தானென்ற யென்குருவே அருளிச்செய்தீர்
சடாட்சரனே சண்முகனே தயவாய் நீயும்
நானென்ற நற்கருவை விட்டுச்சொல்லும்
நலமான கற்பவகை நட்புச்சொல்லும்
ஊனென்ற வாசியுட ஒழுங்குஞ்ச்சொல்லும்
உன்முனையைக் காணுகிற ஒளியும்சொல்லும்
வானென்ற வானவர்க்கு வலியநாதா
வடிவேலா யிந்தவகை மாட்டுவீரே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 12
விளக்கம்:
என் குருவே சுழி திறக்கும் வழியை அருளிச் செய்தீர்.சரவணபவ எனும் சாடாட்சரம் நாமம் கொண்ட சண்முகனே தயவு செய்து நல்ல கரு எது என்பதை விளக்கமாக கூறுங்கள்.நல்ல காய கல்பங்களை நட்புடன் சொல்லுங்கள்.ஒழுங்குடன் வாசி பழகும் முறையை சொல்லி அருளுங்கள்.உன் முனை எனப்படும் சுழிமுனையில் காணும் ஜோதியை காண வழி சொல்லி அருளுங்கள் .வானவர் எனப்படும் தேவலோகத்தவரை விட வலிமை கொண்ட வடிவேலா இந்த வகையை கூறுங்கள் என்று கூறி பன்னிரெண்டாவது பாடலை அகத்திய பெருமான் நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக