வியாழன், 30 நவம்பர், 2017

ஜீவநாடி கட்டளைப்படி சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் ஆலயத்தில் 1008 சக்திகள தீப விழா




அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் ஆலயத்தில்  வரும் 03.12.2017 அன்று1008 சக்திகள தீப விழா  நடை பெற உள்ளது.

உலக மக்களின் நன்மைக்காக  அட்ட வீரட்ட தலங்கள் மற்றும் பஞ்ச பூத தலங்களில் தீப வழிபாடு செய்ய வேண்டும். இதனால் இயற்கை சீற்றம் கணிசமாக  குறையும் என முருகப் பெருமான் ஜீவ அருள் நாடியில் உரைத்துள்ளார்கள்.

அதன்படி அட்ட வீரட்ட தலங்கள்,திருக்காளகஸ்தி,காஞ்சி  திருவண்ணாமலை மற்றும் திருவானைக்காவலில்  தீப வழிபாடு நடைபெற்றது. வருகிற 03.12.17 சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் ஆலயத்தில் நடைபெற  உள்ளது. அனைவரும் வருக.



தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும் ,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும்,புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு  புத்திரன் கிட்டும்,ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம்,அனைத்து குறைகளும் நீங்கும்,என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார்.

ஆகவே அனைவரும் கலந்து கொள்க.


சிதம்பரம் அருள்மிகு இளமையாக்கினார் தல வரலாறு


   மூலவர்             : திருப்புலீஸ்வரர்
அம்மன்/தாயார்  : திரிபுரசுந்தரி

சிவபெருமானின் நாட்டிய தரிசனம் காண விரும்பிய வியாக்ரபாதர், சிதம்பரம் வந்தார். இங்கிருந்த தீர்த்தக்கரையில் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டைசெய்து, பர்ணசாலை அமைத்து தவமிருந்தார். வியாக்ரபாதர், சிவனருளால் புலிக்கால் பெற்ற முனிவராவார். இவர் பூஜித்ததால் சிவனுக்கு “திருப்புலீஸ்வரர்’ என்றும், சிதம்பரத்திற்கு “திருப்புலீஸ்வரம்’ என்றும் பெயர் ஏற்பட்டது.


சிவனடியார் ஒருவர் அனைத்து சிவன் கோயில்களுக்கும் சென்று, விளக்கேற்றும் வழக்கமுடையவர். இறைவனின் சோதனையால் வறுமையில் வாடியபோதும், தன் சொத்துக்களை விற்றுத் தன் பணியைத் தொடர்ந்தார். வறுமை மிகுந்து திரி வாங்கவும் வழியில்லாமல் கணம்புல்லை திரியாக்கி தீபமேற்றி இறைவனை வழிபட்டார். எனவே இவர் கணம்புல்லர் என்று அழைக்கப்பட்டதோடு, 63 நாயன்மார்களில் ஒருவரானார்.


 திருநீலகண்டர் என்பது சிவனின் ஒரு பெயர். இவ்வூரில் மண்பாண்டத் தொழில் செய்த சிவபக்தர் ஒருவர், எப்போதும் இந்த பெயரை உச்சரித்து சிவனை வணங்கிக் கொண்டிருப்பார். இதனால், அவருக்கு இப்பெயரே அமைந்துவிட்டது. இவரும், மனைவி ரத்னாசலையும் சிவனடியார்களுக்கு திருவோடு செய்து தருவதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். ஒருசமயம் நீலகண்டர் வேறொரு பெண் வீட்டிற்கு சென்று வரவே, அவரது மனைவி “என்னை இனி தொடக்கூடாது. இது திருநீலகண்டத்தின் (சிவன்) மீது ஆணை!’ என்றாள். சிவன் மீது கொண்ட பக்தியால், அவர் மீதான சத்தியத்திற்கு கட்டுப்பட்டார் நீலகண்டர். மனைவியைத் தொடாமலேயே பல்லாண்டுகள் வாழ்ந்தார்.

இவரது பக்தியை உலகறியச் செய்வதற்காக சிவன், ஒரு அடியவர் வடிவில் நீலகண்டரிடம் சென்று ஒரு திருவோடைக் கொடுத்தார். “இது விலைமதிப்பற்றது. நான் காசி சென்று திரும்பி வந்து வாங்கிக்கொள்கிறேன்!’ என்று சொல்லிச் சென்றார். சிறிது நாள் கழித்து வந்து திருவோட்டை கேட்டார். நீலகண்டர் ஓடு இருந்த இடத்தில் பார்த்தபோது, காணவில்லை. வருந்திய பக்தர் தன்னை மன்னிக்கும்படி கேட்டும் சிவன் ஒப்புக்கொள்ளவில்லை. மனைவியுடன் தீர்த்தக்குளத்தில் மூழ்கி “திருவோடு தொலைந்துவிட்டது!’ என தில்லைவாழ் அந்தணர்கள் முன்னிலையில் சத்தியம் செய்து தரும்படி கேட்டார். மனைவியுடனான பிரச்னையை சொல்ல முடியாதவர், ஒரு குச்சியின் ஒரு பக்கத்தைப் பிடித்துக் கொண்டு, மறு முனையை மனைவியைப் பிடிக்கச் சொல்லி குளத்தில் இறங்குவதாகச் சொன்னார். சபையினர் ஒப்புக்கொள்ளவே அவ்வாறு செய்தார். அப்போது, அடியாராக வந்த சிவன், ரிஷபத்தின் அம்பிகையுடன் காட்சி தந்தார். திருநீலகண்டர் தம்பதிக்கு முதுமை நீக்கி, இளமையைக் கொடுத்தார். நீலகண்டரை நாயன்மார்களில் ஒருவராக பதவி கொடுத்தார். இதனால், சுவாமிக்கும் இளமையாக்கினார் என்ற பெயர் ஏற்பட்டது. தில்லைவாழ் அந்தணர்களுக்கு அடுத்து, இவரே முதல் நாயனாராக போற்றப்படுகிறார்.

 இக்கோயில் எதிரே உள்ள திருக்குளம், அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான திருநீலகண்ட நாயனார் மற்றும் அவரது மனைவியும் குளித்து எழுந்த போது முதுமை நீங்கி இளமை பெற்றதால் இளமையாக்கினார் கோயில் குளம் என்ற பெயர் பெற்றது.

தை மாதம் விசாகம் நட்சத்திரத்தில் திருநீலகண்டருக்கு சிவன் அருள் செய்த விழா நடக்கும். இவ்விழாவில் சிவன் யோகி வடிவில் நீலகண்டருக்கு ஓடு கொடுத்தல், தீர்த்தக்கரையில் சத்தியம் கேட்கும் வைபவம் விசேஷமாக நடக்கும்.

திருநீலகண்டர், ரத்னாசலை, கணம்புல்ல நாயனார், வியாக்ரபாதர் ஆகியோர் வழிபட்ட தலம்.

தல வரலாறு


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக