வாய்க்குமடா மனதழுக்கை யறுக்கவேணும்
வஞ்சமெனும் புத்தியையும் மாய்க்கவேணும்
எய்க்குமடா பேய்ப்பான பேச்சையெல்லாம்
ஈடழியக் கண்டுமுத லிறுத்தவேணும்
நாய்க்குமாடா நாய்போலே திரியவேணும்
நல்லோரைக் கண்டாக்கால் வணங்கவேனும்
பேய்க்குமடா பிராணானையும் போற்றவேணும்
பிரபலங்கள் பண்ணாமற் பிலத்துநில்லே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 8
விளக்கம்:
குண்டலி சக்தி எனும் அளப் பெரிய சக்தியை ஏற்ற
வேண்டும் என்றால்,மனதில் இருக்கும் அழுக்கை அகற்ற வேண்டும். வஞ்சனை எனும் ஆழ்ந்த வெறுப்பை
கற்பிக்கின்ற புத்தியை மாய்க்க வேண்டும்.மௌனத்தையே முழு மூச்சாய் கொண்டு,நாய் போல
வாசி பழக வேண்டும். வாசியால் கிட்டும் நல்ல சக்திகளை வணங்கி பிராணன் எனும் உயிர்
சக்தியையும் போற்ற வேண்டும்.இதை எல்லாம் வெளியிடாது செய்தால் குண்டலி வாய்க்கும் என்று
கூறி எட்டாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக