எதிர்வரும் 04.01.2018 அன்று ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா நடைப் பெற உள்ளது.அன்பர்கள் கலந்து கொண்டு அகத்திய பெருமானின் ஆசியை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
அஞ்ஞான அழுக்கு ஒரு மனிதனை விட்டு செல்லவேண்டுமென்றால் அதற்கேற்ற மனப்போராட்டங்களும், மனத்தாக்கங்களும் இருந்துகொண்டேயிருக்கும். மனிதன் எதிர்பார்க்கின்ற சுகமான வாழ்வு சம்பவங்களால் மட்டும் ஒரு மனிதனின் அறியாமை அஞ்ஞானம் அகன்று ஞானம் வந்துவிடாது. எனவே மனோரீதியாக நீ என்றும் திடமாக இரு.
வியாழன், 30 நவம்பர், 2017
ஸ்ரீ ல ஸ்ரீ வெள்ளாடை சித்தர் திருக்கோவிலில் ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா
எதிர்வரும் 04.01.2018 அன்று ஸ்ரீ மஹாகுரு அகத்திய பெருமானின் அவதார பூஜை மற்றும் 1008 சக்திகள தீப விழா நடைப் பெற உள்ளது.அன்பர்கள் கலந்து கொண்டு அகத்திய பெருமானின் ஆசியை பெறுமாறு கேட்டுக் கொள்கிறோம்
திருவண்ணாமலை தீப மை மற்றும் திருவொற்றியூர் அபிஷேக எண்ணெய்
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
கார்த்திகை மாதம் என்றாலே சிவபெருமானின் கோவில்கள், முருகரின் கோவில்களில் தீபம் ஏற்றுவது ஒரு திருவிழா போல நடக்கும். தீபம் என்றதும் நம் நினைவுக்கு வருவது, திருவண்ணாமலை. ஒரு கொண்டாட்டமே அங்கு நடக்கும். சித்தர்களும், முனிவர்களும் கூட வந்திருந்து இறை அருளை பெற்றுக் கொள்வர்.
திருவண்ணமலையில், மலை உச்சியில் ஏற்றப் படுகிற தீபக் கொப்பரையிலிருந்து எடுக்கப் பட்ட "மையை" புனுகு, ஜவ்வாது சேர்த்து, அங்கே கோவிலில் உரையும் நடராஜார் பெருமானின் சிலைக்கு அணிவித்தப் பின் பக்தர்களுக்கு பிரசாதமாக கொடுக்கிறார்கள். இந்த மை, அதை அணிகிற பக்தனுக்கு கவசமாக நின்று காப்பாற்றுகிறது என்பது நிதர்சன உண்மை.
இதே போல், சென்னை திருஒற்றியூரில்,அருள்மிகு வடிவுடை அம்மன் உடனுறை தியாக ராஜர் ஆலயத்தில் ஆதிபுரீஸ்வரர் (படம்பக்க நாதர் ) கோவிலில், அன்றைய தினம் புற்றை மூடி இருக்கும் கவசத்தை விலக்கிவிட்டு , பரணி நட்சத்திரத்தன்று, எண்ணை அபிஷேகம் செய்வார்கள் (03/12/2017). பக்தர்கள் யார் வேண்டுமானாலும் அபிஷேகத்துக்கு எண்ணை வாங்கிக் கொடுக்கலாம். புற்றுக்கு அபிஷேகம் செய்தபின், பிரசாதமாக தருவார்கள். அதை உடலில் அணிந்து கொள்ள, நல்ல பாதுகாப்பை, இறை அருளை பெற்றுத் தரும்!
சென்னையில் வசிப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பு. உபயோகப் படுத்திக் கொள்ளுங்கள்.
ஜீவநாடி கட்டளைப்படி சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் ஆலயத்தில் 1008 சக்திகள தீப விழா
அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் ஆலயத்தில் வரும் 03.12.2017 அன்று1008 சக்திகள தீப விழா நடை பெற உள்ளது.
உலக மக்களின் நன்மைக்காக அட்ட வீரட்ட தலங்கள் மற்றும் பஞ்ச பூத தலங்களில் தீப வழிபாடு செய்ய வேண்டும். இதனால் இயற்கை சீற்றம் கணிசமாக குறையும் என முருகப் பெருமான் ஜீவ அருள் நாடியில் உரைத்துள்ளார்கள்.
அதன்படி அட்ட வீரட்ட தலங்கள்,திருக்காளகஸ்தி,காஞ்சி திருவண்ணாமலை மற்றும் திருவானைக்காவலில் தீப வழிபாடு நடைபெற்றது. வருகிற 03.12.17 சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் ஆலயத்தில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.
தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும் ,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும்,புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு புத்திரன் கிட்டும்,ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம்,அனைத்து குறைகளும் நீங்கும்,என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார்.
ஆகவே அனைவரும் கலந்து கொள்க.
சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் தல வரலாறு
சிவனடியார் ஒருவர் அனைத்து சிவன் கோயில்களுக்கும் சென்று, விளக்கேற்றும் வழக்கமுடையவர். இறைவனின் சோதனையால் வறுமையில் வாடியபோதும், தன் சொத்துக்களை விற்றுத் தன் பணியைத் தொடர்ந்தார். வறுமை மிகுந்து திரி வாங்கவும் வழியில்லாமல் கணம்புல்லை திரியாக்கி தீபமேற்றி இறைவனை வழிபட்டார். எனவே இவர் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டதோடு, 63 நாயன்மார்களில் ஒருவரானார்.
திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். இவ்வூரில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி “என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!’ என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.
இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். “இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன்!’ என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை. மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி “திருவோடு தொலைந்துவிட்டது!’ என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார். அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.
இக்கோயில் எதிரே உள்ள திருக்குளம், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் மற்றும் அவரது மனைவியும் குளித்து எழுந்த போது முதுமை நீங்கி இளமை பெற்றதால் இளமையாக்கினார் கோயில் குளம் என்ற பெயர் பெற்றது.
தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும்.
திருநீலகண்டர், ரத்னாசலை, கணம்புல்ல நாயனார், வியாக்ரபாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.
தல வரலாறு
திங்கள், 27 நவம்பர், 2017
தொடர்ந்து துன்பத்தில் இருப்பவர்கள் செல்ல வேண்டிய ஆலயம் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு
“ சிறுவை “ என்றொரு ஸ்தலத்திற்கு முடிந்தபொழுது சென்று வழிபாடு செய்துவந்தாலும் நல்ல பலன் ஏற்படும்.
சிறுவை என்கிற சிறுவாபுரி தல வரலாறு
அசுவமேத யாகம் செய்ய விருப்பம் கொண்ட ராமபிரான் யாகப்பசுவாக குதிரையை ஏவிவிட அது வால்மீகி முனிவரின் ஆஸ்ரமத்தின் அருகில் வந்தது. அதை அங்கு வளர்ந்து வந்த ராமனின் பிள்ளைகளான லவனும் குசனும் கட்டிப்போட்டு விட்டனர். இது அறிந்து குதிரையை மீட்டுப் போக வந்த லட்சுமணனாலும் சிறுவர்களை வெல்ல முடியவில்லை.ராமனே நேரில் வந்து சிறுவர்களிடம் போரிட நேர்ந்தது. இவ்வாறு சிறுவர்களான லவனும் குசனும் அம்பு விட்ட இடமே சிறுவாபுரி என்று வழங்கியது.
அருணகிரி நாதரால் போற்றி பாடப்பட்ட தலம் சிறுவாபுரி.
இங்குள்ள விக்கிரகங்களில் பாலசுப்ரமண்யர், ஆதி மூலவர், நவகிரகம் தவிர மற்ற விக்கிரகங்கள் அனைத்தும் மரகதப் பச்சைக்கல்லால் ஆனவை.கோவிலுனுள் உயரமான கொடிமரம் முன் காணப்படும் பச்சை மரகத மயிலின் காட்சி கண்கொள்ளா அழகு. இது போன்ற சிறந்த வடிவமைப்பை வேறு எங்கும் காண்பது அரிது.
சிறுவாபுரி முருகன் முன் வலக்கரம் அடியவருக்கு அபயம் அளிக்க பின் வலக்கரம் ஜபமாலை ஏந்தியிருக்க முன் இடக்கரம் இடுப்பிலும்பின் இடக்கரம் கமண்டலமும் தாங்கி பிரம்ம சாஸ்தா கோலத்தில் இருக்கிறார். பிரம்மனை தண்டித்து பிரம்மனின் படைப்பு தொழிலை ஏற்ற கோலம் கொண்ட இம்முருகனை வழிபட்டால் வித்தைகள் பல கற்ற பேரறிஞர் ஆகலாம் என அருணகிரி நாதர் பாடியுள்ளார்.
வாஸ்து அதிபதியான பிரம்மாவை தண்டித்து படைப்பு தொழிலை ஏற்ற கோலத்தில் காட்சி அளிப்பதால் இவரை வழிபடுவதால் வாஸ்து தோஷம் நீங்கி வீடு கட்டுவதில் தடைகள் விலகும் என்பது நம்பிக்கை!
மணக்கோலத்தில் காட்சி தரும் இது போன்ற சிலை வேறு எங்கும் கிடையாது. இந்த முருகப்பெருமானை வணங்குவோருக்கு திருமணத்தடை நீங்கி மனம் போல துணை அமையும் என்பது ஐதீகம்.
நடை திறக்கும் நேரம்:
சிறுவாபுரி கோவில் ஞாயிறு தோறும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறந்து இருக்கும். பிறகு பிற்பகல் 4 மணி முதல் 8 மணி வரை நடைதிறந்து இருக்கும். செவ்வாய்கிழமைகளில் அதிகாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை வழிபாடு செய்யலாம். மற்ற நாட்களில் காலை 7.30 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தான் வழிபாடு செய்ய முடியும்.
இடம்:
சென்னைக்கு வட மேற்கே சென்னை- கல்கத்தா நெடுஞ்சாலையில் சென்னையில் இருந்து 33-வது கிலோமீட்டரில் இடதுபக்கம் (மேற்கே) பிரியும் சாலையில் சிறுவாபுரி பாலசுப்பிரமணிய சுவாமியின் தோரண வாயில் (நுழைவாயில்) நம்மை வரவேற்கிறது.
இந்தத் தோரண வாயிலில் இருந்து மேற்கே 3 கிலோ மீட்டர் தொலைவில் சின்னம்பேடும் எனத் தற்போது அழைக்கப்படும் சிறுவாபுரி பாலசுப்பிரமணியப் பெருமான் ஆலயம் அமைந்துள்ளது
திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா
வருகின்ற 02.12.2017 அன்று திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீபத் திருவிழா நடைப் பெற உள்ளது.அதுசமயம் அனைத்து அன்பர்களும் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தீபம் பற்றி அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு
இறைவனின் கருணையைக்கொண்டு இஃதொப்ப தீபம் என்ற சுடர் ஒளிக்கற்றைக் குறித்து கூறினால், கூறிக்கொண்டே இருக்கலாம். அது ஒருபுறம் இருக்கட்டும். முதலில் ஆன்மீகம் தவிர்த்து, தெய்வீகம் தவிர்த்து மனித ரீதியாகப் பார்த்தால் இருளை யாரும் விரும்புவதில்லை. விழிகள் நன்றாக இருந்தாலும் இருளில் எதிரே இருக்கும் சூழலை உணர இயலாது. எனவே இருள் நீங்கவேண்டும் என்றால் அங்கே கட்டாயம் இருளுக்கு எதிரான ஒரு செயல் வேண்டும். அது ஒளி ஒன்றுதான். அனல், அக்னி, நெருப்பு என்று எப்படி வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளலாம். இவற்றிலிருந்து கிளம்பக்கூடிய கதிர்கள் ஆக்கபூர்வமான எண்ண அலைகளை மனிதனுக்கு ஏற்படுத்த வேண்டும்.அதே சமயம் மனிதனின் உடல் ஆரோக்கியத்தையும் பேண வேண்டும். இப்படி கவனித்துப் பார்த்துதான் விதவிதமான தீபங்கள் முன்னோர்களால் கடைபிடிக்கப்பட்டு வந்தது. அந்த தீபங்களில் ஒன்றுதான் பரிசுத்தமான எள் எண்ணெய் தீபம், பரிசுத்தமான பசு நெய் தீபமாகும். எல்லா தீபங்களிலிருந்தும் ஒளிக்கற்றை, ஒளி சுடர் வரலாம். நல்லதொரு வெளிச்சத்தையும் அதற்கான சூழலையும் தரலாம். இருளை விலக்கலாம். ஆனால் அந்த செயலைத் தாண்டி ஆக்கப்பூர்வமான அதிர்வலைகள் எதில் அதிகம் இருக்கிறதோ அதை மனிதன் பின்பற்றினால் நல்ல பலன் உண்டு. அந்த வகையில் பார்க்கும்பொழுது நெய் தீபத்திற்கு அந்த சக்தி உண்டு. எள் எண்ணெய் எனப்படும் நல்லெண்ணெய் தீபத்திற்கு அந்த ஆற்றல் உண்டு. இலுப்பை எண்ணெய்க்கு அந்த ஆற்றல் உண்டு. மற்ற எண்ணெய்களுக்கு அந்த ஆற்றல் இல்லாமல் இல்லை. ஆற்றலின் சக்தி சற்றே குறைந்திருக்கும். சில வகையான தீபங்களை சில குறிப்பிட்ட பூஜைகளை முன்னிட்டு ஏற்ற வேண்டுமே தவிர பொதுவில் ஏற்றுவது சிறப்பை தராது.
இஃதொப்ப மட்டுமல்லாது காலகாலம் மனிதன் எத்தனையோ புதிதாக கற்று செயல்படுத்த துவங்கிவிட்டான். அந்த வகையில் நெய் தீபமோ அல்லது எண்ணெய் தீபமோ இல்லாமல், திரியில்லாமல் எரியக்கூடிய தீபங்களையெல்லாம் இறைவன் அருளால் கண்டுபிடித்துவிட்டான். இருந்தாலும் அவைகள் வெறும் உலகியல் வாழ்விற்கு உதவலாம். அதிலிருந்து வரக்கூடிய அதிர்வலைகள் கட்டாயம் மனிதனுக்கு ஆன்மீக முன்னேற்றத்தை தருவதாக இராது. அதுமட்டுமல்லாது பூமியில் கிடைக்கக்கூடிய பொருள்களை விதவிதமாக சேர்த்துதான் மனிதன் புதிய விஷயங்களையும், புதிய கருவிகளையும் கண்டுபிடிக்க கற்கிறான். பூமியில் இல்லாத ஒன்றை புதியதாக உருவாக்கினால்தான் அது அவன் அறிவு திறமைக்கு சான்றாகும். ஆனால் மனிதன் கண்டுபிடித்த எந்தவொரு பொருளுக்குப் பின்னாலும் இறைவன் ஏற்கனவே தந்த அடிப்படை பொருள் இருக்கும்.
அந்த வகையிலே அது சிறப்பான பலனை எந்த அளவிற்கு தரும் ? என்று பார்த்தால், உலகியல் சார்ந்த விஷயங்களுக்கு அது உதவலாம். அதே சமயம் உண்மையான, மெய்யான, மெய் உணர்வை பெற வேண்டுமென்றால், ஆதி காலம் முதல் இருக்கக்கூடிய, கடைபிடிக்கக்கூடிய மண் அகல் தீபம், பசு நெய் தீபம், மண் அகலில் தூய எள் எண்ணெய் தீபம் – இவற்றை ஏற்றுவது சிறப்பான பலனைத் தரும். அஃதோடு மட்டுமல்லாமல் உடலில் இருக்கக்கூடிய தீய கழிவுப் பொருள்களை வெளியேற்றுவதில் இதுபோன்ற தீப சுடர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இறைவனை ஒருவன் நம்பாமல் இருக்கட்டும், பக்தியில்லாமல் இருக்கட்டும். பயத்தின் காரணமாகவோ அல்லது பக்தியின் காரணமாகவோ ஆலயம் சென்று வணங்கினால் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையினாலோ கூட்டம், கூட்டமாக குறிப்பிட்ட தினங்களில் ஆலயத்தை நோக்கி செல்கிறான். ஒரு குறிப்பிட்ட இடத்தில் வழக்கத்திற்கு அதிகமான மனித கூட்டம் சேரும்பொழுது சுவாசிக்க தூய்மையான காற்று கிடைப்பது கடினமாகிறது. எப்பொழுதுமே இறைவன் படைப்பு நுட்பமானது. இங்கே மனிதனுக்கு தேவையான உயிர்சக்தியை தரக்கூடிய பிராணவாயுவின் சதவிகிதம் காற்றில் குறைவு. ஆனால் அதற்கு எதிராக தளர்வையும், அயர்வையும், மயக்கத்தையும் தரக்கூடிய எதிர்தன்மை கொண்ட வாயுவின் தன்மை அதிகம்.
இஃதொப்ப நிலையில் தீபத்தை ஏற்றினால் அந்த தீப சுடர் எரிவதற்கு மேலும் பிராண வாயு தேவைப்படும் பட்சத்தில் இன்னும் பிராண வாயு சக்தி குறையுமே ? இப்படியிருக்கும் பட்சத்திலே அந்த ( பிராண வாயு ) பற்றாக்குறையை எவ்வாறு சரி செய்வது ? என்றால், கட்டாயம் பசு நெய் தீபம் நூற்றுக்கு நூறு சரி செய்யும். அடுத்ததாக விண்வெளியில் உள்ள அசுத்தங்களையும் சரி செய்யும். அந்தப் பகுதியில் உள்ள எதிர்மறை எண்ணங்களையும் சரி செய்யும். அடுத்த நிலையில் எள் எண்ணெய் தீபமும் இவ்வாறு சரி செய்யும். எனவே இப்படி உடல் சார்ந்த ஆரோக்கியத்திற்கும், உள்ளம் சார்ந்த ஆன்மீகத்திற்கும் தீப வழிபாடு நல்ல பலனைத் தரும். பக்தியோடு வேறு புற சிந்தனைகள் இல்லாமல் இறைவனை, மனதார ஒன்றுபட்ட எண்ணத்தோடு எண்ணி தீபத்தை ஏற்றி வணங்கிவந்தால் கட்டாயம் உடலுக்கும் நன்மை உண்டு, உள்ளத்திற்கும் நன்மை உண்டு. அதற்காக ஆலயத்திலே தற்காலத்திலே உள்ள மின்சார விளக்குகளை பொருத்த வேண்டாம் என்று நாங்கள் கூறவில்லை. ஆலயத்திற்கோ அல்லது வேறு சேவை செய்யும் அமைப்புக்கோ மின்சார விளக்குகளை பொருத்த ஒரு மனிதன் உதவினாலும் அதுவும் அவனுக்கு புண்ணிய பலனையே தரும்.
ஞாயிறு, 26 நவம்பர், 2017
அருள்மிகு சந்தன மகாலிங்கம் கோவில் சித்தர் பூஜை திருவிழா
ஆன்மீக அன்பர்களே !!!
இரவு 7 மணிக்கு அருள்மிகு சந்தன மகாலிங்கம் சுவாமிக்கு போஜன பூஜை நடைபெறும்.
இரவு 8.30 மணிக்கு மேல் சந்தன மகாலிங்கம் சன்னதி எல்லா தெய்வங்களுக்கும் அபிஷேகம், தீப ஆராதனை பௌர்ணமி பூஜை நடைபெறும்.
02/01/2018 அதிகாலை 3 மணிக்கு சந்தன மகாலிங்க சுவாமிக்கு திருவாதிரை சிறப்பு அபிஷேக பூஜை நடைபெறும்.
காலை 8 மணிக்கு மேல் பதினெண் சித்தர்களுக்கும், நவகிரஹங்களுக்கும் மகா அபிஷேகம் , தீப ஆராதனை இறை அருளோடு சித்தர் பூஜைகள் நடைபெறும்.
பூஜை முடிவில், நல்லோர்கள் அனைவரும் வளமுடன் மகிழ்ச்சியுடன் வாழ 1 நிமிடம் தியானம் நடைபெறும்.
பக்தர்கள் அனைவரும் வருக!
இறைவனின் அருள் பெறுக!
சதுரகிரி மலை சித்தர்கள் ஆசியுடன் பக்தர்கள் ஆதரவுடன் சித்தர்பூஜை மிகவும் சிறப்பாக பக்தியுடன் நடைபெறும்.
ஓம் நமசிவாய
தென்னாடுடைய சிவனே போற்றி !
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி .!!
இறைவழிபாட்டில் ....
சென்சாய்.சி.சுபாஸ் சின்னச்சாமி.....
நிர்வாகி : சுந்தர சேனா ஆன்மீக குழு
மேலும் விவரங்களுக்கு : சித்தர்பூஜை S. நல்லதம்பி - 9345674474 என்ற தொலைபேசி இலக்கத்தில் தொடர்புகொள்ளுங்கள்.
ஓம் நமசிவாய !!!
Greetings!
We cordially invite all devotees to attend the 17th year festival of "Siddhar Poojai" @ Sri Sathuragiri Santhana Mahalingam Temple.
Date : 01/01/2018
================
On the occasion of Pournami day evening, "Malar Abishegam poojai" will be performed to Sri Santhana MahaKaali Amman.
After 7PM "Bhojana Poojai" will take place infront of Sri Santhana Mahalingam sannathi.
8.30PM --> Abishekam, Deepa Aarathanas and pournami pooja will be performed in all swamy sannathi.
Date : 02/01/2018
================
3AM --> Thiruvathirai Special Pooja and Abishekam will be performed to Sri Santhana Mahalingam Swamy.
8AM --> Navagraha Pooja , Maha Abishekam, Deepa Aarathanas and Special pooja for 18 Siddhargal.
At the end of the festival, a minute of meditation will take place for the happiness and prosperity of all good souls.
We Solict your esteemed presense on the occassion and sincerly pray to the Almighty to shower his blessings upon you and to all devotees.
Divine service @ Sathuragiri Temple
Siddhar Poojai S. NALLATHAMBY
Mobile 9345674474
Greetings!
We cordially invite all devotees to attend the 17th year festival of "Siddhar Poojai" @ Sri Sathuragiri Santhana Mahalingam Temple.
Date : 01/01/2018
================
On the occasion of Pournami day evening, "Malar Abishegam poojai" will be performed to Sri Santhana MahaKaali Amman.
After 7PM "Bhojana Poojai" will take place infront of Sri Santhana Mahalingam sannathi.
8.30PM --> Abishekam, Deepa Aarathanas and pournami pooja will be performed in all swamy sannathi.
Date : 02/01/2018
================
3AM --> Thiruvathirai Special Pooja and Abishekam will be performed to Sri Santhana Mahalingam Swamy.
8AM --> Navagraha Pooja , Maha Abishekam, Deepa Aarathanas and Special pooja for 18 Siddhargal.
At the end of the festival, a minute of meditation will take place for the happiness and prosperity of all good souls.
We Solict your esteemed presense on the occassion and sincerly pray to the Almighty to shower his blessings upon you and to all devotees.
Divine service @ Sathuragiri Temple
Siddhar Poojai S. NALLATHAMBY
Mobile 9345674474
விருதுநகர் அகத்தியர் சித்தர்கள் குடில் வருஷாபிஷேகம்
"சித்தர்கள் அடியவர்களே வணக்கம்"
காலை 4.30 மணிக்கு மேல் 6.00 மணிக்குள் கணபதிஹோமம்,யாகபூஜையும், 6.00 மணிக்கு மேல் 7.45 மணிக்குள் விமானகலச பூஜையும், 7.00 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் திருவிளக்கு பூஜை மற்றும் 21வகை அபிஷேகங்களும் நடைபெறும்.
அதுசமயம் பக்தகோடிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வாலையின் அருளும் சித்தர்கள் ஆசியும் பெற்றுச் செல்லுமாறு அன்புடன் அழைக்கின்றோம் .
அன்று காலை10.00 மணிக்குமேல் அன்னதானம் நடைபெறும்.அபிஷேகம் மற்றும் அன்னதானத்திற்கு
தங்களால் முடிந்த பொருளுதவி செய்து விழாவினை சிறப்பிக்க வேண்டுகிறோம்.
விபரங்களுக்கு......
98432 41776,
98651 27606,
99943 53377..
சிவயநம!!!எல்லாம் சிவமாகட்டும் ......
இடம் .
அகத்தியர் சித்தர்கள் குடில்,
எஸ் எப் எஸ் பள்ளி பின்புறம், மல்லாங்கிணர் ரோடு,
விருதுநகர்.
புதன், 22 நவம்பர், 2017
ஜீவ நாடியில் அருளப்பட்ட அகத்திய மகரிஷி-108 அர்ச்சனை மந்திரம்
1.ஓம் அகத்தில் ஈசனை வைத்தவா போற்றி
2.ஓம் அகத்தில் நின்ற சற்குருவே போற்றி
3.ஓம் அவென அகரத்தின் பொருளே போற்றி
4.ஓம் அவெனு அரவத்தின் மூலமே போற்றி
5.ஓம் அகத்தீச் சுவரத்தின் அன்பே போற்றி
6.ஓம் அரவத்தின் இலக்கணம் வகுத்தாய் போற்றி
7.ஓம் அட்டமாசித்திகள் கண்டவா போற்றி
8.ஓம் அட்டவசுக்களின் அன்பே போற்றி
9.ஓம் அஞ்சனப்பொருளை கண்டவா போற்றி
10.ஓம் அஞ்செழுத்தில் ஆதாரம் கண்டவா போற்றி
11.ஓம் அசுவணியத் தேவரின் அன்பே போற்றி
12.ஓம் அசைவர கிடைத்த அன்பே போற்றி
13.ஓம் அண்ட மெலாந்திரியும அறிவே போற்றி
14.ஓம் அண்டப் பொருளை கண்டவா போற்றி
15.ஓம் அகிலத்தின் நாத குருவே போற்றி
16.ஓம் அகவிலா அவிழ்தம் தந்தோனே போற்றி
17.ஓம் அறங்களை வகுத்த குருவே போற்றி
18.ஓம் அறுவகலை அறுபதின் குருவே போற்றி
19.ஓம் ஆதிசக்தியின் அருளே போற்றி
20.ஓம் ஆதியெந்தத்து அருளே போற்றி
21.ஓம் ஆதி மருந்தின் மூலமே போற்றி,
22.ஓம் ஆதி அருங்கலையை தந்தவா போற்றி,
23.ஓம் ஆகாயசத்திர குருவே போற்றி,
24.ஓம் ஆக ஆகமங்களின் குருவே போற்றி,
25.ஓம் இகரத்தின் இன்ப நிலையே போற்றி,
26.ஓம் இருவினைபோக்கு கலையே போற்றி,
27.ஓம் இலைகளின் மருந்து கண்டாய் போற்றி,
28.ஓம் மலைகளில் பாதம் பதித்தோய் போற்றி,
29.ஓம் ஈசனி்ன் அருளை பெற்றோய் போற்றி,
30.ஓம் ஈஸ்வரியின் சக்தி பெற்றோய் போற்றி,
31.ஓம் உபரநாதன் அருளே போற்றி,
32.ஓம் உபாய பொருளின் மருத்துவா போற்றி,
33.ஓம் ஊனங்கள் சரியாக்குமன்னவா போற்றி,
34.ஓம் ஊற்றில் செய்நீர் கண்டவா போற்றி,
35.ஓம் என்றும் இளமையாய் இருந்தவா போற்றி,
36.ஓம் என்றும் மறவாத இலக்கியவா போற்றி,
37.ஓம் ஏழுலகம் புகழ திரிந்தவா போற்றி,
38.ஓம் ஏக்கங்களைய மருந்தீவாய் போற்றி,
39.ஓம் ஏப்பமாய் வாதாபியை செரித்தாய் போற்றி,
40.ஓம் ஏகாந்த சொருபமானாய் போற்றி
41.ஓம் ஐயனை தன்னுள் வைத்தவா போற்றி,
42.ஓம் ஐங்கரனின் அருள் பெற்றாய் போற்றி,
43.ஓம் ஒன்றிய ஞானத்தனிவே போற்றி,
44.ஓம் ஒற்றிய மருந்தின் ஒளியே போற்றி,
45.ஓம் ஓலையில் எழுதிய உபாத்தியாயா போற்றி,
46.ஓம் ஓலையில் யட்டமா சித்திவைத்தவா போற்றி,
47.ஓம் ஔவையின் இலக்கிய வகையே போற்றி,
48.ஓம் ஔவையம் இல்லா துகையே போற்றி,
49.ஓம் கலைகளின் ஞான குருவே போற்றி,
50.ஓம் கலைகளின் வேண குரு மருந்தே போற்றி,
51.ஓம் ஙானஞான குருவே போற்றி,
52.ஓம் ஙனவேதியானவா போற்றி,
53.ஓம் கங்காதரனின் தயையே போற்றி,
54.ஓம் சங்கீதத்தில் ராவணனை வென்றவா போற்றி,
55.ஓம் ஞானமருந்தின் ஞானமே போற்றி,
56.ஓம் ஞானகுரு பூரணமே போற்றி,
57.ஓம் டகாரவித்தை கொடுத்தவா போற்றி,
58.ஓம் டகாரசித்து கண்டவா போற்றி,
59.ஓம் வணங்கிடு வைத்திய குருவே போற்றி,
60.ஓம் குணங்கிடு நோயை தீர்த்தவா போற்றி
61.ஓம் தத்துவங்கடந்த தவஞானியே போற்றி,
62.ஓம் தத்சத்தானந்த தருவாய் போற்றி,
63.ஓம் நாதியானதியின் பொருளே போற்றி,
64.ஓம் நாதாந்த சித்து காட்டினாய் போற்றி,
65.ஓம் நீதிகளை காக்க விரைந்தாய் போற்றி,
66.ஓம் நதிகளை கடந்த நாதனே போற்றி,
67.ஓம் நாடியில் நாலாயிரம் வைத்தாய் போற்றி,
68.ஓம் நாடிநரம்பின் நோய் வகுத்தாய் போற்றி,
69.ஓம் பாடித்திரிந்த பறவையே போற்றி,
70.ஓம் பாடி பண்ணிராயிரம் வைத்தாய் போற்றி,
71.ஓம் தேடித்திருந்திடு திருவருளே போற்றி,
72.ஓம் வாடிவருவோர்க்கு வாழ்வே போற்றி,
73.ஓம் ஓடித்திரியுவெல்லாமே போற்றி,
74.ஓம் நாடித்தந்நிடு திருவருளே போற்றி,
75.ஓம் நாடிவருவோர்க்கு வாழ்வே போற்றி,
76.ஓம் காடியில் வைப்பு குருவே போற்றி,
77.ஓம் தாடியில் அருளினை கண்டாய் போற்றி,
78.ஓம் சாடியில் நவபாஷய கண்டாய் போற்றி,
79.ஓம் நாடியில் நோய்காண கொடுத்தவா போற்றி,
80.ஓம் பசும்பொன்னாக்கு மருத்துவனே போற்றி
81.ஓம் பேசும் தமிழின் குருவே போற்றி,
82.ஓம் வீசும் காற்று கணக்காளனே போற்றி,
83.ஓம் காசும் வீசமும் கண்டவா போற்றி,
84.ஓம் ஞானத்தின் ஞான குருவே போற்றி,
85.ஓம் வானத்தின் ஞான குருவே போற்றி,
86.ஓம் யாகார மெய்ஞானம் கண்டாய் போற்றி,
87.ஓம் சிகார உள்ஞானம் கண்டாய் போற்றி,
88.ஓம் மாகார பிஜத்தை கண்டாய் போற்றி,
89.ஓம் உகார விகாரம் கண்டாய் போற்றி,
90.ஓம் லகார வகை லட்சமே போற்றி,
91.ஓம் சகார விதை மருத்துவமே போற்றி,
92.ஓம் விதியை வெல்லு வித்தையே போற்றி,
93.ஓம் சதியை தகர்க்கு சற்குருவே போற்றி,
94.ஓம் மழலை சொல்லின் மணியே போற்றி,
95.ஓம் விழலை புல்லின் மருந்தே போற்றி,
96.ஓம் ஓலையில் எழுதிய உபாத்தியா போற்றி,
97.ஓம் மூலையில் ஒளிக்கு முற்குருவே போற்றி,
98.ஓம் வீணை மீட்டிய வித்தகா போற்றி,
99.ஓம் நாதத்தால் குன்றை கரைத்தவா போற்றி,
100.ஓம் நானையருக்க வைத்தவா போற்றி,
101.ஓம் கீதத்தால் ராவணனை யடக்கியவா போற்றி,
102.ஓம் வாதத்தில் வேதம் கண்டவா போற்றி,
103.ஓம் பாதத்தில் வேதம் கண்டவா போற்றி,
104.ஓம் வணங்கிடவே மனதையீவாய் போற்றி,
105.ஓம் குணங்காதிருக்க யருள்வாய் போற்றி,
106.ஓம் எண்ணுளம் வொளியாய் இருப்பாய் போற்றி,
107.ஓம் கண்ணொளியாக நிற்பாய் போற்றி,
108.ஓம் போற்றி அகத்திய குருவே போற்றி போற்றி.
-நன்றி
சாது சுப்பிரமணி அவர்கள்
ஸ்ரீ நகுலீஸ்வரர் ஆலய மஹா லிங்க பிரதிஷ்டை விழா
அன்பு சார் இறை அன்பர்களே .பல யுகங்களாக இந்த பாரத தேசம் இந்த உலகத்திற்கே ஆன்மீக மையமாய் விளங்கி தர்மத்தின் பிரதான பூமியாய் இந்த பாரத தேசம் விளங்கி வருகிறது . தமிழகம் முழுவதும் கோயில் இல்லாத ஊர்களே இல்லை என்னும் நிலையில் நம் முன்னோர்கள் பல லக்ஷ கணக்கான கோவில்களை உருவாக்கி நம் சந்ததிகள் வலிமையோடும் இறைத்தன்மையோடும் வளமோடு வாழ கோவில்களை நிர்மாணித்தனர் . மன்னர்களின் ஆட்சிக்கு பின்னர் இந்த பாரத தேசம் வலிமை குன்றி இந்து சமுதாயமும் ஆலயங்களும் அழிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது வியக்க வைக்கும் வனசாஸ்திரமும் . பிறவி அறுக்கும் யோக சாஸ்திரமும் நமக்கு கோவில்கள் மூலமாகவே கால காலமாய் நமக்கு உணர்த்தப்பட்டுவருகிறது . சூரியன் வழிபட கோவில் என்று தமிழகத்தில் பலகோவில்கள் உண்டு .அதில் சூரிய ஒளி லிங்கத்தில் விழும் வைபவம் ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் வானில் சூரியனின் கதிர்கள் எந்த நாளில் எந்த நேர்கோட்டில் வரும் என்பதை கணித்து அதற்கான இடத்தை தெறிந்து ஆலயம் அமைத்தவர்கள் நம் முன்னோர். உடலில் குண்டலினியின் வடிவத்தை கோவில்களாக வடித்து அங்கும் மூல லிங்கத்தில் குண்டலினி எழும் காந்த அலைகளை உண்டாக்கும் லிங்க வடிவங்களை அமைத்து நாம் நலமடைய ஆலயங்களை செய்தவர்கள் .நம் முன்னோர்கள் .
ஆனால் இன்று என்ன நடக்கிறது . சித்தர்களின் அறிவியலால் உண்டான ஆலயங்கள் சிதறி கிடக்கிறது . பல கற்கோவில்கள் இன்று மண்மூடி கிடக்கிறது . இந்த உலகுக்கே தர்ம நெறிகளை போதித்த இந்த அற்புத ஆலயங்கள் அழிவை நோக்கி சென்று கொண்டு இருக்கிறது .இறை அன்பர்களே இந்த தேசம் இன்று வாழ்கிறது என்றால் இந்த தேசத்தின் தர்மத்தாலும் நம் ஆலயங்களின் அறிவியலால் மட்டுமே என்பதை நினைவு கூறுங்கள் .
இனி .. இந்துக்களாகிய நாம் புதிய ஆலயங்களை தயவு செய்து செய்ய வேண்டாம். இருக்கின்ற பழைய ஆலயங்களை புதுப்பிக்கும் பணியை தொடங்குங்கள் .தமிழகம் முழுவது சிதறிக்கிடக்கும் லிங்கங்களையும் அழிந்த கோவில்களின் சிலைகளையும் சிறு குடிசை அமைத்தாவது காப்பாற்றுங்கள் . எந்த கோவில்களின் அறிவியலால் இந்த பாரத தேசம் உலகை வாழவைத்து கொண்டு இருக்கிறதோ அந்த ஆலயங்களை வாழவைக்க அனைவரும் ஒன்று சேருங்கள் .
உங்களின் ஒவ்வொருவரின் கரங்களிலும் ஒரு செங்கல் கொடுத்தால் கூட இந்த தேசத்தில் அழிவடைந்த ஆலயங்களே இருக்காது .உங்களின் பிறந்த நாளில் ஏதேனும் ஒரு ஆலயத்தின் திருப்பணிக்கு கொடுத்து கொண்டாடுங்கள் .60 ஆண்டு நிறைவு விழா கொண்டாடும் இந்த தேசத்து பெரியோர்களே . சிறிய ஆலயத்தை சீரமைத்து ஈசனின் நெஞ்சில் இடம் பெறுங்கள் .அந்த புண்ணியம் உங்கள் சந்ததியாரை காக்கும் வீதியிலும் குளங்களிலும் வயல்வெளியில் என பல ஆயிரம் லிங்கங்கள் மீண்டும் உங்களால் புத்துயிர் பெற காத்துக்கிடக்கின்றன . பல ஆண்டுகளாய் சிதறிய லிங்கங்களை எல்லாம் எம் ஆதி குரு அகத்தியரின் அருளோடு புனரமைத்து வருகிறேன் .
அகத்திய கிருபா என் அமைப்பாகும்
நாளை மறுதினம் பஞ்ச பாண்டவர்களில் நகுநாளால் பூஜிக்க பட்ட லிங்கம் புனரமைக்க பட இருக்கிறது . வாருங்கள் . தமிழகத்தில் சிதிலம் கொண்ட கோவில்களே இல்லை என்னும் நிலையை கொண்டு வருவோம் . இந்த தேசத்து மக்கள் எல்லாம் நலமடைய நம் கோவில்களை சிதைவில் இருந்து மீட்போம் .நம் சந்ததிகள்வாழ ஆலயங்களை காப்போம் .இறைவா இந்த தேசம் விழிப்படையட்டும் . எம் மக்கள் இறை உணரட்டும். சிதிலமான ஆலயங்கள் எல்லாம் உன் அளவற்ற கருணையினால் புனரமைக்க படட்டும் . உலகம் அமைதி பெறட்டும் .மகா குரு அகத்தியரே உன் வரவு மீண்டும் நிகழட்டும் . வாருங்கள் இறை கொண்ட ஆலயம் காப்போம் .
திருவண்ணாமலையில் குகை நமசிவாயர் பெருமானுக்கு குருபூஜை
நமசிவாயர் பக்திப் பாரம்பரியத்துடன் வளர்ந்தார். இவர் குழந்தையாக இருக்கும் காலத்தில் இருந்தே ஈசன் ஆட்கொண்டு விட்டார். கல்வி, கேள்விகளில் சிறந்து விளங்கினார். உரிய பருவம் வரும்போது திருவண்ணாமலை அண்ணாமலையாரிடம் இருந்து அழைப்பு வந்தது. ஞான குருவாக நீ விளங்குவதற்கு இங்கேயே தங்கி இருத்தல் கூடாது. உடனே திருவண்ணாமலை புறப்படு. தாமதிக்காதே என்று ஒரு நாள் நமசிவாயரின் கனவில் தோன்றி அவருக்கு உத்தரவிட்டார் அண்ணாமலையார். கனவில் இருந்து விழித்தெழுந்தார். ஆனந்தம் கொண்டார். தன்னை வழிநடத்தும் ஈசனை வணங்கினார். திருவண்ணாமலை ÷க்ஷத்திரத்தைத் தான் தரிசிக்கும் நாள் எந்நாளோ என்று ஆவலுடன் இருந்தார். ஈசன் உத்தரவை நிறைவேற்றுவதற்காக அடுத்த நாளே திருவண்ணாமலை நோக்கித் தன் யாத்திரையைத் தொடங்கினார் நமசிவாயர். சிவனருள் பெற்ற இந்த சீலரின் மகத்துவம் புரிந்த சில அடியார்களும், திருவண்ணாமலை என்கிற சித்தர் பூமியில் தவம் இருந்து சிவன் அருள் பெறுவோம் என்கிற வைராக்கியத்துடன் நமசிவாயரைத் தொடர்ந்து சென்றனர். பல கிராமங்களைக் கடந்து பயணித்த அவர்கள் ஒரு கிராமத்தை அடைந்தனர். நமசிவாயரின் சித்து திறமைகளை வெளிக்கொணர ஈசன் விரும்பினான் போலும். அந்த கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் முகப்பில் வாழைமரம், தோரணம் கட்டப்பட்டு மங்கலகரமாக இருந்தது. நமசிவாயருடன் சென்ற அடியார்கள் ஆர்வத்துடன் விசாரித்தபோது அந்த வீட்டில் திருமணம் அப்போதுதான் முடிந்ததாகத் தகவல் சொன்னார்கள். முகம் நிறைய தேஜஸோடு, நெற்றியிலும் உடலிலும் திருநீறு பூசிக் கொண்டு, சிவப் பழமாக ஒரு தவசீலர் தன் அடியார் கூட்டத்துடன் திருவண்ணாமலை சென்று கொண்டிருக்கிறார் என்கிற தகவலை அறிந்த திருமண வீட்டுக்குச் சொந்தக்காரர், வீதிக்கு வந்து நமசிவாயரின் திருப்பாதங்களில் விழுந்து பணிந்தார். புன்னகைத்த நமசிவாயர் அவரை ஆசிர்வதித்து, திருநீறு கொடுத்தார். விபூதியைத் தன் நெற்றியில் அணிந்து கொண்ட அந்த வீட்டுத் தலைவர், நமசிவாயரைப் பார்த்து, சிவனருட் செல்வரே.... இப்போது தான் என் இல்லத்தில் திருமணம் நிகழ்ந்துள்ளது. தாங்கள் என் வீட்டுக்கு எழுந்தருளி, எல்லோருக்கும் திருநீறு தந்து ஆசிர்வதிக்க வேண்டும். மணமக்கள் வாழ்வாங்கு வாழ உங்களின் ஆசி வேண்டும் என்று கெஞ்சும் முகத்துடன் வேண்டுகோள் வைத்தார்.
எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்த நமசிவாயரும், அவரது வேண்டுகோள்படி, திருமண வீட்டுக்குள் நுழைந்தார். அங்கு இருந்த அனைவருக்கும் திருநீறு கொடுத்து விட்டு, சிவ நாமம் முழங்கிக் கொண்டு வெளியே வந்தார். அடுத்த கணம் நடந்த செயல், அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது. திருமண வீடு திடுமெனத் தீப்பற்றி எரிந்தது. என்ன சாபமோ தெரியவில்லை! வீட்டுக்குள் இருந்த மணமக்கள் உட்பட அனைவரும் அடித்துப் பிடித்து வெளியே ஓடி வந்தனர். அவர்களில் ஒருவன், இதோ... இந்த சாமியார் கொடுத்த திருநீறினால்தான் வீடு தீப்பற்றி எரிந்தது என்று கூற ஒட்டுமொத்த கூட்டமும் சேர்ந்து, நமசிவாயரைத் திட்டித் தீர்த்தது. மனம் நொந்த நமசிவாயர், அதே இடத்தில் அமர்ந்து சிவ தியானத்தில் ஈடுபட்டார். கயிலைவாசனே... நான் என்ன தவறு செய்தேன்? ஏன் எனக்கு இப்படி ஒரு அவப்பெயர் வாங்கித் தருகிறாய்? இவர்கள் என்னை மட்டுமா அவமதிக்கிறார்கள்? உன்னையும் சேர்த்து அல்லவா அவமதிக்கிறார்கள்? இந்த பழியும் பாவமும் உனக்கும் தானே வந்து சேரும்? ஈசா... கருணைக் கடலே... கண் திறந்து பார்க்க மாட்டாயா? என்று கண்ணீர் மல்க பிரார்த்திக்க... அடுத்த விநாடியே - எரிந்து போன வீடு, பழைய நிலைமையை அடைந்தது. சற்று நேரத்துக்கு முன் அந்த வீடு, தீயினால் பாதிக்கப்பட்டதற்கு உண்டான எந்த ஒரு சுவடும் இல்லை. திருமண வீட்டில் இருந்தவர்கள் மீண்டும் கலகலப்பானார்கள். சுற்றிலும் நின்று இதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் திக்பிரமை அடைந்தனர்.
ஆஹா.... இவர் சாதாரணப்பட்டவர் இல்லை. சிவபெருமானே இவரது உருவில் வந்திருக்கிறார். நம்மை எல்லாம் ஆசிர்வதித்திருக்கிறார். இவரை எல்லோரும் நமஸ்கரியுங்கள் என்று ஊர்க்காரர்கள் பரவசம் மேலிடச் சொல்லி, விழுந்து வணங்கினார்கள். கூனிக் குறுகி வெளியே நடந்தார் நமசிவாயர். தன்னை ஈசனோடு ஒப்பிட்டுப் பேசியது அவருக்குப் பிடிக்கவில்லை. இனி நான் எவர் வீட்டுக்குள்ளும் நுழைய மாட்டேன் என்று ஆக்ரோஷமாக ஒரு சபதம் செய்து விட்டு, யாத்திரையைத் தொடங்கினார். திருவண்ணாமலை நோக்கி வந்த அவர் வழியெங்கும் தென்பட்ட பக்தர்களை ஆசிர்வதித்தார். பலரது பிணிகளைத் தீர்த்தார். எண்ணற்ற ஸித்து விளையாடல்களை நிகழ்த்திக் கொண்டே வந்தார். பூந்தமல்லியை அடைந்த அவர்கள் நமசிவாயரிடம் இருந்த சிவலிங்கத்திற்கு பூஜை செய்வதற்காக அருகில் உள்ள தோட்டங்களுக்குச் சென்று மணம் வீசும் மலர்களைப் பறிக்க ஆரம்பித்தனர். இந்த நிகழ்வு அனைத்தையும் பார்த்துக் கொண்டிருந்த ஊர் மக்கள் தங்கள் ஊரில் உள்ள ஆலய இறைவனுக்கு கொஞ்சம் கூட பூக்களை வைக்காமல் அனைத்தையும் பறித்து விட்ட சிவனடியார்களைப் பற்றி ஊர்த் தலைவரிடம் சென்று முறையிட்டனர். அவரும் நமசிவாயர் இருக்கும் இடம் நோக்கி விரைந்து வந்தார்.
நமசிவாயர் அப்போது சிவ பூஜையில் திளைத்திருந்தார். தங்களை மறந்து சிவ சகஸ்ரநாமத்தை துதித்துக் கொண்டிருந்தனர் அடியார்கள். நேராக நமசிவாயரிடம் வந்த ஊர்த் தலைவர், ஐயா... ஒரு நிமிடம்... என் கேள்விக்குப் பதில் சொல்லி விட்டு உங்கள் பூஜையைத் தொடருங்கள் என்றார். ஊர்த் தலைவரைப் பார்த்துப் புன்னகைத்த நமசிவாயர், கேளுங்கள்... என்ன உமது கேள்வி? என்றார். கிராமத்தில் உள்ள ஆலய பூஜைக்காக வளர்க்கப்பட்டிருந்த அனைத்து பூச்செடிகளில் இருந்தும் உம் ஆட்கள் அனுமதியே இல்லாமல் மலர்களைப் பறித்துக் கொண்டு போய் விட்டார்கள். எம் ஆலய சிவனுக்கு அணிவிப்பதற்குப் பூக்களே இல்லை. இது நியாயமா? என்று கோபம் கொப்பளிக்கக் கேட்டார். அவரைச் சுற்றி நின்றிருந்த ஊர்மக்கள் நமசிவாயர் சொல்லப் போகும் பதிலுக்காகக் காத்திருந்தனர். எல்லாம் சிவனே... நந்தவனத்தில் பூக்கும் பூக்கள் இறைவனுக்கு உரியவை. உங்கள் ஆலய இறைவனுக்கும் அவை சூட்டப்பட்டுள்ளன. எமது பூஜைக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன என்றார் நிதானமாக. உமது பூஜைக்கு எமது கிராமத்து நந்தவனத்தில் இருந்து பறிக்கப்பட்ட பூக்கள் பயன்படுத்தப்பட்டது பற்றித்தான் இப்போது கேள்வியே. உமது சிவலிங்க பூஜைக்கு இந்தப் பூக்கள் அணிவிக்கப்படுவதற்கு எம் ஆலய இறைவன் ஒப்புக் கொள்ள மாட்டான். நீங்கள் தவறு இழைத்து விட்டீர்கள் என்றார் ஊர்த் தலைவர். எங்கும் நிறைந்தவன், எத்தகைய பூஜையையும் ஏற்றுக் கொள்வான். உங்கள் ஊர் சிவன், எம் சிவன் என்று பிரித்துப் பார்க்க வேண்டாம். இதெல்லாம் பேச்சுக்கு நன்றாக இருக்கும். சரி, நீங்கள் சொல்வது உண்மையானால் - அதாவது உமது சிவ பூஜைக்கு எம் ஆலய நந்தவனத்துப் பூக்கள் பயன்படுத்தியதை எம் கிராமத்து இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், உமது செயலை நான் ஏற்றுக் கொள்கிறேன். வணங்குகிறேன் என்றார் ஊர்த் தலைவர். அப்படியே... உம் இறைவன் இதை ஏற்றுக் கொண்டதற்கு அடையாளமாக என்ன செய்ய வேண்டும் என்று கேட்டார் நமசிவாயர். இதோ, எம் ஆலய இறைவன் திருமேனியில் ஒரு மலர் மாலை இருக்கிறதே... அந்த மலர்மாலை இங்குள்ள பலரும் காணுமாறு தானாக வந்து உம் கழுத்தில் விழ வேண்டும். அப்படி நிகழ்ந்து விட்டால், உமது பூஜை முறை அனைத்தும் அந்த சிவனாரின் ஒப்புதலோடுதான் நடைபெறுகிறது என்பதை நான்மனமார ஏற்றுக் கொள்கிறேன் என்றார். ஊர்மக்கள் அனைவரும் பெரும் குரல் எழுப்பி இதை ஆமோதித்தனர்.
குருநாதரின் பதில் இதற்கு என்னவோ? என்கிற குழப்பத்துடன் அடியார்கள் நமசிவாயரைப் பார்க்க, அந்த மகானும் இதற்கு ஒப்புக் கொண்டார். அப்படியே ஆகட்டும். எம் கூற்றும் செயலும் உண்மை என்பதை இதோ, இந்த இறைவன் ஏற்றுக் கொண்டு விட்டான் என்றால், நீர் சொன்னது அப்படியே நடக்கும் என்று கண்களை மூடி சிவ தியானம் செய்யலானார் நமசிவாயர். இந்த நேரம் பார்த்து ஆலயத்தில் உள்ள அர்ச்சகர்கள் சிலர், இறைவன் திருமேனியில் இருந்த மலர்மாலையில் ஒரு உறுதியான கயிற்றைப் பிணைத்து, அதன் மறுமுனையை ஒருவரிடம் கொடுத்து, இறுக்கிப் பிடித்திருக்கச் சொன்னார்கள். சிவன் கழுத்தில் இருக்கும் மாலை எப்படி நமசிவாயர் கழுத்தில் போய் விழும்? அதையும்தான் பார்த்து விடுவோம் என்று கிண்டலாகப் பேசியபடி நடக்கின்ற நிகழ்வை வேடிக்கை பார்ப்பதற்காகத் தயாரானார்கள் ஊர்க்காரர்கள். அடியார்கள் அனைவரும் மனதுக்குள் சிவ நாமம் துதித்தபடி அமைதியாக இருந்தனர். நேரம் ஓடிக் கொண்டே இருந்தது. குகை நமசிவாயர் ஈசனின் பஞ்சாட்சர மந்திரத்தை மனமுருக ஜபித்தபடி லிங்கத் திருமேனியின் முன் கரம் கூப்பியபடி நின்றிருந்தார். தன்னையே கதி என்று நம்பி வந்தவர்களை அந்த சிவபெருமான் ஒரு போதும் ஏமாற்ற மாட்டார். அதுதான் நமசிவாயரின் வாழ்க்கையிலும் நடந்தது. ஒரு சில நொடிகளில் இறைவனின் கழுத்தில் இருந்த மாலையைப் பிடித்துக்கொண்டிருந்தவர்களின் பிடி தளர்ந்து கயிறு அறுபட்டு, மலர்மாலை நமசிவாயரின் கழுத்தில் வந்து விழுந்தது. நமசிவாயரின் கண்கள் கலங்கி விட்டன. கைகளை உயர்த்தி ஈசனுக்கு நன்றி சொன்னார். உடன் இருந்த அடியார்கள் அனைவரும், சிவகோஷம் எழுப்பினார்கள். ஊர்த்தலைவர் நமசிவாயரின் கால்களில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டினார். அனைவரையும் ஆசிர்வதித்து விட்டு, அங்கிருந்து யாத்திரையைத் துவக்கினார். திருவண்ணாமலையை அடைந்த நமசிவாயாருக்கு தமிழ்ப் புலமையைத் தந்து அருளினான் ஈசன். நல்ல கவிகளை இயற்றும் புலமையும், வெண்பா பாடுவதில் வல்லமையையும் வழங்கினான். அண்ணாமலையாரை மனதார தரிசிப்பதும், பூஜைக்குப் பூமாலைகள் கட்டித் தருவதும் நமசிவாயரின் அன்றாடப் பணிகள். இவ்வாறு ஈசனுக்குப் பணிவிடைகள் செய்து வந்த நமசிவாயர் மலை அடிவார குகைக்குள் சென்று தங்கினார். அன்று முதல் குகை நமசிவாயர் என அழைக்கப்படுகிறார். இவருடைய சீடர்களுள் விருபாட்சி தேவரும், குரு நமசிவாயரும் முக்கியமானவர்கள் ஆவர்.
இவ்வாறு அண்ணாமலையாரின் அற்புதங்களை அனுதினமும் பருகியபடி எண்ணற்ற சித்து விளையாடல்கள் மூலம் பலருக்கும் அருள்புரிந்து வந்த குகை நமசிவாயர் ஒரு கட்டத்தில், தான் இதுவரை வாழ்ந்தது போதும் என்று தீர்மானித்தார். எனவே, அண்ணாமலையாரிடம் சென்று தான் ஜீவசமாதி ஆக விரும்புவதாகவும், தன்னை ஏற்றுக் கொள்ளுமாறும் வேண்டினார். அதற்கு அண்ணாமலையார், நமசிவாயா..... எல்லாம் சரி தான். உன் காலத்துக்குப் பிறகு பூஜை செய்வதற்கு ஒரு வாரிசு வேண்டாமா? திருமணம் செய்து கொள்ளாமல் பிரம்மசாரியாகவே இருந்து காலம் தள்ளிவிட்டாய் என்று சொன்னவர், நமசிவாயர் திருமணம் செய்து கொள்வதற்குத் தானே ஒரு ஏற்பாடு செய்தார். ஸ்ரீசைலத்திலிருந்து குகை நமசிவாயரின் மாமன் மகளை வரவழைத்து இருவருக்கும் திருமணம் நடத்தி வைத்தார். சில காலத்திற்கு பிறகு முதல் வாரிசு பிறந்தது. ஈசனின் விருப்பப்படி வாரிசு பிறந்தாயிற்றே! எனவே அண்ணாமலையாரின் ஒப்புதலின் பேரில் தான் வாழ்ந்த குகையிலேயே ஜீவசமாதி அடைந்தார். இவருக்கு அவரது பரம்பரையில் வந்தவர்கள் தொடர்ந்து வழிபாடு நடத்தி வருகிறார்கள். திருவண்ணாமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணாமலையாரின் மேல் ஏராளமான பாடல்கள் எழுதி இருக்கிறார் குகை நமசிவாயர். அருணகிரி அந்தாதி, சாரப் பிரபந்தம், திருவருணை தனி வெண்பா, அண்ணாமலை வெண்பா போன்றவைக் குறிப்பிடத்தக்கவை.
ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் வளர்பிறை சதுர்த்தி திதி பூராட நட்சத்திரம் கூடிய தினத்தில் கும்ப லக்னத்தில் குருபூஜை நடந்து வருகிறது. அன்றைய தினத்தில் குகை நமசிவாயர் தன் கைப்பட எழுதிய சில ஓலைச்சுவடிகளை குருபூஜையின் போது வைத்து வணங்குகிறார்கள். அருணாச்சலேஸ்வரரை தரிசிக்க வரும் பக்தர்கள் குகை நமசிவாயரையும் தரிசித்து விட்டுச் செல்கிறார்கள். தன்னை தரிசிக்க வரும் பக்தர்களிடம் குகை நமசிவாயர் கூறுவது; அண்ணாமலையாரின் பாதத்தை சரண் அடைந்து விடு. எத்தகைய பாவம் இருந்தாலும் சரி... கர்மா உன்னைத் துரத்தினாலும் சரி... நீ புனிதம் அடைந்து விடுவாய். திருவண்ணாமலைக்குச் சென்றால் அண்ணாமலையாரின் திருவருளையும், குகை நமசிவாயரின் குருவருளையும் பெறுங்கள். ஆனந்த வாழ்வு பெற இவர்கள் இருவரும் உங்களை ஆசிர்வதிப்பார்கள்.
-நன்றி
செவ்வாய், 21 நவம்பர், 2017
அருள்சித்தர் இராமதேவர் ஆன்மபீட நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழா
மெய்யன்பு கொண்ட அடியார் பெருமக்கள் அனைவரும் இதனையே நேரடி அழைப்பாக ஏற்று மகா கும்பாபிஷேக விழாவிற்கு அன்புடன் அழைக்கின்றோம்.
அருள் சித்தர் இராமதேவர் ஆன்ம பீடம் அறக்கட்டளை
பதிவு எண்.21/BK4/13
5/57-13.சற்குரு ஸ்ரீ பதஞ்சலி புரம்.
அரிட்டாபட்டி. மேலூர் (TK)
மதுரை மாவட்டம்.
தொடர்பிற்கு..7598542620.9843223932
திங்கள், 20 நவம்பர், 2017
உலக நன்மைக்காக அகத்தியர் ஆணையை ஏற்று ஆன்ம மக்களான உங்களிடம் ஜீவ அமிர்தத்தின் வேண்டுகோள்
ஜீவ அமிர்தம் மாத இதழ் சித்தர்களின் பேரருளால் இயங்குகின்ற ஓர் உண்மையான ஆன்ம அருள் ஊடகம் என்பது தாங்கள் அறிந்ததே. அகத்திய பெருமானின் திருவருளால் கிடைக்கப்பட்ட செய்தி. "மானிடர்கள் சுயநலத்திலே வாழ்வதால், மனிதர்களின் கோர மனத்தால், இயற்கை கொடுங்கோபம் கொண்டுள்ளது. மேலும் மக்களை சிந்திக்காமல், இயற்கை பாதுகாக்காமல் அரசும் ஆள்பவர்களும், நீதியை மறந்து மக்களுக்கு உகந்த சட்டம் ஒழுங்கில்லாமல், அப்பாவி மக்கள் இங்கு காப்பாற்றப் படவில்லை. இயற்கை அன்னை கடும் கோபத்திற்கு ஆளாகி, இயற்கை சீற்றத்துடன் பொங்கி இருக்கின்றது. ஆதலால் இதன் விளைவாக இந்தியா மற்றும் சில நாடுகள் நீராலும், நிலத்தாலும் சீற்றங்கள் ஏற்பட்டு சேதம் நிகழ இருக்கின்றது என்பது உண்மையான செய்தி. மேலும் உலக நாடுகளுக்கிடையே உலகப்போர் மூளும் அபாயமும் இருக்கின்றது, இதனால் பல்லுயிர்கள் பாதிக்கக்கூடும்.
இந்த கொடும் நிகழ்வுகள் மூலமாக அப்பாவி மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது. மக்களிடம் பிரிவினை பார்க்காமல்
"யாதும் ஊரே, யாவரும் கேளிர்", "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க", என்ற ஆன்ம உணர்வும், இயற்கையில் ஆன்ம உணர்வும் நிறைவாகப் பெற்ற தமிழர்களான நாம், இயற்கை அன்னையை வேண்டி, முருகப்பெருமானை துதித்து, அகத்திய மாமுனிவரை வணங்கி, குடும்பம் குடும்பமாக உற்றார், உறவுகள், நட்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அகலில் நெய்தீபம் ஏற்றி வெட்டவெளியில் வைத்து மனமுருகி வேண்டுங்கள். அதிகமான பிரபஞ்ச சக்தி இயங்கும் இடம் நம் தமிழகம் மட்டுமே என்பதே உறுதி. சித்தர்களின் அருளால் தமிழகம் காப்பாற்றப்படும் என்பதும் உறுதி. நம் சித்தர்களுக்கு மதம் கிடையாது, மனிதம் மட்டுமே! பிற மதம் சார்ந்தவர்கள், அவரவர் வணங்கும் இறைவனை வேண்டி விளக்கேற்றுங்கள். இந்த உலகமக்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.
குறிப்பு : நல்ல காரியங்களுக்கு நேரம் காலம் கிடையாது. எந்த நேரத்திலும் இந்த அற்புதமான செயலை செய்யலாம்.
நன்றி
இறை சேவையில்
ஜீவ அமிர்தம் மாத இதழ்
திங்கள், 13 நவம்பர், 2017
ஜேஷ்டாதேவி பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு
இறைவனின் கருணையால் யாங்கள் அடிக்கடி கூறுவது போல பரம்பொருளின் வெவ்வேறு வடிவங்கள் விதவிதமான தெய்வ நாமத்தில் விளங்கி மனிதர்களின் தேவைக்கு ஏற்ப அருளைத் தருகிறது. ஒரே மனிதன் தந்தையாக, சகோதரனாக, கணவனாக, அலுவலகத்தில் அதிகாரியாக எப்படியெல்லாம் உருமாற்றம் அடைகிறானோ, அப்படித்தான் பரம்பொருள் விதவிதமான வடிவங்களில் மனிதர்களுக்கு அருளை வாரி வழங்குகிறது. இஃதொப்ப நிலையிலே துயில்(தூக்கம்) தொடர்பான பிரச்சினைகள், அமைதியற்ற மனம் கொண்டவர்கள் நல்ல முறையிலே வழிபட வேண்டிய தெய்வ வடிவம் இன்னவன் வினவிய தேவியின் வடிவமாகும். இந்த அளவிற்கு இதனைப் புரிந்து கொண்டு இந்த வழிபாட்டில் கவனம் செலுத்தினால் நன்மையைத் தரும்.
தல வரலாறு
அம்மன் :சாந்த நாயகி
தல விருட்சம்: வில்வம்
ஊர் :திருக்கொண்டீஸ்வரம்
இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இங்குள்ள லிங்கத்தில் பசுவின் கொம்பால் ஏற்பட்ட பிளவை இன்றும் காணலாம். பிராகாரத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, சுப்பிரமணியர், மகாலட்சுமி, சண்டிகேஸ்வரர், நவக்கிரகங்கள், வைரவர், திருநாவுக்கரசர் சன்னதிகளும் உள்ளன. காமதேனு வழிபட்ட தலம்.
"கொண்டி' என்றால் "துஷ்ட மாடு' என்று பொருள். கொண்டி வழிபட்டதால் இத்தலம் "கொண்டீஸ்வரம்' என அழைக்கப்படுகிறது. அம்பாள் சன்னதிக்கும், சுவாமி சன்னதிக்கும் இடையில் வெள்ளைக்கல்லால் செய்யப்பட்ட மிகப்பழமையான "ஜேஷ்டாதேவி' அருள்பாலிக்கிறாள். இத்தலத்தில் ஜேஷ்டாதேவி அனுக்கிரக தேவதையாக இருக்கிறாள்.
முகவரி:
அருள்மிகு சாந்தநாயகி சமேத பசுபதீஸ்வரர்
திருக்கண்டீஸ்வரம். (வழி) சன்னாநல்லூர்,
நன்னிலம் ஆர்எம்எஸ்,
திருவாரூர்- 610 001.
போன் 04366 228 033
தில ஹோமம் செய்வதினால் வரும் சிறப்பு பலன் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு
இறைவனின் கருணையாலே இது குறித்து பலமுறை கூறியிருக்கிறோம். சுருக்கமாகக் கூறுகிறோமப்பா. ஏற்கனவே கேட்ட மனிதனிடமிருந்து நீ அறிந்து கொள். இஃதொப்ப நாங்கள் கூறினால், உடனடியாக அடுத்த வினா வரும், மாற்று மதத்தவர்கள் என்ன செய்வது ? என்று. எம்மைப் பொறுத்தவரை அவரவர் உணர்ந்த வழிபாட்டினை செய்தால் அது இறை வழிபாட்டிற்கு எந்தவிதமான பங்கத்தையும் தராது என்பது யாம் கூறுகின்ற கருத்தாகும். இருந்தாலும் இந்த மார்க்கத்தில் பிறந்ததால் கூறுகிறோம். இஃதொப்ப தில தர்ப்பணம் அல்லது தில ஹோமம் என்பது அஃதொப்ப ஒரு மனிதனின் பூர்வீக பாவங்களைக் குறைப்பதற்கும், அந்த மனிதன் பிறந்த குடும்பத்திலே தொடர்ந்து வரும் சாபங்களையும், தோஷங்களையும் நீக்குவதற்கும் பேருதவியாக இருக்கும். இஃதோடு பைரவர் வழிபாடும், கூடுதலாக பலவிதமான தர்ம காரியங்களும் செய்தால் இந்த தில தர்ப்பணத்தின் பலன் சடுதியில் ஒவ்வொரு மனிதனுக்கும் இறைவனருளால் கிட்டும்.
குரு சண்டாளம் (குரு எதிர்ப்பு) பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு
வியாழக் கிழமைகளில் விரதம் இருந்து,குரு ஸ்தலம்,குரு தட்சிணாமூர்த்திக்கு வழிபாடு செய்தல் நலம்.குருவாக இருக்கும் ஏழை மனிதனுக்கு உதவி செய்வதும்,குரு தொடர்பான தொழில் செய்வோருக்கு முடிந்த உதவிகளை செய்வதும்,இந்த தோஷத்தில் இருந்து விடுதலை அளிக்கும்.
குரு ஸ்தலம்:
அருள்மிகு ஆபத்சகாயேசுவரர் கோயில்,ஆலங்குடி
குரு தொடர்பான தொழில்:
ஆசிரியர்,மடலாய குருமார்கள்
ஸ்ரீரங்கம் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு
பொதுவாகவே அரங்க ஸ்தலம் என்பது சுக்ரனுக்கு உகந்த ஸ்தலம் என்று கூறலாம். ஜாதகத்திலே சுக்ர பகவானின் அருள் குறைவாக இருக்கப் பெற்றவர்கள் சென்று வழிபட வேண்டிய ஸ்தலங்களில் ஸ்ரீரங்கமும் ஒன்று. எனவே அந்த ஸ்ரீரங்கம் மண் முழுவதுமே சுக்ரனின் ஆட்சி இருக்கிறது. அதனால்தான் அது ஆதிகாலத்தில் இருந்த நிலை நாளுக்கு நாள் மாறி, மாறி தற்காலத்திலே மிகப்பெரிய நகரமாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. அஃதொப்ப நிலையிலே அங்கு எந்த சன்னிதியிலே சென்று இறைவனின் எந்த வடிவத்தை வணங்கினாலும் கூட அது சுக்ர தோஷத்திற்கு பரிகாரமாக அமையும். எனவே மூலவரை வணங்கினாலும் வேறு உப சன்னிதியில் சென்று வழிபாடு செய்தாலும் கூட அது சுக்ரன் தொடர்பான தோஷங்களை நீக்கும். எனவே அங்குள்ள எல்லா வகை சன்னிதியிலும் ஒரு மனிதன் எந்த வகை பூஜை செய்தாலும் அதற்கு சுக்ர பரிகார பூஜை என்று பொதுவாக கொள்ளலாம். எனவே அந்த அடிப்படையில் எழுந்ததுதான் இன்னவன் விடுத்த வினா.
தண்டபாணி என்று சொல்லப்படுவதன் பொருள் பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு
எனவே பழனி முருகனிடம் தண்டம் ஆயுதமாக இருப்பதன் மர்மமே, பொதுவாக முருகனுக்கு எது ஆயுதம் ? வேல் ஆயுதம். அஃதொப்ப வேல், மனிதன் கையில் இருக்கின்ற வேல் அல்ல. இந்த வேல் ஆழமாக இருக்கும். அகலமாக இருக்கும். நீளமாக இருக்கும். குளுமையாக இருக்கும். இது ஞானவேல். அன்னை சக்தி தந்ததினால் சக்திவேல் என்றாலும் அது முழுக்க, முழுக்க ஞானத்தைத் தரக்கூடிய வேலாகும். இரத்தினவேல் என்றுகூட வேலிலே ஒருவகை இருக்கிறது. வைரவேலும் இருக்கிறது. சிலவகை தோஷங்களை வைரங்கள் போக்கும். சிலவகை தோஷங்களை வைரம் தரும். வைரவேல் தரிசனத்தைப் பார்த்தாலே மனிதர்களுக்கு சிலவகை தோஷங்கள் நீங்கும். சில முருக ஆலயங்களிலே வைரவேல் தரிசனம் என்பது இருக்கிறது. ஆக இந்த வேலானது ஞானத்தைக் குறிக்கிறது. இப்பொழுது இவள் கேட்டாளே, பாசத்திலிருந்து, பந்த்த்திலிருந்து, உலக மாயையிலிருந்து எவ்வாறு விடுபடுவது ? என்று. இவற்றையெல்லாம் அறுக்கின்ற ஆயுதம்தான் தண்டாயுதம்.
ஆக மனிதனுக்கு யார் எதிரி ? என்றால், புறத்தே இருக்கின்ற மனிதன் எதிரி அல்ல. அவன் மனதிலே விளையக்கூடிய களைகள், பதர்கள், தேவையற்ற எண்ணங்கள், சபலங்கள், கீழான எண்ணங்கள் – இவற்றையெல்லாம் விட்டுவிட முடியாமல் மனிதன் தவிக்கிறான், தடுமாறுகிறான். இவற்றையெல்லாம் அடித்து நொறுக்கக்கூடிய ஆயுதமே தண்டாயுதம், வேலாயுதம். இதுபோன்ற இறையுடன் இருக்கக்கூடிய ஆயுதம் அசுரர்களை அழிப்பதாக புராணங்கள் கூறுவதைக்கொண்டு, அசுரர்கள் என்றால் எங்கோ புறத்தே இருக்கிறார்கள். கோரப் பற்களோடும், மிகப்பெரிய பயமுறுத்தும் கண்களோடும் இருக்கிறார்கள். கருகரு என்று வருவார்கள். மனிதர்களை மிரட்டுவார்கள் என்று எண்ணுகிறார்கள். அந்த அசுரர்களைக்கூட மனிதர்கள் சமாளித்துவிடலாம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இருக்கின்றானே, பொறாமை எனும் அசுரன், காமம் எனும் அசுரன், சபலம் எனும் அசுரன், வேதனை எனும் அசுரன், விரக்தி எனும் அசுரன், கோபம் எனும் அசுரன் – இவற்றைதான் மனிதனால் விரட்ட முடியாது. இவற்றை விரட்டக்கூடிய ஆயுதம், தண்டாயுதம்.
அந்த தண்டு முதுகிலே மையப்பகுதியில் இருக்கும். அது முதுகுத்தண்டு. இஃதொப்ப தாமரையின் மையத்திலே இருக்கிறது. அது தாமரைத்தண்டு. தண்டு என்றாலே, பொதுவாக அதன் பொருள், மையம். அங்கே தண்டம் என்பது மனிதனிடம் இருக்கக்கூடிய எல்லாவகையான எதிரான குணங்களையும் நீக்கக்கூடிய ஒரு மையம். மனிதனுக்கு மையம் எது ? புருவ மத்தி. அந்த புருவ மத்தியை நோக்கி ஒரு மனிதன் சிந்தனை செய்தால், சர்வகாலமும் புருவ மத்தியை கவனித்துக்கொண்டே வந்தால் அவனுடைய சிந்தனை ஒழுங்குபடும், நேர்படும், நிரல்படும், உறுதிபடும். எனவே மனிதனுக்கு மையம் புருவ மத்தி. அங்கே தண்டு மையம். அந்த மையத்தை நோக்கி இவன் சென்றால் இவன் மையம் சரியாகும் என்பதன் பொருள்தான் தண்டாயுதமாகும்.
புதன், 1 நவம்பர், 2017
சதுரகிரி மகாலிங்க மலையில் அப்பன் மகாலிங்க பெருமானுக்கு அன்னாபிஷேகம்
படைக்கப்பட்ட உயிர்கள் எல்லாம் பசிதீர படியளக்கும் பரசிவ பெருமான் அப்பன் ஈசனை போற்றும் விதமாக ஐப்பசி மாத பௌர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
நட்சத்திரம் ,திதி தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் எல்லோருக்கும் பூலோக கைலாயமாம் சதுரகிரி மகா லிங்க மலையில் எல்லாம் வல்ல சித்தர் பெருமான்களின் ஆசிகள் பெரும் பாக்கியம் கிடைக்கும் ..!
வாழ்க வளமுடன் ! வளர்க அருளுடன் !
தொடர்புக்கு :9597376824
விஷ சுரம் தீர ஜீவ கருணை நாடியில் அகத்திய பெருமான் முக்கிய அறிவிப்பு

ஸ்ரீ மகா குரு அகஸ்திய பெருமானின் கருணை நாடியில் உலக மக்கள் நன்மைக்காகவும்,தற்போது தமிழகத்தில் பரவியிருக்கும் வைரஸ் கிருமிகளால் உண்டாகும் விஷ சுரமானது மேலும் பரவாமல் இருந்து உலக உயிர்கள் காப்பாற்றபட வேண்டி தஞ்சாவூரில் உள்ள புண்ணைநல்லூர் எனும் திவ்ய தலத்தில் வீற்றிருக்கும் அன்னை ஸ்ரீ மகா மாரியம்மனுக்கு 108 கலசங்களால் அபிஷேகமும் மற்றும் சுமங்கலி பூஜை தானமும் செய்ய ஸ்ரீ மகா குரு அகஸ்தியர் பணித்திருக்கிறார்.எதிர்வரும் வெள்ளிக்கிழமை 03-11-2017 அன்று காலை 8 மணி முதல் 12 மணி வரை 108 கலச பூஜை நிகழ உள்ளது.
உலக மக்கள் எல்லாம் தங்கள் பகுதியில் கோவில் கொண்டிருக்கும் ஸ்ரீ மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனை செய்து 108 தீபங்கள் ஏற்றி வழிபட்டால் தமிழகத்தில் நிலவும் உயிர் பலிகள் குறைந்து சாந்தி நிலவும்.இதைக் காணும் மாந்தர்கள்,சித்தர்வழி செல்வோர்,ஆன்மிக பெருமக்கள்,தாய் மார்கள் என அனைவரும் வழிபாடு செய்ய வேண்டுகின்றோம் .
ஸ்ரீ மகா மாரியின் அருளால் தமிழகம் நோயற்று வாழட்டும் .
புன்னைநல்லூர் மாரியம்மன் கோவில் வரலாறு
18 ம் நூற்றாண்டில் தஞ்சையை ஆண்ட மராட்டிய மன்னர் வெங்கோஜி ராவ் தான் இந்த கோவிலை கட்டினார். அதற்க்கு முன்பு புற்று வடிவில் தான் இந்த ஆலயம் இருந்தது. அம்மை மற்றும் தோல் சம்பந்தமான நோய்களை குணமாக்கும் சக்தி புன்னைநல்லூர் மாரியம்மனுக்கு உள்ளது.
ஒரு முறை வெங்கோஜி மகாராஜா சமயபுரம் மாரியம்மனை தரிசனம் செய்துவிட்டு திரும்பும் வழியில் ஓரிடத்தில் ஓய்வெடுத்த பொழுது கனவில் வந்த மாரியம்மன் தஞ்சையை அடுத்த ஒரு புன்னை மர காட்டில் தான் இருப்பதாக சொல்கிறார். உடனே அங்கு விரைந்த மன்னர் புன்னை காட்டில் ஒரு வெள்ளை எறும்பு புற்றை காண்கிறார் அந்த இடத்திலயே ஆலயம் எழுப்புகிறார்.
பின்பு ஆட்சி புரிந்த சரபோஜி மன்னரும் இந்த கோவிலை புனரமைத்தார். ஒரு முறை துலஜா ராஜாவின் மகளுக்கு கண் பார்வை இழந்த போது புன்னைநல்லூர் மாரியம்மனை வேண்டி பார்வை திரும்ப கிடைத்ததாக சொல்லபடுகிறது. சதாசிவ பிரம்மேந்திரர் இந்த கோவிலுக்கு வந்து புற்றில் மாரியம்மன் முக வடிவை அமைத்ததாகவும் ஸ்ரீசக்ரம் பதித்ததாகவும் சொல்லபடுகிறது.
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)




































