அகத்திய அடியார்களுக்கு வணக்கம்,
அகத்தியர் பெருமான் ஜீவ நாடியில் உரைத்தது
"ஆவணி மாதம் சூர்யன் ஆட்சி இதனுடன் நெருப்பு கிரகமான செவ்வாய் கூடின 10.8.2019 அன்று முதல் காடுகள் நில தலைவனாகிய மால் மாயோன் நிலத்தில் (காடுகளில்) நெருப்பு குற்றம் ,மலை சரிவு கடுமையான பாதிப்புகள் உண்டாக ஏதுவாக வரும் ஓர் திங்கள் இது தொடர அபயம் தரும் மாயோன் திருமாலை போற்றி துதி செய்து கார்மேகனிடம் வேண்டுதல் வையுங்கள்.
ஆவணி திருவோணம் (11.09.2019) மிகவும் நல்ல தருணம். நிலம், நீர் ,நெருப்பு இதிலிருந்து உயிர்களை பயிர்களை தருக்களை காக்க ஏக மனதாக திருமாலை போற்றி சங்கல்பம் செய்து காப்பவன் அருளால் நலம் அடையுங்கள்."
ஆகவே அன்பர்களே இந்த மாதம் முழுவதும் பெருமாள் வழிபாடு செய்து இயற்கையை காக்க சங்கல்பம் வைக்க வேண்டுகிறோம்.மாதம் முழுவதும் வழிபாடு செய்ய இயலாதவர்கள் ஆவணி திருவோணம் (11.09.2019) அன்றாவது பெருமாள் வழிபாடு செய்ய வேண்டுகிறோம்.
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக!!!

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக