வியாழன், 5 பிப்ரவரி, 2026

ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிச் செய்த கன்ம காண்டம் -கண் நோய் வரலாறு

கண் நோய் வரலாறு 

கருதியதோர் கண்ணில் வந்த வியாதி கேளு
காரணந்தான் சொல்லுகிறேன் கட்டாய் கேளு
வெருதியென்ற மாதர்களையுற்றுப் பார்த்து
வுடனேங்கி மோகமுற்று வுடற்பா வந்தான்
சதிருடனே கருக்கண்டு வழித்த தாலுஞ்   
சக்தித்தோ டத்தாலுந் தெய்வத்தாலும்
விருதுடனே பலவுயிரைக் கண்டு
விலக்காதே பார்த்திருந்த வீரினாலே

வீறான பலபாவஞ் செய்கை யாலு
மெய்யதனைப் பொய்யென்ற வம்பினாலும்
வேறாக பிறக்கிடுகண் செய்த தாலும்
மிக்க சிவாலயங்கள் விருமபாததாலும்           
கூரான தெய்வத்தை யிகழ்ந்த தாலுங்
கூர்விழியில் நேர்விளங்குஞ் சலந்தானப்பா
வாறாக தொண்ணுற்றாறு வியாதி வரலாறு
மதிகமாங் கன்மமென வரிந்து சொல்லே 


கன்ம நிவர்த்தி

சொல்வதென்ன கன்மம்வந்து தொடர்ந்து தானாற்
சூத்திரமாந் தான தர்மஞ் செய்ய வேணுஞ்
சொல்வதென்ன கோவில்குளந் தீர்த்த வாசஞ்
சிவனோடு பஞ்சகர்த்தாள் தெரிசனமாம் பூசை
வெல்வதென்ன கோயில்குளங் கட்டவேணும்
வேதியர்க்குத் தான தர்ம மிகவுஞ் செய்தல்
கொல்வதொன்றுஞ் செய்யாதே யிரப்போர்க் கீதல்
குருபாதந் தனைப்பணிதல் கொள்கை யாமே

ஆமிந்த வுலகத்தில் லிருக்கும் போதி
லளவற்ற கன்மமடா ஆர்தான் வெல்வார்
தாமிந்த கன்மமொன்று மணுகா தப்பா
சார்வான சிவயோகி தவத்தி னாலே
வாமிந்த தேவிசிவ பூசையாலே
மகத்தான தருமமென்ற குளிகையாலே
யோமிந்தப் பெரியோர்க ளானவாறு
முலகத்துள் ளோர்க்குற்ற தர்மந் தானே

தர்மமது செய்வதற்கு கசந்தா யானால்
சண்டாள பாவம்வந்து சபிக்கும் பாரு
வர்மமென்ற காசமது கண்ணில் வந்து
மருளாக விறுவிழியை மறைத்துக் கொள்ளுங்
கன்மமென்ற காசமது கண்ணில் வந்து
மருளாக விறுவிழியை மறைத்துக் கொள்ளுங்
கன்மமென்ற காசநீர் முதலா யுள்ள
கண்மாந்தர நோய்கவிழ்தங்  கருதிக் கேளு
நிர்மலமா மிரும்பீயங் காந்த மீய
மிரண்டுடனே கெந்தியரி தாரம் வீசுமே    

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -4

வெள்ளி, 3 ஜூலை, 2020

தொற்று நோயிலிருந்து விடுபட குருமார்களை பணிந்து போற்றுவோம்




புண்ணிய பூமியான இந்த பாரத தேசமும்,ஆன்மீக பூமியான இந்த தமிழகமும் தொற்று நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது.எந்த மருத்துவமும் கை கொடுக்கவில்லை மற்றும் மக்களும் கலியின் பிடிக்கு ஆட்பட்டு இறை நினைப்பை விடுத்து உலகமே துன்பத்தில் ஆழ்ந்து அடைபட்டு கிடக்கிறது.

பல சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் தோன்றிய இந்த புண்ணிய பூமிக்கு ஏன் இந்த இழிநிலை?.

அவர்களை நாம் மறந்ததுதான்.

கருவூரார் சித்தர் தன் வாதகாவியம் பாடல் 147ல் சொல்கிறார்...

கலியன் வந்தானென்று ககன ரிஷிகளும்
கலியனைக் கண்ணிலும் காணாதிருக்க
கலியனை விட்டு கயிலைக்கு சென்றே
கலியுக மட்டுங் கடுந்தூக்கங்கொண்டார்

என சொல்கிறார்..அதாவது இப்போது இருக்கும் கலியுகத்தை கன்ணிலும் பார்க்க கூடாது என்றும் வாழப்பிடிக்காமலும் கயிலை மலையில் யோக நிஷ்டைக்கு சென்று விட்டார்களாம்..அவ்வளவு அராஜகங்களும் கொடூரங்களும் தர்மத்துக்கு இடையூறுகளும் நடக்குமாம் இந்த கலியுகத்தில்.கலியுகத்தில்உண்மையானசித்தர்களும்,முனிவர்களும்,
சாமியார்களும் காண முடியது என்றும் அப்போதே சொல்லி இருக்கிறார்.        

ஆனால் உண்மையாக தன் குருமார்களிடம் பக்தி கொண்டோர் வேண்டினால் அவர்கள் தங்களின் தூக்கத்தை கலைத்து தம் சேய்களான நம்மை காப்பாற்ற மாட்டார்களா?

இந்த குரு பூர்ணிமா நிகழும் நன்னாளான 

04-07-2020  மதியம் 12:02ல் இருந்து நாளை காலை  05-07-2020 10:58 க்குள் 

அவர்களை வேண்டி துதிப்போமா?

நம்மை படைத்த தெய்வம் நம்மை காக்காதா?.ஏன் குருமார்களை வேண்ட வேண்டும் என்று கேட்கலாம்.

நீங்கள் குருவிடத்து வேண்டும் போது,உங்களின் வேண்டுதல் அவரின் பரம குருவிடம் செல்லும்.பின் பரமகுருவின் வேண்டுதல் பராபர குருவின் குருவிற்க்கு செல்லும்.பராபர குருவின் வேண்டுதல் பராபரத்திடம்  செல்லும்.

நம்முடைய வேண்டுதலால் மட்டும் இந்த தொற்று நோயை ஒழிக்க இயலாது.நம்முடைய குருமார்களும்,அவர்தம் குருமார்களும் துணை நின்றால் மட்டுமே சாத்தியம்.

வேண்டுதல்.

அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!      
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக !

அப்பனே!எங்கள் குருமார்களே,முனிவர் பெருமக்களே,ரிஷிமார்களே,முனிபுங்கவர்களே,சித்த புருஷர்களே மற்றும் ஆச்சாரிய பெருமக்களே இது காலும் தங்களை மறந்து நாங்கள் இறை நினைப்பு சற்றும் இன்றி கலியின் ஆட்டத்திற்கு உட்பட்டு கிடக்கின்றோம்.இறையும் குருவும் ஒன்றென உணர்ந்தோம்.ஆகையால் எங்களை எல்லோரும்  உங்கள் சேய்களாக ஏற்று

மானிட ரூபமுள்ள ருத்ர பசுபதியும்

சிவ தத்துவம்,ஆத்ம தத்துவம்,வித்யா தத்துவம் மற்றும் சர்வ தத்துவங்களுக்கு மத்தியில் பிந்துவில் மும் மூர்த்திக்களையும்,பஞ்ச பூதங்களை ஆசனமாக கொண்ட அன்னை லலிதாம்பிகையும்              
 
 
இந்த தொற்று நோயின் பிடியில் இருந்து அனைத்து உலக மக்களையும்  காப்பாற்றி உய்வித்து அருள தங்களின் பொற்கமல பாதார விந்தங்களை பணிகின்றோம்.

ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !      

ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !
         
ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
 திருவடிகள் போற்றி ! போற்றி !            

திங்கள், 27 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -3



தாயாயுமென்றந்தை  தானாயுநின்று நீ
தானாகவருள்  புரியவும்
தாபந்தமெல்லா மறிந்த நிஷ்டைச்
சகாவென்றவருள்  புரியவும்
நாயடியனுய்பும்  பொருட்டாகரட்சித்து
நாடோறுமருள்  புரியவும்
நச்சுநச்சென்றனைய ரற்றுறெ என்றனை   
நகைத்திடாதருள்  புரியவும்
தூயனேமாயனே  நேயனே தாயனே 
தொழும்புகொண்டருள் புரியவுந்
தோலாவழக்கனிவ னென்றுசொல்லாமெலென்
றுரையேயுனருள்  புரியவும்
வாய்மொழிமறக்கும்முன் றவராஜசிங்கமே     
வரவேண்டுமென்றனருகே
மாகுணங்குடிவாழு  மென்னகத்தீசனே

பொருள்:

எனக்கு தாயாகவும் ,தந்தையாகவும் நின்று தானாக அருள்  புரியவும்,புலன்களின் இயக்கத்தை ஒடுக்கி தாங்கள் அறிந்த தியானத்தில் சங்கடம் இல்லாமல் வாசியே எனக்கு நண்பனாக  அருள்  புரியவும்,நாய்  போன்ற அடியேனையும் ஒரு  பொருட்டாக ஏற்று ரட்சித்து நாள்தோறும் அருள்  புரியவும்,நச்சு,நச்சு என்று புலம்புகின்ற என்னை பார்த்து சிரிக்காமல் அருள்  புரியவும் ,தூய்மை ஆனவரே,மாய தோற்றம் கொண்டவரே  ,அன்புள்ளம் கொண்டவரே ,தாய் போன்றவரே,உன் அடியார் கூட்டத்தில் என்னை ஆட்கொண்டு சேர்த்து அருள் புரியவும்,தீராத வழக்கு கொண்டவன் சொல்லி என்னை ஒதுக்காமல் என் துரையே அருள் புரியவும்,உண்மையான மொழியால் அடியேன் பாடியவை யாவும் மறக்கும் முன் தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

வெள்ளி, 24 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை-பாடல் -2



என் தலையிட்ட விதி என்னமோ என்னநான்
இடையாமல் அருள் புரியவும்
என் செய்தேன் என்றடிமை எண்ணாத எண்ணங்கள்
எண்ணாமல் அருள் புரியவும்
பந்தமதில் இட்ட மெழுகு என்னை நெஞ்சுருகிப்
பதைத்திடாது அருள் புரியவும்
பாவி ஆகாது என கருணை நயனம் கொண்டு
பார்த்து நல் அருள் புரியவும்
மந்திரம் கொண்டு மாங்காய் விழாது ஆதலான்
மனம் உவந்து அருள் புரியவும்
மாரியினும்  நின் கருணை மாறி அணுமாறாது
வருஷிக்க  அருள் புரியவும்
வந்து பணிவார்க்கு உதவு மெய் தவராஜ சிங்கமே
வரவேண்டும் எந்தன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மௌன தேசிக நாதனே

பொருள்

என் தலையில்  எழுதப் பட்ட  விதி என்னவாக இருந்தாலும் அடியேனுக்கு அருள் புரியவும், அடியேன்  என்ன செய்தேன் என்று எண்ணங்களால் எண்ணிப் பார்க்காது அருள் புரியவும், மெழுகு போன்ற பந்தத்தில் இடப் பட்ட என்னை மெழுகாகப்பட்டது நெருப்பால் உருகிப் போவது போல் பதைத்திடாது அருள் புரியவும்,என்னை பஞ்சமாபாதகம் செய்த பாவி என்று ஆகாது என ஒதுக்காமல் நின் கருணை பார்வை கொண்டு பார்த்து நல் அருள் புரியவும்,வெறும் மந்திரம் சொன்னால் மாங்காய் பால் என்ற அமிர்தம் சகஸ்ரஹாரத்தில் இருந்து சுரக்காது மற்றும் நின் கருணையால் அது கூடும் என்று சித்தாதி சித்தர்கள்,தேவர்கள்,ரிஷிகள் நினைப் பணிந்தனர், ஆதலால் மனம் உவந்து அருள் புரியவும்,மேகத்திலிருந்து பொழியும் நீரின் தன்மை அணு அளவு கூட எப்படி மாறதோ அது போல் அடியேனும் கருணை மழை  பொழிந்து  அருள் புரியவும் ,உன்னை வந்து பணிபவர்களுக்கு எல்லாம்  உதவுகின்ற சத்தியமாகிய,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அதாவது என் உள்ளே வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.

 


செவ்வாய், 21 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம் -குருவருள் நிலை


குருவருள் நிலை

தாய் அனைய இன்பம்தனைந் தந்து தந்துகை
தழுவி நின்று அருள் புரியவும்
தந்தை தாயும் தானே ஆகவும் இருந்து எனைத்
தற்காத்து உன் அருள் புரியவும்
சேய் என்று இரங்கி அனைகாலியின் கன்றுஎனச்
சீராட அருள் புரியவும்
செங்கீரை ஆடு சிறுமதலை போல் கொஞ்சிநான்
செல்வம் இட அருள் புரியவும்
பாயும் மடை கால் கண்டு கரைபுரள வரும் மதிப்
பால் கொடுத்து அருள் புரியவும்
பக்குவத்தோடு மவுனத் தொட்டிலுக்குள்
படுக்க வைத்து அருள் புரியவும் 
வாயுவை கட்டவும் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே

பொருள்:

ஒரு தாயாகப்பட்டவள் ஓர் குழந்தையை அணைத்தால் எவ்வளவு இன்பம் ஏற்படுமோ அதுபோல் எனக்கு கை தந்து அருள் புரியவும்,தந்தை மற்றும் தாயாகவும் இருந்து என்னை காப்பாற்றி  அருள் புரியவும்,ஒரு பசுவாகப்பட்டது எப்படி கன்றை  குழந்தையாக  கொள்வதுபோல் அடியேனை  ஏற்று சீராட்டி அருள் புரியவும்,செங்கீரை பருவமான ஐந்தாவது மாதத்தில் ஒரு குழந்தை தன் தலையை இங்குமங்கும் அசைத்தாடுவது போல செல்வத்தை கேட்போருக்கு இட அருள் புரியவும்,நீர்நிலை களில் மடையை திறந்தவுடன் நீராகப்பட்டது எப்படி கரைபுரண்டு ஓடுமோ அதுபோல் அடியேனுக்கு ஞானப் பால் கொடுத்து 
அருள் புரியவும்,பக்குவத்தோடு மவுனம் என்ற தொட்டிலுக்குள் அடியேனை படுக்கவைத்து அருள் புரியவும்,வாசியை நடுநாடியில் செலுத்த அருள் புரியவும் ,தவத்திற்க்கே ராசாவாக விளங்கும் சிங்கமே,மவுனத்திற்கு குருவாய்,ஆசாரியனாய்  விளங்கும் மாகுணங்குடி வாழும் அகத்தீசனே என் அருகே வர வேண்டுகிறேன்.


திங்கள், 20 ஏப்ரல், 2020

குணங்குடி மஸ்தான் சாகிபு அவர்கள் அருளிச் செய்த அகத்தியர் சதகம்





குரு வணக்கம் 

குணங்குடியார் நற்குணங்குடி ஓங்கக் 
கொடு கொடு என்று அடிக்கடி குணங்குங்
குணங்குடியார் துர்க்குணங்குடி போகக்
குணமெலாம் திரண்டு அருள் பரப்பிப்
குணங்குடி ஏறிக்  குறைவற  நிறைந்து
குணக் கடலான மெய்ஞ்ஞானக்
குணங்குடி வாழும் என் அகத்தீசனாம் என்
குருபதம் சிரத்தின் மேல் கொள்வாம்

பொருள்:

என்னிடம் உள்ள நற்குணங்கள்  ஓங்கவும் ,தீயகுணங்கள் போகவும்,குணமெலாம் திரண்டு அருள் பரப்பி  குணங்குடியில் ஏறி என் குறைகள் எல்லாம் குறைவறச் செய்து குணக்கடலான என் குருநாதர் அகத்தீசர் குருபதத்தை சிரத்தின் மேல் கொள்வோம்.



வெள்ளி, 27 மார்ச், 2020

சித்தரடியார்களுக்கு ஓர் அன்பு வேண்டுகோள்





கோவில்கள் அனைத்தும் அடியார்கள் நுழைய வாய்ப்பில்லாத இந்த சூழ்நிலையில் , சித்தரடியார்கள் அவரவர் தத்தம் இல்லங்களில் இருந்து கொண்டே வெட்ட வெளியில் (வாசலிலோ அல்லது மொட்டை மாடியிலோ)  தீபம் ஏற்றி இப்போது உள்ள அசாதாரமான சூழ்நிலை மாற வேண்டும் என்று அவரவர் குருமார்களை துதிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் .

வெட்ட வெளி தீபத்தின் மகத்துவத்தை முற்றிலும் உணர்ந்தவர்கள் சித்தர் பெருமக்களே !!!
அதன் மகத்துவத்தை அவர்கள் அடியார்களான நாமும் உணர வேண்டி இது வெளிப்படுத்தப் படுகிறது.

சனி, 28 டிசம்பர், 2019

கேரளா வழியாக அகஸ்தியர் கூடம் செல்ல ஜனவரி 8ல் முன்பதிவு ஆரம்பம்.கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு


அகஸ்திய முனிவர் தவம் செய்த அகஸ்தியர் கூடம் கடல் மட்டத்திலிருந்து 1890 மீட்டர் உயரத்தில் உள்ளது .மேற்கு தொடர்சி மலையில் கேரள வனப் பகுதியான நெய்யார் வனப் பகுதியில் அமைந்துள்ளது. திருவனந்தபுரம் மாவட்டம் போனக்காடு வன எல்லையிலிருந்து 56 கி.மீ தூரம் அடர்ந்த காட்டு பகுதியான மலை ஏறி சன்னதி செல்ல வேண்டும். வருடத்தில் சிவராத்திரி நாள் ஆதிவாசி மக்கள் வழங்கும் சிறப்பு பூஜை பிரசத்தி பெற்றதாகும். சிவராத்திரிக்கு முன்னதாக குறிப்பிட்ட நாட்கள் மட்டுமே இப்பகுதிக்கு பொது மக்கள் அனுமதிக்கப்படுவர்.

  2020ம்  ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. தினம் 100 பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.

2020ம்  ஆண்டிற்கான அகஸ்தியர் கூட புண்ணிய யாத்திரை தற்போது ஆரம்பிக்க உள்ளது. கேரள வனத்துறை அனுமதி பெற்றவர்களை மட்டுமே மலை ஏற முடியும். அடர்ந்த வனப்பகுதி என்பதால் பாதுகாப்பு கருதியும், காட்டுப்பகுதி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதாலும் மக்கள் அனுமதிக்கப்படுவதில் வனத்துறை கட்டுபாடு விதித்துள்ளது. தினம் 100 பேருக்கு  மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதுவும் குழுக்களாக பிரிக்கப்பட்டு வனத்துறை பணியாளர் தலைமையில் பயணிக்க வேண்டும்.


மிகவும் கடினமான  அகஸ்தியர் கூடம் புண்ணிய யாத்திரைக்கு பெண்கள்  அனுமதி இல்லை 

இதற்க்கு முன் பதிவு வரும் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் தேதி காலை 11:00 மணி முதல் துவங்குகிறது.






ஆகிய இணைய தளங்களில் முன்பதிவு செய்து கொள்ளலாம். முன்பதிவு செய்ய கால அவகாசம் உள்ளதால் முன்கூட்டியே தங்கள் கணக்கை பதிந்து வைத்து விடவும்.பின்னர் முன்பதிவு செய்யும் நாளில் உடனடியாக முன்பதிவு செய்யலாம்.  


கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பு  



 கேரள வனத்துறை அதிகார பூர்வ அறிவிப்பின்படி இந்த ஆண்டு பொதிகை பயணம் ஜனவரி14 முதல் பிப்ரவரி 10 வரை நடை பெறும்.

  • அடையாள அட்டை கட்டாயம் கொண்டு வரவேண்டும் 
  • புகை பிடிப்பது மற்றும் மது அருந்துதல் தடை செய்யப் பட்டுள்ளது 
  • பதினான்கு வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு  அனுமதி இல்லை 
  •  ஒன்று முதல் ஐந்து நபர்களுக்கு 50ரூபாய் கட்டணம் (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட   நபர்களுக்கு 70ரூபாய் கட்டணம்  (ஒரு தலைக்கு) 
  • பத்துக்கு மேற்பட்ட  நபர்களுக்கு அல்லது குழுவாக வருபவர்களுக்கு கைடு வசதி செய்து தரப்படும். 
  • ஒரே நபரே மொத்த குழுவிற்கும் பதிவு செய்யலாம். 
  • தனி நபர் என்றால் 1,100/- கட்டணம்
உதவிக்கு 0471-2360762 என்ற என்னை அழைக்கலாம்.

-நன்றி :கேரள வனத்துறை.

செவ்வாய், 10 டிசம்பர், 2019

திருக்கழுகுன்றம் அபூர்வ சித்தர்கள் கிரிவலம் - முக்கிய அறிவிப்பு



சித்தர்கள் கிரிவலம் பற்றி அகஸ்திய மஹாகுருவின் அருள்வாக்கு !!!


மறைவணங்கும் இறைவணங்கி உரைக்கிறேன் அகத்தியன் யான் இத்தருணத்திலே...


சகல சக்திகளுக்கும் ஆதாரமாய் விளங்குகின்ற இறைவனவன். அந்த சக்தியானது புவி முழுவதும் பரவியிருக்கின்ற சக்தி ஓர் ஆலயத்தில் நிலைபெற்று இருக்கின்ற பொழுது, அந்த ஆலயத்தில் மிக மிக அற்புதங்களைக் கொண்ட கதிர்வீச்சு சக்தியானது எப்போது மிக அதீத சக்தியோடு வெளிப்படுகிறதோ அந்த நேரத்தில் சித்தர்கள் நாங்கள் அந்த இறையை தொழுக கூடுவோம். 


இந்த தேசத்தில் உள்ள அணைத்து ஆலயங்களிலும் இந்த நிகழ்வு நிகழ்ந்து கொண்டிருந்தாலும், கழுகு தொழுகின்ற, ஈசனவன் வீற்றிருக்கின்ற வேதகிரீஸ்வரர் பெருமானுடைய மலையில், பல ஆயிரக்கணக்கான சித்தர் சமாதிகள் இருந்தாலும், அத்தனையும் விழிப்படைகின்ற அற்புதமான நாளாகிய மார்கழி மாதம் நன்னாளில், இந்த திவ்யமான இறையை தரிசனம் செய்ய சித்தகணங்கள் ஆகிய நாங்கள் இத்தலத்திற்கு வருகின்றோம். வருகின்ற நன்னாளில் யாங்கள் கிரிவலம் வருகின்ற பாதையில் எவரொருவர் நின்று தரிசனம் செய்கின்றார்களோ அவர்களுடைய கர்மவினைகள் யாவும் அறும் என்பது அகத்தியன் வாக்கடா கருணையே. 


கருணையே ஆதியோடு அங்கமாக இருக்கின்ற பல லட்சக்கணக்கான சித்தகணங்கள் வருகின்ற நேரத்தை யாங்கள் உங்களோடு பகிர்கின்றோம் அப்பா. நள்ளிரவு நான்கென்று அழைக்கப்படுகின்ற நாளில் துல்லியமான வேளையத்தனில் யாங்கள் இத்தலத்திற்கு கிரிவலம் செய்கின்றோம்.


மனநிலை பாதிக்கப்பட்டிருக்கின்ற மாந்தரும் சரி, உடல் நலம் குன்றிய மாந்தரும் சரி, தடத்தின் போது கிரிவலம் செய்தால் இறைசக்தியின் மூலம் அன்னவன் ஆன்மபலம் பெற்று நிலைபெறுவான் என்பது அருள்வாக்கடா மைந்தனே. 


ஆசிகள் சுபம்!


ஸ்ரீ மஹா குரு அகத்திய பெருமானின் கருணை ஜீவ நாடியில் செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுகுன்றம் வேதகிரிஸ்வரர் திருமலையை சித்தர்கள் கிரிவலம் வரும் நாளும் நேரமும் உலக நன்மைக்காக அருளப்படுகிறது.

ரிக், யஜுர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் 4 பெரிய மலைகளாக இருக்கப் பெற்றதான வேத மலையில் உள்ள வேதகிரீஸ்வரர் பெருமானை சித்த மஹா புருஷர்கள் ஆண்டுக்கு ஒருமுறை வணங்கி செல்லும் அபூர்வ நிகழ்வு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

அபூர்வ சித்தர்கள் கிரிவலம் குறித்து உலக நலனுக்காக அகத்திய பெருமான் காட்டிய வழியில் செல்பவரும், பல ஆயிரக்கணக்கான லிங்கங்களை பிரதிஷ்டை செய்தும், உலக நன்மைக்காக அருளிய அகத்திய மஹா யாகங்களையும், தீமைகள் அறுதல் பொருட்டு ருத்ர சண்டி பைரவ யாகங்களை நிகழ்த்தியும், கும்பமுனி வாக்கிற்கு இணங்க ஈசன் பணிக்காக தன் வாழ்வினை அர்பணித்தவரும் ஸ்ரீ காஞ்சி மஹா பெரியவாளின் வாக்கினை ஒத்த பல நூற்றாண்டுகளாக புதையுண்டு பூசை அற்று கிடக்கும் ஈசனின் திருமேனிகளுக்கு (சிவலிங்கம்) புனருத்தாரணம் செய்து வருபவரும், பல லட்சக்கணக்காண மக்களுக்கு அன்ன தானமும் வஸ்திர தானமும் செய்து உலக நன்மைக்காக பணியாற்றும் திருக்கழுகுன்றம் அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் சித்தர்கள் கிரிவலம் வரும் நாளை உலகிற்கு உரைத்து இருக்கிறார்கள்.

நாள் : 4.1.2020
கிழமை / நேரம் : சனிக்கிழமை இரவு 2.53 AM துவங்கி 3.17 AM வரை

பாவங்களை போக்கும் சித்தர் கிரிவலம் நடக்க இருக்கிறது.

பல நூற்றுக்கணக்கான சித்தர் பெருமக்கள், நட்சத்திர மண்டல தேவதைகள், நதி தேவதைகள், விருத சுதன் எனும் கழுகுகள், தேவாதி தேவர்கள் , அஸ்வினி தேவர்கள் (அசத்தியம் இல்லாதவர் ஆன நாசத்ய மற்றும் ஒளி வீசும் தன்மை கொண்டவரான தஸ்ரா), வசிட்டரின் மனைவியான அருந்ததி தேவி, மாதொருபாகன் என்ற அர்த்தநாரீசுவரர் மூர்த்தம் தோன்ற காரணமான பிருங்கி, இறப்பில்லா மகாயோகியும் ஆதிநாதனான ஈசனிடம் பாடம் கேட்டு நாத சைவத்தைத் தோற்றுவித்தவருமான கோரக்கர், சிவபெருமானின் வாகனம் ஆனவரும், கயிலாய உலகின் வாயிற்காவலராகவும் விளங்கும் நந்தி தேவர், போகரின் சீடரான கமலமுனி, பிரம்மா தன் மனதால் நினைத்த போது தோன்றிய புதல்வர்களில் ஒருவரான புலத்தியர், ரிக் வேத கால முனிவர்களில் ஒருவரும் ஏழு முனிவர்களில் ஒருவரும் ஆன அத்ரி, ரிக்வேதத்தில் 20 சூக்தங்களைச் செய்துள்ளவரும் சப்தரிஷிகளில் ஒருவருமான கௌதமர், முருகனின் அம்சமான கௌமாரி, குளியாமல் இருக்கும் பொழுதும் எப்பொழுதும் வாசம் வீசிக் கொண்டே இருக்கும் பரிமள சித்தர், மனமாகிய பேயை வென்றவரான அகப்பேய் சித்தர், பத்ரி கோஷ்ட சித்தர், ரோமச முனிவரின் தந்தையும் வசிஷ்ட்டரால் தன் எட்டாம் பிறப்பில் ஞானம் வழங்கப் பெற்றவரும் ஆன காகபுஜண்டர், நவநாத சித்தர்கள், அகத்தியரால் ஒளி தேகம் பெற்ற எண்ணிலா கோடி சித்தர்கள் ஆகியோருடன்  கனகசித்தரும், தன்னால் இப்பிரபஞ்சமும் உயிர்களும் எல்லா காலமும் காக்கப்பட வேண்டும் என்பதில் நிலையாக உள்ளவரும், அருளப் பெற்றவர்களுக்காக பிரம்மனிடம் போராடி வரங்களைப் பெற்றுத் தருபவரும், சதா சர்வகாலமும் ஈசனையும் அன்னையையும் வணங்குபவராகவும் ஆன அகஸ்திய மகரிஷி லோப முத்ரா தேவியுடன் வேதகிரிஸ்வரர் பெருமானை வணங்கி சூட்சம கிரிவலம் வர இருக்கிறார்கள்.

இந்த நிகழ்வின் பொருட்டு அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன் ஐயா அவர்கள் தலைமையில் சனிக்கிழமை இரவு 2.00 மணிக்கு வேதகிரீஸ்வரர் திருமலை அடிவாரத்தில் வேத கோஷங்கள் முழங்க சித்தர்களுக்கு ஆரத்தி நடைபெற்று அதனைத் தொடர்ந்து மௌன கிரிவலம் நிகழ உள்ளது.

இந்த சித்தர் கிரிவலம் வரும் போது சித்தர்கள் சூட்சமான ரூபத்தில் வலம் வருவார்கள்.அவ்வாறு வரும் போது அவர்களின் சூட்சம தேகம் நம்மீது படுவதனால் நோயுற்றோர், உடல் நலம் பாதிக்கப்பட்டோர், மன நலம் பாதிக்கப்பட்டோர் , திருமணத் தடை உடையோர், குழந்தைப் பேறு இன்மை கொண்டோர் மற்றும் தீராத கர்ம வினைகள் கொண்டோர்கள் ஜீவ காந்த பாதையில் வருவதால் சித்தர்கள் ஒளியானது நமது உடலில் ஊடுறுவி பல எண்ணில் அடங்கா நன்மைகள் உண்டாகி குறைகள் விலகும்.

மௌனமாக கிரிவலம் வருதலும்,ஆண்கள் மேலாடை இன்றி கிரிவலம் வருதலும் உத்தமம்

உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் நலமடைய சித்தர்களின் கருணையால் நடக்கும் இந்த சித்தர்கள் கிரிவலத்தில் பங்கு கொண்டு அருள் பெறுவோம்.

இவன்
அகத்திய ஸ்ரீ அன்புச் செழியன்
(FB)அகத்திய கிருபா, திருக்கழுகுன்றம்
97895 60249, 90431 49096

செவ்வாய், 19 நவம்பர், 2019

An appeal to Sage Agastya Devotees



Dear Ardent devotees of Sage agastya,

Blessings to Everyone !!!

A long long years ago,An ancient temple was identified in a village called Ramanathanpuram, Pakkam near to Thiruninravur. The temple was surrounded by trees & It was severely affected by natural calamities. Due to this Village people's are afraid to approach the place. By god grace,Now the place was cleaned up and Construction also started with the estimation of 35 Lakhs In Indian rupees.
With the cost of 7Lakhs,Sanctum and Artha Manadaphas had constructed. To complete Ambal Sannidhi, Mani mandapha and other construction works are still pending.

As per Sri Gnana Skandar Jeeva Naadi reading,

"This temple was  worshiped by siddhas during ancient days  and nowadays also siddhas are still worshiping. This is temple having relationship with Eighteen siddhas. From this temple, Sage agastya had a wedding scene of Lord siva and Parvathy. This is temple had relationship with Cholza king. This temple is keeping enormous and holy spiritual power. This temple having powers of  Maragathambaigai and It is still emitting the Green Rays.

History of the temple is already existing in a palm leaf  and the palm leaf is currently present in where Cholza's are resided during ancient days. During the right time, The Palm leaf will appear automatically  and It will reveal the history of this temple. Whoever participating in the temple construction work will get blessings of Lord Nantheswarer.

During the time of Kalsabisegam, Lord Siva will appear with Ambigai along with Rishis, Nine crore  siddhas, Sage agasthiya with Lobamuthra devi.

If the participant in normal life, he will get better life and his wishes will get fulfill and If the participant in spiritual life ,He will attain the feet of lord Siva directly.Boga Maharishi, Pathanjali and Viyakrabathar also having relationship with this temple.This is temple having relationship with Thillai and Thiruppatur"



You can also participate by donating your value time, Guidance, Guidelines,offering Temple construction materials  and Money.

 We request you to take this opportunity and Forward your donations to below mentioned Account

Name:AGATHEESHWARAR TRUST
A/C NO:6161101002984
IFSC:CNRB0006161
MICR: 600015165
Bank:CANARA BANK,
Branch:THIRUNINRAVUR BRANCH

For verification and to participate in the activities, Always you can reach us on below mentioned number.
CELL : 9789053053

Yours Truly,
D.Kajendran
Sri Agastheeswarer arrakattalai samuga seva

ஞாயிறு, 17 நவம்பர், 2019

அருள்மிகு ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் ஆலய திருப்பணிக்கு உதவி தேவை

ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்

இது பலநூறு ஆண்டுகளுக்கு மேல் வெயில்,மழை என முள் புதர்களுக்கிடையே வாசம் செய்த அகத்தீஸ்வரர் பெருமான் திருக்கோவில் . திருநின்றவூரில் உள்ள பாக்கம் அடுத்த ராமநாதபுரத்தில் ,ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சமயத்தில் பலரும் அஞ்சி நடுங்கி பார்க்க கூட வேண்டாம் என்று அந்த வழியில் வந்தவர்கள் விரைந்து நடந்து போன காலம் போய்  இன்று ஊரே வியந்து பார்க்கும் வானளவு உயர்ந்து நிற்கின்றது அகத்தீஸ்வரர் ஆலய  விமானம்.

அந்த விமானத்திற்கு வர்ணம் பூசவும் மற்றும் கும்பாபிஷேகத்திற்கு முன்பு செய்து முடிக்கப்பட வேண்டிய திருப்பணிகள் மட்டும் தற்போது எஞ்சி உள்ளது. ஐந்து ஆண்டுகளாக பல அன்பர்களின் முயற்சியால் கட்டி முடிக்கப்பட்ட ஆலயப் பணி தற்போது நிறைவடையும் தருவாயில் உள்ளது.தற்போது திருப்பணி நிதி பற்றாக்குறை காரணமாக கேள்வி குறியாகி உள்ளது .

"இது சித்தர்கள் பூஜிக்கும் சேத்திரம்.பதினென் சித்தர்களுக்கு தொடர்புடைய திருக்கோவிலாகும்.அகத்திய பெருமானுக்கு திருமண காட்சி கிட்டிய தலம் .பாடல் பெற்ற தலத்திற்கு இணையான ஆலயம்.சோழ நாடு மன்னனுக்கு சம்பந்தப் பட்ட திருத்தலம் .உன்னத சக்திகள் நிரம்பப் பெற்ற  தலம்.பச்சை கதிர் வீசும் மரகதாம்பிகை உள்ள திருக்கோவில். இந்த திருக்கோவிலின் வரலாறு சோழ நாட்டில் உள்ள ஒரு ஓலை சுவடியில் உள்ளதாகவும் ,அது தக்க காலத்தில் வெளிப்படும்.இந்த திருப்பணி செய்பவர்களுக்கு நந்தியம் பெருமானின் ஆசிகள் கிட்டும்.குடமுழுக்கின் போது சிவபெருமான் அம்பிகையுடன் ,ஆடலரசன்,ரிஷிகள்,நவகோடி சித்தர்கள்,லோபாமுத்திரையுடன் அகத்திய பெருமானும் எழுந்தருள்வார்கள். திருப்பணியில் பங்கு கொள்ளும்  லௌகிகத்திலும் உள்ளோருக்கு வேண்டியது கிட்டும் மற்றும் ஆன்மிகத்தில் உள்ளோருக்கு  முக்தி கிட்டும்.போகர்,பதஞ்சலி மற்றும் வியாக்ரபாதருக்கு தொடர்புடைய திருக்கோவில்.தில்லைக்கு மற்றும் திருப்பட்டுருக்கும் சம்பந்தம் உள்ள கோவில் " என்று  ஸ்ரீ ஞான ஸ்கந்தர் ஜீவநாடியில் முருகப் பெருமானும் அகத்தியர் ஜீவநாடியில் அகத்திய பெருமானும் தெரிவித்துள்ளார்.

திருப்பணிக்காக இருகரம் ஏந்தி உங்கள் முன்பு நிற்கின்றோம் .கயிலைமலையான் திருவருளால் கற்கோவில் எழும்பட்டும்



திருப்பணியில் கலந்துக்கொள்ள தொடர்புக்கு:

என்றும் இறைபணியில்
திரு.D.கஜேந்திரன்
ஸ்ரீ அகத்தீஸ்வரர் சமூக சேவா அறக்கட்டளை திருப்பணிக்குழு

மேலும் விவரங்களை நேரிலோ அல்லது கீ்ழ்கண்ட அலைபேசியிலோ தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம்.
CELL : 9789053053

நன்கொடை வழங்குவதற்கான  வங்கி கணக்கு விபரங்கள் 

Name:AGATHEESHWARAR TRUST
A/C NO:6161101002984
IFSC:CNRB0006161
MICR: 600015165
Bank:CANARA BANK,
Branch:THIRUNINRAVUR BRANCH






ஆலய புகைப்படங்கள்.தங்கள் கவனத்திற்கு.


வியாழன், 14 நவம்பர், 2019

ஆடுதுறை ஸ்ரீ அகத்தியர் மற்றும் 18 சித்தர்கள் கோவில் திருப்பணிக்கு உதவி தேவை



பக்த கோடிகளுக்கு வணக்கம்,

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுகா ஆடுதுறை நகரத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஆபத்சகாயேஸ்வரர் ஆலய சன்னதிக்கு கீழ்புறம், ஸ்ரீ குமர குருபர ஸ்வாமிகள் மேல் நிலைப்பள்ளிக்கு அருகில் பல ஆண்டு காலம் வசித்து வரும் ஆடுதுறை சித்த வைத்திய நிபுணர் தவத்திரு. R. M. பத்மாவதி அம்மாள் அவர்களின் பெரு முயற்சியால் ஸ்ரீ அகத்தியர் பெருமான் கோயில் கடந்த 2014 ம் ஆண்டு திருப்பணி தொடங்கி, பணிகள் சுமார் 10 லட்சம் மதிப்பீட்டில் உபயதாரர்கள் உதவியோடு பணிகள் நடைபெற்று வருகிறது. சித்தர்களின் உத்தரவுபடி விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. எனவே இதை காணும் தர்ம சீலர்கள், பொதுமக்கள், சிவனடியார்கள், பக்த கோடிகள் தங்களால் இயன்ற உதவியை தொகையாகவோ, சிமென்ட், ஜல்லி, செங்கல், கம்பி, பெயின்ட் மற்றும் கும்பாபிஷேக சாமான்கள் போன்றவற்றை கொடுத்து எல்லாம் வல்ல ஸ்ரீ அகத்தியர் மற்றும் 18 சித்தர்கள் மற்றும் ஸ்ரீ சந்தோஷி மாதா மற்றும் அருள்மிகு தையல்நாயகி அம்பாள் சமேத வைத்தியநாத ஸ்வாமி அவர்களின் அருளுக்கு பாத்திரர்களாகும்படி கேட்டு கொள்கிறோம்.

தொடர்புக்கு:

R. M. பத்மாவதி அம்மாள்,
அகத்தியர் சித்த வைத்திய சாலை,
19/3, சிவன் சன்னதி தெரு,
ஆடுதுறை- 612 101. தஞ்சை மாவட்டம்.
செல் : 9940750047,

என்றும் இறை பணியில்,

வெங்கட் ராமன்.R - 9597038541
ஜெய் குமார் - 9488380499

வங்கி கணக்கு விவரங்கள்:

Name:R.M.PADMAVATHI
Bank:கனரா வங்கி
Ac.No. 1202101030710
IFSC CODE: CNRB0001002
MICR CODE : 612015004




 கோவில் திருப்பணி நடைப் பெற்றுவரும் புகைப்படங்கள் அடியார்களின் பார்வைக்காக 


ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

அகத்திய மாமுனிவரின் 108 போற்றிகள்


ஓம் சத்குருவே போற்றி
ஓம் குறுமுனியே போற்றி
ஓம் அகத்தீசா போற்றி
ஓம் ஒளிரூபமே போற்றி
ஓம் விபூதி பிரியரே போற்றி
ஓம் பொதிகை வேந்தே போற்றி
ஓம் இடரைக் களைவாய் போற்றி
ஓம் அருள் செய்பவரே போற்றி
ஓம் அட்டமா சித்தி அடைந்தவரே போற்றி
ஓம் தீபச்சுடரே போற்றி
ஓம் சிவ சக்தி பிரியரே போற்றீ
ஓம் குறுவடி மகனே போற்றி
ஓம் லோபமுத்திரை மணாளரே போற்றி
ஓம் அகத்தீயை அகற்றுபவரே போற்றி
ஓம் சொற்பெரிய புண்ணியரே போற்றி
ஓம் கமண்டலதாரியே போற்றி
ஓம் ஆறுமுகரின் சீடரே போற்றி
ஓம் செந்தமிழ் முனியே போற்றி
ஓம் கற்பனைக்கெட்டா அற்புதமே போற்றி
ஓம் ருத்ராட்ச விரும்பியே போற்றி
ஓம் காவி ஆடை தரித்தோய் போற்றி
ஓம் முற்றுணர்ந்த மூர்த்தியே போற்றி
ஓம் மறை நான்கும் அறிந்தோய் போற்றி
ஓம் ஆதி சக்தியின் அன்பா போற்றி
ஓம் வீடுபேறு அளிப்பாய் போற்றி
ஓம் ஞான ரூபமே போற்றி
ஓம் ஈடில்லா பெருமையரே போற்றி
ஓம் சருவாந்தர் யாமியே போற்றி
ஓம் காவேரி அன்னை கருவம் களைந்தோய் போற்றி
ஓம் தத்துவமானவரே போற்றி
ஓம் குற்றாலத்து பெருமகானே  போற்றி
ஓம் மங்களம் அளிப்பவரே போற்றி
ஓம் அண்டமாறும் வேந்தே போற்றி
ஓம் கருவம் அகற்றுபவரே போற்றி
ஓம் மந்திரத்தின் சொரூபமே போற்றி
ஓம் மாசற்ற மணியே போற்றி
ஓம் பிறவிப் பிணிக்கோர் மருந்தே போற்றி
ஓம் நற்கதி அருள்வாய் போற்றி
ஓம் நறுமண விரும்பியே போற்றி
ஓம் ஈசனுக்கொப்பானோய் போற்றி
ஓம் இனிமையுடையோய் போற்றி
ஓம் இன்சொல்லில் உறைபவரே போற்றி
ஓம் தயாளம் நிறைந்தவரே போற்றி
ஓம் தருமத்தின்  வடிவே போற்றி
ஓம் தன்னிகரில்லா புண்ணியா போற்றி
ஓம் கும்ப வடிவானவனே போற்றி
ஓம் நீதி வழங்குபவனே போற்றி
ஓம் சீவன்கள் துயர் களைவாய் போற்றி
ஓம் புகழுருவே போற்றி
ஓம் புலமைக்கு வித்தே போற்றி
ஓம் புன்முறுவல் முகத்தோய் போற்றி
ஓம் பரமானந்தமே போற்றி
ஓம் தில்லை நடனம் கண்டோய் போற்றி
ஓம் கரை கண்டோரே போற்றி
ஓம் எண்திக்கும் பணிந்தோரே போற்றி
ஓம் புலத்தியருக்கு ஆசி தந்தோய் போற்றி
ஓம் நல்வாழ்வு அளிப்போய் போற்றி
ஓம் பிரணவத்தில் கலந்தோய் போற்றி
ஓம் பகை பஞ்சம் முறிப்போரே போற்றி
ஓம நீதி வழி நிற்போரே போற்றி
ஓம் விந்தியனின் கருவமழித்தோய் போற்றி
ஓம் பார்வதி யுமை பர நேசரே போற்றி
ஓம் பரிதி நிகர் ஒளியே போற்றி
ஓம் இசையில் இலங்கை வேந்தனை வென்றோய் போற்றி
ஓம் வாதத்தில் வென்றோய் போற்றி
ஓம் வாதாபியை சீரணமாக்கி அழித்தோய் போற்றி
ஓம் கலைமகளின் அருள் பெற்றோய் போற்றி
ஓம் ஆதித்ய இருதயம் உரைத்தோய் போற்றி
ஓம் புத்துணர்வு அளிக்கும் சொல்லே போற்றி
ஓம் காளியுமை ஆசி பெற்றோய் போற்றி
ஓம் தந்தையும் தாயுமானோய் போற்றி
ஓம் ஆதி ரூபமே ஆனாய் போற்றி
ஓம் எளியோருக்கும் எளியோரே போற்றி
ஓம் அடியார்க்கு அருள்வாய் போற்றி
ஓம் வல்லமை படைத்தவரே போற்றி
ஓம் பாண்டி நாட்டில் தமிழ் வளர்த்தோய் போற்றி
ஓம் சோதிட ஆசனாகியோய் போற்றி
ஓம் சச்சிதானந்தம் அருள்வாய் போற்றி
ஓம் நெஞ்சில் நீக்கமற நிறைந்தோய் போற்றி
ஓம் தஞ்சமடைந்தோரை காப்பாய் போற்றி
ஓம் வித்தையின் கடலே போற்றி
ஓம் காட்சிக்கினியோய் போற்றி
ஓம் கரும்பின் சுவையே போற்றி
ஓம் நற்சுகம் தருவோய் போற்றி
ஓம் சிற்சபை கண்டோய் போற்றி
ஓம் யீர்நவத்தில் முதல்வனே போற்றி
ஓம் நித்ய செல்வம் அளிப்போய் போற்றி
ஓம் பிறவிப் பிணி அறுப்போய் போற்றி
ஓம் சிவதத்துவம் மலரச் செய்தோய் போற்றி
ஓம் தன்னடக்கம் பெற்றோய் போற்றி
ஓம் நன்னெறி உரைத்திட்டோய் போற்றி
ஓம் மருத்துவ மாமணியே போற்றி
ஓம் பஞ்சாட்சர ரூபமே போற்றி
ஓம் பரிவு காட்டுபவரே போற்றி
ஓம் சுந்தர நல்மனத்தோய் போற்றி
ஓம் நீள் முடி தரித்தோய் போற்றி
ஓம் வெற்றியை அருள்வோய் போற்றி
ஓம் தீட்சிதம் அருள்வோய் போற்றி
ஓம் மகிமையை அருள்வோய் போற்றி
ஓம் அன்பே சிவம் என கண்டோய் போற்றி
ஓம் சாந்தத்தை அளிப்பாய் போற்றி
ஒம் எல்லையில்லா கருணையே போற்றி
ஓம் யுகங்கள் பல கண்டாய் போற்றி
ஓம் தேவரும் வணங்கும் தேவே போற்றி
ஓம் பெரு வழி அருள்வோய் போற்றி
ஓம் அல்லல் அறுப்போய் போற்றி
ஓம் அருட்பெருந்தீயே போற்றி
ஓம் அமுதே ஆனாய் போற்றி
ஓம் ஒன்றே பல் பொருள் ஆனாய் போற்றி
ஓம் இன்பதுன்பம் கடந்தோய் போற்றி
ஓம் நித்யமடைந்தாய் போற்றி

வியாழன், 29 ஆகஸ்ட், 2019

பாவம் ஓரளவு குறைந்திருக்கிறது என்பதை மனிதர்கள் எப்படி அறிந்து கொள்வது குறித்து அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



பாவங்கள் குறைந்தாலும் அல்லது முற்றிலுமாக தீர்ந்தாலும்கூட பெருங்காயப் பேழைபோல் அதன் நறுமணம் தாக்கிக்கொண்டேதான் இருக்கும். இருந்தாலும் பாவம் கூடுமானவரை குறைந்திருக்கிறது, மிக, மிக சிறிய அளவுதான் இருக்கிறது என்றால் தன்முனைப்பும், அகங்காரமும் இல்லாமல் போய்விடும். ‘ நான் யார் ? நான் எத்தன்மை வாய்ந்தவன்? எந்த அளவு கல்வி கற்றவன் ? என் வலிமை என்ன ? என்னுடைய செல்வம் என்ன ? என் பதவி என்ன ?  என் செல்வாக்கு என்ன ? என்னை ஏன் இவன் எதிர்க்கிறான் ? ‘ என்பது போன்ற எண்ணங்களெல்லாம் மெல்ல, மெல்ல விலகிவிடும். மனம் அமைதியை விரும்பும், கூடுமானவரை தனிமையை விரும்பும். ‘ புரிதல் இல்லாத மனிதர்கள் எது வேண்டுமானாலும் கூறிவிட்டுப் போகட்டும். அவன் விதி அவன் அவ்வாறு நடந்துகொள்கிறான். அவனுக்காகவும் பிரார்த்தனை செய்துகொள்வோம் ‘ என்ற ரீதியில்தான் மனித மனம் இருக்கும். இவன் நண்பன், இவன் எதிரி என்கிற நிலையெல்லாம் கடந்துபோகுமப்பா. எனவே பாவங்கள் குறைய, குறைய அதை அனுபவத்திலே மனம் உணரும்.

பற்றும், ஆசையும், அகங்காரமும் இருக்கும்வரையில் மனிதனுக்கு எத்தனைதான் இறைவன் கொடுத்தாலும் அதனை நுகருகின்ற தன்மையில்லாமல் போய்விடும். எதை எண்ணியாவது ஒரு மனிதன் கவலைப்படுகிறான். ‘ ஏன் கவலைப்படுகிறாய் ? ‘ என்று கேட்டால் ‘ இதைப்போல் நான் எண்ணுகிறேன். ஆனால் இதைப்போல் நடக்கிறது. பின்னர் எவ்வாறு கவலைப்படாமல் இருப்பது ? ‘ என்று கேட்கிறான். ‘ சரி, கவலைப்படுவதால் உன் பிரச்சினை தீரப்போகிறதா ? ‘ என்று கேட்டால் எந்த மனிதனிடமும் பதில் இல்லை. ஒன்று, முழுமையாக தன் அறிவை பயன்படுத்தி தனக்கு வந்துள்ள துன்பத்தை விலக்கிவிட அவன் முயற்சி செய்யவேண்டும் அல்லது இறைவழியில் வருகின்ற மனிதனாக இருந்தால் ‘ எல்லாவற்றையும் இறைவன் பார்த்துக்கொள்வார். என் கடமையை அன்றாடம் நேர்மையாக செய்வேன். பிறர் குறித்து எனக்குக் கவலையில்லை ‘ என்ற ரீதியில் ஒரு மனிதன் வாழ்ந்துவிட்டுப் போகவேண்டும். ஆனால் ஒரு மனிதன் சிந்தனையால் தன்னை சித்ரவதை செய்துகொள்வது என்பது ஒருவகையான தண்டனைதான் என்றாலும்கூட இதனை தெளிந்த அறிவுகொண்டு நீக்கிவிடவேண்டும். இவ்வாறு அறிவு பூர்வமான வாதங்களால் ஒரு மனிதனுக்கு எதனையும் புரிய வைக்க இயலாது என்றுதான் கால, காலமாக பக்தி மார்க்கம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே இரவிலே உறங்குவதற்கு முன்னால் மிதமான உணவு உண்ட பிறகு சிறிது நடை பயிற்சியையும் செய்த பிறகு இறைவனின் திருநாமத்தை, யாருக்கு எந்த நாமம் பிடிக்கிறதோ அதனை முடிந்தவரை உருவேற்றிவிட்டு பிறகு அமைதியான மனதோடு ஒருவன் உறங்க செல்வது நல்ல உறக்கத்திற்கு வழிவகுக்கும்.

இறைவனின் அருளைக்கொண்டு இத்தருணம் இயம்புவது யாதென்றால் இஃதொப்ப நல்விதமான சிந்தனைகளும், எண்ணங்களும் மீண்டும், மீண்டும் இறைவன் அருளாலே மாந்தர்கள் மனதிலே பதிந்து, விதி எவ்வாறு இருந்தாலும்  தொடர்ந்து இறை வழியில் வர இறைவனருளால் நல்லாசி கூறுகிறோம்.

ஆசிகள், ஆசிகள், ஆசிகள்.

அகத்தியர் அடியார்களுக்கு அகத்திய பெருமானிடத்தில் இருந்து ஓர் உத்தரவு




அகத்திய அடியார்களுக்கு வணக்கம்,

அகத்தியர் பெருமான் ஜீவ நாடியில் உரைத்தது

"ஆவணி மாதம் சூர்யன் ஆட்சி இதனுடன் நெருப்பு கிரகமான செவ்வாய் கூடின 10.8.2019 அன்று முதல் காடுகள் நில தலைவனாகிய மால் மாயோன் நிலத்தில் (காடுகளில்) நெருப்பு  குற்றம் ,மலை சரிவு கடுமையான பாதிப்புகள் உண்டாக ஏதுவாக வரும் ஓர் திங்கள் இது தொடர அபயம் தரும் மாயோன் திருமாலை போற்றி துதி செய்து கார்மேகனிடம் வேண்டுதல் வையுங்கள்.

ஆவணி திருவோணம் (11.09.2019) மிகவும் நல்ல தருணம். நிலம், நீர் ,நெருப்பு இதிலிருந்து உயிர்களை பயிர்களை தருக்களை காக்க ஏக மனதாக திருமாலை போற்றி சங்கல்பம் செய்து காப்பவன் அருளால் நலம் அடையுங்கள்."

ஆகவே அன்பர்களே இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாடு செய்து இயற்கையை காக்க சங்கல்பம் வைக்க வேண்டுகிறோம்.மாதம் முழுவதும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ஆவணி திருவோணம் (11.09.2019) அன்றாவது பெருமாள் வழிபாடு செய்ய வேண்டுகிறோம்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா  தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக!!!

வெள்ளி, 11 ஜனவரி, 2019

நல்லெண்ணெய்யின் குண நலன் பற்றிய அகத்தியர் குணவாகடம் நூல் குறிப்பு



புத்திநயனக்குளிர்ச்சி பூரிப்பு மேய்ப்புளகஞ்
சத்துவங் கந்தி தனியிளமை - மெத்தவுண்டாங்
கண்ணோய் செவிநோய் கபாலவழல் காசநோய்
புண்ணோய்போ மெண்ணெய்யாற் போற்று"
-அகத்தியர் குணவாகடம்

எள் எண்ணையை இரண்டு அல்லது நாலு உச்சிக்கரண்டியளவு ஒவ்வொரு நாளும் எடுத்துக் கொண்டு வர, இது புத்திக்குத் தெளிவு, விழிகளுக்குக் குளிர்ச்சி, உடல்பூரிப்பு, உடல்வன்மை ஆகியவைற்றைத் தருவதோடு கண்ணோய், காதுநோய், தலைக்கொதிப்பு, சொறிசிரங்கு, புண் முதலியவைகளையும் போக்கும், இருமலை தணிக்கும், மனமகிழ்ச்சியைத் தரும்.

திருப்பாம்புரத்தை பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இராகுவும், கேதுவும் எப்பொழுதுமே சேராதப்பா. இஃதொப்ப நிலையிலே பல்வேறு நாகதோஷங்கள் நீக்குகின்ற ஸ்தலங்களில் திருப்பாம்புரமும் ஒன்று. ஆனால் அங்கும் வழக்கம்போல் பல்வேறு இடைசெருகல்கள் வந்துவிட்டன. எமக்கு ஏதோ சாபம் ஏற்பட்டதாகவும், அங்கு வந்து நீங்கியதாகவும்கூட வாசகங்கள் அங்கே பொறிக்கப்பட்டிருக்கிறது. எது எப்படியாயினும் இதுபோன்ற சாப நிவர்த்தி ஸ்தலங்களிலே பரிபூரண உள்ளத்தோடு வேண்டிக்கொண்டால் கட்டாயம் நல்ல நன்மைகள் நடக்குமப்பா. அது மட்டுமல்ல.

பொதுவாக நாகதோஷம் அல்லது வேறு தோஷங்களுக்கு பிராயச்சித்தம் என்ற பெயரிலே அந்தந்த கிரகங்களுக்கும், கிரக அதி தேவதைகளுக்கும் ப்ரீதி செய்வதோடு அந்த கிரகம் தொடர்பான தர்மங்களையும் செய்ய வேண்டும். இராகு என்றால் விஷம் என்று வைத்துக்கொண்டால் விஷம் நீக்கும் மருந்துகளை வாங்கி ஏழைகளுக்கு தானம் செய்யலாம். ஒவ்வாமை நோய்க்கு தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெறும் மனிதனுக்கு உதவியை செய்யலாம். குரு ப்ரீதி செய்ய வேண்டியவர்கள், குரு ப்ரீதி பூஜைகள் செய்வதோடு மனித நிலையில் குருவாக இருக்கக்கூடியவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்யலாம். இவைதான் உண்மையில் குருதோஷம் நீக்குகின்ற உபாயமாகும்.


திருப்பாம்புரம் வரலாறு 



திருப்பாம்பரம் ஒரு ராகு - கேது நிவர்த்தி ஸ்தலம். குடந்தை, நாகூர், திருநாகேஸ்வரம், காளஹஸ்தி, கீழப்பெரும்பள்ளம் ஆகிய நாக தோஷ பரிகார ஸ்தலங்கள் அனைத்தையும் தரிசித்த பலன் திருப்பாம்பரம் ஒன்றை மட்டும் தரிசித்தாலே போதும் என்பது ஸ்தலமகாத்மியம். ராகுவும் கேதுவும் ஏக சரீரியாக அதவது ஓருடலாக இருந்து தன் நெஞ்சில் சிவபெருமானை வைத்து வழிபட்டதால் இத்தலம் ராகு கேது பரிகாரத் தலமாக விளங்கிகிறது. மேலும் சிவராத்திரி அன்று இரவில் ஆதிசேஷன் வழிபடும் நான்கு தலங்களில் இத்தலம் மூன்றாவதாகும். மேலும் ஆதிசேஷன், பிரம்மன், பார்வதிதேவி, அகத்தியர், தட்சன், சூரியன் போன்றோர் பூஜை செய்த தலம், இந்திரன் சாபம் நீங்கிய தலம், கங்கை பாவம் தொலைந்த தலம், சந்திரன் பழி நீங்கிய தலம் என்று எண்ணற்ற பெருமைகளைக் கொண்ட தலம் இதுவாகும்.

கைலாயத்தில் ஒருமுறை விநாயகர் சிவபெருமானை வழிபடும் போது இறைவன் கழுத்திலிருந்த பாம்பு விநாயகர் தன்னையும் வணங்குவதாக எண்ணி கர்வமடைந்தது. அதனால் கோபமடைந்த சிவன் நாக இனம் முழுவதும் தன் சக்தி அனைத்தும் இழக்கும்படி சாபமிட்டார். அதனால் உலகைத் தாங்கும் ஆதிசேஷனும், இராகு, கேது மற்ற நாக இனங்களும் தங்கள் சக்தி அனைத்தும் இழந்து அல்லல் பட்டன. சாப விமோசனம் வேண்டி ஈசனைத் துதிக்க இறைவனும் மனமிரங்கி பூவுலகில் சேஷபுரி எனப்படும் திருபாம்புரம் தலத்தில் சிவராத்திரி நாளன்று தம்மை தொழுதால் சாப விமோசனம் கிட்டும் என அருளினார். அவ்வாறே ஆதிசேஷன் தலைமையில் நாகங்கள் சிவராத்திரி முதல் சாமத்தில் கும்பகோணம் நாகேஸ்வரரையும், இரண்டாம் சாமத்தில் திருநாகேஸ்வரம் நாகநாதரையும், மூன்றாம் சாமத்தில் திருபாம்புரம் பாம்புர நாதரரையும், நானகாம் சாமத்தில் நாகூர் நாகநாதரையும் வழிபட்டு சாபவிமோசனம் பெற்றனர்.

ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் இருந்தால், 18 வருட ராகு தசை நடந்தால், 7 வருட கேது தசை நடந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 2ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ஜாதகத்தில் லக்னத்திற்கு 8ல் ராகுவோ அல்லது கேதுவோ இருந்தால், ராகு புக்தி கேது புக்தி நடந்தால், களத்திர தோஷம், புத்திர தோஷம், திருமணம் தடைபடுதல், கனவில் அடிக்கடி பாம்பு வருதல் ஆகிய தோஷங்கள் நீங்க இத்தலத்திற்கு வந்து ஆதிசேஷ தீர்த்தத்தில் நீராடி கோவில் அர்ச்சகர் வழி நடத்தும் வண்ணம் பரிகாரங்கள் செய்து தோஷ நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

எப்படிப் போவது

மயிலாடுதுறை - திருவாரூர் சாலையில் உள்ள பேரளம் என்ற ஊரிலிருந்து மேற்கே 7 கி.மி.தொலைவில் இத்தலம் உள்ளது. கும்பகோணம் - காரைக்கால் சாலை வழிப்பாதையில் கற்கத்தி என்ற இடத்தில் இறங்கி தெற்கே 2 கி.மி. சென்றும் இத்தலத்தை அடையலாம்.

ஆலய முகவரி

அருள்மிகு பாம்பு புரேஸ்வரர் திருக்கோயில்
திருபாம்புரம்
சுரைக்காயூர் அஞ்சல்
குடவாசல் வட்டம்
திருவாரூர் மாவட்டம்
PIN - 612203

இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.


தீர்த்த மலை தீர்த்தங்கள் சிறப்புகள் பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



இறைவன் அருளால் பல்வேறுவிதமான தீர்த்தங்கள் அங்கு இருக்கிறது. இராம தீர்த்தம் கூட அங்கு இருக்கிறது. அகஸ்தியர் என்ற நமது நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. ஹனுமன் நாமத்திலும் தீர்த்தம் இருக்கிறது. இதுபோன்ற தீர்த்தங்கள் எல்லாம் இறைவன் அருளாலே காலகாலம் உருவாக்கப்பட்டு மனிதனின் தீராத கொடிய பிணிகளை தீர்ப்பதற்காக ஏற்படுத்தப்பட்டவைகள். ஆனாலும்கூட இதுபோன்ற இடங்களில் அநாகரீகமான மனிதர்கள் சென்று பல அனாச்சாரங்களில் ஈடுபட்டால் கட்டாயம் இறைவன் அருளை மாற்றிவிடுவார் என்பதை மனிதர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால் இன்றளவும் பரிசுத்த உள்ளத்தோடு சென்று பரிபூரணமான சரணாகதியோடு இறைவனை வணங்கி அந்த தீர்த்தத்தை அருந்த கட்டாயம் நன்மைகள் உண்டு. கொடும் நோய்கள் தீரும். 

செவ்வாய், 20 நவம்பர், 2018

குற்றாலத்தில் அகத்திய பெருமானுக்கு குரு பூஜை விழா-2018




அகத்தியரின் 9 ம் ஆண்டு அன்னதானம்.

வரும் மார்கழி 11 ஆயில்ய நட்சத்திரம்,
டிசம்பர் மாதம் 26ஆம் தேதி புதன் கிழமை [26/12 /2018] குற்றாலகூத்தர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தொடர்ந்து ''அன்னதானம்'' நடைபெறவிருக்கிறது.

பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

அன்னதானதிற்கு அரிசி,பருப்பு,காய்கறி,இதர பொருட்கள் வழங்கயிருப்பவர்கள்.

cell +919976489898. +919715872838 ஐ
தொடர்பு கொள்ளவும்.

அன்னதானதிற்கு பணமாக வழங்க விருப்பமுள்ளவர்கள் .

Pothigai courtallanathar agathiyar annathana trust, 
a/c 023-502-000000304, 
Indian overseas bank, courtallam.

அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம்!