நில்லடா ஒருமனதாய் நிலையில் நில்லு
நித்தநித்தம் பிராணாயம் நினைவாய்க் கூட்டு
அல்லடா கற்பமதை யறிந்தேயுண்ணு
ஆறுவரை யூடுருவி யடுத்தேயேறும்
வல்லடா வாசியைதான் மேலேநோக்கு
வயிரமங்கே யிருக்கின்ற வகையுங்காணும்
அல்லடா யிப்படியே அறிந்துகொண்டு
ஆதிவஸ்தை யனுதினமு மறிவாய்ப் போற்றே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 9
விளக்கம்:
மூச்சை கவனித்து ஒருமனதாய் புருவ மத்தியில் நினைவை வைத்து நின்று நாள்தோறும் பிராணாயம் எனும் வாசியை கூட்ட வேண்டும்.கற்பம் எது அறிந்து அதை உண்ண வேண்டும்.இப்படியே செய்து ஆறு சக்கரங்களை ஊடுருவி சென்று,வாசியை கீழ் நோக்கி செலுத்தாமல் மேல் நோக்கி செலுத்த வேண்டும்.அப்படி செலுத்தினால் வைரத்திற்கு ஒப்பான ஜோதியை காண முடியும்.இப்படி தினம் தினம் செய்து ஆதி வஸ்துவின் நிலையான ஜோதி சொருப நிலையை அடையலாம் என்று கூறி ஒன்பதாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக