சித்தர் பூஜை முறைகள் மற்றும் மந்திரங்கள்
அகத்தியர் மற்றும் எண்ணிலடங்கா சித்தர்கள் அனைவரும் ஜோதி வடிவானவர்களே.ஆகையால் சித்தர்களை பூசிக்க விரும்புவர்கள் அகண்ட ஜோதி ஏற்றி சித்தர் போற்றிகளை கூறினால் போதுமானது.நான் ஜோதி வடிவமானவன் என்று பல நூல்களிலும் மற்றும் ஜீவ நாடியிலும் உரைத்துள்ளனர்.
அருட் பெருஞ்சோதி அருட் பெருஞ்சோதி
தனிப்பெருங்கருணை அருட் பெருஞ்சோதி
என்ற மகா மந்திரத்தை கூறி அகண்ட தீபம் ஏற்றி வைத்து பின் வரும் மந்திரங்களை கூறவும்.
அகத்தியர் மூல மந்திரம்
“ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!”
நிகண்டு நாடியில் இருந்து எடுக்கப்பட்ட அகத்தியர் மூல மந்திரம்
ஓம் ஸ்ரீம் ஓம் சற்குரு பதமே
சாப பாவ விமோட்சனம்
ரோக அகங்கார துர் விமோட்சனம்
சர்வ தேவ சகல சித்த ஒளி ரூபம்
சற்குருவே ஓம் அகஸ்திய
கிரந்த கர்த்தாய நம
ஸ்ரீ அகத்தியர் காயத்ரி மந்திரம்
ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை சஞசாராய தீமஹி
தந்நோ ஞானகுரு: ப்ரசோதயாத்
பதினாறு போற்றிகள்:
1. தேவாதி தேவர்களைக் காத்தவரே போற்றி!
2. சிவசக்தி திருமண தரிசனம் கண்டவரே போற்றி!
3. தென் திசை, வடதிசையைச் சமப்படுத்தியவரே போற்றி!
4. விந்திய மலையின் அகந்தையை போக்கியவரே போற்றி!
5. கும்பத்திலுதித்தக் குறு முனியே போற்றி!
6. சித்த வைத்திய சிகரமே போற்றி!
7. சுவேதனின் சாபம் தீர்த்தவரே போற்றி!
8. இசைஞான ஜோதியே போற்றி!
9. உலோப முத்திரையின் பதியே போற்றி!
10. காவேரி தந்த கருணையே போற்றி!
11. அகத்தியம் தந்த அருளே போற்றி!
12. இராமபிரானுக்கு சிவ கீதையருளியவரே போற்றி!
13. அசுராசுரர்களை அழித்தவரே போற்றி!
14. அரும் மருந்துகளை அறிந்தவரே போற்றி!
15. இசையால் இராவணனை வென்றவரே போற்றி!
16. இன்னல்கள் போற்றி இன்பம் தரும் அகத்திய பெருமானே போற்றி! போற்றி!
தூப,தீபம் காட்ட வேண்டும்.அதன் பிறகு பின்வரும் பாடல்களை பாடி பூஜையை நிறை செய்ய வேண்டும்.
நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவனை
நிங்காதார் குலம் தழைக்க நிதியாவானை
செஞ்சாலி வயற்பொழில் சூழ்தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்
குருவடி பொற்றாள் சரண்சரணம் கும்பமுனியே சரண்சரணம்
திருவடி நாதா சரண்சரணம் சித்தர்களின் அருளே சரண்சரணம்
அருள்வடி வானாய் சரண்சரணம் அமரர்கள் கோவே சரண்சரணம்
பொருளடி மூலங் காட்டிற்று போதித்த குருவே சரண்சரணம்
போதித்த குருவே சரண்சரணம் பொதிகை வளர்அம்பலர் சரணம்
வேதித்தெனையே ஆட்கொண்ட விமலா சரணம் மெய்ஞ்ஞானம்
சாதித்த தேவே சரண்சரணம் சமுசயந்தீர்த்தாய் சரண்சரணம்
ஓதித்தருவாய் சரண்சரணம் உண்மைப்பொருளே சரண்சரணம்.
பூஜை முடிந்த பிறகு,சிறிது நேரம் "ஓம் அகத்திசாய நம" என்று தியானம் செய்ய வேண்டும்.

சம்பூரணம் சம்பூரணம் சம்பூரணம்
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
என்று கூறி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக