்.

"யாரோ பைத்தியம்' என நினைத்த அதிகாரி, ஒரு பிரம்பை எடுத்து வந்து விரட்டினார். விடோபாவும் அந்த இடத்தை விட்டு ஓடி விட்டார்.
இதை அறியாத அதிகாரியின் மனைவி, ""இன்று சுவாமி உணவு வாங்க வரவில்லையே,'' என்று வருந்தினாள்.

அலுவலகம் சென்ற அதிகாரி, பேனாவைத் திறந்து எழுத முயன்றார். கைகள் செயலற்றது போல இருந்தன. சுவாமியை அடிக்க ஓங்கிய கைகளில் வலியும் உண்டானது. நேரம் ஆக ஆக வலி அதிகரித்துக் கொண்டே போனது. அதிகாரியை அலுவலக பணியாட்கள் வண்டியில் ஏற்றி வீட்டுக்கு அழைத்து வந்தனர். கணவரின் நிலை கண்ட மனைவி அதிர்ந்து போனாள்.
அப்போது தான் அவர் மனைவியிடம், "" சாமியார் போல ஒருவர் வாசலில் நின்று கை தட்டினார். பைத்தியம் என நினைத்து பிரம்பால் அடிக்க முயன்றேன். அதிலிருந்தே என் கை இப்படி ஆகிவிட்டது,'' என்றார் பயத்துடன்.
மனைவியோ இதைக் கேட்டு பதறினாள்.

விடோபாவைத் தேடிச் சென்றாள். ஒரு மரத்தடியில் அமர்ந்திருந்த விடோபாவைக் கண்டாள். அவரிடம் தன் கணவரை மன்னிக்கும்படி கதறி அழுதாள். விடோபா, "ஜா' என்று குரல் கொடுத்தார். அந்தக் கணமே அதிகாரியின் வலி மறைந்தது. அன்று முதல் அந்த தம்பதியினர் விடோபா சுவாமியின் பக்தர்களாக மாறினர். இந்த நிகழ்ச்சிக்குப்பின் அவரது புகழ் மக்கள் மத்தியில் பரவத் தொடங்கியது.

ஒருசமயம் அடைமழை விடாமல் பெய்தது. கால்வாயில் வெள்ளம் பெருக்கெடுத்தது. கரையோரம் அமர்ந்திருந்த விடோபா வையும் வெள்ளம் அடித்துச் சென்றது. பக்தர்கள் கவலையுடன் அவரைத் தேடத் தொடங்கினர். வெள்ளம் வடிந்ததும், ஒரு ஆழமான குழியில் அவர் கிடப்பதைக் கண்டனர். கழுத்துவரை மண்ணால் புதையுண்டபடி தலை மட்டும் வெளியில்
நீட்டியிருந்தது. வேகமாக மண்ணைத் தோண்டி அவரை மீட்டனர். அவர் கண்களைத் திறந்த பிறகுதான் பக்தர்களுக்கு மூச்சு வந்தது.

சென்னையில் வசித்த சுப்பராய முதலியார் தீராத வயிற்றுவலியால் துடித்தார். செய்யாத வைத்தியம் இல்லை. தன் நிலையை எண்ணிய வருந்திய அவரின் கனவில் விடோபா தோன்றி, ""போளூருக்கு வா. நோய் குணமாகிவிடும்,'' என்று ஆணையிட்டார். அதன்படி அவரும் போளூர் வந்து சுவாமியைத் தரிசித்தார். சுவாமியும் இடது காலை நோயாளியின் வயிற்றில் வைத்தார். வயிற்றுவலி இருந்த இடம் தெரியாமல் மறைந்து போனது.

மேகநோயால் அவதிப்பட்ட பெண் ஒருத்தி விடோபாவுக்கு இருவேளை உணவளித்து வந்தாள். அந்த உணவை சாப்பிடாமலே இருந்து வந்தார். திடீரென்று ஒருநாள் அந்த உணவை எடுத்துக் கொண்டார். தொடர்ந்து அவர் சாப்பிட்டு வர, அவளது நோய் குறையத் தொடங்கியது.

இப்படி அற்புதம் பல நிகழ்த்திய விடோபா மறைந்த போது, திருவண்ணாமலையில் கிரிவலம் வந்து கொண்டிருந்த சேஷாத்ரி
சுவாமிகள் ஆகாயத்தைப் பார்த்தவராய், ""இதோ விடோபா போகிறான்! இதோ விடோபா போகிறான்!'' என்று உரக்கக் கூவினார்.

உலகம் உள்ள வரை விடோபாவின் புகழ் நிலைத்துநிற்கும்


சென்னை பஞ்செட்டியில் அகத்திய பெருமானுக்கு ஐப்பசி மாத சதய நட்சத்திர பூஜை



சென்னையில் உள்ள பஞ்செட்டி தலத்தில் அகத்திய பெருமானுக்கு  இம்மாதம் 30/10/2017 அன்று மாலை 5.30 மணி முதல் 07.30 மணிக்குள் சதய நட்சத்திர பூஜை நடைப் பெற உள்ளது.அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஞாயிறு, 22 அக்டோபர், 2017

குமரகுருபரரை பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இறைவனின் அருளைக்கொண்டு இஃதொப்ப மழலை பேசும் என்று மழலையைப் பெற்ற பெற்றோருக்கு மழலை பேசுமா ? என்கிற ஐயம். வந்தபொழுது மழலை பேசும் என்று சீரலைவாய் முருகன் காட்டிய காட்சிதான் அந்த குமரகுருபரரின் காதையாகும். இஃதொப்ப முருகப்பெருமானின் பரிபூரண கருணையை பெற்று, அஃதொப்ப பேசும் ஆற்றல் மட்டுமல்லாமல் பாடும் ஆற்றலையும் பெற்று நல்ல முறையிலே தமிழையெல்லாம் கற்று அன்னை கலைவாணி மீது சகலகலாவல்லி மாலையை இயற்றி அதன் மூலம் ஆண்ட மன்னர்களையெல்லாம் வென்று அங்குள்ள வடபுல புலவர்களையெல்லாம் அந்த வடமொழியிலேயே வாதிட்டு வென்றவன்தான் இந்த குமரகுருபரன். இது அண்மையில் நடந்த நிகழ்வுதான்.

இதுபோன்ற பல நிகழ்வுகள் இன்றும் ஆங்காங்கே நடந்து கொண்டுதான் இருக்கிறது. பிரச்சினை என்னவென்றால் “ இறைவன் எனக்கு அருள்கிறார். அல்லது இறைவன் தரிசனம் எனக்கு கிடைத்திருக்கிறது அல்லது இறைவனின் கருணை எனக்கு கிடைத்திருக்கிறது “ என்பதை மனிதன், மற்ற மனிதரிடம் அதை பகிர்ந்துகொண்டு, அவர்கள் அதை ஒத்துக்கொண்டால்தான் இந்த மனிதனுக்கு ஆறுதல் கிட்டுகிறது. அப்படியில்லாத வரையில் இவனால் அதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. எனவே நல்ல சாத்வீக எண்ணத்தோடு இஃதொப்ப இறை வழியில் சென்றால் ஒவ்வொரு குழந்தையும் குமரகுருபரர் ஆகலாம்.

வியாழன், 19 அக்டோபர், 2017

அருள்மிகு ஸ்ரீ மயூரநாதர் திருக்கோயிலில் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு 108 கலச பூஜை



வேலூர் மாவட்டம்,அரக்கோணம் வட்டம் , பணப்பாக்கம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ மாயூர ஆலயத்திலுள்ள ஸ்ரீ அகத்திய தம்பதிகளுக்கு வருகின்ற 24/11/17 கார்த்திகை 8 வெள்ளி கிழமை அன்று 108 கலச பூஜைக்காக தங்களை கலந்து கொள்ள அன்புடன் அழைக்கிறேன்.

தொடர்புக்கு: 8610640983/ 9788347287

 உங்களால் முடிந்த உதவி செய்யலாம்.

 ஹோமம்: காலை 10 மணி முதல் 1 மணி வரை.

அபிஷேகம், ஸ்ரீ அகத்திய அஷ்ட தோத்ர அர்ச்சனை மற்றும் ஸ்ரீ அகத்திய தம்பதிகள் ஆலயத்தில் உட்பிகார உலா. அனைவரும் வருக. ஐயன் அருள் பெறுக.

வங்கி விபரம்: 

Name:J.senthilvel
Bank:SBI
A/ C No:31807394930
IFSC Code:SBIN0013075
Branch Address: 30 By 56, Sri Mariamman Koil St, Kaveripakkam,Vellore Dist-632508

கோவில் முகவரி: 

 அருள்மிகு மயூரநாதர் திருக்கோயில் , 
பணப்பாக்கம் ,
அரக்கோணம் வட்டம் ,
வேலூர்


புதன், 11 அக்டோபர், 2017

அத்ரி மலையில் ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர பூஜை



நெல்லை மாவட்டம், ஆழ்வார்குறிச்சி கடனா நதி அனை அருகில் உள்ள அத்ரி மலையில் ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள் உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி கோவிலில் அமைந்து உள்ள ஸ்ரீ அகத்திய மகரிஷிக்கு 14-10-2017 புரட்டாசி(28) மாதம் சனிக்கிழமை ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று காலை 9.30 மணிக்கு மேல் அபிஷகம்,அலங்காரம் , வெள்ளி ஆராதனைஅன்னதர்மம் நடைபெறுவதால் அனைவரும் கலந்து கொண்டு ஸ்ரீஅனுசுயா தேவி அம்பாள்உடனமார் ஸ்ரீஅத்ரி மகரிஷி மற்றும் ஸ்ரீ அகத்திய மகரிஷி .திருவருள் ஆசிர்வாதம் பெற்று செல்லுமாறு மானாமதுரை ஸ்ரீ மஹா பஞ்சமுக ப்ரத்யங்கிராதேவியின் ஸாக்த மடாலயத்தின் சார்பாக அன்புடன் அழைகின்றார்கள் .

கலந்து கொள்ள விரும்பும் பக்தர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்ணை தொடர்பு கொள்ளவும். மேலும் தகவல்களுக்கு

தொலைப்பேசி எண் :9842078733,9043942091,9843016651

மேலும் தமிழ் நாடு முழுவதும் 70க்கும் மேற்பட்ட சிவாலயங்களில் ஸ்ரீ அகத்தியமகரிஷிக்கு ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று அபிஷகம், ஆராதனை நடைபெறுகிறது.

செவ்வாய், 10 அக்டோபர், 2017

ஸ்ரீ லோபாமுத்திரை சமேத ஸ்ரீ அகத்தியர் ஆயில்ய நட்சத்திர பூஜை - ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்





 வரும் 14/10/17 சனிக்கிழமை மாலை 6 மணி அளவில் கீழ்கண்ட முகவரியில் அகத்திய பெருமான் மற்றும் தாயார் லோபா முத்ரா தேவிக்கும் ஆயில்ய பூசை நடைப் பெற உள்ளது.

முகவரி :

ஸ்ரீ அகத்தியர் ஞானம் இல்லம்,
27 பெரம்பை ரோடு,
புத்துகோயில் அருகில்,
வில்லியனுர்,
பாண்டிச்சேரி 605110.
கைப்பேசி :09894269986

வெளியூர் அன்பர்கள்.வாட்ஸப்ல் பிரார்த்தனை அனுப்பலாம்.

பூஜையில் கலந்து கொண்டுகுருவருள் பெறுக.காணிக்கை,கட்டணம் மற்றும் பணம் பெறுவது இல்லை.
உங்கள் அருகில் உள்ள ஏழைகளுக்கு உதவுங்கள்.அகத்தியர் கருணை பார்வை பெறுங்கள்.நன்றி.

வெள்ளி, 6 அக்டோபர், 2017

பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் மகாஞானி அகப்பேய் சித்தர் எழுந்தருள சித்தம்


சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மருதேரி கிராமத்தில் பிருகு மகரிஷி அருள் நிலையம் அமைந்துள்ளது.பிருகு மகரிஷி,ஸ்ரீ அகத்தியர் ,ஸ்ரீ நந்தி தேவர் ஜீவ நாடியில் இடப்படும் உத்தரவுப்படி ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரம் அன்று சித்தர் மற்றும் ஜோதி வழிபாடுகள் நடைப்பெற்று பின் அன்னதானமும் வழங்கப்படுகிறது.

இந்த பூஜையில் ஏற்றப்படும் ஜோதியில் சித்தர்கள் எழுந்தருளி மற்றும் அதை தொடர்ந்து ஜீவ நாடியிலும் சித்தர்கள் எழுந்தருளி ஆசி வழங்குவார்கள்

வரும்  ஹேவிளம்பி வருடம் புரட்டாசி  மாதம் 24 ஆம் நாள் ரோகிணி நட்சத்திரம் அன்று (10/10/2017) காலை 8.00 மணியளவில் மகாஞானி அகப்பேய் சித்தர் மருதேரியில் எழந்தருள உள்ளார். அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

ஜீவநாடி கட்டளைப்படி திருவண்ணாமலை ஸ்ரீ அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில் 1008 சக்திகள தீப விழா


அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக திருவண்ணாமலை ஸ்ரீ அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் ஆலயத்தில்  வரும் 11.10.2017 அன்று நடை பெறுகிறது.

உலக மக்களின் நன்மைக்காக  பஞ்ச பூத தலங்களில் தீப வழிபாடு செய்ய வேண்டும். இதனால் இயற்கை சீற்றம் கணிசமாக  குறையும் என முருகப் பெருமான் ஜீவ அருள் நாடியில் உரைத்துள்ளார்கள்.

அதன்படி திருக்காளகஸ்தி மற்றும் காஞ்சியில் தீப வழிபாடு நடைபெற்றது. வருகிற 11.10.17 அன்று திருவண்ணாமலையில் நடைபெற  உள்ளது. அனைவரும் வருக.

தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும் ,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும்,புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு  புத்திரன் கிட்டும்,ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம்,அனைத்து குறைகளும் நீங்கும்,என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார்

ஆகவே அனைவரும் கலந்து கொள்க

சக்திகள தீபம் 

வியாழன், 5 அக்டோபர், 2017

தன் சீடன் எப்படி இருப்பான் என்று ஸ்ரீ அகத்தியர் கூறிய பாடல்


என்னுடைய பிள்ளை என்றால் அறிவான் தீட்சை
எத்தொழிலுங் கற்றறிவான் சித்தனாவான் 
என்னுடைய பேர்சொல்லுவான் தன்னைப்பார்ப்பான் 
ஏரியே கரைதாண்டி அகண்டமேவி 
என்னுடைய பொதிகைதனில் என்னைக் காண்பான் 
எல்லோர்க்கும் குருவாவான் என்னைத்தானும் 
தன்னுடைய குரு என்பான் தாயைப் போற்றி 
சதகோடி சித்தும் எடுத்து ஆடுவானே 
-அகஸ்தியர் கேசரிகுருநூல்,பாடல் 54

விளக்கம்:

என்னுடைய பிள்ளை என்றால் சிவன் மற்றும் சக்தி தீட்சை பற்றி அறிந்து இருப்பான்.தொழில் எனப்படும் பஞ்ச பூத சக்திகளை அறிந்து அதை முறைப்படி உபயோகித்து சித்தன் ஆவான்.ஓம் அகத்தீசாய நம என்றும்,எல்லாமே அகத்தியர் என்று கூறுவான்.அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்தில் உள்ளது என்று தன்னை உணர்வான்.ஆறு ஆதாரம் கடந்து பொதிகை எனும் சுழிமுனையில் என்னை சோதி சொரூபமாக காண்பான்.எல்லா மக்களுக்கும் ஞானத்தை போதிக்கும் குருவும் ஆவான்.என்னை அவனுடைய குரு என்பான்.தாய் எனப்படும் அண்டங்கள் போற்றும் வாலை தெய்வத்தை போற்றி நூறு கோடி சித்தும் செய்வான் என்று கூறி அகத்திய பெருமான் இந்த பாடலை நிறைவு செய்கிறார்.


திருஈங்கோய்மலை அடிவாரத்தில் குரு பரணி யாகம்


குருவே சரணம்

ஆன்மீக அன்பு உள்ளங்களுக்கு வணக்கம்.

இந்த மாதத்திற்கான " குரு பரணி யாகம் " வரும் 08.10.2017,ஞாயிற்றுக்கிழமை அன்று காலை சுமார் 11 மணி அளவில் முசிறியை அடுத்துள்ள திருஈங்கோய்மலை அடிவாரத்தில் குரு போகர் பெருமான் சன்னதியை அடுத்த இடத்தில் வைத்து நிகழவுள்ளது.

அது சமயம் குருவின் மீது அன்புள்ளம் கொண்ட அன்பர்கள் தவறாது கலந்து கொள்ளவேண்டுமாய் அன்புடன் அழைக்கிறோம்.

மேலும் தகவலுக்கு
போகர் சித்தாந்தசபை,பழநி
9488008816
9842780095

புதன், 4 அக்டோபர், 2017

மகான் இடைக்காடர் பெருமானுக்கு திருவண்ணாமலையில் அவதார திருவிழா


ஆயனராய் அவதரித்து
ஆண்டியாய் உருத்தரித்து
அபலைகளுக்கருளிய கோணார் பெருமானே!
ஓடுகின்ற நவக்கிரகங்களை
கோடு போட்டு படுக்கவைத்த
பரந்தாமனின் அவதாரமே!
மண் சிறக்க விண்சிறக்க
கடைக்கண் திறந்து காப்பீர்
இடைக்காடர் ஸ்வாமியே!

எதிர்வரும்  அக்டோபர் 11 மற்றும் 12  தேதிகளில் மகான் இடைக்காடர் பெருமானுக்கு திருவண்ணாமலையில் அவதார திருவிழா நடைப் பெற உள்ளது.ஆன்மிக அன்பர்கள் பலர் கலந்து கொள்ள உள்ளனர்.சித்த அடியார்கள்  கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.







ஸ்ரீ அகத்தியர் பூஜித்த மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலுக்கு உதவி தேவை




திருக்கடம்பூர் - மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது கடலூர் மாவட்டத்தில் உள்ள மேலக்கடம்பூரில் அமைந்துள்ளது. இந்திரன் வழிபட்ட அமுதகலசமும், முருகன் வழிபட்டு வில்லும் பெற்ற தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி வடகரைத் தலங்களில் அமைந்துள்ள 34வது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

பெயர்: மேலக்கடம்பூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோயில்

அமைவிடம்

ஊர்: மேலக்கடம்பூர்
மாவட்டம்: கடலூர்
மாநிலம்: தமிழ்நாடு
நாடு: இந்தியா

கோயில் தகவல்கள்

மூலவர்: அமிர்தகடேசுவரர்
தாயார்: சோதிமின்னம்மை
தல விருட்சம்: கடம்ப மரம்
தீர்த்தம்: சிவதீர்த்தம், சக்தி தீர்த்தம்

பாடல்

பாடல் வகை: தேவாரம்
பாடியவர்கள்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்

அமைப்பு தொகு

கருவறை குதிரைகள் இழுத்துச்செல்லும் தேர் போன்ற அமைப்பில் உள்ளது. கும்பகோணம் அருகேயுள்ள தாராசுரத்தை நினைவூட்டும் மிக நுட்பமான சிற்பங்களை இக்கோயிலில் காணலாம்.

கரக்கோயில் தொகு

தமிழக சிவாலயங்கள் ஒன்பது வகைப்படும், இந்த ஒன்பது வகைக்குள் கடம்பூர் திருக்கோயில் கரக்கோயில் வகையினை சார்ந்தது, நான்கு சக்கரங்களுடன் கிழக்கு நோக்கி குதிரைகள் பூட்டபெற்ற அழகிய தேர்வடிவ கோயில். மேலும் கடம்ப பேரரசை ஆண்ட கடம்பர்களின் “முண்டா” மொழியில் கரம் என்ற சொல்லுக்கு கடம்பூர் என்று பெயர் கரம்+கோயில் கடம்பினை தல மரமாக கொண்ட கோயில்= கரக்கோயில் என பொருள் தருகிறது.தமிழகத்தில் கரக்கோயில் என குறிப்பிடப்படும் ஒரே கோயில் இதுவாகும். வட மொழியில் விஜயம் என குறிப்பிடப்படும் கோயிலும் இதுவாகும்.

இறைவன்: அருள்மிகு அமிர்தகடேஸ்வரர்
இறைவி : அருள்மிகு சோதி மின்னம்மை
தலமரம்: கடம்ப மரம்
தல தீர்த்தம்: சிவதீர்த்தம்-கோயிலின் வட புறத்தில் சக்தி தீர்த்தம்- கோயிலுக்கு மேற்கில் சற்று தூரத்தில்
கோயில்: கரக்கோயில்
லிங்கம்: சுயம்பு
பூசை: காலை சந்தி, மாலை பூசை, இரவு பூசை
நேரம்: காலை 8-9.30 மணி, மாலை 5-8.00 மணி
நிர்வாகம்: தமிழக இந்து சமயம் மற்றும் அறநிலைய துறை கீழ்
பாகுபாடு: பட்டியலை சாரா நிறுவனங்கள்
வழிபட்டோர் :அகத்தியர்

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், அருணகிரிநாதர், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள், வண்ணசரபம் தண்டபாணி சுவாமிகள் போன்ற அடியார்கள் பாடல்கள் பாடி வழிபட்ட தலம். இத்திருக்கடம்பூரின் ஞானசம்பந்தர் பதிகங்கள் 2-ம் திருமுறையிலும், நாவுக்கரசரின் பதிகங்கள் 5-ம் திருமுறையிலும் தொகுக்கப்பட்டுள்ளன. சிவபெருமானை கயிலை மலைக்குச் சென்று வழிபடும் தேவர்கள், எண் குலமலை தேவர்களும் அதன் தலைவன் மலையரசன், திங்கள், கதிரவன், தேவர்தலைவன், சித்தர்கள் முதலானோர் கடம்பூர் கோயிலும் கயிலை ஒத்தது என இங்கு வந்து வழிபாடு செய்துள்ளனர். ஒவ்வொரு யுகத்திலும் யார் யார் வந்து வழிபாடு செய்தனர் என்ற செய்திகள் அந்தந்தச் சிற்பங்களின் கீழ் பொறிக்கப்பட்டுள்ளது.

ஆறாம் நூற்றாண்டில் நாயன்மார்களால் பாடப்பெற்ற கோயில் என்பதால் ஆண்டுகட்கு மேலாக கோயில் உள்ளதாக அறியலாம். தேர்வடிவ கோயில் முதலாம் குலோத்துங்க சோழனால் கி.பி 1113-ல் அவரது 43–ம் ஆட்சியாண்டில் கட்டப்பெற்றது. முற்கால சோழர்களின் காலத்தில் சிவாலயங்களில் சிவன் சன்னதி மட்டுமே இடம் பெற்றிருந்தன. ராஜேந்திரன் காலத்தின் பின்னரே அம்மன் சன்னதி அமைக்கும் வழக்கம் தொடங்கியது. இக்கோயிலின் ஈசானிய மூலையில் இருந்த அம்மன் சன்னதியை சுமார் வருடங்களுக்கு முன் தேவகோட்டை செட்டியார்கள் திருப்பணியின் போது கோயிலின் உட்பிரகாரத்தில் தெற்கு நோக்கி கட்டப்பெற்றது.

புராண வரலாறு 

தேவர்களும் அசுரர்களும் திருப்பாற்கடலை கடைந்து அமுத கலசம் பெற்றனர். முழு முதற்கடவுளான விநாயகரை வழிபடாமல் அமுதுண்ண அமர்கின்றனர். அவர்களுக்கு பாடம் புகட்ட எண்ணி விநாயகர் அமுதகலசத்தினை பூலோகத்தில் மறைத்து வைக்க எடுத்துவரும் வழியில் ஒரு துளி அமிர்தம் கடம்பவன காட்டில் வீழ்ந்து சுயம்பு லிங்கமாக மாறியது. அவரே இத்தல அமிர்தகடேசுவரர்.

 பிற்காலத்தில் கடம்பவனம் கடம்பூர் என வழங்க லாயிற்று. தல மரமும் கடம்ப மரமாக ஆனது. இத்திருக்கோயிலை இந்திரனின் தாய் தினம்தோறும் வந்து வழிபட்டாள். தன் தாயின் கடமையை எளிதாக்க எண்ணி இந்திரன் இத்தல இறைவனையும், பிற தெய்வங்களையும் அழகிய தேரில் வைத்து எடுத்து செல்ல முற்பட்டான் தலவினாயகரின் அனுமதி பெறாமல் காரியம் செய்ய முற்பட்டதால் விநாயகர் அவன் ஆணவத்தினை அடக்க விசுவரூபம் எடுத்து அவன் தேரினை காலால் அழுத்த, தேர் கல்லாய் சமைந்தது.
பிழை உணர்ந்த இந்திரன் பாப விமோசனம் கோருகிறான். ஓர் நாழிகையில் கோடி லிங்கம் பிரதிட்டை செய்ய ஆணையிடுகிறார், செய்ய இயலாமல் போகவே ருத்திர கோடி ஜபம் செய்து ஒரு லிங்கம் பிரதிட்டை செய்து பிழைநிவர்த்தி பெறுகிறான். ருத்ரகோடி ஜபம் செய்து பிரதிட்டை செய்த அக்கோயில் இத்தலத்தின் கிழக்கே ஒரு கி.மி. தூரத்தில் ருத்ரகோடீச்வரர் ஆலயம் என்ற பெயரில் விளங்குகிறது. அப்பர் தேவாரத்தில் “கடம்பூர் இளங்கோயில் தன்னில் கயிலாய நாதனை காணலாமே” என போற்றுகிறார். நீண்ட காலமாய் சிதிலமடைந்திருந்த இக்கோயிலை தமிழக தொல்பொருள் துறை மூலம் புதுப்பிக்கப்பட்டு விமான கட்டுமானம் இன்றி காட்சி தருகிறது.

 கடம்ப மரம்

கடம்பூர் இக்கோயிலின் தல மரமாகும். மேலும் இம்மரத்தின் பெயராலேயே இவ்வூர் கடம்பூர் என வழங்கலாயிற்று. கடம்பமரம் இந்திய தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ற மரமாகும், எனவே பரவலாக இந்தியாவெங்கும் காணப்படுகிறது, எனினும் மேற்கு கடற்கரை ஓரங்களிலும் கர்நாடகத்திலும், இமயமலை சாரலிலும் அதிகமாக காணப்படுகிறது. இது 2 மீட்டர் சுற்றளவுடன் 18 மீட்டர் உயரம் வரை வளரும். இதன் தாவரவியல் பெயர் அன்தொசெபால்ஸ் கடம்பா என்பதாகும். ரூபிசெயே என்ற தாவர குடும்பத்தினை சேர்ந்ததாகும். வெண்கடம்பு, மஞ்சள் கடம்பு என இரு வகைப்படும். ஆரஞ்சு வண்ணத்தில் 2 அங்குல சிறு பந்து போல மிக்க நறுமணத்துடன் மே மாதங்களில் பூக்கும். இலை கரும்பச்சையாக கையகலத்தில் இருக்கும். கடம்ப மரம் மதுரை, குளித்தலை, திருக்கடம்பூர் ஆகிய தலங்களில் தலமரமாக போற்றப்படுகிறது. வடக்கே மதுராவில் கிருஷ்ணர் கடம்ப வனத்தில் விளையாடி மகிழ்ந்ததாக ஸ்ரீமத் பகவத்திலும், சைதன்ய சரித்திரத்திலும் கூறப்பட்டுள்ளது. அபிராமி அந்தாதியிலும் பல இடங்களில் அன்னை கடம்ப மாலை அணிந்தவளாக போற்றப்படுகிறாள். கடம்ப பூமாலைகள் கிருட்டிணன், முருகன் இருவருக்கு மட்டுமன்றி அனைத்து தெய்வங்களும் இதனை விரும்பி ஏற்பது இப்பாடல்கள் மூலம் அறியலாம். திருமுருகாற்றுபடையில் இதனை உருள் பூ என்று நக்கீரர் எடுத்தியம்புகிறார். பனவாசியை தலை நகராக கொண்ட கடம்பர்கள் பேரரசில் வழங்கிய “முண்டா” மொழியில் ”கரம்” என்றால் கடம்பு என பொருள் எனவே கரம்+கோயில் = கரக்கோயில்,கடம்பமரத்தினை தல மரமாக கொண்ட கோயில் என கொள்ளலாம்.கடம்ப மரத்தின் இலை, பட்டை, பழம், விதை, பூ எனஅனைத்தும் மருத்துவ பயன் கொண்டவை.

இலைச்சாறு வாய் புண், தொண்டை அழற்சி, சர்க்கரை நோய் ஆகியவற்றினை போக்கவல்லது.
பட்டையை நீரில் இட்டு காய்ச்சி குடித்தால் காய்ச்சல் தீரும்.

பழ சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து குடித்தால் வயிற்று நோய் தீரு ரத்தத்தினை சுத்தம் செய்யும்.
விதையை அரைத்து நீரில் கரைத்து குடித்தால் கடுமையான நஞ்சு முறியும்.

பூமொட்டுக்களில் இருந்து பிழியப்படும் எண்ணை வாசனை கூந்தல் தைலமாக பயன்படுகிறது.

 பிற சிறப்புகள்

அட்டமி திதி இரவில் வணங்கவேண்டிய கால வைரவர்.
கழுகு வாகனத்தில் காட்சி தரும் சனி பகவான்.
கற்சிலையாக காட்சி தரும் நடராஜர் –சிவகாமி
அறிவாற்றல் என்னும் சோதி வடிவினலாய் விளங்கும் சோதிமின்னம்மை
கடம்பவன தலமாதலால் சதய நட்சத்திர அன்பர்கள் வழிபட வேண்டிய தலம்.

3,4,5 பங்குனி தேதிகளில் காலை 6.15 க்கு சூரியக்கதிர்கள் அமிர்தகடேசுவரர் மீது விழும் அற்புதம்.

சங்கு சக்கரத்துடன் சிம்ம வாகினியாகவும் மகிஷாசுரமர்த்தினியாகவும் காட்சி தரும் துர்க்கை.
“மிர்தம்” என்றால் மரணம் “அமிர்தம்” என்றால் மரணமற்ற நிலை. அதனால் அமிர்தத்தால் உருவான அமிர்தகடேசுவரர் ஆயுள் பலம் தருவார் என்பதால், சதாபிஷேகம் ,சஷ்டியப்த பூர்த்தி திருமணங்கள் நடத்த ஏற்ற தலம.

இந்திரன் வழிபட்டு பாப விமோசனம் பெற்ற பாபஹரேசுவர லிங்கம். *அங்காரகன் வழிபட்ட செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம்.

சூரனை அழிக்க வில் பெற்ற தலம்

எமன், சித்திரகுப்தனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் பிரம்மன்.
அனுமன், கருடனுடன் சிவலிங்க வழிபாடு செய்யும் மகாவிஷ்ணு..

பிறவிக்கடன் தீர்க்கும் கடம்பநாதர்.

கங்கை படையெடுப்பின் போது கொண்டு வரப்பட்ட வலம்புரி ஆரவார விநாயகர்.
அர்த்தநாரியின் கீழ் பாம்பணையில் பள்ளி கொண்டுள்ள மகாவிஷ்ணு.

கங்கைக்கு சமமான புண்ணிய தீர்த்தம் சக்திதீர்த்தம், இங்கு அஸ்தியினை கரைத்து புண்ணியம் பெறலாம்.
மிகவும் சிறப்பான இக்கோயில் கடலூர் மாவட்டத்தில் உள்ளது

கோயில்:04144 262646

குருக்கள்:09345656982


-

-நன்றி
சுவாமிநாதன் கோபாலன் 

செவ்வாய், 3 அக்டோபர், 2017

அகத்தியர் ஸ்தாபித்த நூற்றெட்டீஸ்வரர்



அகத்திய மாமுனிவர் காசிக்குச் செல்லும்போது சதுர்வேதிபுரம் (தற்போது சின்னகாவணம்) என்னும் தலத்தில் தங்கி இருந்தார். அச்சமயம் அகத்தியரின் கனவில் தோன்றிய சிவபெருமான் இத் தலத்தில் உள்ள ஏர் அழிஞ்சல் (அங்கோளம்) மரத்தடியில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்து வந்தால், காசிக்குச் சென்றால் என்ன பலன் கிடைக்குமோ அந்த பலன் இங்கே கிடைக்கும் என்று கூறினார்.

அகத்தியர், இறைவன் அருளியபடி அருகிலேயே ஓடிக்கொண்டிருக்கும் ஆரண்ய நதிக்கரையிலிருந்து மணல் கொண்டுவந்து லிங்கம் செய்து பூஜை செய்தார். இப்படியாக, 108 நாள்களுக்கு 108 மணல் லிங்கங்களைப் பிரதிஷ்டை செய்து வணங்கினார். ஆனால் வேதங்களுக்கு அதிபதியாகிய விநாயகப் பெருமானை வணங்க மறந்ததின் விளைவாக, 108 ஆவது நாளில் 108 லிங்கங்களும் ஒன்றாக இணைந்து விநாயகப் பெருமானாக காட்சியளித்தார். இவர் அங்கோள மரத்தடியில் சிறிய தும்பிக்கையுடன் "அங்கோள கணபதி'யாக இன்றும் காட்சியளிக்கிறார்.

நினைத்த காரியம் நடைபெற அங்கோள கணபதிக்கு வடைமாலை சாற்றுவதாக வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும். தை மாதத்தில் காணும் பொங்கல் தினத்தன்று இவ்விநாயகருக்கு அபிஷேகமும் ஏர்அழிஞ்சல் மரத்திற்கு புத்தாடைகளும் அணிவித்து அர்ச்சனை செய்தால் எல்லா சுப காரியங்களும் நிறைவேறும் என்பது ஐதீகம்.

 ஏர்அழிஞ்சல் மரத்தின் வயது சுமார் 2,900 ஆண்டுகளாகும். இம்மரத்தின் சிறப்பு என்னவென்றால் பங்குனி மாதத்தில் பூ பூத்து சித்திரை, வைகாசியில் பழம் பழுத்து கீழே விழும். கனிகள் கீழே விழுந்தபின்னர், விதைகள் தாமாக ஊர்ந்து சென்று மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்ளும். இவ்வாறு மரத்தில் ஒட்டிய விதைகளைப் பிரிக்க முடியாது. அதனால் இதனை வேதவித்து என்றும் பிறக்கும் உயிர்கள் மீண்டும்

இறைவனிடமே சென்றடையும் தத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகவும் இறையம்சம் நிறைந்த விருட்சமாக போற்றுகின்றனர். ஆதிசங்கரரும் தமது சிவானந்தலகரியில் பக்திக்கு எடுத்துக்காட்டாக ஏர்அழிஞ்சல் மரத்தை கூறியுள்ளார். இதன் விதைகள் ஊர்ந்து செல்வதை இதுவரை எவரும் கண்டதில்லை என்றும் இவ்வாலய குருக்கள் தெரிவிக்கிறார்.

அகத்தியர் இத்தலத்திற்கு வருவதற்கு முன்பாகவே, இத்தலம், சதுர்வேதபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு, இத்தல இறைவன் சதுர்வேதபுரீஸ்வரர் என்றும் அம்பிகை சிவகாமி என்றும் வழங்கப்பெற்றனர். தற்போது இம்மூர்த்தங்களும் தனித்தனி சந்நிதியில் அமைந்து அருள் பாலிக்கின்றனர்.

பின்னாளில் இத்தலத்தின் சிறப்பைக் கேள்விப்பட்ட மன்னன் நந்திவர்மன், புதிதாக சிவலிங்கம் மற்றும் அம்பிகையை பிரதிஷ்டை செய்து, ஸ்ரீ அஷ்டோத்தீஸ்வரர் (நூற்றெட்டீஸ்வரர்), அஷ்டோத்திரவல்லி (நூற்றெட்டீஸ்வரி) என்ற திருநாமங்கள் சூட்டி, வணங்கி வந்ததாக தெரிகிறது. இன்றளவும் ஆலயத்தின் பிரதான மூர்த்தியான நூற்றெட்டீஸ்வரர் லிங்கரூபமாக கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார்.

இறைவி நூற்றெட்டீஸ்வரி அங்கோள கணபதிக்கு நேர்எதிரில் தெற்கு நோக்கி தனிச் சந்நிதி கொண்டு அமைந்துள்ளார். இந்த அம்பிகை இரு திருக்கரங்களிலும் தாமரை மலரை ஏந்தி மகாலட்சுமியின் அம்சத்துடன் விளங்குகிறார். திருமணத் தடையுள்ளவர்கள் மூன்று பௌர்ணமிகளில் இவ்வம்மனுக்கு ரோஜா மாலை அணிவித்து வணங்கி வந்தால் திருமணத்தடை நீங்கி நல்ல படியாக திருமணம் கைகூடும். ஆலயத்தின் வெளிச்சுற்றில் தனிச்சந்நிதியில் எழுந்தருளியுள்ள பைரவர், உயர்ந்த திருமேனியுடன் விளங்குகிறார்.

 மாதா மாதம் சங்கடஹர சதுர்த்தி, பௌர்ணமி, பிரதோஷ விழாக்களுடன் மகாசிவராத்திரி தினத்தில் 108 சங்கு அபிஷேகம், பங்குனி உத்திரம், சித்ரா பௌர்ணமி, நவராத்திரி உற்சவம், ஐப்பசி அன்னாபிஷேகம், மார்கழி ஆருத்ரா போன்றவையும் சிறப்பாக நடைபெறுகின்றன.

சின்னக்காவணம், வள்ளலார் சுவாமிகளின் தாயார் சின்னம்மையார் பிறந்த ஊராகும். இங்கு அவர் பிறந்த இல்லத்தில் மணிமண்டபம் அமைந்துள்ளது.

ஆலயம் செல்லும் வழி: சென்னையிலிருந்து ரெட்ஹில்ஸ் - பொன்னேரி வழியாக சுமார் 40 கி.மீ. தொலைவில் பழவேற்காடு செல்லும் சாலையில் அமைந்துள்ளது சின்னக்காவணம். ரயில் மார்க்கத்தில் பொன்னேரி ஸ்டேஷனில் இறங்கி அங்கிருந்து ஆட்டோவில் கோயிலை சென்றடையலாம்.

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 12


தானென்ற யென்குருவே அருளிச்செய்தீர்
சடாட்சரனே சண்முகனே தயவாய் நீயும்
நானென்ற நற்கருவை விட்டுச்சொல்லும்
நலமான கற்பவகை நட்புச்சொல்லும்
ஊனென்ற வாசியுட ஒழுங்குஞ்ச்சொல்லும்
உன்முனையைக் காணுகிற ஒளியும்சொல்லும்
வானென்ற வானவர்க்கு வலியநாதா
வடிவேலா யிந்தவகை மாட்டுவீரே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 12

விளக்கம்:

என் குருவே சுழி திறக்கும் வழியை அருளிச் செய்தீர்.சரவணபவ எனும் சாடாட்சரம் நாமம் கொண்ட சண்முகனே தயவு செய்து நல்ல கரு எது என்பதை விளக்கமாக கூறுங்கள்.நல்ல காய கல்பங்களை நட்புடன் சொல்லுங்கள்.ஒழுங்குடன் வாசி பழகும் முறையை சொல்லி அருளுங்கள்.உன் முனை எனப்படும் சுழிமுனையில் காணும் ஜோதியை காண வழி சொல்லி அருளுங்கள் .வானவர் எனப்படும் தேவலோகத்தவரை விட வலிமை கொண்ட வடிவேலா இந்த வகையை கூறுங்கள் என்று கூறி பன்னிரெண்டாவது பாடலை அகத்திய பெருமான் நிறைவு செய்கிறார்.

ஞாயிறு, 1 அக்டோபர், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 11

சாற்றலாம் வேல்முனையு முனக்குச்சித்தி
தவப்பொருளு முந்தனுக்குச் சடுதிற்கிட்டும்
ஏற்றலாம் நமன்கயிற்றை யறுத்துப்போடும்
ஈராறு தலந்தாண்டி யிருக்கலாகும்
வாற்றலாம் வச்சிரம்போற் றேகமாகும்
வழக்கமான கருவிகளை மாளப்பண்ணும்
போற்றலாம் பூர்வகன்ம வினைகள்போகும்
பொல்லாப்பு ஆனதெல்லாம் போகுந்தானே
-சுப்ரமணியர் ஞானம் 200,பாடல் 11

விளக்கம் :

முன் சொன்னதை பின்பற்றி நித்தம் செய்தால் வேல் முனை எனப்படும் சுழி முனை உனக்கு சித்தியாகும்.தவப் பொருளான சக்திகளும் உனக்கு கிடைக்கும்.அப்படி கிடைத்தால் எமன் வீசும் பாசக் கயிற்றை அறுத்து மரணத்தை வெல்லலாம்.ஈராறு தலங்களான ஸ்துல மற்றும் சூட்சும தேகங்களின் சக்கரங்களை கடந்தால் வழக்கமான கருவிகளான உடல் இயக்கம் மாறி,மல சல மற்று உடல் வச்சிரம் போல் மாறும்.பூர்வ ஜென்ம வினைகள் எல்லாம் போகும் என்று  கூறி  பதினோராவது பாடலை முருகப் பெருமான் நிறைவு செய்கிறார்


  

கடுமையான தோல் வியாதி தீர ஜீவநாடியில் அகத்தியர் கூறிய வழி



இறைவனின் கருணையைக் கொண்டு இயம்புவது யாதென்றால் நேற்றே இது குறித்து யாங்கள் கூறியிருக்கிறோம். நேற்றே என்றால் உலக பார்வையில் நேற்று என்று பொருள். இஃதொப்ப நிலையிலே பொதுவாக யாம் திருக்கருகாவூர் ஸ்தலத்தை குறிப்பிட்டோம். அஃதோடு பாஸ்கரன் பூஜை (சூர்யன்)செய்யும் அல்லது பூஜை செய்வதாக ஐதீகம் கொண்ட ஆலயங்கள் சென்று வழிபாடு செய்யலாம். அஃதொப்ப நவக்ரக வழிபாடுகளையும் செய்யலாம். தன்வந்திரி யாகம், தன்வந்திரி வழிபாட்டினை செய்யலாம். இஃதொப்ப நிலையிலே குறிப்புக்காக இவற்றைக் கூறினோமே தவிர, நாங்கள் குறிப்பிடாத வேறு ஆலயத்திற்கு சென்று வணங்கினால் கர்மப்பிணி போகாது என்று பொருள் அல்ல. உள்ளன்போடு பக்தி செலுத்தி வழிபாடு செய்து வந்தால் குறைவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இருந்தும் கூட கடுமையான பாவ வினைகளின் எதிரொலிதான் இஃதொப்ப சர்மப்பிணியாகும். எல்லாப் பிணியும் பாவ வினைகளின் எதிரொலி என்றாலும் கூட சில பிணிகள் கடுமையான பாவங்கள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறது. இஃதொப்ப கடுமையான நோய் தாக்கம் கொண்டவர்கள், அஃதொப்ப கடுமையான ருணம் போன்ற கடன் சிக்கல் கொண்டவர்கள் எல்லாம் பிதுர் சாபங்கள் கடுமையாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்திருப்பார்கள். அல்லது முன்னோர்களின் பாவத்தையும் சேர்த்து சுமக்க வேண்டிய அல்லது முன்னோர்கள் வழியாக வருகின்ற சாபத்தையும் சேர்த்து அஃதொப்ப பலனை நுகர வேண்டிய நிலையிலும், முற்பிறப்பில் பெற்ற சாபத்தையும் சேர்த்து நுகர வேண்டிய நிலையிலும் பிறப்பு எடுத்திருப்பார்கள். இவர்கள் அன்றாடம் கால பைரவர் அல்லது வேறு பைரவர் வழிபாட்டை உள்ளன்போடு செய்வதும், பைரவருக்கு இயன்ற வகையில் எல்லா வகையான வழிபாட்டை உள்ளன்போடு  செய்வதும், நல்ல முறையிலே, உயர்வான முறையிலே “ தெய்வத்தீவு “ (ராமேஸ்வரம்) ஏகி தில யாகத்தை செய்வதும், ஏனைய தர்மகாரியங்களோடு அஃதொப்ப ஆவினங்களுக்கு(பசுக்கள்) வேண்டிய உதவிகளை செய்வதும் தக்க மாற்று வழியாக இருக்கும். இவற்றோடு கயப்பும், துவர்ப்பும் உணவில் அதிகமாக சேர்த்துக் கொண்டால் நல்ல பலன் உண்டு.

திருக்கருகாவூர்

திருக்கருக்காவூர் - திருக்கடாவூர் வெள்ளடயீஸ்வரர் கோயில் சம்பந்தர், சுந்தரர் பாடல் பெற்ற சிவாலயமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் பாபநாசம் வட்டத்தில் அமைந்துள்ளது. பசியோடிருந்த சுந்தரருக்கு இறைவன் கட்டமுதும் நீரும் தந்து பசிபோக்கிய தலமென்பது தொன்நம்பிக்கை (ஐதிகம்). தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரியின் தென் கரையில் அமைந்துள்ள 18ஆவது சிவத்தலமாகும்.

ஊர்த்தவ மகரிஷியின் சாபத்தால் நித்துவரின் மனைவி வேதிகைக்கு ஏற்பட்ட கருச்சிதைவை இறைவன் மருத்துவம் பார்த்து அவள் கருவைக் காத்ததால் - கருகாவூர் என்று பெயர் பெற்றது.

திருக்களாவூர் என மக்களால் பொதுவாக அழைக்கப்பெறும் இத்தலம் மாதவி வனம், முல்லைவனம், திருக்கருகாவூர், கர்ப்பபுரி என்று பல பெயர்களால் நூல்களில் குறிப்பிடப்படுகிறது. மாதவி (முல்லைக்கொடியை) தலவிருட்சமாகக் கொண்டுள்ளதால் மாதவி வனம் (முல்லை வனம்) என்றும், கரு+கா+ஊர். கரு-தாயின் வயிற்றில் உள்ள (குழந்தைக்) கருவை, கா-காத்த (காக்கின்ற), ஊர்-ஊர், கருகாவூர் எனப் பெயர் பெற்றது.

கும்பகோணம் - ஆவூர் - மிலட்டூர் வழியாகத் தஞ்சாவூர் செல்லும் சாலையில் உள்ளது இத்தலம். இத்தலத்திற்கு தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையத்திலிருந்தும், கும்பகோணத்திலிருந்தும் நகரப் பேருந்துகள் உள்ளன.

சூரிய பகவான் ஆலயம்

தமிழ்நாட்டில் கும்பகோணத்துக்கு கிழக்கே கும்பகோணம்-பூம்புகார் சாலையில் சூரியனார் கோவில் அமைந்துள்ளது. ஆடுதுறை இரயில் நிலையத்தில் இறங்கி அணைக்கரை செல்லும் பேருந்தில் ஏறி இக்கோவிலை அடையலாம். திருமங்கலக்குடி காளியம்மன் கோவில் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி சற்றுத் தொலைவு நடந்து கோவிலை அடையலாம். இந்த கோவில் ஒன்பது நவக்கிரகக்கோயில்களில் முதன்மையானதாகும்


கயப்பு, துவர்ப்பு உணவு 

கசப்பு  சுவை: பாகற்காய், சுண்டக்காய், கத்தரிக்காய்,வெந்தயம்,பூண்டு, எள்ளு, வேப்பம்பூ ,ஓமம்,தேங்காய் மற்றும் தேன்

துவர்ப்பு:வாழைக்காய், மாதுளை, மாவடு, மஞ்சள், அவரை மற்றும் அத்திக்காய் 

எயிட்ஸ் நோய் பாதிப்பு குறைய அகத்தியர் ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி



வரம்பு மீறாமல் இருக்க, இறைவன் அப்பொழுது காட்டுகின்ற பல்வேறு எச்சரிக்கைகளில் இதுவும் ஒன்று. இதற்கும் இறைவன் அருளால் மனிதன் சில காலங்களில் மருந்தைக் கண்டு விடுவான். கண்டு பிடித்த பிறகு வேறு ஒரு புதிய பிணி வரத்தான் செய்யும். அதற்கு சில காலம் மருந்தில்லாமல் மனிதன் இடர்படத்தான் வேண்டியிருக்கிறது. இப்பொழுதும் இதற்கு பல்வேறு விதமான மூலிகைகள் அஃதொப்ப கொல்லி வனத்திலும், சதுரகிரி வனத்திலும் இருக்கிறதப்பா. ஆனால் மெய்யான ஆன்மாக்களுக்கு கட்டாயம் இஃதொப்ப இந்த பலன் கிடைக்க வேண்டுமென்று இருந்தால், இந்த மூலிகையை இறைவன் காட்டி அருளுவார். இஃதொப்ப நிலையிலே பொதுவாக கூறுவது என்றால், கயப்பு மிக்க மூலிகைகளை(வேம்பு,சிறு குறிஞ்சான்)  அதிகாலையிலே அவ்வப்பொழுது அந்த மூலிகையை மனமார வணங்கி “ வேறு வழியில்லாமல் என் பிணியை நீக்கிக் கொள்ள உன்னைப் பறிக்கிறேன் “ என்று மானசீகமாக மன்னிப்பு கேட்டு அவ்வப்பொழுது புதிதாக பறித்து அவற்றை கலுவத்தில் (கல்சட்டியில்) இட்டு  கஷாயமாக்கி சுக்கிரனின் உலோகத்திலே (வெள்ளிப் பாத்திரம்) பருகி வருவது ஓரளவு இதற்கும், அரவு இல்லப் பிணிக்கும் ஒரு தடுப்பு மருந்தாக இருக்கும். ஆனாலும் கூட, இது, 100 – க்கு 100 பலன் தரும் என்று நாங்கள் கூறவில்லை. ஒவ்வொரு மனிதனின் தனித்தனி பாவங்களுக்கு ஏற்ப நாங்கள் பரிகாரங்களைக் கூற வேண்டும்.  

குடல் பிணி தீர அகத்தியர் ஜீவநாடியில் அகத்தியர் கூறிய வழி




இறைவனின் கருணையாலே ஒரு உறுத்தலான குடல் பிணி என்றும், அதனால் மனிதன் அடிக்கடி ஒதுங்க வேண்டிய நிலை இருப்பதும் இவ்வாறு மருத்துவத்தால் அழைக்கப்படுகிறது. இதுவும் ஒரு வகையான கர்மப்பிணிதான். இஃதொப்ப நிலையிலே 100 அல்லது 100 – க்கு மேற்பட்ட அகவை(வயது ) உடைய ஸ்தல விருக்ஷங்களில்(மரம்) இருந்து இயல்பாக கீழே விழுந்த இலைகளை எடுத்து நிழலில் உலர்த்தி, பொடித்து அதிகாலையில் சூன்ய அகத்திலே(வெறும் வயிறு ) உண்ணலாம். அல்லது நீர் விட்டு காய்ச்சி கஷாயமாகவும் ஏற்று வரலாம். இதிலே வேம்பு பிரதானம் பெறுகிறது. இஃதொப்ப வன்னி மரத்து இலையும் பிரதானம் பெறுகிறது. ஆனாலும் கூட, இந்த ஒன்றே போதுமானது என்று நாங்கள் கூறவில்லை. இஃதோடு மேலும் முன்னர் கூறிய வழிமுறைகளை குறிப்பாக  பிணி நீக்கும் ஆலயங்கள் என்று மனிதர்களால் கருதப்படுகின்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்வதும் இஃதொப்ப நல்விதமாய் அஃது தொடர்பான பிணிகள் கொண்ட ஏழைகளுக்கு மருத்துவ உதவி செய்வதும் தொடர்ந்து உயர், உயர், உயர், உயர், உயர்வான அன்ன சேவைகளை செய்வதும் இந்தப் பிணியிலிருந்து வெளியே வருவதற்கு தக்க வாய்ப்பாக இருக்கும்.




சென்னை பஞ்செட்டியில் அகத்திய பெருமானுக்கு புரட்டாசி மாத சதய நட்சத்திர பூஜை





சென்னையில் உள்ள பஞ்செட்டி தலத்தில் அகத்திய பெருமானுக்கு  இம்மாதம் 03/10/2017 அன்று மாலை 5.30 மணி முதல் 07.30 மணிக்குள் சதய நட்சத்திர பூஜை நடைப் பெற உள்ளது.அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.