தவப்பொருளு முந்தனுக்குச் சடுதிற்கிட்டும்
ஏற்றலாம் நமன்கயிற்றை யறுத்துப்போடும்
ஈராறு தலந்தாண்டி யிருக்கலாகும்
வாற்றலாம் வச்சிரம்போற் றேகமாகும்
வழக்கமான கருவிகளை மாளப்பண்ணும்
போற்றலாம் பூர்வகன்ம வினைகள்போகும்
பொல்லாப்பு ஆனதெல்லாம் போகுந்தானே
-சுப்ரமணியர் ஞானம் 200,பாடல் 11
விளக்கம் :
முன் சொன்னதை பின்பற்றி நித்தம் செய்தால் வேல் முனை எனப்படும் சுழி முனை உனக்கு சித்தியாகும்.தவப் பொருளான சக்திகளும் உனக்கு கிடைக்கும்.அப்படி கிடைத்தால் எமன் வீசும் பாசக் கயிற்றை அறுத்து மரணத்தை வெல்லலாம்.ஈராறு தலங்களான ஸ்துல மற்றும் சூட்சும தேகங்களின் சக்கரங்களை கடந்தால் வழக்கமான கருவிகளான உடல் இயக்கம் மாறி,மல சல மற்று உடல் வச்சிரம் போல் மாறும்.பூர்வ ஜென்ம வினைகள் எல்லாம் போகும் என்று கூறி பதினோராவது பாடலை முருகப் பெருமான் நிறைவு செய்கிறார்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக