திங்கள், 20 நவம்பர், 2017

உலக நன்மைக்காக அகத்தியர் ஆணையை ஏற்று ஆன்ம மக்களான உங்களிடம் ஜீவ அமிர்தத்தின் வேண்டுகோள்


ஜீவ அமிர்தம் மாத இதழ் சித்தர்களின் பேரருளால் இயங்குகின்ற ஓர் உண்மையான ஆன்ம அருள் ஊடகம் என்பது தாங்கள் அறிந்ததே. அகத்திய பெருமானின் திருவருளால் கிடைக்கப்பட்ட செய்தி. "மானிடர்கள் சுயநலத்திலே வாழ்வதால், மனிதர்களின் கோர மனத்தால், இயற்கை கொடுங்கோபம் கொண்டுள்ளது. மேலும் மக்களை சிந்திக்காமல், இயற்கை பாதுகாக்காமல் அரசும் ஆள்பவர்களும், நீதியை மறந்து மக்களுக்கு உகந்த சட்டம் ஒழுங்கில்லாமல், அப்பாவி மக்கள் இங்கு காப்பாற்றப் படவில்லை. இயற்கை அன்னை கடும் கோபத்திற்கு ஆளாகி, இயற்கை சீற்றத்துடன் பொங்கி இருக்கின்றது. ஆதலால் இதன் விளைவாக இந்தியா மற்றும் சில நாடுகள் நீராலும், நிலத்தாலும் சீற்றங்கள் ஏற்பட்டு சேதம் நிகழ இருக்கின்றது என்பது உண்மையான செய்தி. மேலும் உலக நாடுகளுக்கிடையே உலகப்போர் மூளும் அபாயமும் இருக்கின்றது, இதனால் பல்லுயிர்கள் பாதிக்கக்கூடும்.

இந்த கொடும் நிகழ்வுகள் மூலமாக அப்பாவி மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது. மக்களிடம் பிரிவினை பார்க்காமல்

"யாதும் ஊரே, யாவரும் கேளிர்", "எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க", என்ற ஆன்ம உணர்வும், இயற்கையில் ஆன்ம உணர்வும் நிறைவாகப் பெற்ற தமிழர்களான நாம், இயற்கை அன்னையை வேண்டி, முருகப்பெருமானை துதித்து, அகத்திய மாமுனிவரை வணங்கி, குடும்பம் குடும்பமாக உற்றார், உறவுகள், நட்புகள் என அனைவரும் ஒன்றிணைந்து ஒரு அகலில் நெய்தீபம் ஏற்றி வெட்டவெளியில் வைத்து மனமுருகி வேண்டுங்கள். அதிகமான பிரபஞ்ச சக்தி இயங்கும் இடம் நம் தமிழகம் மட்டுமே என்பதே உறுதி. சித்தர்களின் அருளால் தமிழகம் காப்பாற்றப்படும் என்பதும் உறுதி. நம் சித்தர்களுக்கு மதம் கிடையாது, மனிதம் மட்டுமே! பிற மதம் சார்ந்தவர்கள், அவரவர் வணங்கும் இறைவனை வேண்டி விளக்கேற்றுங்கள். இந்த உலகமக்கள் அனைவரும் காப்பாற்றப்பட வேண்டும் என பிரார்த்தனை செய்யுங்கள்.

குறிப்பு : நல்ல காரியங்களுக்கு நேரம் காலம் கிடையாது. எந்த நேரத்திலும் இந்த அற்புதமான செயலை செய்யலாம்.

நன்றி
இறை சேவையில்
ஜீவ அமிர்தம் மாத இதழ்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக