வியாழன், 31 ஆகஸ்ட், 2017

காஞ்சிபுரம் ஸ்ரீ நகுலீஸ்வரர் ஆலயப் பணி பாலாலயம்

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னாள் மகாபாரத போர் முடிந்து பஞ்சபாண்டவர்களும் கயிலையை நோக்கி செல்லும் வழியில் காஞ்சி எனும் முக்தி ஸ்தலத்தை அடைந்தனர் ... எங்கும் பரந்த பரம்பொருளை ஏகம்பனை கண்டு வழிபாடு செய்து பஞ்ச பாண்டவர்களும் தங்களின் நினைவாக சிவலிங்கம் பிரதிஷ்டை செய்தனர்.. இதில் நகுலன் பிரதிஷ்டை செய்த லிங்கம் காஞ்சி அருகில் லிங்கம் மட்டும் தனித்து இருந்த நிலையில் காணப்பட்டது .. நரப்பாக்கம் எனும் வூரில் ... அகத்திய மகா குருவின் கருணையால் அந்த கிராம மக்கள் எம்மை அணுகினர் .. காலங்களை கடந்து வாழும் இந்த லிங்கம் ..27.10.2017 அன்று பாலாலயம் செய்தோம் .. திருப்பணிகள் இனிதே துவங்கி உள்ளன .. தமிழ்நாட்டில் சிதிலமான லிங்கங்களையும் ஆலயங்களையும் மீட்டுஎடுப்பதே நம் தலையாய பணி ... வாருங்கள் வரவேற்கிறோம் ...

 அகத்திய ஸ்ரீ .அன்புச்செழியன் ..





அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 9



நில்லடா ஒருமனதாய் நிலையில் நில்லு
நித்தநித்தம் பிராணாயம் நினைவாய்க் கூட்டு
அல்லடா கற்பமதை யறிந்தேயுண்ணு
ஆறுவரை யூடுருவி யடுத்தேயேறும்
வல்லடா வாசியைதான் மேலேநோக்கு
வயிரமங்கே யிருக்கின்ற வகையுங்காணும்
அல்லடா யிப்படியே அறிந்துகொண்டு
ஆதிவஸ்தை யனுதினமு மறிவாய்ப் போற்றே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 9

விளக்கம்:

மூச்சை கவனித்து ஒருமனதாய் புருவ மத்தியில் நினைவை வைத்து நின்று நாள்தோறும் பிராணாயம் எனும் வாசியை கூட்ட வேண்டும்.கற்பம் எது அறிந்து அதை உண்ண வேண்டும்.இப்படியே செய்து ஆறு சக்கரங்களை ஊடுருவி சென்று,வாசியை கீழ் நோக்கி செலுத்தாமல் மேல் நோக்கி செலுத்த வேண்டும்.அப்படி செலுத்தினால் வைரத்திற்கு ஒப்பான ஜோதியை காண முடியும்.இப்படி தினம் தினம் செய்து ஆதி வஸ்துவின் நிலையான ஜோதி சொருப நிலையை அடையலாம் என்று கூறி ஒன்பதாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

புதன், 30 ஆகஸ்ட், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 8




வாய்க்குமடா மனதழுக்கை யறுக்கவேணும்
வஞ்சமெனும் புத்தியையும் மாய்க்கவேணும்
எய்க்குமடா பேய்ப்பான பேச்சையெல்லாம்
ஈடழியக் கண்டுமுத லிறுத்தவேணும்
நாய்க்குமாடா நாய்போலே திரியவேணும்
நல்லோரைக் கண்டாக்கால் வணங்கவேனும்
பேய்க்குமடா பிராணானையும் போற்றவேணும்
பிரபலங்கள் பண்ணாமற் பிலத்துநில்லே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 8

விளக்கம்:

குண்டலி சக்தி எனும் அளப் பெரிய சக்தியை ஏற்ற வேண்டும் என்றால்,மனதில் இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டும். வஞ்சனை எனும் ஆழ்ந்த வெறுப்பை கற்பிக்கின்ற புத்தியை மாய்க்க வேண்டும்.மௌனத்தையே முழு மூச்சாய் கொண்டு,நாய் போல வாசி பழக வேண்டும். வாசியால் கிட்டும் நல்ல சக்திகளை வணங்கி பிராணன் எனும் உயிர் சக்தியையும் போற்ற வேண்டும்.இதை எல்லாம் வெளியிடாது செய்தால் குண்டலி வாய்க்கும் என்று கூறி எட்டாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 7



பாடவே கின்னரியு மாலின்வீட்டிற்
பகல்வத்தி தீவட்டி யகல்போற்றோணும்
ஆடமே ஐந்தெழுத்து மதிலேதோணும்
அப்புறமுஞ் சங்குதொனி யறிவாய்க் கேட்கும்
நாடவே தமர் திறக்கும் வாசல்தோணும்
நந்தியுட வீற்றிருப்பும் நட்புந்தோணும்
வாடவே வச்சிரமணி விளக்குந்தோணும்
வாலையுட சிலம்பொலியும் வாய்குந்தானே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 7

விளக்கம்:

சுழிமுனை வழியாக ஏறி வரும்போது உடல் எனும் இந்த வீட்டில் எரிகின்ற ஐந்து சக்கரங்களிலும் அகல் ஏற்றி வைத்தது போல் ஒளி தோன்றும் அதை போற்றி முன்னேறினால் ஓம் என்கிற ஓங்கார நாதம் கேட்கும்.நந்தி வீற்றிக்கும்  இடத்தை தாண்டி சென்றால் வச்சிரமணி விளக்கு எனும் சோதியை காண்பாய் பின்னர் வாலையுடைய சிலம்பொலியும் கேட்கும் என்று கூறி எழாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய நவகைலாய வழிபாடு




நவகைலாயம் வரலாறு :

தென் தமிழகத்தின் எல்லையாக திகழ்வது பொதிகை மலை, அங்கு அகத்திய முனிவரின் சீடரான உரோமச முனிவர் மீண்டும் பிறவா வரம் வேண்டி (முக்தி வேண்டி) சிவ பெருமானை வணங்கினர். இதை அறிந்த அகத்திய முனிவர் "தாமிரபரணி சங்கமிக்கும் இடத்தில் நீராடி சிவனை வழிபட்டு, பின்னர் நவக்கோள் வரிசையில் சிவனை வணங்கவேண்டும்’’ என்றார்.

நவகோள்களை அறிவதற்காக ஒன்பது மலர்களை ஆற்றில் விட்டு, இவை எந்தெந்த கரையில் ஒதுங்குகிறதோ அங்கு சிவ லிங்கத்தை வைத்து வழிபடுமாறு வேண்டினார். உரோமச முனிவரும் அவ்வாறே செய்தார்.அதில்

முதல் மலர் பாபநாசத்திலும் (சூரிய தலம்)
இரண்டாவது மலர்சேரன்மாதேவியிலும் (சந்திரன்)
மூன்றாவது மலர் கோடகநல்லூரிலும்(செவ்வாய்)
நான்காவது மலர் குன்னத்தூரிலும் (ராகு)
ஐந்தாவது மலர்முறப்பநாட்டிலும் (குரு)
ஆறாவது மலர் ஸ்ரீவைகுண்டத்திலும் (சனி)
ஏழாவது மலர் தென் திருப்பேரையிலும் (புதன்)
எட்டாவது மலர்ராஜபதியிலும் (கேது)
ஒன்பதாவது மலர் சேர்ந்தபூமங்கலத்திலும் (சுக்கிரன்)

கரை ஒதுங்கியது. அந்த இடங்கள் தான் நவ கைலாயம் என்று அழைக்கப்படுகிறது.

சூரிய தலம்

தலம்: பாபநாசம்
அம்சம்: சூரியன்
நட்சத்திரம்: கார்த்திகை, உத்திரம்
மூலவர்: ஸ்ரீபாபநாசர் என்ற கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீஉலகாம்பிகை
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 45 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சந்திர தலம்

தலம்: சேரன்மகாதேவி
அம்சம்: சந்திரன் நட்சத்திரம்: ரோகினி, ஹஸ்தம், திருவோணம்
மூலவர்: ஸ்ரீஅம்மைநாதர்
அம்பாள்: ஸ்ரீஆவுடைநாயகி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

செவ்வாய் தலம்

தலம்: கோடகநல்லூர்
அம்சம்: செவ்வாய் நட்சத்திரம்: மிருக சிரீடம், சித்திரை, அவிட்டம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து மேற்கே சேரன்மகாதேவி செல்லும் கல்லூர் சாலையில் நடுக்கல்லுருக்கு தெற்கே ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

ராகு தலம்

தலம்: குன்னத்தூர் (சங்காணி)
அம்சம்: ராகு
நட்சத்திரம்: திருவாதிரை, சுவாதி, சதயம்
மூலவர்: ஸ்ரீகோத்த பரமேஸ்வரர் என்ற கைலாய நாதர் அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து 7 கிலோ மீட்டர் தொலைவில் திருவேங்கடநாதபுரம் குன்னத்தூருக்கு தெற்கே உள்ளது. இது சங்காணி சிவன் கோவில் என்று அவ்வூர் மக்களால் அழைக்கப்படுகிறது.

குரு தலம்

தலம்: முறப்பநாடு
அம்சம்: வியாழன் (குரு)
நட்சத்திரம்: புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
மூலவர்: ஸ்ரீகைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து தூத்துக்குடி செல்லும் சாலையில் 17 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சனி தலம்

தலம்: ஸ்ரீவைகுண்டம்
அம்சம்: சனி
நட்சத்திரம்: பூசம், அனுஷம், உத்திரட்டாதி
மூலவர்: ஸ்ரீ கைலாச நாதர்
அம்பாள்: ஸ்ரீசிவகாமி
இருப்பிடம்: திருநெல்வேலியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையில் முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

புதன் தலம்

தலம்: தென் திருப்பேரை
அம்சம்: புதன்
நட்சத்திரம்: ஆயில்யம், கேட்டை, ரேவதி
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை
இருப்பிடம்: ஸ்ரீவைகுண்டத்தில் இருந்து எட்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

கேது தலம்

தலம்: ராஜபதி
அம்சம்: கேது
நட்சத்திரம்: அசுவதி, மகம், மூலம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீஅழகிய பொன்னம்மை என்ற சிவகாமி
இருப்பிடம்: தென்திருப்பேரை கோவிலில் இருந்து அதே பாதையில் 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

சுக்கிரன் தலம்

தலம்: சேர்ந்த பூமங்கலம்
அம்சம்: சுக்கிரன்
நட்சத்திரம்: பரணி, பூராடம், பூரம்
மூலவர்: ஸ்ரீகைலாசநாதர்
அம்பாள்: ஸ்ரீசௌந்தர்யா நாயகி
இருப்பிடம்: திருச்செந்தூரில் இருந்து புன்னைக்காயல் செல்லும் சாலையில் ஆத்தூரில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த ஒன்பது கோவில்களையும் ஒரே நாளில் தரிசித்தால் கைலாயத்தை அடைந்த பலன் உண்டு என்பது சான்றோர் வாக்கு. இந்த ஒன்பது கோவில்களில் தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்குவது மட்டுமின்றி புண்ணியமும் வந்து சேரும்.இந்தத் தலங்களை மகாசிவராத்திரியன்று பக்தர்கள் தரிசனம் செய்கின்றனர்.

இந்தத் தலங்களை தரிசனம் செய்ய மார்கழி மாதங்களில் தமிழக அரசே சிறப்பு பேருந்தினை ஏற்பாடு செய்கிறது. காலையில் திருநெல்வேலியில் இருந்து கிளம்பி நவகைலாயங்களை தரிசனம் செய்துவிட்டு இரவுக்குள் திருநெல்வேலிக்கு திரும்படி ஏற்பாடு செய்யப்படுகிறது

திங்கள், 28 ஆகஸ்ட், 2017

அகத்தியர் பிறந்த மார்கழி மாதத்தில் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளே ‘சித்தா தினமாக’ கொண்டாடப்படும்: ஆயுஷ் அமைச்சகம் அனுமதி



அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளை ‘சித்தா தினமாக’ அறிவித்து மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்திய மருத்துவ முறைகளாக ஆயுர்வேதா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம், சித்தா, ஓமியோபதி (ஆயுஷ் - AYUSH) உள்ளன. ஆயுர்வேதா, யோகா தினங்களை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அறிவித்துள்ளது. அதன்படி ஆண்டுதோறும் ஆயுர்வேதா, யோகா தினங்கள் கொண்டாடப்பட்டு வருகின்றன. அதேபோல் சித்த மருத்துவத்துக்கு முன்னோடி யான அகத்தியர் பிறந்த ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளை சித்தா தினமாக அறிவிக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.

அகத்தியர் பிறந்த தினம்

இதுபற்றி ஆலோசனை நடத்தி கருத்துகளைக் கேட்ட, மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் கோரிக்கையை மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகத்துக்கு அனுப்பியது. இதனைத் தொடர்ந்து அகத்தியர் பிறந்த மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளை சித்தா தினமாக கொண்டாட மத்திய அரசின் ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி அகத்தியர் பிறந்த ஆயில்யம் நட்சத்திரம் வரும், ஜனவரி மாதம் 4-ம் தேதி நாடுமுழுவதும் தேசிய சித்தா தினம் கொண்டாடப்பட உள்ளது.

சிறப்பு நிகழ்ச்சிகள்

இதுதொடர்பாக சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவமனை வளாகத்தில் செயல்படும் சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையம் (மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம், ஆயுஷ் அமைச்சகம்) ஆராய்ச்சி அலுவலர் டாக்டர் எம்.கண்ணன், இணை ஆய்வர் டாக்டர் ஆர்.சைலஜா ஆகியோர் கூறியதாவது:

சித்த மருத்துவத்தை 18 சித்தர்கள் தோற்றுவித்தனர். அவர்களின் முதன்மைச் சித்தர் அகத்தியர். தேசிய சித்தா தினம் முறையாக அறிவிக்கப்படாததால், ஆண்டுதோறும் ஜனவரி 14-ம் தேதி சித்தா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. தற்போது அகத்தியர் பிறந்த ஆயில்யம் நடசத்திரம் வரும் நாளை சித்தா தினமாக கொண்டாட மத்திய ஆயுஷ் அமைச்சகம் அனுமதி வழங்கியுள்ளது. வரும் ஜனவரி 4-ம் தேதி ஆயில்யம் நட்சத்திரம் வருகிறது. அன்றைய தினம் சித்தா தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆயில்ய நட்சத்திரம் வரும் தேதி மாறுபடும். ஆண்டுதோறும் எந்த தேதியில் ஆயில்யம் நட்சத்திரம் வருகிறதோ அன்றைய தினம் சித்தா தினம் கொண்டாடப்படும். முதல் சித்தா தினம் கொண்டாட்டத்தின் முன்னோட்டமாக அகத்தியரின் சிறப்புகள், அவர்கள் சித்த மருத்துவத்துக்கு கொடுத்த பங்களிப்பு குறித்த கருத்தரங்கம் இன் றும் நாளையும் சென்னை அரும்பாக்கத்தில் அறிஞர் அண்ணா இயற்கை மருத்துவமனை வளாகத்திலுள்ள சித்த மருத்துவ மைய ஆராய்ச்சி நிலையத்தில் நடைபெறுகிறது என்றனர்.


நன்றி:தி ஹிந்து

சனி, 26 ஆகஸ்ட், 2017

தினமும் இரு வேளை சொல்ல வேண்டிய அகஸ்திய மஹரிஷியின் அற்புதமான ஸ்லோகம்



மாமுனியே மாதவனே
அகஸ்த்யம் ஸத்ய ஸாந்நித்யம்
ஆச்சார்ய வர்யம் அற்புதம்
அமிர்தானந்த சித்ரூபம்
அமூல்ய மூலமாச்சர்யே
ஸர்வமங்கள சம்பூர்ணம்
ஸதாஸ்மேரே முகாம்புஜம்
ஸர்வாகர்ஷணஸாநித்யம்
மமஸத்குரும்ஆஷ்ரயே
ஓம் அகஸ்தீசாய நமஹ


-நன்றி,திரு.சுவாமிநாதன் கோபாலன்

அகத்திய பெருமானின் ஜீவ நாடி கட்டளைப்படி காஞ்சிபுரம் ஸ்ரீ நகுலீஸ்வரர் ஆலயப் பணி துவக்க விழா


அகத்திய பெருமானின் ஜீவ நாடி கட்டளைப்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள  நரப்பாக்கம் கிராமத்தில் ஸ்ரீ நகுலீஸ்வரர் ஆலயப் பணி திரு.அன்புசெழியன் அவர்கள் தலைமையில் துவங்க உள்ளது.

இது பஞ்ச பாண்டவர்களில் ஒருவரான நகுலர் நிறுவி வழிபட்ட தலமாகும்.அன்பர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழா சிறக்க உதவுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

ஸ்ரீ நகுலீஸ்வரர்


வெள்ளி, 25 ஆகஸ்ட், 2017

சென்னை பஞ்செட்டியில் அகத்திய பெருமானுக்கு ஆவணி மாத சதய நட்சத்திர பூஜை


சென்னையில் உள்ள பஞ்செட்டி தலத்தில் அகத்திய பெருமானுக்கு  இம்மாதம் 05/09/2017 அன்று மாலை 5.30 மணி முதல் 07.30 மணிக்குள் சதய நட்சத்திர பூஜை நடைப் பெற உள்ளது.அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வியாழன், 24 ஆகஸ்ட், 2017

விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய திருநனிபள்ளி





மூவராலும் பாடப் பெற்ற தலங்களில் ஒன்று என்ற் சிறப்பை இத்தலம் பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இராஜகோபுரமில்லை. ஒரு முகப்பு வாயில் மட்டுமே உள்ளது. முகப்பு வாயிலின் மேலே ரிஷப வாகனத்தின் மீதமர்ந்த சிவன் பார்வதி, மூஞ்சூறு வாகனத்தின் மீதமர்ந்த விநாயகர், மயில் வாகனத்தின் மீதமர்ந்த முருகப் பெருமான் ஆகியோர் சுதைச் சிற்பங்கள் வடிவில் காட்சி அளிக்கின்றனர். உள்ளே கருவறையில் மூலவர் நற்றுணையப்பர் சுயம்பு லிங்க உருவில் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். கோஷ்ட மூர்த்தங்களாக அகத்தியர், விநாயகர், தட்சிணா மூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். கோஷ்ட மூர்த்தங்கள் சிறந்த சிற்ப வேலைப்பாடுடன் அமைந்துள்ளன. கோவிலின் கருவறை நல்ல வேலைப்பாடுடையதாக அமைந்துள்ளது. இறைவன் நற்றுணையப்பர் கிழக்கு நோக்கித் தரிசனம் தருகின்றார். விநாயகர், அகத்தியர் இருவருக்குமே சிவபெருமான் தனது திருமண கோலத்தை காட்டியருளிய தலம் திருநனிபள்ளி. அகத்தியருக்கு இறைவன் திருமணக்கோலங் காட்டிய கல்யாண சுந்தரேசர் கோயில் உள்ளது.

ஸ்ரீ அகத்தியர்



திருசத்திமுற்றத்தில் அமைந்திருக்கும் த்வார விநாயகர், முருகன், பைரவர் மற்றும் சிவலிங்கம் ஆகியவற்றின் சிறப்புகள் பற்றி அகத்திய பெருமான் ஜீவ வாக்கு





இறைவன் அருளால் முன்னர் கூறியதுபோல திருமண தோஷ நிவர்த்தி ஸ்தலம் மட்டுமல்லாமல் இராகு திசை நடப்பவர்கள், ஜாதகத்திலே இராகு கெடுபலனை தருவதாக நம்பக்கூடியவர்கள், திருமணமாகி பிரிந்திருப்பவர்கள் சென்று வணங்க வேண்டிய ஸ்தலங்களுள் இன்னவன் கூறிய தெய்வ சன்னிதியும் ஒன்று. அங்கே அன்றாடம் முடிந்த நெய் தீபம் ஏற்றி, நறுமணமிக்க மலர் மாலைகளை சாற்றி வழிபாடு செய்து வந்தால், வழக்கு மன்றம் (நீதி மன்றம்)  வரை சென்றவர்களெல்லாம் மீண்டும் சேரக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஆனால் பட்டீஸ்வரம் சென்று துர்க்கையை வணங்கக்கூடிய மனிதர்களுக்கு வினைப்பயன் காரணமாக இந்த ஸ்தலம் இருப்பது தெரியாமல் போய்விடுகிறது. எனவே பட்டீஸ்வரம் சென்று வணங்கக்கூடியவர்கள், திருச்சத்திமுற்றமும் சென்று வணங்குவது சிறப்பு அப்பா

உச்சிஷ்ட கணபதியின் தாத்பர்யம் பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு




‘இனி பிறவி வேண்டாம்’ என்ற தன்மையை அளிப்பதுதான் இதன் தாத்பர்யம்.ஞான மார்க்கம்,யோக மார்க்கம் மட்டும் வேண்டும் அல்லது வாக்கு பலிதம் ஆக வேண்டும் என்று எண்ணுபவர்கள் வழிபட வேண்டிய ஒன்று.

 இஃதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக்கொண்டே வந்தால், மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு, நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும்.

உச்சிஷ்ட கணபதி ஆலயங்கள்

 ஸ்ரீ தியாகராஜர் கோயில்,திருவாரூர்(கமலாம்பிகை சன்னதி நுழைவதற்கு முன்பாக  உள்ளது)
ஸ்ரீ உச்சிஷ்ட கணபதி ஆலயம் ,மனிமூர்த்தீஸ்வரம்,திருநெல்வேலி

மனம் தடுமாறி தீய வழியில் செல்லாமல் இருக்க ஜீவ நாடியில் அகத்திய பெருமான் கூறும் வழி



மனம் தடுமாறாமல் இருக்க, மனம் சபலத்தில் ஆழாமல் இருக்க, மனம் சாத்வீக எண்ணங்களோடு இருக்க ஸ்ரீ ராம நாமத்தை ஜபிக்கலாம். ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம். பஞ்சாக்ஷரத்தை ஜபிக்கலாம். அஷ்டாக்ஷரத்தை ஜபிக்கலாம். இவையனைத்தும் சிறப்புதான். எதுவும் ஒன்றுக்கொன்று குறைவில்லை. இஃதோடு இன்னமும் சிறப்பாக மனம் அடங்குவதற்கு உச்சிஷ்ட மகாகணபதியின் மூல மந்திரத்தை அன்றாடம் வடகிழக்கு திசை நோக்கி அமர்ந்து பிரம்ம முகூர்த்தத்தில் தொடர்ந்து உருவேற்றிக்கொண்டே வந்தால், மனம் சலனங்களுக்குள் ஆட்படாமல் இருப்பதற்கு, நல்லதொரு நிலையை நோக்கி செல்வதற்கு ஒரு வாய்ப்பாக இருக்கும். இது பக்தி வழி.

பக்தியை ஏற்றுக்கொள்ளாத மனிதருக்கு அறிவுபூர்வமாகக் கூறுவதென்றால் ஒரு செயலை செய்யும்பொழுதோ அல்லது ஒரு எண்ணத்தை எண்ணும்பொழுதோ, அவன் எப்படி சிந்திக்கவேண்டும் ? என்றால், உதாரணமாக ஒருவன் ஒரு எண்ணத்தை எண்ணுகிறான். ‘ இது வெறும் எண்ணம்தானே ? செய்தால்தானே பாவம். செய்தால்தானே தவறு. அதனால் பிறருக்கு பாதிப்பு வரப்போகிறது. மனதில்தானே எண்ணுகிறோம் ‘ என்று அவன் எண்ணுவதாகக் கொள்வோம். அதே எண்ணத்தை பிறர் எண்ணினால் அதை நியாயம் என்று இவன் ஏற்றுக்கொள்வானானால், இவன் அதை தாராளமாக எண்ணலாம்.

இன்னொன்று. சிலர், சில செயல்களை செய்துவிட்டு ‘ என்ன செய்வது ? எனக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் செய்யவேண்டிய கட்டாயத்திற்கு ஆட்பட்டுவிட்டேன் ‘ என்று தனக்குத்தானே சமாதானம் கூறுவார்கள் அல்லது ‘ என் விதி, என் கிரக நிலை, என் திசாபுத்தி, அதனால் இப்படி செய்துவிட்டேன் ‘ என்று சாமர்த்தியமாகக்கூட பேசலாம். நாங்கள் ஒத்துக்கொள்கிறோம். விதிதான், அவனுடைய சூழ்நிலைதான் வாய்ப்பைத் தந்தது என்று. ஆனால் அதே செயலை மற்றவர்கள் செய்தால் அவன் ஏற்றுக்கொள்வான் என்றால் தாராளமாக அவன் அதனை செய்யட்டும். இப்படி அறிவுபூர்வமாக ஒன்றை சிந்தித்துப் பார்த்து, ‘ இந்த எண்ணம் நன்மையா ? தீமையா ? இந்த செயலை நாம் செய்கிறோமே, யாரும் பார்க்கவில்லை என்று ?. இதே செயலை நம் வாரிசுகள் செய்தால், நம் சகோதர, சகோதரிகள் செய்தால் இதை நியாயம் என்று ஒத்துக்கொள்வோமா ? ஆதரிப்போமா ? என்று சிந்தித்துப் பார்க்கவேண்டும் . இது ஒரு நிலை.

அடுத்த்தாக ஞான நிலை என்று பார்த்தால், இதுபோன்ற செயலால் இறையருள் கிட்டப்போகிறதா ? அல்லது இறை தரிசனம் கிடைக்கப்போகிறதா ? உலகியல் ரீதியாக இதனால் ஆதாயம் உண்டா ? அல்லது குறைந்தபட்சம் தன் ஆன்மாவிற்கு ஆதாயம் உண்டா ? இதனால் தீய பின்விளைவுகள் என்னென்ன ஏற்படும் ? இந்த விளைவுகள் ஒரு மனிதனை எந்த வகையில் பாதிக்கும் ? இந்த செயலை செய்தால் என்னென்ன சாதகங்கள் ? செய்யாமலிருந்தால் என்னென்ன நன்மைகள் ? செய்வதால் ஒரு கணம் அல்லது ஒரு நீர்த்துளி அளவு காலம் ஒரு மனிதனுக்கு இன்பத்தை தரலாம். ஆனால் அதனால் ஆண்டாண்டிற்கு, ஆன்ம முன்னேற்றத்திற்கு எஃதாவது லாபம் இருக்கிறதா ? என்று பார்க்கவேண்டும். எப்படி பள்ளத்தைக் கண்டால் நீர் ஓடுகிறதோ, அப்படிதான் மனம் எப்பொழுதும் ஏற்கனவே பல பிறவிகள் எடுத்து, எடுத்து நுகர்ந்த ஒன்றை நோக்கிதான் செல்லும். மனம் இயல்பாகவே நல்லவிதமாக இருந்துவிட்டால் எல்லோருமே யோகியர், ஞானியர் ஆகிவிடுவார்கள். குழந்தையாய் இருக்கும்பொழுதே எழுதவும், படிக்கவும் கூடிய அறிவோடு பிறந்துவிட்டால் எதற்கு வித்தைக்கூடம் ? எதற்கு கல்விக்கூடம் ? முயற்சி எடுத்துதான் குழந்தை தன் அறிவாற்றலை வளர்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. அங்கே அறிவு இருக்கிறது. அந்த அறிவிலே எதை, எதையெல்லாம் ஏற்றி வைக்கவேண்டும் என்ற நியதி இருக்கிறது. அந்த நியதியை மனிதன் நல்விதமாக ஏற்றி வைக்கிறான். அதை வைத்துக்கொண்டு பின்னால் அது செயல்படுகிறது. அப்படி ஏற்றும்பொழுது எதையெதை ஏற்றவேண்டும் ? என்று பார்க்கவேண்டும். இரும்பினால் செய்யப்பட்ட வாகனத்திலே எரிபொருள் நிரப்புகின்ற மனிதன், எரிபொருளுக்கு பதிலாக நீரை ஊற்றுவானா ? நீரை ஊற்றினால் என்னவாகும் ? என்று தெரியும் அவனுக்கு.

ஆக அஃறிணை பொருளான வாகனத்திலேயே அதற்கு என்ன தேவையோ அதை மட்டும்தான் மனிதன் தருகிறான். அதைவிட பலமடங்கு உயர்திணையாக இருக்கின்ற மனிதனுக்கு எது தேவையோ அதைத்தானே அவன் தனக்கு செய்துகொள்ளவேண்டும் ? அந்த கணம் இன்பமாக இருக்கிறது என்பதற்காக தேவையற்றதை செய்து நிரந்தர துன்பத்தை எதற்காக வரவழைத்துக் கொள்ளவேண்டும் ? அல்லது சுருக்கமாக ‘ இந்த செயல் எனக்கு பிடித்திருக்கிறது. நான் இப்படித்தான் செய்வேன். இதனால் எனக்கு மனதிலே மகிழ்ச்சி ஏற்படுகிறது ‘ என்றால் தாராளமாக செய்யட்டும். ஆனால் ஒரு நிபந்தனை. அதே செயலை அவன் பிள்ளை செய்தால் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவன் மனைவி செய்தால் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். அவன் சகோதர, சகோதரிகள், உற்றார்கள் செய்தால் அவன் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த மனோ நிலைக்கு வந்துவிட்டால் யார் வேண்டுமானாலும், எதை வேண்டுமானாலும் செய்யட்டும். தான் செய்கின்ற ஒரு செயலை பிறர் செய்தால் அதை அருவருப்பாகவோ, கேவலமாகவோ, ஏளனமாகவோ பார்க்கக்கூடிய மனிதன், அதே செயலை தான் செய்யும்பொழுது மட்டும் நியாயப்படுத்துவது எந்த வகையில் நியாயம் ? என்பதை ஞான ரீதியாக சிந்தித்துப் பார்த்தால் தவறுகளும், சலனங்களும், சபலங்களும் ஒரு மனிதனை விட்டு மெல்ல, மெல்ல விலகத் துவங்கும்.

ஸ்ரீ ராம நாமம்:

ஸ்ரீ ராம ஜெயம்

ஆஞ்சநேயர் காயத்ரி மந்திரம்:

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்


பஞ்சாக்ஷரம்:

ஒம் நமசிவாய

 அஷ்டாக்ஷரம்:


ஓம் நமோ நாராயணாய

ஸ்ரீ அகத்திய பெருமான் போற்றி


                          
ஸ்ரீ அகத்திய பெருமானை பூஜிக்கும் போதும்,நித்ய பூஜைக்கும் உபயோகப்படுத்தி கொள்ளலாம்.

  ஓம் அகத்தீசாய நமஹ:

ஓம் சத்குருவே போற்றி
ஓம் குறுமுனியே போற்றி
ஓம் அகத்தீசா போற்றி
ஓம் ஒளிரூபமே போற்றி
ஓம் விபூதி பிரியரே போற்றி
ஓம் பொதிகை வேந்தே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் அருள் செய்பவரே போற்றி
ஓம் அட்டமா சித்தி அடைந்தவரே போற்றி
ஓம் தீபச்சுடரே போற்றி
ஓம் சிவ சக்தி பிரியரே போற்றீ
ஓம் குறுவடி மகனே போற்றி
ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி
ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி
ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி
ஓம் செந்தமிழ் முனியே போற்றி
ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி
ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி
ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி
ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி
ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி
ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி
ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
ஓம் ஞான ரூபமே போற்றி
ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி
ஓம் சருவாந்தர் யாமியே போற்றி
ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி
ஓம் தத்துவமானவரே போற்றி
ஓம் குற்றாலத்து பெருமகானே  போற்றி
ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி
ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி
ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி
ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி
ஓம் மாசற்ற மணியே போற்றி
ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் நறுமண விரும்பியே போற்றி
ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி
ஓம் இனிமையுடையோய் போற்றி
ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி
ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி
ஓம் தருமத்தின்  வடிவே போற்றி
ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி
ஓம் கும்ப வடிவானவனே போற்றி
ஓம் நீதி வழங்குபவனே போற்றி
ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி
ஓம் புகழுருவே போற்றி
ஓம் புலமைக்கு வித்தே போற்றி
ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி
ஓம் கரை கண்டோரே போற்றி
ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி
ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி
ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி
ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி
ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி
ஓம நீதி வழி நிற்போரே போற்றி
ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி
ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி
ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி
ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி
ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி
ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி
ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றி
ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி
ஓம் புத்துணர்வு அளிக்கும் சொல்லே போற்றி
ஓம் காளியுமை ஆசி பெற்றோய் போற்றி
ஓம் தந்தையும் தாயுமானோய் போற்றி
ஓம் ஆதி ரூபமே ஆனாய் போற்றி
ஓம் எளியோருக்கும் எளியோரே போற்றி
ஓம் அடியார்க்கு அருள்வாய் போற்றி
ஓம் வல்லமை படைத்தவரே போற்றி
ஓம் பாண்டி நாட்டில் தமிழ் வளர்த்தோய் போற்றி
ஓம் சோதிட ஆசனாகியோய் போற்றி
ஓம் சச்சிதானந்தம் அருள்வாய் போற்றி
ஓம் நெஞ்சில் நீக்கமற நிறைந்தோய் போற்றி
ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி
ஓம் வித்தையின் கடலே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் நற்சுகம் தருவோய் போற்றி
ஓம் சிற்சபை கண்டோய் போற்றி
ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி
ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி
ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி
ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி
ஓம் நன்னெறி உரைத்திட்டோய் போற்றி
ஓம் மருத்துவ மாமணியே போற்றி
ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி
ஓம் பரிவு காட்டுபவரே போற்றி
ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி
ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி
ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி
ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி
ஓம் மகிமையை அருள்வோய் போற்றி
ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி
ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி
ஒம் எல்லையில்லா கருணையே போற்றி
ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி
ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி
ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி
ஓம் அல்லல் அறுப்போய் போற்றி
ஓம் அருட்பெருந்தீயே போற்றி
ஓம் அமுதே ஆனாய் போற்றி
ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி
ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி
ஓம் நித்யமடைந்தாய் போற்றி

அரச மரம் பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு


பல அரசர்களே மரம்போல் இருக்கிறார்களப்பா. இறைவனின் அருளாலே அரச மரத்திலே பலவிதமான ஆற்றல்கள் பொதிந்திருப்பதை மனிதர்கள் மெல்ல, மெல்லதான் புரிந்து கொள்கிறார்கள். மனித சிந்தனையிலே பெரும்பங்கு வகிப்பது மனிதன் கூறுவதுபோல மூளையாகும். அந்த மூளை நன்றாக வேலை செய்வதற்கு அயர்வுராமல் இருப்பதற்கு வேண்டிய வேதிப்பொருள்களை எல்லாம் தூண்டிவிடக்கூடிய நிலை அந்த அரச மரத்தை சுற்றியுள்ள காற்றிலே இருக்கிறது. இஃதோடு மட்டுமல்லாமல் பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சினைகள் இருக்கும் பட்சத்திலே அடிக்கடி அரச மரத்தடியிலே உள்ள விநாயகப் பெருமானையும், நாக தெய்வங்களையும் வணங்கி பலமுறை சுற்றி வந்தால், சில நாழிகை அங்கு அமர்ந்தால் கட்டாயம் அங்குள்ள விநாயகர் காப்பாற்றுகிறாரோ, இல்லையோ அந்த அரச மரத்தின் மூலிகைத் தன்மை கட்டாயம் தேகத்தைக் காப்பாற்றும். 

எனவே இதுபோன்ற ஒவ்வொரு விருக்ஷத்திடமிருந்தும் அற்புதமான மூலிகைப் பயன்கள் காற்றின் மூலம், மனித சுவாசத்தின் மூலம் உள்ளே செல்கிறது. இதனை மனிதன் நன்றாக புரிந்துகொண்டு அந்த இட்த்திலே இருக்கும்பொழுது இறை சிந்தனையோடும், வேறு தேவையற்ற சிந்தனைகளும் இல்லாமல் இருந்து அமைதியாக வாய் வழியாக இல்லாமல் ஆழ்ந்த பெருமூச்சை நாசியின் வழியாக விட்டு இழுத்தால் கட்டாயம் நல்ல பலனைப் பெறலாம். ஒவ்வொரு மரத்தினாலும் நல்ல பலன் உண்டு. சில மரங்கள் தீய பலனைத் தருவதாக மனிதன் எண்ணலாம். அதை நேரடியாக தீய பலன் என்று எடுத்துக்கொள்ளக் கூடாது. அது யாருக்கு உகந்ததோ அவர்கள் அந்த மரத்தை பயன்படுத்திக் கொள்ளலாம். கூறுங்கால் புளிய விருக்ஷம் எனப்படுவது அதிக அனல், உஷ்ணம், அங்கு தங்குவது கூடாது என்று கூறப்படுவது உண்மைதான். ஆனால் அதிக அளவு குளிர் தேகம் கொண்டவர்கள், சீதளக் குற்றம் உள்ளவர்கள் அங்கு தாராளமாக தங்கலாம்.

வாய் சரியாக, சரளமாக பேச முடியாமல் இருப்பவர்கள் பிரச்னை தீர ஜீவ நாடியில் அகத்திய பெருமான் கூறிய வழி


அந்த ஆலயம் பெருமாள் ஆலயம். பேசுகின்ற பெருமாள் என்று காஞ்சிமா நகரத்தை ஒட்டி இருக்கக்கூடிய ஒரு சிறிய ஆலயம். இதுபோன்று வார்த்தைகளில் தடுமாற்றம் பெற்றவர்கள், வாக்கு வராத குழந்தைகள் இந்த ஆலயத்திற்கு சென்று முடிந்தபொழுதெல்லாம் வழிபாடு செய்து வந்தால் கட்டாயம் நல்ல பலன் உண்டு. திருசீரலைவாய் எனப்படும் திருச்செந்தூர் சென்று முறையாக, அமைதியாக பிரார்த்தனை செய்துகொண்டு வந்தால் பலன் உண்டு. ஏற்கனவே இவ்வாறு குறைகள் உள்ள குழந்தைகளைக் கொண்ட அமைப்புக்கு முடிந்த உதவிகளை செய்தாலே நல்ல பலன் உண்டு.


இந்தக் குற்றம், குறை எதனால் வருகிறது ? என்றெல்லாம் பார்க்கும்பொழுது ஒரு மனிதன் ஒரு பிறவியிலே எந்த துன்பத்தைத் தீர்க்க முடியாமல் துன்பத்தில் ஆழ்கிறானோ அந்தத் துன்பத்தை அவன் பிறருக்கு செய்திருக்கிறான் என்பது பொருள். எனவே இந்த ஜென்மத்தில் கூடுமானவரை அது போன்ற பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு முடிந்த உதவுகளை செய்துகொண்டு மனதை தளரவிடாமல் இறை பிரார்த்தனை செய்துகொண்டு வந்தால் கட்டாயம் இறைவனருளால் நன்மைகள் நடக்கும். ‘ இறைவனை வேண்டி எமக்கு இதுவரை எந்தப்பலனும் இல்லை ‘ என்று எண்ணக்கூடியவர்கள் இரண்டு முடிவுகள் எடுக்கலாம். ஒன்று இறை மறுப்பு நிலைக்கு சென்றுவிடலாம் அல்லது மீண்டும் மனம் தளராமல் இறை வழியில் செல்லலாம். மனம் தளராமல் பிரார்த்தனை செய்தால் நன்மை உண்டு, நன்மை உண்டு, நன்மை உண்டு.

கோவில் முகவரிகள்:

பேசும் பெருமாள்:

அருள்மிகு பேசும் பெருமாள் திருக்கோயில்
கூழம்பந்தல், காஞ்சிபுரம் மாவட்டம்.
போன்: +91 97879- 06582, 04182- 245 304, 293 256

திருச்செந்தூர் :

அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில்,
திருச்செந்தூர் - 628 205,தூத்துக்குடி மாவட்டம். போன்: +91-4639 - 242 221

வாசி யோகம் பற்றி அகத்திய பெருமான் ஜீவ நாடியில் அருளிய ஜீவ வாக்கு


இறைவனின் அருளைக்கொண்டு, யோகம் என்பது மனிதர்களால் பல்வேறுவிதமாக கையாளப்படுகிறது. ஒருவன் நல்ல ஆரோக்யமான உடலை பெற்று நல்ல பதவியில் இருந்தால், பொருளாதாரத்தில் உயர்ந்து இருந்தால்  அவனுக்கென்னப்பா, யோகக்காரன் ‘ என்று கூறுகிறார்கள். ஆனால் உண்மையில் யோகம் என்பதைவிட ஏகம் என்பதே சரியான பொருளாக இருக்கும். ஏகம் என்பது தனித்திருத்தல். தனித்திருத்தல் என்றால் ஏதோ கூட்டங்களை விட்டு ஒதுங்கியிருத்தல் என்று தவறாக எண்ணுகிறார்கள். அப்படியல்ல. உள்ளத்திலிருந்து இந்த உலகைப் பிரித்து தனித்திருத்தல். ஏகமாக இருத்தல். அப்படி ஏகமாக இருக்கும்பொழுதுதான் ஏகனாக இருக்கக்கூடிய அந்த ஏகாம்பரனின் அருள் கிட்டும். அப்படி கிட்டுகின்ற வழிமுறைகளில் ஒன்றுதான் இதுபோன்ற வாசி யோகம், வாசிக் கலை, ப்ராணாயாமம். முதலில் உடலை சரிசெய்யாமல் சுவாசப் பயிற்சியில் சென்றால் தேவையில்லாத பின் விளைவுகள்தான் ஏற்படும். எனவே உடலை நன்றாக, பரிபூரணமாக ஆரோக்கியமாக வைத்துக்கொண்டு உடல் ரீதியான சில பயிற்சிகளையெல்லாம் செய்துவிட்டு பிறகு கும்பகம் செய்யாமல், அதாவது மூச்சை உள்ளே நிறுத்தாமல் ஆழ்ந்த சுவாசத்தை அதிகாலையிலே, வாய் வழியாக இல்லாமல், நாசி வழியாக மட்டும் விட பழகிக்கொண்டே வந்தால் பிறகு இன்னவன் கூறுகின்ற வாசிக் கலையானது காலப்போக்கிலே இறையருளால் யாம் கூறுகின்ற வழிமுறைகளை பின்பற்றிக்கொண்டே வந்தால் சித்தியாகும். ஆனால் வாசிக் கற்றுக்கொடுக்கும் இடங்களெல்லாம் நூற்றுக்கு நூறு சரியான முறை என்று எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. தவறான மூச்சு பயிற்சியால் உடலில் தேவையில்லாத பக்க விளைவுகள் ஏற்படும் என்பதை மனிதர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பிருகு மகரிஷி அருள் நிலையத்தில் மகாசித்தர் குரு இடைக்காடர் எழுந்தருள சித்தம்




சென்னை சிங்கப்பெருமாள் கோவில் அருகே உள்ள மருதேரி கிராமத்தில் பிருகு மகரிஷி அருள் நிலையம் அமைந்துள்ளது.பிருகு மகரிஷி,ஸ்ரீ அகத்தியர் ,ஸ்ரீ நந்தி தேவர் ஜீவ நாடியில் இடப்படும் உத்தரவுப்படி ஒவ்வொரு ரோகிணி நட்சத்திரம் அன்று சித்தர் மற்றும் ஜோதி வழிபாடுகள் நடைப்பெற்று பின் அன்னதானமும் வழங்கப்படுகிறது.



இந்த பூஜையில் ஏற்றப்படும் ஜோதியில் சித்தர்கள் எழுந்தருளி மற்றும் அதை தொடர்ந்து ஜீவ நாடியிலும் சித்தர்கள் எழுந்தருளி ஆசி வழங்குவார்கள்




வரும்  ஹேவிளம்பி வருடம் ஆவணி மாதம் 27 ஆம் நாள் ரோகிணி நட்சத்திரம் அன்று (12/09/2017) காலை 8.00 மணியளவில் மகாசித்தர் குரு இடைக்காடர் மருதேரியில் எழந்தருள உள்ளார். அனைவரும் இப்பூஜையில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

செவ்வாய், 22 ஆகஸ்ட், 2017

பணியில் நல்ல சம்பள உயர்வும், பதவி உயர்வும் கிடைக்க ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி


இறைவன் கருணையாலே இறை வழியில் நாங்கள் வழிமுறைகளைக் கூறினால் அது மனிதர்களுக்கு ஏற்புடையதாக இராது. அந்தந்த நிறுவனத்திலே யார் அந்த அதிகாரம் பெற்று இருக்கிறானோ அவனைப் பார்த்து சரியாக கவனிக்க வேண்டியதைத் தவிர வேறு வழி இருப்பதாக இத்தருணம் யாங்கள் நினைக்கவில்லை. எனவே இதற்கு ஒரே மார்க்கம் என்று நாங்கள் கூறினால் அப்படியெல்லாம் அந்த மனிதன் (இருக்க வேண்டும்) என்றுதானே இருக்கிறது விதியில். அதை மாற்ற வேண்டுமென்றால் நவக்ரகங்களிடம் இறை, அருளாணையிட வேண்டும். ஆனால் இன்னொன்று, பதவி உயர்வு என்பது உண்மையில் உயர்வு என்று மனிதன் எண்ணுகிறான். மனசாட்சி உள்ள மனிதனுக்கு, நேர்மையான மனிதனுக்கு இந்தக் கலிகாலத்தில் பதவி உயர்வு என்பது ஒருவகையான தண்டனை. இறைவன் அருளாலே குருவாரம்(வியாழக்கிழமை), சனகாதி முனிவரோடு குரு தட்சிணாமூர்த்தியை மௌனமாக, குரு தட்சிணாமூர்த்தியின் அஷ்டகத்தை ஓதி விரதமிருந்து வழிபட்டால் ஒரு வேளை " இது வேண்டும் " என்று எண்ணுகின்ற ஆத்மாக்களுக்கு கிடைக்க வாய்ப்புண்டு. ஆசிகள்.

 சனகாதி முனிவர் வழிபாடு

சனகாதி முனிவர்கள், சனகர், சதானந்தர், சனாநந்தர் மற்றும் சனத்குமாரர் என்ற பெயர்களால் அறியப்படுகிறார்கள்.

ஓம் சனகர் திருவடிகள் போற்றி
ஓம் சதானந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சனாநந்தர் திருவடிகள் போற்றி
ஓம் சனத்குமாரர் திருவடிகள் போற்றி

என்று வழிபட வேண்டும்.பின்பு பின் வரும் தட்சிணாமூர்த்தியின் அஷ்டகத்தை ஓத வேண்டும்.

தட்சிணாமூர்த்தி அஷ்டகம் - வ்ருஷ தேவர் அருளியது

(1) அகணித குணகணமப்ரமே மாத்யம்
ஸகல ஜகத் ஸ்திதி ஸம்யமாதி ஹேதும்!
உபரத மனோ யோகி ஹ்ருன் மந்திரம் தம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(2) நிரவதி ஸுக மிஷ்ட தாதாரமிட்யம்
நதஜன மனஸ்தாப பேதைக தக்ஷம்
பவ விபின தவாக்னி நாமதேயம்
ஸதத மஹம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(3) த்ரிபுவனகுரும் ஆகமக ப்ரமாணம்
த்ரிஜகத் காரண ஸூத்ர யோக மாயம்
ரவிசத பாஸ்வர மீஹீத ப்ரதானம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(4) அவிரத பவ பாவனாதி தூரம்
பத பத்மத்வய பாவிணாம் அதூரம்
பவ ஜலதி ஸுதாரணாங்கிரி போதம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(5) க்ருத நிலய மனிசம் வடாகமூலே
நிகம சிகாப்ராத போதிதைக ரூபம்
த்ருத முத்ராங்குஸி கம்ய சாருரூபம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(6) த்ருஹிண ஸுத பூஜிதாங்க்ரி பத்மம்
பத பத்மானத மோக்ஷதான தக்ஷம்
க்ருத குருகுலவாஸ யோகி மித்ரம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(7) யதிவரஹ்ருதயே ஸதாவிபாந்தம்
ரதிபதி சதகோடி ஸுந்தராங்க மாத்யம்!
பரஹித நிரதரத்மனாம் ஸுஸேவ்யம்
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(8) ஸ்மித தவள விகாஸிதான னாப்ஜம்
ஸ்ருதி ஸுலபம் வ்ருஷபாதிருட காத்ரம்
ஸித ஜலஜ ஸுசோப தேணா காந்திரம்!
ஸதத மணாம் தக்ஷிணாமூர்த்தி மீடே!
(9) வ்ருஷப க்ருதமிதம் இஷ்ட ஸித்திதம்
குருவர தேவ ஸந்திதௌ படேத்ய:
ஸகல துரித துக்க வர்க்க ஹசனிம்
வ்ரஜதி சிதம் ஞானவான் சம்புலோகம்!!

வலிப்பு நோய் நீங்க ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி



இறைவனின் கருணையாலே ‘ வெண்மனம் “ (திருவெண்காடு) என்கிற ஸ்தலம் இருக்கிறது. புதனுக்கு ஏற்ற ஸ்தலம் என்று கூறுவார்கள். அங்கு சென்று வழிபாடு செய்வதும்,


அஃதொப்ப மதுரையம்பதி சென்று அன்னை மீனாளின் திருவடியை ( மதுரை மீனாட்சியம்மன் கோவில்)  வழிபாடு செய்வதும் இஃது போக நவக்ரக வழிபாடும், தன்வந்திரி வழிபாடும் பக்திமார்க்கத்திலே இஃதொப்ப பிணியைக் குறைக்க உதவும். இஃதோடு அன்றாடம் உச்சிப்பொழுதிற்கு முன்பாக எஃதாவது அன்று பறிக்கப்பட்ட பசுந்தளிரான கீரைகளை உணவிலே கட்டாயம் ஏற்றுக்கொண்டு வந்தால், தொடர்ந்து இந்த உணவு முறையை விடாப்பிடியாகக் கடைபிடித்தால், இஃதோடு தக்க மருத்துவம் எடுத்துக் கொண்டால்  விரைவில் கர்ம வினையிலிருந்து விடுபட்டு இந்தப் பிணி நீங்கும்.



நவகிரக காயத்ரி மந்திரம்

 சூர்ய காயத்ரி                 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                             பாஸ அஸ்தாய தீமஹி 
                                             தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி               ஓம் பத்மத்வஜாய வித்மஹே
                                             ஹேம ரூபாய தீமஹி
                                             தன்னோ ஸோம ப்ரசோதயாத்

செவ்வாய் காயத்ரி        ஓம் வீரத்வஜாய வித்மஹே
                                            விக்ன அஸ்தாய தீமஹி
                                               தன்னோ பெளம ப்ரசோதயாத்

புதன் காயத்ரி                  ஓம் கஜத்வஜாய வித்மஹே
                                              சுக அஸ்தாய தீமஹி
                                              தன்னோ புத ப்ரசோதயாத்

குரு காயத்ரி                     ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
                                              க்ருணி அஸ்தாய தீமஹி
                                              தன்னோ குரு ப்ரசோதயாத்

சுக்கிரன் காயத்ரி            ஓம் அச்வத்வஜாய வித்மஹே
                                               தனூர் அஸ்தாய தீமஹி
                                               தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

சனி காயத்ரி                     ஓம் காகத்வஜாய வித்மஹே
                                              கட்க அஸ்தாய தீமஹி
                                              தன்னோ மந்த ப்ரசோதயாத்

ராகு காயத்ரி                    ஓம் நாகத்வஜாய வித்மஹே
                                              பத்ம அஸ்தாய தீமஹி
                                              தன்னோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி                  ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                              சூல அஸ்தாய தீமஹி
                                              தன்னோ கேது ப்ரசோதயாத்


 தன்வந்த்ரி நாமம்

ஓம் ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம


தினசரி செய்ய வேண்டிய கடமைகள், பூஜைகள் என்ன என்பது பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



குறைந்த பட்சம் எஃதாவது ஒரு ஆலயம் சென்று மனமொன்றி வழிபடுவது நன்மையைத் தரும்.  அப்படியும் இல்லாதவர்கள் குறைந்தபட்சம் இரண்டு நாழிகையாவது காலையிலோ, மாலையிலோ இல்லத்தில் அமைதியாக நெய் தீபம் ஏற்றி, உயர்வான முறையிலே வாசனாதி திரவியங்களையெல்லாம் இட்டு, எஃதாவது இறை நாமாவளியை (சொல்லி) மனதிற்கு பிடித்த எந்த இறைவனின் வடிவத்தையாவது வணங்கி வருவது நன்மையைத் தரும். குறைந்த பட்சம் ஒரு மனிதனுக்காவது அவனுக்கு வேண்டிய நியாயமான உதவிகளை செய்வது இறைவனின் அருளை விரைவில் பெற்றுத்தரும். அடுத்ததாக தன் கடமைகளை மறக்காமல் நேர்மையாக ஆற்றுவது என்ற உறுதியை எடுத்துக்கொண்டு அதற்கேற்ற வகையில் செயல்பட வேண்டும். மனைவியாகப்பட்டவள் இல்லறக் கடமைகளை ஆற்றுவதும், கணவனாகப்பட்டவன் பணியில் உள்ள கடமைகளை ஆற்றுவதும், பிள்ளைகள் கல்வி கற்க வேண்டிய கடமைகளை ஆற்றுவதும், எதையும் ஒத்தி வைக்காமல் நேர்மையான முறையில் உடனுக்குடன் செய்கின்ற ஒரு பழக்கத்தை கடைபிடித்துக்கொண்டே இறை வழிபாடு, தர்மகாரியங்கள் செய்வது கட்டாயம் இறைவனை நோக்கி செல்வதற்கு மிக எளிய வழியாகும்.

ஷீரடி சாய்பாபாவை பற்றி அகத்தியர் ஜீவவாக்கு



இறைவனின் கருணையால், மனிதர்களை நல்வழியில் திசை திருப்புவதற்கு அவ்வப்பொழுது இறைவன் பல்வேறு ஞானிகளை படைக்கிறான். சில ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்கிறார்கள். பல ஞானிகள் தம்மை அடையாளம் காட்டிக்கொள்ளாமலேயே மனித குலத்திற்கு பல்வேறு நன்மைகளை செய்கிறார்கள். எனவே அப்படிப்பட்ட ஞானிகளில் ஒருவன்தான் இன்னவள் விளம்பிய அன்னவன். பல்வேறுவிதமான இறை நிகழ்வை, தன்னை ஒரு கருவியாக வைத்துக்கொண்டு இறைவன் செய்ய, தன்னுடைய புண்ணிய பலத்தை அதற்கு இறைவன் பயன்படுத்திக்கொண்டார் என்ற மனநிறைவோடு பல்வேறு மக்களுக்கு நல்லுபதேசங்களையும், கர்மவினை குறித்தும் அந்தந்த சமுதாய சூழலுக்கு ஏற்ப அவன் இறைவன் அருளால் எடுத்து இயம்பியிருக்கிறான். இறைவன் விரும்பி பல்வேறு மகான்களை அனுப்புவது உண்டு. சில மகான்கள் தாமாகவே விரும்பி இதுபோன்ற பணிகளை தேர்ந்தெடுப்பதும் உண்டு. இஃதொப்ப நிலையில் இறைவன் அனுப்பிய மகான்களில் ஒருவனே அவன்.

அகத்தியர் தவம் செய்த வேல்மலை

வேல்மலை பாலமுருகன் வாழ்த்து

அகத்தியர் அருளியது

உளம்நின்று உயிருறைந்து உடலம் காத்தே
உவப்பளிக்கும் பொருள்பெருக்கி உண்மை யறிவால்
தளம் சென்று தொண்டர்கள் தொழுதே வீழ
தமிழ் தந்து தளராத தவத்தால் மும்மலக்
களம்வென்ற குறுமுனிதன் கண்மலர்க் கருணை
காலமுற்றும் காத்திடவே கண்டார் கைதொழ
வளர்தென்றல் வலசைக்கண் விளங்கும் வேல்மலை
வள்ளவன் அடிகளின்றி வேர தையா !



திருநெல்வேலி மாவட்டம்,வேல்மலை கிராமத்தில் உள்ள ஸ்ரீ பால சுப்பிரமணியர் திருக்கோவில்.வானில் இருந்து பார்த்தால் வேல் போன்று அமைப்பு இருந்ததால் வேல்மலை என்று அழைக்கப்படுகிறது.

இங்குள்ள சுனை நீர் சர்க்கரை நோய்க்கு மருந்தாக பயன்படுகிறது.இது 
அகத்தியர் தவம் செய்த மலை ஆகும்.

அகஸ்திய மஹரிஷி அருளிய தோல் நோய் தீர பரிகார கோயில்





மிகப் பழங்காலத்தில் இமயமலைச் சாரலில் காலவ முனிவர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவர் முக்காலமும் அறிந்த ஞானி. பலர் அவரிடம் வந்து தங்கள் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு பணிவுடன் கேட்பார்கள். கேட்பவரை நேர் எதிரே நிறுத்தி அவரை ஒருமுறை நன்றாய் தீர்க்கமாய் உற்றுப் பார்த்துவிட்டுப் பின்பு கண்கள் மூடிச் சிறிது நேரத்தில் அவரது எதிர்காலத்தைப் பற்றிய விவரங்களை கடகடவென்று கூறிவிடுவார். இவரது புகழ் எங்கும் பரவ ஒருநாள் இளம் சந்நியாசி ஒருவர் வந்து, காலவ முனிவரைப் பணிந்து தன் எதிர்காலத்தைப் பற்றிக் கூறுமாறு வேண்டினார்.

காலவ முனிவரும் கண்கள் மூடி தியானித்து, தியானித்துப் பார்க்கிறார். அந்த இளம் சந்நியாசியின் எதிர்காலம் அவருக்குப் பிடிபடவில்லை. காலவ முனிவருக்கு அதிர்ச்சி. “”ஸ்வாமி… நீங்கள் யார்? உங்கள் எதிர்காலம் எனக்குப் பிடிபட மறுக்கிறதே?” என்று வினவினார். “நான் யார் என்பது இருக்கட்டும். எவ்வளவோ பேருக்கு எதிர்காலம் பற்றி ஞான திருஷ்டியில் கூறும் நீங்கள் உங்கள் எதிர்காலம் எப்படி என்று பார்த்திருக்கிறார்களா?” என்று கிண்டலாகக் கேட்டார். காலவ முனிவருக்கும் அப்போதுதான் தனது எதிர்காலத்தைப் பற்றி அறிந்துகொள்ள எண்ணம் ஏற்பட்டது. கண்கள் மூடி நிஷ்டையில் ஆழ்ந்தார். சிறிது நேரத்தில் திடுக்கிட்டார். இன்னும் கொஞ்ச நாட்களில் அவரைத் தொழுநோய் பிடித்துத் துன்புறுத்தப் போவது ஞான திருஷ்டியில் அவருக்குப் புலப்பட்டது. கண்களைத் திறந்து பார்த்தபோது அந்த இளம் சந்நியாசியைக் காணவில்லை. மறைந்துவிட்டார்.

உண்மையில் இளம் சந்நியாசியாய் வந்தது யமதர்மராஜன். இதையும் ஓரளவு யூகித்துவிட்ட காலவ முனிவர் தனக்கு வர இருக்கும் தொழு நோயிலிருந்து தப்பித்துக்கொள்ள நவகிரகங்கள் நோக்கி கடும் தவமிருந்தார். முனிவரது தவத்தை மெச்சி நவகிரகங்களும் அவர் முன் தோன்ற காலவ முனிவர் தன்னைத் தொழுநோய் பீடிக்காமலிருக்க வரம் தருமாறு வேண்டினார். நவகிரகங்களும் அவ்வாறே வரமளித்துவிட்டன. இதில் பிரச்னை என்னவென்றால் இந்த நவகிரகங்களுக்கும் சுயமாக எவருக்கும் வரம் தரும் அந்தஸ்து கிடையாது. ஆண்டவன் கட்டளைப்படி தங்களுடைய கடமைகளை அவை செய்து வர வேண்டுமே தவிர மற்றபடி வரங்கள் அருளும் தகுதி கிடையாது. இவர்களுக்கு அதிபதியான பிரம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வந்தது. உடனே கடுங்கோபத்துடன் அவற்றை வரவழைத்து விசாரணை நடத்தினார். பாவம் நவகிரகங்கள்… தங்களையும் மதித்து ஒருவன் தவம் செய்து வரம் கேட்கிறானே என்ற மகிழ்ச்சியில் தங்களுக்கு விதிக்கப்பட்ட விதிமுறைகளை மீறி வரமளித்துவிட்டன. பிரம்ம தேவனுக்குப் புரிந்தது. இருந்தும் என்ன? செய்த தவறுக்கு தண்டணை உண்டே. அதனால் “”காலவ முனிவருக்கு வரவேண்டிய தொழுநோய் உங்களைப் பீடிக்கும். அதுதான் உங்களின் அதிகப்பிரசங்கித்தனத்திற்கான தண்டனை” என்றார் பிரம்மா.
அந்த தண்டனையைக் கேட்டு அலறிய நவகிரகங்கள் பிரம்மனின் காலடியில் விழுந்து சாப விமோசனம் வேண்டினார்கள். கொஞ்ச நேரம் அவர்களை அலற விட்டு வேடிக்கை பார்த்த பிரம்மன் கடைசியாக அவர்களை பூலோகத்திற்கு செல்லுமாறு உத்தரவிட்டார். அங்கே அர்க்கவனம் என்னும் தலத்தில் உள்ள பிராணேசுவரரை கார்த்திகை மாதம் துவங்கி 78 நாட்களுக்கு வழிபட்டு தவம் செய்யவும் உத்தரவிட்டார்.

பிரம்மனின் சாபப்படி தொழுநோய் உடனே நவகிரகங்களைப் பீடித்தது. பூலோகம் வரும் வழியில் அகத்திய முனிவரை சந்தித்து நடந்த விஷயங்களை அவருக்குத் தெரிவித்தன. அகத்தியர் அவர்களுக்கு சில வழிபாட்டு முறைகளை உபதேசித்தார்.

“திருமங்கலக்குடியின் அருகில் இருக்கும் அர்க்கவனத்தில் தங்கி, நீராடி, 78 நாள்கள் தவம் செய்யுங்கள். திங்கள் கிழமை தோறும் எருக்கு இலையில் தயிர் அன்னத்தை வைத்து விடிவதற்கு முன்பு புசியுங்கள். மற்ற நாள்களில் விரதமிருங்கள். இப்படிச் செய்தால் சாப விமோசனம் பெறுவீர்கள்” என்றார் அகத்தியர். நவகிரகங்களுக்கு ஓர் ஆவல். எத்தனையோ இலைகள் இருக்க, எருக்க இலையில் வைத்து ஏன் தயிர் அன்னத்தை புசிக்க வேண்டும்? காரணத்தை அவரிடமே கேட்க, “”அதெல்லாம் உங்களுக்கு எதற்கு? அதெல்லாம் தேவ ரகசியம். இருந்தாலும் சொல்கிறேன். எருக்க இலையின் சாரத்தில் ஒரு சிறு துளி அந்த தயிரன்னத்தில் சேரும். தொடர்ந்து 78 நாட்களுக்கு இப்படி புசித்து வந்தால் தொழுநோய் குணமாகும்” என்றார் அவர்.அகத்திய முனிவர் குறிப்பிட்ட தேவ ரகசியம் இதுதான். வெள்ளெருக்கு இலையில் வைத்து தயிர்சாதம் சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்ற பண்டைய மருத்துவ முறைதான் அது. அவ்வளவு சக்தி வாய்ந்தது எருக்கன் இலை. ரத ஸப்தமி (தை மாதம்) நாளில் ஏழு எருக்க இலைகள், எள், அட்சதை ஆகியவற்றை தலையில் வைத்து நீர் நிலைகளில் ஸ்நானம் செய்தால் நவகிரக தோஷம் விலகும் என்ற நம்பிக்கையும் பிறந்ததுதான் இன்றும் நம்மை ரத ஸப்தமி அன்று எருக்க இலையைத் தலையில் வைத்துக்கொண்டு ஸ்நானம் செய்யச் சொல்வது. அதற்காக, தொழுநோய் உள்ளவர்கள்தானே அப்படிச் செய்ய வேண்டும், மற்றவர்கள் எதற்காக அப்படி ஸ்நானம் செய்ய வேண்டும் என்று சிலர் கேட்கலாம். தொழுநோய் என்பது ஒரு குறியீடு. நம்மை அறியாமல் செய்யும் எவ்வளவோ தீமைகளால் ஏற்படும் நவகிரக தோஷங்களை இது போக்கும் என்பதே அதன் தாத்பர்யம்.

வீட்டில் ரத ஸப்தமியன்று காலை ஏழு எருக்க இலை, பசுவின் சாணம், சிறிது மஞ்சள் அட்சதை இவற்றைத் தலையில் வைத்துக்கொண்டு 7 ஸ்நானம் செய்வதால் பாபங்கள் நீங்கும். அர்க்கன் என்றால் சூரியன். சூரியனுக்கு உகந்த பத்ரமாக இருப்பதால் எருக்க இலைக்கு, “அர்க்க பத்ரம்’ என்று பெயர். அர்க்க பத்ரம் என்பதே பிறகு எருக்க பத்ரம், எருக்க இலை என்று ஆனது. பாபங்களும், ரோகங்களும் சூரிய பகவான் அருளால் நீங்க வேண்டும் என்று ரத சப்தமியன்று “அர்க்க பத்ர ஸ்நானம்’ கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

“ஸப்த ஸப்த ப்ரியே தேவி
ஸப்த லோக ப்ரதீயிகே
ஸப்த அர்க்கபத்ர ஸ்நானேன
மம பாபம் வ்யபோஹய”

என்ற ஸ்லோகத்தைக் கூறியபடி ஸ்நானம் செய்ய வேண்டும்.

அதன் பின் சூரியனைப் பார்த்தபடியோ அல்லது கிழக்கு திசை நோக்கியோ “திவாக்ராய நம: இதமர்க்யம்” என்று மும்முறை சொல்லி சூரிய பகவானுக்கு அர்க்யம் கொடுக்க வேண்டும்

ஞாயிறு, 20 ஆகஸ்ட், 2017

ஜீவநாடி கட்டளைப்படி 1008 சக்திகள தீப விழா


அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில் வரும் 5.09.2017 அன்று நடை பெறுகிறது.

தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் அனைத்து குறைகளும் நீங்கும் என ஜீவ நாடியில் முருகப்பெருமான் தெரிவித்துள்ளார்.



வியாழன், 17 ஆகஸ்ட், 2017

Sri Ganapathy Homam, Sri Prathyangara Devi Homam & 18 Siddhar Homam Live WebCast




  


18th August 2017 - Sree Muthu Kumaraswamy School, Choolai, Chennai, Tamilnadu, India. Homam Live - Starts around 7.00 am  

தீராத தலைவலி பிரச்சினை தீர ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி



 இந்த கபால வேதனை என்பதுகூட ஒரு பிறவியிலே, அந்த பிறவி முழுக்க சிலருக்கு மன உளைச்சலைத் தந்ததின் பாவத்தின் எதிரொலி.  ஒவ்வொரு பிணிக்கும் ஒரு கர்மவினை என்றுமே காரணமாக அமைகிறது. சில பிணிகளுக்கு பல்வேறு பாவவினைகள் காரணமாக அமைகிறது. பொதுவாக இவற்றைக் கூறினாலும்கூட அப்படியெல்லாம் ஏற்றுக்கொள்வது என்பது எம்மால் இயலாது. மனித தேகம் என்பது ஒரே விதமாக படைக்கப்பட்டாலும் சில மாற்றங்கள் ஆணுக்கும், பெண்ணுக்கும் உண்டு. மன அழுத்தம் அல்லது தீவிரமான சிந்தனை – இவற்றிலிருந்து துவங்கி நூற்றுக்கணக்கான காரணங்கள் உடல்ரீதியாகவும், மனோரீதியாகவும் இந்த கபால வேதனைக்கு காரணங்களை அடுக்கிக்கொண்டே செல்லலாம். எனவே திருப்பழனம் என்றொரு ஸ்தலம் இருக்கிறது, காவிரியின் கரையிலே. கபால தொல்லைகள் இருக்கும் மனிதர்கள் அங்கு சென்று இயன்ற வழிபாடுகள் செய்வது கட்டாயம் நல்ல பலனைத் தரும். அதற்காக இல்லின் அருகிலே ஒரு ஆலயம் இருக்கிறது. அங்கு சென்றால் தீராது என்று தவறாகக் கருதிவிடக்கூடாது. குறிப்புக்காக இதனைக் கூறுகிறோம். இந்தக் கபால வேதனை என்பது ஆணுக்கும் வருகிறது, பெண்ணுக்கும் வருகிறது. யாருக்கு தீவிரமாக இருக்கிறதோ அது ஒருவகையான வினையின் எதிரொலி என்பதை புரிந்துகொண்டு பரிபூரண சரணாகதி பக்தியும், இயன்ற தொண்டும் செய்து வந்தால் கட்டாயம் அதிலிருந்து விடுதலை பெறலாம்.

ஆபத்சகாயநாதர் கோவில், திருப்பழனம்

சிவஸ்தலம் பெயர் :திருப்பழனம்
இறைவன் பெயர் :ஆபத்சகாயநாதர்
இறைவி பெயர்: பெரியநாயகி

எப்படிப் போவது

திருவையாறு - கும்பகோணம் பேருந்து வழியில் திருவையாற்றில் இருந்து கிழக்கே 4 கி.மி. தொலைவில் இருக்கிறது. சாலையோரத்தில் கோயில் உள்ளது. திருவையாற்றில் இருந்து நகரப் பேருந்து வசதி உள்ளது.

ஆலய முகவரி

அருள்மிகு ஆபத்சகாயநாதர் திருக்கோயில்
திருப்பழனம்
திருப்பழனம் அஞ்சல்
வழி திருவையாறு
திருவையாறு வட்டம்
தஞ்சாவூர் மாவட்டம்
PIN - 613204

இவ்வாலயம் தினந்தோறும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும்.


கோவில் அமைப்பு:

ஆலயம் ஒரு ராஜகோபுரத்துடனும் அடுத்து ஒரு உள்கோபுரத்துடனும் அரைந்துள்ளது. கொடிமரமில்லை. பலிபீடம் நந்தி உள்ளன. வெளிப் பிரகாரத்தில் விநாயகர், சுப்பிரமணியர் சந்நிதிகள் உள்ளன. முன்மண்டபத்தில் வலப்பகுதி வாகன மண்டபமாகவுள்ளது. விநாயகரைத் தொழுது வாயிலைக் கடந்து உட்சென்றால் இடதுபுறம் பிராகாரத்தில் சப்த மாதர்கள், விநாயகர், வேணுகோபாலர் சந்நிதிகளும், பல்வகைப் பெயர்களில் அமைந்த சிவலிங்கங்களும், நடராச சபையும், பைரவர், நவக்கிரகமும் உள்ளன.

உள்மண்டபத்தில் நுழைந்ததும் நேரே மூலவர் ஆபத்சகாயேஸ்வரர் இங்கு சுயம்புமூர்த்தியாக அருள்பாலிக்கிறார். பங்குனி, புரட்டாசி பௌர்ணமிகளிலும் அதற்கு முன்பின் இரண்டு நாட்களிலும் நிலா வெளிச்சம் சுவாமியின் மேல்படுகிறது. கருவறை தென்பற கோஷ்டத்தில் நடுவில் ஜடாமுடி, நெற்றிக் கண்ணுடன் சிவனும், இடதுபக்கம் தட்சிணாமூர்த்தியும், வலதுபுறம் கஜசம்ஹாரமூர்த்தியும் உள்ளனர். வெளிப்பிராகாரத்தில் அம்பாள் பெரியநாயகி சந்நிதி உள்ளது. பலாமரம், தலமரமான வாழை உள்ளன. ஆலயம் முழுவதும் அழகிய சிற்பஙளுடன் விளங்குகிறது. திருப்பழனம் ஆலயத்தை ஒரு கலைப் பெட்டகம் என்றே கூறலாம்.

குபேரன், திருமால், திருமகள், சந்திரன், தர்மசர்மா என்னும் அந்தணன் முதலியோர் பூசித்து பேறுபெற்ற தலமான திருப்பழனம் திருவையாற்றைச் சார்ந்த சப்தஸ்தான தலங்களில் இரண்டாவதாகும்.

நவக்கிரக தலங்களில் சந்திரனுக்கு உரியதான திங்களூர் இங்கிருந்து 2 கி.மீ. தொலைவில் உள்ளது. இது அப்பூதி அடிகளின் அவதாரத் தலம். அப்பர் பெருமான் தனது பதிகங்களில் அப்பூதி அடிகளின் தொண்டினைக் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். ஆலயத்தின் இராஜகோபுரத்தில் சுதைச் சிற்பமாக "திருநாவுக்கரசர் தண்ணீர் பந்தல்" காட்சி அளிப்பதைப் பார்க்கலாம். விடம் தீர்த்த பதிகம் என்று போற்றப்படும் "ஒன்று கொலாம்" என்ற பதிக நிகழ்ச்சிக்கு இடமான தலம் திருப்பழனம்.

Sri Ganapathy Homam, Sri Prathyangara Devi Homam and Homam for all the 18 Siddhars



As per divine Sri Parashakthi, Maharishi Agathiyar & Lopamudra instruction, AGATHIYAR LOPAMUDRA AROUND THE WORLD plan to conduct Prayers & Homam for Universal Peace, Safety, Security, Success and Harmony towards Millions of Friends  & Families  in trouble around the world now.
To learn more about us please visit following links.

http://agasthiyarravikumar.org
https://agathiyarlopamudra.wordpress.com/

We will be doing  Sri Ganapathy Homam, Sri Prathyangara Devi Homam and Homam for all the 18 Siddhars in various temples.   We will keep you informed the names of the temples, pooja date & timings.

YOUR REGISTRATION WILL BE INCLUDED IN UPCOMING & ALL THE POOJA

* Date                        
Friday, August18 th 2017.
PoojaTime 7 to 11 am, followed by Poornahuthi and Maha Arathi.

Location-  Sree  Muthu kumaraswamy school
No,11 rotler street near IOB bank purasai branch,
Choolai chennai 112

 Please join us with your family and friends.                          
Contact Mr Lion J Janakiraman, phone number 9840034990

PLEASE TAKE A FEW MINUTES TO FILL THIS FREE REGISTRATION
Please provide your Nakshathram and other details for the Sangalpam .

The Sangalpam will done for all the registries in all the temples where ever do this similar pooja.

THE REGISTRATION IS ABSOLUTELY FREE FOR EVERYONE AROUND THE WORLD.   Once you fill the form please click " Submit." All the information will be kept confidential and will not be shared.

You are welcome give your support through any form. For question contact us by email   sriagathiyarlopamudratemple@gmail.com

WE ARE WORKING ON TO SCHEDULE OTHER TEMPLES SOON. PLEASE KEEP CHECKING FOR UPDATE
PLEASE SHARE THIS TO AS MANY PEOPLE AS POSSIBLE

Thanks for your support.
Yours
 Dr Ravikumar K & Volunteers

புதன், 16 ஆகஸ்ட், 2017

நரம்பியல் பிரச்சினை தீர ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி




நவக்ரக காயத்ரி மந்திரத்தையும், அதிதெய்வ காயத்ரி மந்திரத்தையும் இயன்றவரை ஓதி வரலாம். அன்றாடம் இரவில் உறங்குவதற்கு முன்னால் தன்வந்திரி மந்திரத்தை இயன்றவரை உருவேற்றலாம். வடமொழியில்தான் என்றில்லை, நவக்ரக மந்திரத்தை, அவரவர் அறிந்த மொழியிலும் கூறலாம். அஃதோடு நவக்ரக வழிபாடுகளையும் அஃதொப்ப நவக்ரகங்கள் பிரசித்தமாக அருளும் ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். இஃதொப்ப மட்டுமல்லாது பிரம்மஹத்தி தோஷம் நீங்குகின்ற ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்து வரலாம். இது பக்தி சார்ந்த விஷயம். இஃதோடு மட்டுமல்லாமல் பலவிதமான தர்மகாரியங்களை இந்த சுவடியில் நாங்கள் கூறியிருக்கிறோம். அஃது  வழியில் பின்பற்றலாம். குறிப்பாக ஆவினங்களை(பசு) பராமரிக்கும் தக்க காப்பகங்களுக்கு இயன்ற உதவிகளோ அல்லது வாய்ப்பு உள்ளவர்கள் அந்த ஆவினங்களை பராமரிப்பதோ அஃதோடு மட்டுமல்லாமல் மன நோய் கொண்ட ஏழை மனிதனுக்கு இயன்ற உதவிகளையும் தொடர்ந்து செய்து வருவது கட்டாயம் இந்தப் பிணியிலிருந்து மெல்ல, மெல்ல விடுபட தக்கதொரு வாய்ப்பை தரும்.

நவகிரக காயத்ரி மந்திரம்

 சூர்ய காயத்ரி                 ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                             பாஸ அஸ்தாய தீமஹி 
                                             தன்னோ சூர்ய ப்ரசோதயாத்

சந்திர காயத்ரி               ஓம் பத்மத்வஜாய வித்மஹே
                                             ஹேம ரூபாய தீமஹி
                                             தன்னோ ஸோம ப்ரசோதயாத்

செவ்வாய் காயத்ரி        ஓம் வீரத்வஜாய வித்மஹே
                                            விக்ன அஸ்தாய தீமஹி
                                               தன்னோ பெளம ப்ரசோதயாத்

புதன் காயத்ரி                  ஓம் கஜத்வஜாய வித்மஹே
                                              சுக அஸ்தாய தீமஹி
                                              தன்னோ புத ப்ரசோதயாத்

குரு காயத்ரி                     ஓம் வ்ருஷ பத்வஜாய வித்மஹே
                                              க்ருணி அஸ்தாய தீமஹி
                                              தன்னோ குரு ப்ரசோதயாத்

சுக்கிரன் காயத்ரி            ஓம் அச்வத்வஜாய வித்மஹே
                                               தனூர் அஸ்தாய தீமஹி
                                               தன்னோ சுக்ர ப்ரசோதயாத்

சனி காயத்ரி                     ஓம் காகத்வஜாய வித்மஹே
                                              கட்க அஸ்தாய தீமஹி
                                              தன்னோ மந்த ப்ரசோதயாத்

ராகு காயத்ரி                    ஓம் நாகத்வஜாய வித்மஹே
                                              பத்ம அஸ்தாய தீமஹி
                                              தன்னோ ராகு ப்ரசோதயாத்

கேது காயத்ரி                  ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
                                              சூல அஸ்தாய தீமஹி
                                              தன்னோ கேது ப்ரசோதயாத்


அதிதெய்வ காயத்ரி மந்திரங்கள்


சூரியன் - சிவன்
சந்திரன் - பார்வதி
செவ்வாய் - முருகன்
புதன் - விஷ்ணு
வியாழன் - பிரம்மா, தட்ணாமூர்த்தி
சுக்கிரன் - லட்சுமி, இந்திரன், வருணன்
சனி - சாஸ்தா (ஐயப்பன்),ஹனுமான்
ராகு - காளி, துர்க்கை, மாரியம்மன்
கேது - விநாயகர், சண்டிகேஸ்வரர்


சிவ காயத்ரி 

ஓம் தத்புருஷாய வித்மஹே
 மஹா தேவாய தீமஹி
தந்நோ ருத்ர  ப்ரசோதயாத்

பார்வதி காயத்ரி

ஒம் ஜெகன்மாத்ரே ச வித்மஹே
சைல சுதாய ச திமஹே
தன்னோ பார்வதி ப்ரசோதயாத்

சுப்ரமண்யர் காயத்ரி மந்திரம்

ஓம் தத்புருஷாய வித்மஹே
மகா சேனாய தீமஹி
தந்நோ ஸ்கந்த ப்ரசோதயாத்

மஹாவிஷ்ணு காயத்ரி மந்திரம்

ஓம் நாராயணாய    வித்மஹே
வாசுதேவாய   தீமஹி
தந்நோ நாராயணா ப்ரசோதயாத்

பிரம்மா காயத்ரி மந்திரம்

ஓம் வேதாத்மஹாய  வித்மஹே
ஹிரண்யகர்ப்பாய தீமஹி
தந்நோ ப்ரம்ம ப்ரசோதயாத்

மஹா லட்சுமி காயத்ரி மந்திரம்

ஓம் மகாலக்ஷ்மி ச வித்மஹே
விஷ்ணு பத்னியை ச தீமஹி
தந்நோ லக்ஷ்மி ப்ரசோதயாத்

ஹனுமான் காயத்ரி மந்திரம்

ஓம் ஆஞ்சநேயாய வித்மஹே
வாயுபுத்ராய தீமஹி
தந்நோ ஹனுமன் ப்ரசோதயாத்

துர்கா தேவி காயத்ரி மந்திரம்

ஓம் மகாதேவ்யை ச வித்மஹே
துர்காயை ச  தீமஹி
தந்நோ தேவி ப்ரசோதயாத்

கணபதி காயத்ரி

ஓம் ஏகதந்தாய வித்மஹே
வக்ர துண்டாய தீமஹி 
தந்நோ தந்தி ப்ரசோதயாத்  


 தன்வந்த்ரி நாமம்

ஓம் ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி

அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்
குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்
சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்
தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.

ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம


பிரம்மஹத்தி தோஷம் நீங்குகின்ற ஆலயங்கள்

ஸ்ரீ வாஞ்சிநாதசுவாமி கோயில் திருக்கோவில்,ஸ்ரீவாஞ்சியம்
ஸ்ரீ மகாலிங்க சுவாமி திருக்கோவில்,திருவிடைமருதூர்


நவகிர ஸ்தலங்கள்