சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மருதேரி கிராமத்தில் பிருகு மகரிஷி அருள் நிலையம் அமைந்துள்ளது.பிருகு மகரிஷி,ஸ்ரீ அகத்தியர் ,ஸ்ரீ நந்தி தேவர் ஜீவ நாடியில் இடப்படும் உத்தரவுப்படி ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரம் அன்று சித்தர் மற்றும் ஜோதி வழிபாடுகள் நடைப்பெற்று பின் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
இந்த பூஜையில் ஏற்றப்படும் ஜோதியில் சித்தர்கள் எழுந்தருளி மற்றும் அதை தொடர்ந்து ஜீவ நாடியிலும் சித்தர்கள் எழுந்தருளி ஆசி வழங்குவார்கள்
வரும் ஹேவிளம்பி வருடம் புரட்டாசி மாதம் 24 ஆம் நாள் ரோகிணி நட்சத்திரம் அன்று (10/10/2017) காலை 8.00 மணியளவில் மகாஞானி அகப்பேய் சித்தர் மருதேரியில் எழந்தருள உள்ளார். அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக