செவ்வாய், 28 ஆகஸ்ட், 2018

ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகளின் 183வது குரு பூஜை விழா




திருவாரூரில் தியாகராஜ ஸ்வாமி கோயில் பிரமாண்டத் தேரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் குரு தட்சிணமூர்த்தி ஸ்வாமியின் மடாலயம் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார். இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் கைவரப்பெற்று பல சித்து வேலைகளைப் புரிந்தார். தட்சிணாமூர்த்தி ஸ்வாமி வியாதிகளுடனும் விரக்தியடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் தனது இறுதிகாலத்தில் திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார். சித்தர்கள்ஜீவ சமாதியில் ஆழ்ந்தும்இவ்வையகத்தில் வாழ்ந்து வருபவர்கள் ஆவார்கள் ..அவர்களின் உடல் எக்காலத்திலும் அழிவதில்லை என்பதற்கு ஆதாரமாக இந்த சமாதி பீடம் விளங்குகிறது.. இவரின் சமாதிஇன்னும் மண்ணுக்கு அடியில் மூடப்படாமல் உள்ளது .மடாதிபதி மட்டும் சிறியபடியின் வழியேஉள்ளே இறங்கி பூசை செய்வார் .

குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் பூஜை சிறப்பானது.குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிநண்பகல் 12 மணிக்கு ஜீவசமாதி ஆனதால், அந்த வேளையில் நடக்கும் பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிற்று..

குரு தட்சிணாமூர்த்தி சாமிகளின் பிறப்பு : திருச்சிக்கு அருகே உள்ள சிற்றுõர் கீழாலத்துõர். இங்கே சிவசிதம்பரம் பிள்ளை -மீனாம்பிகை தம்பதிகள்வசித்தனர். பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர் சிவசிதம்பரம் பிள்ளை. இந்தத் தம்பதிக்கு மக்கட்பேறு அமையவில்லை. எனவே பல தலங்களையும் தரிசித்து வந்தனர். ஒருமுறை இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். அங்கே மலையுருவாகத் திகழும் மகாதேவனை வழிபட்டு கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர். இரவுப் பொழுதில் அங்கேயே தங்கினர். அன்றிரவு இருவரின் கனவிலும் அண்ணாமலையார் தோன்றி நானே உங்களுக்கு குழந்தையாகப் பிறப்பேன்என்று அருளினார்.

அடுத்த நாள் காலை கோயில் சென்று ஆண்டவனுக்கு நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர். கனவு கண்டது போல் . மீனாம்பிகை அம்மையார் மணிவயிறு வாய்க்கப் பெற்றார். 10 மாதங்கள் கழித்து நல்ல ஆண் மகனை ஈன்றெடுத்தார். திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் அருணாசலம் என்றே சிசுவுக்கு நாமகரணம் சூட்டினர். இவர்தான் பின்னாளில்குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என அறியப்பட்டார். குழந்தைகளுக்கே உண்டான சில குணங்களையும் தாண்டி அருணாசலம் வளர்ந்தான். சில நேரங்களில் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரங்களில் மவுனம் அனுஷ்டித்து எதையோவெறித்துப் பார்த்தபடி இருப்பான். அருணாசலத்தின் நிலைமை குறித்துப் பெற்றோர் கவலைப்பட்டனர். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசவில்லை . இந்த நிலையில் ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் காவி உடை உடலெங்கும் திருநீறு. கழுத்தை அலங்கரிக்கும் ருத்திராட்ச மாலைகள் அணிந்த துறவி ஒருவர் வந்தார் .. சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவனடியாரிடம் , தவம் இருந்து பெற்ற எங்கள் புதல்வன் அருணாசலம் பேசாமல் இருக்கிறான். ஏன் ஸ்வாமி ? என்று கேட்டார்.அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்டார் துறவி.

உடனே துறவியை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை அருணாசலத்தைக் காட்டினார். அப்போது அந்தப் பிள்ளை கண்களை மூடியபடி தியானத்தில் திளைத்திருந்தது. துறவியார் மெல்லப்புன்னகைத்தார். பிறகு சிவசிதம்பரம் பிள்ளையை நோக்கி இந்தப் பிள்ளை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்த செல்வம். இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அவதாரம் எடுத்திருக்கிறது. இப்போது உங்கள் புதல்வனுடன் பேசிப் பாருங்களேன் என்றார். சிவசிதம்பரம் பிள்ளையோ குரல் தழுதழுக்க குழந்தாய் அருணாசலம், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்காய்? பேசப்பா, உன் மழலை மொழியைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார். அவ்வளவுதான் 5 வருடங்களாகப் பேசாமல் இருந்த அந்த இறைவனின் அவதாரம் முதன்முதலாகப் பேசியது சும்மா இருக்கிறேன். சரிப்பா, சும்மா இருக்கிறாயா, நீ யார்? என்றார் துறவி. மூடிய கண்களைத் திறக்காமலேயே புன்னகையோடு “நீயேதான் நான், நானேதான் நீ ”என்று சுருக்கமாகப் பதில் சொன்னது குழந்தை. உனது பதில் சத்தியம் நான் புறப்படுகிறேன். என்ற துறவி விடைபெற்றார். பெற்றவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.

சாமிகள் தமது வாழ்நாளில்பல ஊர்களுக்கும் பயணித்து பல அற்புதங்களை நிகழ்த்தி இருக்கிறார் ... நீலப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி, முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதங்களை நிகழ்த்தினர். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாட்கள் இருந்தார். இறுதியாக திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்தார்.அங்கே சோமநாத ஸ்வாமி கோயில் அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றின் படுகையிலும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களின் அடியிலும் தங்கி இருந்த நாட்களைக் கழித்தார். பெரும்பாலான நேரத்தை தவம் இருப்பதில் செலவிட்டார். பசிக்கும்போது சாலையில் இறங்கி அங்கே உணவு யாசித்தார். எது கிடைத்ததோ அதை உண்டு வந்தார். சித்துõர் மாவட்டத்தில் வசித்து வந்த சோமநாத முதலியார் பெரும் செல்வந்தர். வயிறு சம்பந்தமான நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்காத வைத்தியர் இல்லை. சாப்பிடாத மூலிகை இல்லை என்றாலும் பலன் இல்லை. இறுதியாக யாரோ சிலர் சொன்னதன் பேரில் நடராஜ பெருமானைத் தரிசிக்க சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி கோயிலில் உள்ள மூர்த்திகளை வணங்கி உணவே எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்கத் தொடங்கினார்.2 நாட்கள் சென்றன. முதலியாருக்கு நடராஜ பெருமாளின் அருள் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் காலை வேளையில் ஒரு முடிவெடுத்தார். இன்றைக்குள் எனது நோய் குணமாகவில்லை என்றால் இரவில் நடராஜரின் சன்னிதி முன்னாலேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து. கூர்மையான கத்தி ஒன்றைத் தன் இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டார்.

இரவுவேளை நடராஜருக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர் பணி முடிந்ததும் சன்னிதியைப் பூட்டிவிட்டு வெளியேறினார். அப்போது துõண் மறைவில் இருந்த முதலியார் வெளியே வந்தார். தில்லைப் பெருமானே என் வேண்டுகோளுக்கு நீ இணங்கவில்லை. ஆகவே நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றபடி கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. சன்னிதியில் இருந்த ஓர் அசரீரி வாக்கு. அப்பனே உனது நோய் இங்கே குணமாகாது. திருவாரூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்தால் அந்தக் கணமே குணமாவாய் என்று ஒலித்தது.. மனம் மகிழ்ந்த முதலியார் மறுநாள் அதிகாலையே திருவாரூர் புறப்பட்டார். தியாகராஜ பெருமானின் கோயில் அடைந்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். இரவு வரையில் சன்னிதியிலேயே அமர்ந்து தியானித்தார். அப்போதும் அவரது நோய் குணமாகவில்லை. அப்படியே உறங்கிவிட்டார்.

அப்போது நடராஜ பெருமான் அவரது கனவில் தோன்றி அப்பனே, நாம் உனக்கு அடையாளம் சொன்ன தட்சிணாமூர்த்தி இவர் அல்லர். இதே ஊரில் ஒருவன் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் செல் என்றார். அதன்படி அடுத்த நாள் காலையில் அலைந்து திரிந்து நடராஜ பெருமான் கனவில் சொன்ன தட்சிணாமூர்த்தியைக் (ஸ்வாமிகள்) கண்டுபிடித்தார் முதலியார். பிறகு ஸ்வாமி கொடுத்த பிரசாதத்தை உட்கொண்டார். அந்தக் கணமே முதலியாரைப் பிடித்திருந்த வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. ஆனந்தம் மேலிட, ஸ்வாமியைப் பலவாறு துதித்து பழம் முதலிய பொருட்களைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமானால் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டதால் அருணாசலம் என்கிற ஸ்வாமி. அதன்பிறகு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்றே வழங்கப்படலானார்.இவர் 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்..

மடாலயம் என்றாலும் மிகப்பெரிய கோயிலாகவே திகழ்கிறது. பலிபீடம், நந்திதேவர் பிராகாரம் என்று விஸ்தாரமாகவே இருக்கிறது மடாலயம் மணி ஒசையும் மத்தள முழக்கமும் சேர பூஜைகள் நடக்கின்றன. இந்த மத்தளத்தை வழங்கியவர் சரபோஜி மன்னர். அதுபோல் ஜீவசமாதியில் இருக்கும் லிங்கத் திருமேனிக்கு அணிவிக்கப்படும் பதக்கத்தையும் இந்த மன்னரே வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு பெருந்திரளான கூட்டம் வருகிறது. பகல் முழுதும் பூஜைகளைத் தரிசித்து அன்று இரவு தங்கி மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஆவணி மாத உத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. வருடாந்திர வைபங்கள் அனைத்தும் இங்கு குறைவில்லாமல் நடந்து வருகின்றன. தற்போது தவத்திரு குமாரனந்த ஸ்வாமி மற்றும் தவத்திரு பிரமானந்த ஸ்வாமி ஆகிய இருவரும் பட்டத்தில் உள்ள இரு குரு மகா சன்னிதானங்கள் ஆவார்கள். 1984 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் பட்டத்தில் இருந்து வருகிறார்கள். மகான்கள் பிறக்கிறார்கள். மக்களின் சுக துக்கங்களுக்காக தங்களை வருத்திக்கொண்டே வாழ்க்கிறார்கள். மகான்களின் ஜீவன் ஒரு கட்டத்தில் அடங்குதல் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் எங்கும் வியாபித்து தங்களது இன்னருளை இந்தப் பூவுலகுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பரிபூரணமான ஒரு சாட்சி திருவாரூர் குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிதான்.

மடப்புரம் என்பதே திருவாரூர் நகரத்தின் ஒரு பகுதி. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே மடப்புரம் இருக்கிறது.மிகவும் அருமையாக இருக்கிறது.. சமாதியின் பின்புறம் அமர்ந்து தியானம் செய்ய அருமையான அனுபவங்களை பெறலாம் .

திருவாரூரில் ஸ்ரீ தியாகராஜ ஸ்வாமி கோயில் பிரமாண்டத் தேவரும் கமலாலயத் திருக்குளமும் பிரசித்தி பெற்றவை. திருவாரூரின் அடையாளம் சொல்பவை. திருவாரூருக்கு இன்னோர் அடையாளமும் இருக்கிறது. அதுதான் ஸ்ரீகுரு தட்சிணமூர்த்தி ஸ்வாமியின் மடாலயம் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி இங்கே ஜீவசமாதி கொண்டுள்ளார். இறை அருளால் இளம் பிராயத்திலேயே ஞானம் கைவரப்பெற்று பல சித்து வேலைகளைப் புரிந்தார். தட்சிணாமூர்த்தி ஸ்வாமி வியாதிகளுடனும் விரக்தியடனும் வாழ்ந்தவர்களை நல்வழிப்படுத்தினார். நாட்டின் பல பகுதிகளுக்கும் பயணித்த இவர் தனது இறுதிகாலத்தில் திருவாரூரை வந்தடைந்தார். அங்கே மடப்புரம் பகுதியில் ஓடம்போக்கி ஆற்றின் கரையில் அமர்ந்து கிடைத்ததை உண்டு நாட்களை நகர்த்தியவர். 1835 ஆம் ஆண்டு ஜீவசமாதி ஆனார்.

ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி ஜீவசமாதியான இடத்தின் மேலே ஒரு சிவலிங்கம் ஸ்தாபிக்கப்பட்டு தினமும் வழிபாடுகள் நடந்து வருகின்றன. இதில் நண்பகல் 12 மணிக்கு நடக்கும் பூஜை சிறப்பானது. ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி நண்பகல் 12 மணிக்கு ஜீவசமாதி ஆனதால், அந்த வேளையில் நடக்கும் பூஜையும் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாயிற்று. திருவாரூரில் வசிக்கும் ஆன்மிகப் பெருமக்கள் பலர் இந்த பூஜையைத் தரிசிக்க தவறுவதில்லை. சாதுக்கள் மடம் என்பதால் நாட்டில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சாதுக்கள் அதிகம் வந்து போகிறார்கள். இந்த மடாலயத்துக்கு சாதுக்கள் மட்டுமே பூஜை செய்ய முடியும். மடாலயத்தின் சார்பாக பூந்தோட்டம் ஒன்றும் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. இங்கு மலரும் பூக்களை சாதுக்களே பறித்து அவற்றை மாலைகøளாகக் கட்டி அணிவித்து வருகிறார்கள்.

குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி எப்படி இருப்பார் என்றெல்லாம் அறிந்து கொள்வதற்கு அவரது புகைப்படங்கள் இன்று இல்லை. என்றாலும் புலித்தோலின் மேல் அவர் அமர்ந்திருப்பது போன்ற ஒரு திருவுருவத்தையே பக்தர்கள் வணங்கி வருகிறார்கள். ஆசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்வாமியின் வலக்கால் சற்று நீண்டு தரையில் பதிந்திருக்க. அதன் மேல் தன் இடக்காலை வைத்து அதாவது கால் மேல் கால் வைத்த கோலத்தில் காணப்படுகிறார். இடக்கை வலது தொடையைத் தொட்டவாறும் வலக்கை சின் முத்திரை காண்பித்தவாறும் திகழ்கின்றன. ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் வாழ்க்கைச் சரிதத்தை மெள்ளப் புரட்டுவோம். திருச்சிக்கு அருகே உள்ள சிற்றூர் கீழாலத்தூர். இங்கே சிவசிதம்பரம் பிள்ளை மீனாம்பிகை தம்பதியர் வசித்தனர். பக்தியிலும் கல்வியிலும் சிறந்து விளங்கியவர் சிவசிதம்பரம் பிள்ளை. இந்தத் தம்பதிக்கு மக்கட்பேறு அமையவில்லை. எனவே பல தலங்களையும் தரிசித்து வந்தனர்.

ஒருமுறை இருவரும் திருவண்ணாமலைக்குச் சென்றனர். அங்கே மலையுருவாகத் திகழும் மகாதேவனை வழிபட்டு கோயிலுக்குள் சென்று அண்ணாமலையாரையும் உண்ணாமுலை அம்மனையும் தரிசித்தனர். இரவுப் பொழுதில் அங்கேயே தங்கினர். அன்றிரவு இருவரின் கனவிலும் அண்ணாமலையார் தோன்றி குழந்தையே இல்லாத உங்களது குறையைப் போக்க நானே குழந்தையாக உங்களுக்குப் பிறப்பேன். நீங்கள் ஊருக்கு சந்தோஷத்துடன் புறப்படுங்கள் என்று அருளினார். இருவரும் விழித்துக் கொண்டனர். தங்களுக்கு வந்த இனிமையான கனவைப் பகிர்ந்து கொண்டனர். அண்ணாமலையாரின் அருள் திறனை நினைத்து வியந்தனர். அடுத்த நாள் காலை கோயில் சென்று ஆண்டவனுக்கு நன்றி கூறிவிட்டுத் தங்கள் ஊருக்குத் திரும்பினர். கனவு பலித்தது. மீனாம்பிகை அம்மையார் மணிவயிறு வாய்க்கப் பெற்றார். 10 மாதங்கள் கழித்து நல்ல ஆண் மகனை ஈன்றெடுத்தார். திருவண்ணாமலை ஈசனின் அருளால் பிறந்தமையால் அருணாசலம் என்றே சிசுவுக்கு நாமகரணம் சூட்டினர். (இவர்தான் பின்னாளில் ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என அறியப்பட்டார்.) நன்றாகவே வளர்ந்து வந்தான் குழந்தை. இரண்டாண்டுகள் கழித்து மீனாம்பிகை அம்மையார் மீண்டும் கருவுற்று இன்னொரு சத்புத்திரனைப் பெற்றெடுத்தார். அவனுக்கு நமசிவாயம் என்று பெயர் சூட்டி இருவரையும் கண்ணும் கருத்துமாக வளர்த்து வந்தனர்.

குழந்தைகளுக்கே உண்டான சில குணங்களையும் தாண்டி அருணாசலம் வளர்ந்தான். சில நேரங்களில் பத்மாசனம் போட்டு நிஷ்டையில் இருப்பான். சில நேரங்களில் மவுனம் அனுஷ்டித்து எதையோவெறித்துப்பார்த்தபடிஇருப்பான். அருணாசலத்தின் நிலைமை குறித்துப் பெற்றோர் கவலைப்பட்டனர். பிறந்த குழந்தை 5 வயதாகியும் பேசாமலேயே இருந்தால் பெற்றோர் கலங்க மாட்டார்களா? இந்த நிலையில் ஒருநாள் அவர்களது வீட்டுக்குத் துறவி ஒருவர் எழுந்தருளினார். காவி உடை உடலெங்கும் திருநீறு. கழுத்தை அலங்கரிக்கும் ருத்திராட்ச மாலைகள். அண்ணாமலையாரே தன் இல்லத்தில் எழுந்தருளினாரே என்று அதிசயித்த சிவசிதம்பரம் பிள்ளை வந்திருந்த சிவயோகியாரின் முன் கைகட்டி வாய் பொத்தி பணிவுடன் நின்றார். தவம் இருந்து பெற்ற எங்கள் புதல்வன் அருணாசலம் பேசாமல் இருக்கிறான். அவனது துவாய்மலர்ந்துவார்த்தை முத்துக்கள் உதிர்வதற்காக காத்திருக்கிறோம். ஆனால் அது கைகூடவில்லையே, ஏன் ஸ்வாமி? என்று கண்கள் பனிக்கக் கேட்டார்.

அப்படியா? அந்தக் குழந்தையைப் பார்க்கலாமா? என்று கேட்டார் துறவி. உடனே துறவியை வீட்டின் உள்ளே அழைத்துச்சென்ற சிவசிதம்பரம் பிள்ளை தன் மூத்த பிள்ளை அருணாசலத்தைக் காட்டினார். அப்போது அந்தப் பிள்ளை கண்களை மூடியபடி தியானத்தில் திளைத்திருந்தது. துறவியார் மெள்ளப் புன்னகைத்தார். பிறகு சிவசிதம்பரம் பிள்ளையை நோக்கி இந்தப் பிள்ளை தெய்வ அனுக்கிரகத்தால் பிறந்த செல்வம். இந்த உலகத்தில் உள்ளோர் நற்கதி அடைவதற்காக அவதாரம் எடுத்திருக்கிறது. நன்றாகவே பேசும். இப்போது உங்கள் புதல்வனுடன் பேசிப் பாருங்களேன் என்றார். சிவசிதம்பரம் பிள்ளையோ குரல் தழுதழுக்க குழந்தாய் அருணாசலம், ஏன் கண்களை மூடிக் கொண்டிருக்காய்? பேசப்பா, உன் மழலை மொழியைக் கேட்க நாங்கள் ஆர்வமாக இருக்கிறோம் என்றார். அவ்வளவுதான் 5 வருடங்களாகப் பேசாமல் இருந்த அந்த இறைவனின் அவதாரம் முதன்முதலாகப் பேசியது சும்மா இருக்கிறேன். சரிப்பா, சும்மா இருக்கிறாயா, நீ யார்? என்றார் துறவி. மூடிய கண்களைத் திறக்காமலேயே புன்னகையோடு நீயேதான் நான், நானேதான் நீ என்று சுருக்கமாகப் பதில் சொன்னது குழந்தை. சந்தோஷம். உனது பதில் சத்தியம் நான் புறப்படுகிறேன். என்ற துறவி விடைபெற்றார். பெற்றவர்கள் புளகாங்கிதம் அடைந்தனர்.

சிறுவன் அருணாசலம் சொன்ன வார்த்தைகள் எத்தனை அர்த்தம் பொதிந்தவை என்பதை இங்கே கவனிக்க வேண்டும். துறவியாக வந்தவர் திருவண்ணாமலையில் வாழும் அண்ணாமலையாரே, நீயேதான் நான், நானேதான் நீ என்றால் அண்ணாமலையாரின் திரு அவதாரமே ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்பது விளங்குகிறது. அல்லவா? ஒரு குழந்தையா இப்படிப் பேசுகிறது? இப்படி செய்கிறது என்று பார்ப்பவர்கள் வியக்கும் வண்ணம் இருந்தது தட்சிணாமூர்த்தியின் செயல்கள். ஒருநாள் காலை வேளையில் சிவசிதம்பரம் பிள்ளை தன் துணைவியாரிடம் நான் திருச்சிக்குப் போய் தாயுமானவரைத் தரிசித்து வருகிறேன் என்று வீட்டை விட்டுப் புறப்பட இருந்த நேரம். அருணாசலம் அவரை எதிர்கொண்டான். ஐயா, இன்னும் சற்று நேரத்தில் உம்மைப் பார்ப்பதற்காக உறவுக்காரர்கள் இருவர் இங்கே வர இருக்கிறார்கள். எனவே உமது பயணத்தை ஒத்தி வைப்பது நல்லது என்றான். பிள்ளையின் கீர்த்தி தெரிந்திருந்ததால் தந்தையும் பயணத்தை தள்ளி வைத்தார். சொல்லி வைத்தாற்போலவே உறவுக்காரர்கள் அவர்களது வீட்டுக்குள் காலடி எடுத்து வைத்தனர். இதுபோல பல விஷயங்களைத் தன் ஞான திருஷ்டியால் பலருக்கும் சொன்னார் தட்சிணாமூர்த்தி ஸ்வாமி.

ஒருமுறை பள்ளியில் சுவடிகளைத் தனக்கு முன்பாக வைத்துக்கொண்டு கண்களை மூடி தியானத்தில் இருந்தார் ஸ்வாமி. அப்போது அவரது ஆசிரியர் அருகே வந்து தம்பி கண்களை மூடிக்கொண்டு அமர்ந்திருக்கிறாயே, பாடங்களைப் படித்துவிட்டாயா? என்று கேட்டார். படித்தாயிற்று என்றார் ஸ்வாமி. சந்தேகப்பட்ட ஆசிரியர் எங்கே படித்ததைச் சொல். கேட்கிறேன் என்று சொல்ல சுவடியைப் பார்க்காமலேயே பாடங்களை அனைத்தையும் கடகடவென ஒப்புவித்தார் ஸ்வாமி அதன்பிறகு பாலகனான ஸ்வாமியின் மேல் ஆசிரியருக்கு மதிப்பு கூடியது. இதே போன்ற சம்பவம் இன்னொரு நாளும் நிகழ்ந்தது. ஒரு நாள் வகுப்பில் ஆசிரியர் இருக்கும்போது அவரைப் பார்த்து ஸ்வாமி, உங்கள் குழந்தை வீட்டுத் திண்ணையில் இருந்து கீழே விழுந்துவிட்டதால் கை முறிந்துவிட்டது. உடனே போய்ப் பாருங்கள் என்றார். ஆசிரியர் பதற்றத்துடன் வீட்டுக்கு ஓடினார். வழியிலேயே அவரது வீட்டு வேலையாள் ஓடிவந்து ஸ்வாமி சொன்ன அதே விஷயத்தைக் கூறினான். உடனே இருவரும் ஓடிச்சென்று சற்றும் தாமதியாமல் குழந்தைக்கு வேண்டிய சிகிச்சைகளை செய்தனர். அதன்பின் பள்ளிக்கு வந்த ஆசிரியர் ஸ்வாமியின் முன் பவ்யமாகக் கைகட்டி நின்றார். ஆசிரியரை அவரது இருக்கையில் அமருமாறு ஸ்வாமி எவ்வளவோ கேட்டுக்கொண்டும் மறுத்துவிட்டார். ஆசிரியர். மரியாதைக்கும் அபாரமான ஞானத்துக்கும் உரியவரான தங்களின் முன்னால் நான் அமர்ந்திருப்பது தகாது என்று கூறினார். இந்த நிலை தொடர்ந்ததால் ஒரு கட்டத்தில் பள்ளிக்குச் செல்வதையே நிறுத்திவிட்டார் ஸ்வாமி. எனவே அவர் பள்ளிக்குச் சென்றது வெறும் 3 மாதமே.

கீழாலத்தூரை அடுத்த ஒரு சிற்றூரில் ஸ்வாமி இருந்தபோது ஆராவமுத ஐயங்கார் என்பவர் தன் துனைவியார் லட்சுமி அம்மாளுடன் ஸ்வாமியைத் தரிசிக்க வந்தார். ஐயங்காருக்கு இருந்த ஒரே குறை அவருக்கு மழலை பாக்கியம் இல்லாமல் இருந்ததுதான். அரங்கநாதப் பெருமான் அவர்களது கனவில் ஒருநாள் தோன்றி தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் அடையாளங்களைச் சொல்லி அந்த சித்த புருஷனின் அனுக்கிரகத்தால் உங்களுக்குக் குழந்தை பிறக்கும் என்று அருளினார். அதன்படி ஐயங்காரும் அவர் மனைவியும் ஸ்வாமிகளைச் சந்தித்து அவருக்குப் பணிவிடைகள் செய்தனர். இதை அடுத்த லட்சுமி அம்மாளுக்கு அழகான ஆண் மகவு பிறந்தது. இதன் பிறகும் அவ்வப்போது இருவரும் குழந்தையுடன் வந்து ஸ்வாமியை சந்தித்து ஆசி பெற்றுத் திரும்புவது வழக்கம். ஒருநாள் தொட்டிலில் குழந்தை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த காரணத்தால் தம்பதி ஸ்வாமியை தரிசிக்கச் சென்றனர். தன்னைத் தரிசிக்க வந்த ஐயங்காரிடம் உங்கள் வீட்டில் தீப்பிடித்துக் கொண்டுள்ளது. குழந்தையை வேறு தொட்டிலில் போட்டுவிட்டு வந்துள்ளீர்கள். விரைவாகச் சென்று குழந்தையைக் காப்பாற்றுங்கள் பயப்பட வேண்டாம். குழந்தை சுகமாகத்தான் இருக்கிறது என்றார்.

தம்பதி வீட்டை நோக்கி ஓடினார்கள். அதே நேரத்தில் ஸ்வாமியின் திருவருளும் அங்கே அரங்கேறியது. பூட்டப்பட்ட ஐயங்காரது வீட்டில் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. வீட்டின் உள்ளே எப்படிச் செல்வது என்று ஊர்க்காரர்கள் குழம்பிய நேரத்தில் உடலெங்கும் திருநீறு பூசி ஒரு சாமியார் அங்கே வந்தார். வெறும் கோவணம் மட்டுமே அணிந்திருந்த அவர் அந்தத் தீயின் மத்தியில் விட்டுக்குள் சென்ற தொட்டிலில் இருந்த குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார். அங்கே இருந்த ஒரு பெண்ணிடம் பாலகனைப் பத்திரமாகக் கொடுத்துவிட்டு கூட்டத்தில் கலந்து மறைந்தார். எல்லாம் நடந்து முடிந்தவுடன் ஐயங்கார் தம்பதி அரக்கப் பரக்கத் தங்கள் வீட்டுக்கு வந்தனர். எங்களது செல்ல மகனுக்கு என்ன ஆயிற்று என்று இருவரும் பதைபதைத்தபோது குழந்தையை அவர்களிடம் தந்தாள் அந்தப் பெண்மணி. கூடவே ஒரு சாமியார் வந்து குழந்தையைக் காப்பாற்றி தன்னிடம் கொடுக்கச் சென்றதையும் கூறினாள். அப்போதுதான் ஐயங்கார் தம்பதி நடந்த சம்பவத்தை உணர்ந்தனர். தங்கள் வீட்டுக்கு வந்து தன் அருளால் பிறந்த பாலகனை அவரே காப்பாற்றிவிட்டுச் சென்றிருக்கிறார் என்பதை அறிந்து இருந்த இடத்தில் இருந்தே அவருக்குத் தங்கள் நன்றியைத் தெரிவித்தனர். அதோடு வைணவ சம்பிரதாயத்தைச் சேர்ந்த அந்தக் குழந்தைக்கு ஸ்வாமியின் அருணாசலம் என்ற பெயரையே சூட்டினர்.

பல ஊர்களுக்கும் பயணித்த ஸ்வாமி பழங்களத்தூர் என்ற சிற்றூரை அடைந்தார். அங்கே நதிக்கரை ஓரமாக ஸ்வாமி நடந்து கொண்டிருந்த போது ஓர் அன்பர் எதிர்ப்பட்டார். ஏதோ கவலை நிறைந்த முகத்துடன் காணப்பட்ட அந்த அன்பர் ஸ்வாமியைப் பார்த்ததும் அவரது கால்களில் விழுந்து நமஸ்கரித்தார். அன்பரின் சோகம் ததும்பும் முகத்தைப் பார்த்த ஸ்வாமி சொல் என்பது போல் தலையை அசைத்தார். அந்த அன்பர் ஸ்வாமி என் மனைவிக்கு இது பிரசவ நேரம். உரிய நேரம் கடந்த பிறகும் கடந்த நான்கு தினங்களாக குழந்தையைப் பிரசவிக்க முடியாமல் அவஸ்தைப்படுகிறாள். இதை பார்க்க வேதனையாக இருக்கிறது. தாய்க்கும் சேய்க்கும் ஏதேனும் ஆபத்து நிகழுமோ என்று என் மனம் சஞ்சலப்படுகிறது. அப்படி எதேனும் நிகழ்ந்துவிட்டால், நானும் உயிரோடு இருக்க மாட்டேன் என்று புலம்பி அவரது திருவடிகளில் விழுந்தார். அப்பனே எழுந்திரு. கவலைப்படாதே. நீ உன் வீடு செல்வதற்கு முன் அங்கே சுகப் பிரசவம் ஆகி ஆண் குழந்தை பிறந்திருக்கும். தாய்க்கும் குழந்தைக்கும் எந்த ஆபத்து இல்லை என்று சொல்ல அந்த அன்பர் பேரானந்தத்துடன் வீட்டுக்கு ஓடினார். அங்கே அவருடைய மனைவிக்கு ஆண் குழந்தை பிறந்திருந்தது. ஸ்வாமியின் அருள் வாக்குப்படி தாயும் சேயும் நலமாக இருந்தனர். அந்த அன்பர் ஏகத்துக்கும் மகிழ்ந்து ஸ்வாமியைத் தான் சந்தித்த இடத்துக்கு மீண்டும் வந்து அவரைத் தரிசித்து நமஸ்கரித்தார். அதோடு ஸ்வாமியின் பெருமைகளைப் பற்றி ஊர் மக்களிடம் எடுத்துரைக்க பலரும் அங்கே கூட ஆரம்பித்தனர்.

ஸ்வாமி அங்கிருந்து புறப்பட்டு நீலப்பாடி, சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, திருப்பதி, முதலிய தலங்களுக்குச் சென்று ஆங்காங்கே பல அற்புதங்களை நிகழ்த்தினர். திருப்பதியில் இருந்து புறப்பட்டு சென்னையை அடைந்தார். திருவொற்றியூரில் பட்டினத்தாரின் சமாதி அருகே சில நாட்கள் இருந்தார். புத்தி ஸ்வாதீனம் இல்லாத ஒரு பெண்ணுக்கு இங்கே அருள் புரிந்தார். பல வருடங்களாகப் பெற்றோருக்கு இம்சையாக இருந்த அந்தப் பெண் ஸ்வாமியின் அருளால் நலம் பெற்றாள். திருவொற்றியூரில் இருந்து புறப்பட்ட ஸ்வாமி, மயிலாப்பூர். திருக்கழுக்குன்றம். சிதம்பரம் காரைக்கால், நாகப்பட்டினம் என்று பயணித்தார். நாகப்பட்டினத்தில் சில காலம் தங்கி இருந்தார். அப்போது அங்கே வசித்த அன்பர் ஒருவர் ஸ்வாமிக்குத் தினமும் தன் வீட்டில் இருந்து உணவு கொடுத்து வந்தார். ஒருநாள் அவரால் உணவு எடுத்து வர முடியாமல் போகவே தன் மகனிடம் கொடுத்து அனுப்பினார். உணவு எடுத்துக்கொண்டு மகன் செல்லும் வழியில் கொடிய பாம்பு ஒன்று அவனைத் தீண்டிவிட்டது. ஸ்வாமி, உங்களுக்கு உணவு கொண்டு வந்த என்னைப் பாம்பு கடித்துவிட்டதே என்று அலறி பேச்சு மூச்சில்லாமல் தரையில் சரிந்தான். இந்த நேரத்தில் தான் இருந்த இடத்தில் இருந்தே நடந்ததை அறிந்த ஸ்வாமி கொடிய நாகத்தின் பிடியில் சிறுவன் சிக்கிவிட்டான் பாவம். அவனை உடனே காப்பாற்று, விரைந்து செல் என்று ஒரு கீரிப்பிள்ளைக்கு உத்தரவிட்டார். அந்த நேரத்தில் ஸ்வாமியுடன் இருந்தவர்கள் எங்கோ ஆபத்தில் இருக்கும் ஒருவருக்கு உதவ உத்தரவிடுகிறார் போலிருக்கிறது என்று புரிந்து அமைதியானார்கள்.

அதே நேரத்தில் சிறுவன் மயங்கி விழுந்து கிடந்த இடத்தருகே விரைந்தோடி வந்த கீரிப்பிள்ளை ஒன்று நகர்ந்து கொண்டிருந்த பாம்பைக் கடித்துக் கண்டதுண்டம் ஆக்கியது. இதற்குள் மகன் பாம்பு கடித்து மூர்ச்சை ஆகிக் கிடக்கும் செய்தியை அறிந்த தந்தை ஓடோடி வந்தார். ஸ்வாமிக்கு எடுத்துச் சென்ற பலகாரங்கள் ஒருபுறம் விழுந்து கிடக்க மறுபுறம் மகன் பேச்சு மூச்சிலாமல் கிடக்கும் கோலம் கண்டார். அவனை வாரி எடுத்துக்கொண்டு வந்து ஸ்வாமியின் முன் கிடத்தினார். பிறகு கண்ணீருடன் ஸ்வாமி, என் மகனை சர்ப்பம் தீண்டிவிட்டது. என் செல்வனைத் தாங்கள்தான் காப்பற்ற வேண்டும் என்று பிரார்த்தித்தார். ஸ்வாமிகள் புன்னகைத்தார். கவலைப்படாதே உன் மகனுக்கு எந்த ஆபத்து இல்லை என்றவர் சிறுவனின் சிரசில் தன் திருக்கரத்தால் தடவினார். அடுத்த கணமே அவன் உடலில் இருந்த விஷம் இறங்கியது. சிறுவன் இதுவரை நடந்தவை ஏதும் அறியாதவனாக மெள்ள எழுந்தான். ஸ்வாமிகளை வணங்கினான். பாம்பு கடித்து இறந்து போன சிறுவனை மீண்டும் உயிர்ப்பித்த தகவல் அறிந்து பலரும் அவரின் அருள் பெற தேடி வந்தனர். கூட்டம் பெருத்து வருவதைக் கண்ட ஸ்வாமி, அங்கிருந்து புறப்பட்டு திருவாரூர் வன்மீகபுரத்தை அடைந்தார்.

அங்கே சோமநாத ஸ்வாமி கோயில் அருகே உள்ள ஓடம்போக்கி ஆற்றின் படுகையிலும் ஆற்றங்கரையில் உள்ள மரங்களின் அடியிலும் தங்கி இருந்த நாட்களைக் கழித்தார். பெரும்பாலான நேரத்தை தவம் இருப்பதில்செலவிட்டார். பசிக்கும்போது சாலையில் இறங்கி எங்கு தோன்றியதோ அங்கே உணவு யாசித்தார். எது கிடைத்ததோ அதை உண்டு வந்தார். சித்தூர் மாவட்டத்தில் வசித்து வந்த சோமநாத முதலியார் பெரும் செல்வந்தர். பணம் இருந்தால் போதுமா? அதை ஆண்டு அனுபவிக்க உடல்நலம் நன்றாக இருக்கவேண்டாமா? சோமநாத முதலியார் வயிறு சம்பந்தமான நோயால் பெரிதும் பாதிக்கப்பட்டிருந்தார். பார்க்காத வைத்தியர் இல்லை. சாப்பிடாத மூலிகை இல்லை என்றாலும் பலன் இல்லை. இறுதியாக யாரோ சிலர் சொன்னதன் பேரில் நடராஜ பெருமானைத் தரிசிக்க சிதம்பரம் வந்து சேர்ந்தார். அங்கு சிவகங்கை தீர்த்தத்தில் நீராடி கோயிலில் உள்ள மூர்த்திகளை வணங்கி உணவே எடுத்துக் கொள்ளாமல் விரதம் இருக்கத் தொடங்கினார்.

2 நாட்கள் சென்றன. முதலியாருக்கு நடராஜ பெருமாளின் அருள் கிடைக்கவில்லை. மூன்றாம் நாள் காலை வேளையில் ஒரு முடிவெடுத்தார். இன்றைக்குள் எனது நோய் குணமாகவில்லை என்றால் இரவில் நடராஜரின் சன்னிதி முன்னாலேயே என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று தீர்மானித்து. கூர்மையான கத்தி ஒன்றைத் தன் இடுப்பில் மறைத்து வைத்துக்கொண்டார். இரவுவேளை நடராஜருக்குக் கைங்கர்யம் செய்யும் அர்ச்சகர் பணி முடிந்ததும் சன்னிதியைப் பூட்டிவிட்டு வெளியேறினார். அப்போது தூண் மறைவில் இருந்த முதலியார் வெளியே வந்தார். தில்லைப் பெருமானே என் வேண்டுகோளுக்கு நீ இணங்கவில்லை. ஆகவே நான் என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். எனக்கு வேறு வழி தெரியவில்லை என்றபடி கத்தியை எடுத்துக் கழுத்தை அறுத்துத் தற்கொலை செய்ய முயன்றபோது அந்த அதிசயம் நிகழ்ந்தது. சன்னிதியில் இருந்த ஓர் அசரீரி வாக்கு. அப்பனே உனது நோய் இங்கே குணமாகாது. திருவாரூருக்குச் சென்று தட்சிணாமூர்த்தியிடம் பிரார்த்தனை செய்தால் அந்தக் கணமே குணமாவாய் என்று ஒலித்தது.. மனம் மகிழ்ந்த முதலியார் மறுநாள் அதிகாலையே திருவாரூர் புறப்பட்டார். தியாகராஜ பெருமானின் கோயில் அடைந்தார். அங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தார். இரவு வரையில் சன்னிதியிலேயே அமர்ந்து தியானித்தார். அப்போதும் அவரது நோய் குணமாகவில்லை. அப்படியே உறங்கிவிட்டார்.

அப்போது நடராஜ பெருமான் அவரது கனவில் தோன்றி அப்பனே, நாம் உனக்கு அடையாளம் சொன்ன தட்சிணாமூர்த்தி இவர் அல்லர். இதே ஊரில் ஒருவன் நிர்வாணமாகத் திரிந்து கொண்டிருக்கிறான். அவனிடம் செல் என்றார். அதன்படி அடுத்த நாள் காலையில் அலைந்து திரிந்து நடராஜ பெருமான் கனவில் சொன்ன தட்சிணாமூர்த்தியைக் (ஸ்வாமிகள்) கண்டுபிடித்தார் முதலியார். பிறகு ஸ்வாமி கொடுத்த பிரசாதத்தை உட்கொண்டார். அந்தக் கணமே முதலியாரைப் பிடித்திருந்த வயிற்று வலி இருந்த இடம் தெரியாமல் போயிற்று. ஆனந்தம் மேலிட, ஸ்வாமியைப் பலவாறு துதித்து பழம் முதலிய பொருட்களைக் காணிக்கையாக வைத்து வணங்கினார். சிதம்பரம் நடராஜ பெருமானால் தட்சிணாமூர்த்தி என்று குறிப்பிடப்பட்டதால் அருணாசலம் என்கிற ஸ்வாமி. அதன்பிறகு தட்சிணாமூர்த்தி ஸ்வாமி என்றே வழங்கப்படலானார். இப்படி ஸ்வாமிகளின் மகிமையைச் சொல்லிக்கொண்டே போகலாம். எத்தனையோ பேருக்கு நல்லாசி வழங்கி அவர்களை நல்வழிப்படுத்தி உள்ளார். ஸ்ரீ குரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமியின் மடாலயத்தைத் தரிசிப்போமோ?

பெயருக்கு மடாலயம் என்றாலும் மிகப்பெரிய கோயிலாகவே திகழ்கிறது. பலிபீடம், நந்திதேவர் பிராகாரம் என்று விஸ்தாரமாகவே இருக்கிறது மடாலயம் மணி ஒசையும் மத்தள முழக்கமும் சேர பூஜைகள் நடக்கின்றன. இந்த மத்தளத்தை வழங்கியவர் சரபோஜி மன்னர். அதுபோல் ஜீவசமாதியில் இருக்கும் லிங்கத் திருமேனிக்கு அணிவிக்கப்படும் பதக்கத்தையும் இந்த மன்னரே வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு வியாழக்கிழமையும் இங்கு பெருந்திரளான கூட்டம் வருகிறது. பகல் முழுதும் பூஜைகளைத் தரிசித்து அன்று இரவு தங்கி மறுநாள் காலையில் புறப்பட்டுச் செல்லும் பக்தர்களும் இருக்கிறார்கள். ஆவணி மாத உத்திரத்தன்று குருபூஜை நடக்கிறது. அன்றுமட்டும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்து குருவருள் பெற்றுத் திரும்புகிறார்கள். பிராகாரத்தில் கொத்தனார் அருணாசலம் பிள்ளை என்பவரின் சன்னிதி உள்ளது. திருவாரூர்க்காரரான இவர் ஸ்வாமியின் திருவருளுக்குப் பாத்திரமானவர். ஒருமுறை இவர் ஸ்ரீரங்கம் ரங்கநாத பெருமாள் கோயிலின் ஏகாதசி விழாவுக்காக அமைக்கப்பட்ட பிரமாண்டமான பந்தலின் உச்சியில் அலங்கார வேலைகளைச் செய்து கொண்டிருந்தார். எப்போதும் ஸ்வாமியின் சிந்தனையாகவே இருப்பவர் இவர். அன்றும் அப்படியே இருந்தபோது திடீரெனத் தடுமாறிக் கீழே விழுந்தார். விழும்போது தட்சிணாமூர்த்திக்கு அபாயம் என்றே குரல் கொடுத்தார்.

அப்போது திருவாரூர் கமலாலயத்தின் மேல்கரையில் அமர்ந்திருந்த ஸ்வாமி. தமது வலது கரத்தை மேலே தூக்கி வைத்துக்கொண்டு வலுவான ஒரு பொருளைத் தாங்குவதுபோல தாங்கி, கீழே வைத்தார். அங்கே கூடி இருந்த பக்தர்கள் எங்கோ ஓர் அதிசயம் நிகழ்ந்துள்ளது. ஸ்வாமியின் அருளுக்குப் பாத்திரமான பாக்கியவான் யாரோ? என்று தங்களுக்குள் பேசிக்கொண்டனர். அங்கே ஸ்ரீரங்கத்தில் பனைமர அளவு உயரத்தில் இருந்து கீழே விழுந்த அருணாசலம் பிள்ளை தம்மை யாரோ கைப்பிடித்துத் தாங்குவதுபோல் உணர்ந்தார். அவருக்கு ஒரு சிறு கீறல் கூட ஏற்படவில்லை. இதை சக தொழிலாளர்கள் கண்டு வியந்தனர். உடனே வேலையை அப்படியே போட்டுவிட்டு திருவாரூரை அடைந்து ஸ்வாமியைத் தரிசித்தார். அருணாசலம் பிள்ளை. பிறகு ஸ்வாமியின் ஆசியுடன் துறவு பூண்டார். பிராகாரத்தில் இருக்கிற இன்னொரு விக்கிரகம் வீர .சு. ஷண்முகானந்த ஸ்வாமியுடையது. இவர் 1931-1979 காலகட்டத்தில் இங்கு மடாதிபதியாக இருந்தவர். இவரது காலத்தில்தான் தற்போது இருக்கும் நிலைக்கு மடாலயம் விரிவுபடுத்தப்பட்டு முழுவதுமாகக் கல் திருப்பணியாக அமைக்கப்பட்டது. இவரது காலத்தில் 1971ல் முதல் கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. இதை அடுத்து 1998ல் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தவிர தட்சிணாமூர்த்தி ஸ்வாமிக்கு கதையால் ஆன ஒரு விக்கிரகமும் உத்ஸவ விக்கிரகமும் உள்ளது. வருடாந்திர வைபங்கள் அனைத்தும் இங்கு குறைவில்லாமல் நடந்து வருகின்றன. தற்போது தவத்திரு குமாரனந்த ஸ்வாமி மற்றும் தவத்திரு பிரமானந்த ஸ்வாமி ஆகிய இருவரும் பட்டத்தில் உள்ள இரு குரு மகா சன்னிதானங்கள் ஆவார்கள். 1984 ஆம் ஆண்டில் இருந்து இவர்கள் பட்டத்தில் இருந்து வருகிறார்கள். மகான்கள் பிறக்கிறார்கள். மக்களின் சுக துக்கங்களுக்காக தங்களை வருத்திக்கொண்டே வாழ்க்கிறார்கள். மகான்களின் ஜீவன் ஒரு கட்டத்தில் அடங்குதல் என்பது காலத்தின் கட்டாயம். ஆனால் அவர்கள் எங்கும் வியாபித்து தங்களது இன்னருளை இந்தப் பூவுலகுக்கு வழங்கிக்கொண்டே இருக்கிறார்கள். இதற்கு பரிபூரணமான ஒரு சாட்சி திருவாரூர் ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிதான்.

தகவல் பலகை

தலம் : திருவாரூர் மடப்புரம்.

மூலவர் : ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி ஸ்வாமிகள்.

ஜீவசமாதி எங்கே இருக்கிறது?: மடப்புரம் என்பதே திருவாரூர் நகரத்தின் ஒரு பகுதி. திருவாரூர் பேருந்து நிலையத்தில் இருந்து அரை கி.மீக்கும் குறைவான தொலைவிலேயே மடப்புரம் இருக்கிறது.

எப்படிப் போவது?:

திருவாரூர் ஒரு மாவட்டத்தின் தலைநகரம். எனவே தமிழகத்தின் முக்கியமான நகரங்களில் இருந்து திருவாரூரை அடைவது சுலபம். கும்பகோணம், தஞ்சாவூர், திருச்சி, மயிலாடுதுறை போன்ற எந்த ஊர்களிலிருந்தும் திருவாரூருக்கு பேருந்து வசதி உள்ளது.

தொடர்புக்கு:
தட்சிணாமூர்த்தி மேலாளர்,
ஸ்ரீகுரு தட்சிணாமூர்த்தி மடாலயம்,
மடப்புரம், திருவாரூர்-610001.
போன்: 04366-222732.

புதன், 15 ஆகஸ்ட், 2018

சிலைகளுக்கு பால் அபிஷேகம் செய்வதை விட , ஏழைகளுக்கு கொடுக்கலாமே என்ற கேள்விக்கு ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



ஒருவனின் மனம், புத்தி  , ஞானம் , அறிவு இவற்றை நல்க கூடிய கிரக அமைப்பு - இதை பொறுத்து தான் இதனை எடுத்துக்கொள்ள வேண்டும் .முழுக்க முழுக்க பக்திக்கு முதலிடம் தருகின்ற மனிதனிடம் , நீ தர்மம் செய் என்று நாங்கள் கூறினாலும்  அவன் சிறிதளவே செய்கிறான்.

ஆனால் அவன் பாவங்கள் குறைவதில்லை , அவன் பாவங்களை எப்படி குறைப்பது ? சரி , இவனுக்கு தெய்வங்களுக்கு அபிஷேகம் செய்தால் தான் திருப்தி என்றால் , அப்படியே செய்யட்டும் . அபிஷேகத்திற்காக அவன் பொருட்கள் வாங்குகிறான் அல்லவா ? அந்த வியாபாரம் செழித்து வளரட்டும் .அது அந்தந்த மனிதர்களுக்கு போய் சேர்கிறதல்லவா ? அப்படியாவது சிறிதளவு கர்மா இவனுக்கு குறையட்டும் என்றுதான் கூறுகிறோம் .

சரி , கல்லில் ஏன் அதை ஊற்ற வேண்டும் ? அதை  ஏழைகளுக்கு   தந்தால்  ஆகாதா ? என்றால் , ஒருவனுக்கு பிரியமான தாய், தந்தை , மனைவி , மக்கள் ஆகியவர்களின் பிம்பங்களை களங்கப் படுத்து , எச்சில் உமிழ் , என்றால் உமிழ்வானா ? எனவே அந்த பிம்பங்களில் அவன் தான் உற்ற பந்தங்களாகவே பார்க்கின்ற  குணம் இன்றளவும் உள்ளது . அப்படி இருக்கும்  போது , சிலை என்று கருதக்கூடிய மனிதனுக்கு , அது தான் வணங்கக்கூடிய தெய்வம் தான் என்று ஆணித்தரமாக நம்பக்கூடிய மனிதர்கக்ளுக்கு , நாம் தெய்வத்திற்கே அபிஷேகம் செய்கிறோம் என்ற சந்தோஷமும் , அதன் மூலம்  மன அமைதியும் வரும் .

இப்படிப்பட்ட மனிதனை சற்றே பக்குவப்பட்ட பிறகு தர்மத்தின் வழியில் திருப்பி விடலாம் . எடுத்த எடுப்பிலேயே நி அப்படி எல்லாம் அபிஷேகம் செய்து பொருளை வீண் செய்யாதே , அதை ஏழைகளுக்கு கொடு என்றால் அவன் மனம் ஏற்காது. ஓரளவுக்கு நல்ல ஆத்மா கால போக்கில் திருந்துவான் என்றால் நாங்கள் அவனை அவன் போக்கில் சென்று தான் திருத்துவோம் . எனவே இதில் யார் செய்வதும் குற்றமல்ல பாதிப்பும் அல்ல . இரண்டு வழிகளுமே சிறப்புதான் - குருநாதர் .

கோவில் சென்று வணங்கும் முறை பற்றி ஸ்ரீ அகத்தியர் அருளிய ஜீவ வாக்கு

முதலில் கோவில் கோபுரங்களை வணங்க வேண்டும் , கோவில் படிக்கட்டுகளில் பெரும்பாலும் முனிவர்கள் தவம் செய்து  கொண்டிருப்பார்கள் , அவர்களிடம் மானசிகமாக " நான் மனிதனாய் பிறந்து விட்டேன் , வேறு வழி இல்லாமல் உங்களை மிதித்து கொண்டு செல்கிறேன் , மன்னித்து ஆசி கூறுங்கள் என்று வேண்டிக்கொள்ள வேண்டும் ( வேறொரு வாக்கில் கோவில் படிக்கட்டுகளுக்கு பாலாபிஷேகமே செய்யலாம் தெரியுமா என்று உரைத்திருந்தார் ) . கோவில் புண்ணிய தீர்த்தங்கள் இருந்தால் அவற்றில் நீராடி , இயலவில்லை என்றல் அவற்றில் பாதம் நனைத்து அந்த தீர்த்தத்தை தெளித்துக்கொள்ளவேண்டும். கருவறை உள்ளே செல்லும் முன்னர் துவார பாலகர்களைவணங்கி விட்டு உள் செல்ல வேண்டும்.

நிறைய வாசனை மிக்க மலர்களை சாற்றி , அந்த ஆலயத்தில் உள்ள நம்பிக்கையின் படி நிறைய நெய் தீபங்கள் ஏற்றிட வேண்டும். ஆலய அர்ச்சகர் மற்றும் "மிக முக்கியமாக" கோவில் சுத்தம் செய்யும் பணிகளில் உள்ளவர்களுக்கு அவர்கள் வாழ்நாளில் இது போல் இன்னொரு முறை தர்மம் கிடைக்குமா என்று என்னும் அளவுக்கு நிறைய தர்மம் செய்து விட வேண்டும். பின்னர் ஆலய பிரகாரங்களை வலம் வந்து , கொடி மரத்தின் முன் சாஷ்டங்கமாக விழுந்து வணங்க வேண்டும். பின்னர் தனிமையில் அமர்ந்து அமைதியாக த்யானம் செய்து பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும்.

மேலே சொன்ன விஷயங்களில் மிக முக்கியம் செய்கின்ற பிரார்த்தனை ஆத்மார்த்தமானதாக இருக்க வேண்டும் !

ஸ்தல வ்ருக்ஷம் பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு


வ்ருக்ஷங்களுக்கு என்று சில வகையான பூஜை முறைகள் உண்டு.வ்ருக்ஷங்களுக்கு திருமண பந்தம் கூட செய்து வைப்பார்கள்.நக்ஷத்திரங்களுக்கு உரிய மரங்களை மட்டும்தான் வளர்க்க வேண்டும்,பூஜிக்க வேண்டும் என்றில்லை.எல்லாவற்றையும் வளர்க்க வேண்டும்.ஏனென்றால்,மரங்கள் தூரத்தில் உள்ள மரங்களோடு பேசும்.அது மட்டுமல்லாது,மரங்கள் காதல் செய்கிறது.இதை மனிதர்கள் யாராவது நம்புவார்களா?

மரங்களை ஓரறிவு என்று கூறினாலும் கூட,தேவர்கள்,முனிவர்கள் தவம் செய்வதற்காக,மரங்களாக அவதாரம் எடுப்பார்கள்.மரத்தின் மீது “கூரானை”செலுத்துவது,மகா பாவம்.அது மட்டுமல்லாது,ஒரு மரமானது,எத்தனையோ உயிர்களுக்கு,நிழலை,காயை,கனியை,உறைவிடத்தைத் தருகிறது.பலவற்றை மரம் தருவதால்,அதற்கு “தரு”என்ற ஒரு பெயர் உண்டு.”கற்பக வ்ருக்ஷம்”என்று ஒவ்வொரு மரத்தையுமே கூறலாம்.அது மட்டுமல்லாது,ஒவ்வொரு மரமும்,மனிதனை விட பல மடங்கு மேம்பட்டது.அவை பாவம் செய்வது கிடையாது.எனவே,மரங்கள் அனைத்துமே போற்றப்பட வேண்டியவை என்பதால்தான்,வேதங்களில் இவ்வாறு கூறப்பட்டிருக்கிறது.”ஸ்தல வ்ருக்ஷம்” என்று வைத்து,ஒவ்வொரு ஆலயத்திலும் பராமரிக்கப்படுகிறது.அந்த வ்ருக்ஷம்,அந்த மண்ணிற்கு ஏற்றது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

பசு மாடு வளர்ப்பது மற்றும் பராமரிப்பது பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு


பசு மாடு வளர்ப்பது பற்றி:

பசு கன்றுக் குட்டியை ஈன்றவுடன் மனிதனுக்குப் பால் தருவதில்லை.கன்றுக்குத்தான் பால் தருகிறது.பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள்தான்.முதலில் கன்று திருப்தியாக திகட்ட,திகட்ட உண்ட பிறகு,மிச்ச்சத்தைத்தான் மனிதன் எடுக்க வேண்டும்.”பாவத்தில் உச்சக்கட்ட பாவம்,கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது.இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.பரிகாரமும் கிடையாது.ஆனால்,”இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ முடியுமா?” என்று மனிதன் விதண்டாவாதம் பேசுவான்.எனவேதான்,பசுக்கள் காப்பகங்களுக்குச் சென்று உதவி செய்வது,குறிப்பாக,பரசுராம தேசத்திற்கு(கேரளா) எடுத்துச் செல்லப்படும் பசுக்களை வாங்கி,எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வளர்ப்பது மிகப்பெரிய புண்ணியமப்பா.கோடிக்கணக்கான காலங்கள் யாகம் செய்தாலும்,ஹிமாசலத்தில் தவம் செய்தாலும் கிடைக்காத இறையருள்,பசுக்களை பராமரிப்பதில் கிடைக்கும்.அதிலும் பசுக்களால் இனி நமக்கு நன்மை இல்லை.அதனால் கொலை களத்திற்கு அனுப்புகிறோம் என்று அனுப்பப்படும் அந்த மாடுகளை, எவன் ஒருவன் அழைத்து வந்து பராமரிக்கிறானோ,அவன் வேறு எந்த பூஜையும் செய்ய வேண்டாம்.வேறு எந்த யாகமும் செய்ய வேண்டாம்.அதை வளர்ப்பதே போதும்.அது இறைவனிடம்,அவனை,அழைத்துச் செல்லும்.

பசுவைக் கட்டிப் போடுவது குறித்து:

ஒரு குழந்தையை,தாய் தன்  இடுப்பில் தூக்கி வைப்பதன் காரணம்,அதன் நன்மையைக் கருதியே.பசுவின் நன்மையைக் கருதி அதை அடைத்து வைத்தால்,அது பாவமல்ல.மனிதனின் நன்மையைக் கருதி,பசுவை அடைத்து வைத்தால்தான் பாவம்.

கன்று குடித்த பிறகு,மிச்சத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்தால்,அது பாவம் அல்ல.அதனால்தான்,முன்காலத்தில் மன்னர்கள் ஒரு ஏற்பாடு செய்து,ஆலயத்திற்கு அருகிலேயே “கோசாலை”அமைத்து,பாலை அபிஷேகத்திற்கு எடுத்துக் கொள்வார்கள்.பசுவிற்கு பால் எதற்காகடா ஊறுகிறது?அதை தடுத்தால்...மனிதனுக்கு மட்டும்தான் தான் பெற்ற குழந்தை,பாலை வயிறு முட்ட குடிக்க வேண்டும்.அப்பொழுது யாராவது அதை தடுத்தால்,மனிதன் சும்மா இருப்பானா?ஆனால்,இவன் மட்டும் எல்லா உயிர்களிடமும்,அசுரன் போல நடந்து கொள்வான்.

திருமூலர் பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு

சிவலோகத்தில் உள்ள “சுத்த சதாசிவர்”என்ற மகான்,ஒருமுறை பூமியிலே இறைவனின் சிலை வடிவத்தைக் காண்பதற்காகவும்,எம்மை தரிசிப்பதற்காகவும் (யாம் அப்போது பொதிகை மலையில் இருந்தோம்),சில அரிய கருத்துக்களை தெரிந்து கொள்வதற்காகவும் பூமிக்கு வந்து,பல ஸ்தலங்களை தரிசித்து வருகையிலே,ஆடு,மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்த “மூலர்” என்ற ஓர் இடையர் உயிர் இழக்க,அந்த தேகத்திற்குள் இந்த முனிவரின் ஆத்மா புகுந்து,சில லீலைகளை புரிய வேண்டும் என்பதே இறைவனின் திருவுள்ளமாக இருந்தது.கண்ணீர் விட்டுக்கொண்டிருந்த ஆவினங்கள் மீது இரக்கம் கொண்டு,தன் தேகத்தை பாதுகாப்பாக ஓரிடத்தில் வைத்துவிட்டு “மூலர்”உடம்பினுள் இந்த முனிவர் புகுந்து,ஆடு,மாடுகளை அந்தந்த வீடுகளில் சேர்த்துவிட்டு,மீண்டும் வந்து உடலைத் தேடியபோது,இறைவன் அசரீரி வாக்காக,”உன் உடலை யாம் மறைத்து விட்டோம்.இனி இந்த உடலிலேயே இருந்து நீ செய்ய வேண்டிய செயல்களைச் செய்” என்று கூற,பிறகு அந்த உடலிலேயே இருந்து பலருக்கு உபதேசம் செய்ததோடு, 3000 ஆண்டுகள் கடுமையான தவத்தில் இருந்தார்.
ஆண்டுக்கு ஒன்றாக பாடலைப் பாடி யோகம்,ஞானம்,மந்திரம்,தந்திரம்,வித்தை,கலை,சாஸ்திரம்,வேதம் என்று அனைத்து மூலக்கூறுகளிலும் மனிதனுக்குப் புரியும் வகையிலும்,துன்மார்க்கர்களுக்கு எட்டாத வகையிலும் நுட்பமாக மனித தேகம்,தேகம் நிலையாமை,தேகம் தோன்றுகின்ற தன்மை,ஆன்மாவின் தன்மை என்றெல்லாம் பல கூறுகளாகப் பிரித்து,அதே சமயம் மரபு,சாஸ்திரம் என்ற பெயர்களில் மனிதர்கள் புரியாமலும்,புரிந்த பிறகு சுயநலத்தாலும் செய்து வரும் தவறுகளை எல்லாம் சுட்டிக்காட்டி நல்லதொரு தத்துவ,ஞானப் பாடல்களையெல்லாம் இறைவன் அருளைக் கொண்டு எழுதி வைத்தார்.அப்படிப்பட்ட அற்புதமான மகான் அப்பா அவர்.

வாகனம் ஓட்டும் தொழில் செய்பவர்களுக்கு ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய அறிவுரை ஜீவ வாக்கு


“சாரதி” தொழில் என்பது,கிருஷ்ணா பரமாத்மாவின் தொழில்தானப்பா.இதில் தாழ்வு என்பது ஒருபோதும் கிடையாது.இந்தத் தொழிலின் நுணுக்கத்தை அறியாமல்,சிலர் மேம்போக்காக கற்றுக் கொள்கிறார்கள்.இதை,ஒரு மருத்துவ படிப்பு,பொறியியல் படிப்பு எப்படி சில ஆண்டுகள் சொல்லித் தரப்படுகிறதோ, அவ்வாறு,முழுமையாக மொழி அறிவு,போக்குவரத்து விதிமுறை அறிவு,வாகனத்தின் நுணுக்கத் தன்மை,இயக்கத் தன்மை என்று பிரித்து,சில ஆண்டுகள் பயிற்சி தந்தால் ஒழிய,திறம்பட செயல்பட முடியாது.அனுபவத்தால் பெறுவது என்பது வேறு.முதலில்,அறிவால் பல விஷயத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.(வாகனத்தின்)உள்ளே இருக்கும் மனிதனுக்கு,”இவன் வாகனத்தை இயக்குகிறான்,வேக நிலை மாற்றுகிறான்,வலம்,இடம் திருப்புகிறான்,வாகனத்திலே பற்று பற்றா பாகத்தை இயக்குகிறான்.வேக முடுக்கியை இயக்குகிறான்” என்பதே தெரியக் கூடாது.

அவை தெரியும் வண்ணம் எவன் ஒருவன் வாகனத்தை இயக்குகிறானோ,அவன் நல்ல சாரதி அல்ல.வாகனம் நன்றாக இருக்கும் பட்சத்தில்,இந்த கருத்து பொருந்தும்.வாகனத்தை இயக்கம் போது,இட,வலமாக அலசல் இருந்தால்,உடனடியாக,சாரதியை நீக்கிவிட வேண்டும்.”நன்றாக பயிற்சி பெறு” என்று கூற வேண்டும்.சிந்தனையை வேறு பக்கம் செலுத்தி,திடுப்பென்று வேக தடுப்பானை பயன்படுத்தினால்,அந்த சாரதி ஏற்புடையவன் அல்ல.பயணிகளை ஏற்றி வைத்துக்கொண்டு,எவன் ஒருவன் எரிபொருளை நிரப்புகிறானோ,அவன் நல்ல சாரதி அல்ல.முன்னரே,காற்று அழுத்தத்தையும்,மின் கலனின் திறனையும்,எரிபொருளையும் சோதிக்காவிட்டால்,அவன் கவனக்குறைவான சாரதி ஆகும்.நெடுந்தூரம் எடுத்துச் செல்லும் முன்னர்,”அ” முதல் “அஹ்” வரை சோதித்து,சிறு,சிறு,குறைகளை சரி செய்துகொள்ள வேண்டும்.என்னென்ன பாகங்கள் நடுவழியில் கை கொடுக்காமல் விலகி விடும் என்பதை முன்கூட்டியே யூகித்து,சரியான மாற்று பாகத்தை வைத்திருக்க வேண்டும்.வாகனத்தை பராமரிப்பதும் ஒரு சாரதிக்கு முக்கியம்.வாகனத்தில் ஓடுகின்ற வாயு உருளைகள் எல்லாம் ஒரு பகுதியாகவே தேய்ந்து கொண்டு வரும் என்பதால்,(சில சமயம் முறை மாற்றி ஓடுவதாக ஒரு சூழல் இருக்கும்),அப்படி செய்யவில்லை என்றால்,அந்த சாரதி,கவனக்குறைவான சாரதிதான்.எனவே,சரியான வாகனம்,சரியான சாரதி,சரியான பயணிகள் என்றால் சரியான பயணம் அப்பா.

வாகனத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல்,பிற விஷயங்களையும் கவனிக்க வேண்டும்.
இப்பொழுதெல்லாம்,வெப்பம் தணிக்கும் கருவி பொருத்தப்பட்ட வாகனங்கள் இருக்கின்றன.அதை நன்றாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக,சாளரங்களை எல்லாம் அடைத்து வைக்கிறார்கள்.இது எதிர்பாராத விபத்தை அதிகப்படுத்தும் என்பதால்,சிறிதளவு குளிர் வெளியே சென்றாலும் பாதகமில்லை என்று வெளிக்காற்று உள்ளே வரும்படி செய்து கொள்ள வேண்டும்.அதேபோல்,வலப்புறம்,இடப்புறம் என்று எப்புறம் சென்றாலும்,அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று செல்லாமல்,நிதானமாக அதற்குரிய குறியீடுகளை அவசியம் பயன்படுத்த வேண்டும்.அது மட்டுமல்லாது,வாகனத்திலே உள்ள ஒளிரும் பொருள்கள் எல்லாம்,சரியான சாய் கோணத்திலே இருக்க வேண்டும்.ஒளிரும் பொருள்களை ஒளிர விடுவதும்,அணைப்பதுமாக திடீரென்று செய்யாமல்,முன்னரே தீர்மானித்து துவக்க வேண்டும்.உள்ளே இருக்கும் பொருள்கள் எந்த அளவுக்குத் தாக்குப் பிடிக்கும் என்பதை அவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

வாகனத்திலே கொடுக்க வேண்டிய அழுத்தமானது எந்த அளவுக்கு,எந்த கோணத்திலே பிரயோகிக்கப் படவேண்டும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.மேலே உள்ள ஆழி சீசா போன்ற வண்ணங்கள் எல்லாம் கீழே விழுந்து விட்டால்,உடனுக்குடன் எடுத்து விட வேண்டும்.இல்லையென்றால் நிறுத்துவான் என்ற பகுதிக்கு அடியிலே சென்று விட்டால்,அது இயங்காமல் போய்,விபத்தை ஏற்படுத்தும்.வேக நிலை மாற்றத்தை இயக்குவதில்,ஒரு மனிதன் கவனமாக இருக்க வேண்டும்.நிலை ஒன்று,நிலை இரண்டு,நிலை மூன்று என்று அதன் கோணத்தில் சென்று,அதனை சரி செய்வது மிகவும் சிறப்பாகும்.

வாகனத்தில் இருந்து வெளிவரும் நச்சுப்புகை,இந்த அண்டத்திற்கும்,உயிர்களுக்கும் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்துவதால்,இஹ்தொப்ப தொடர்புடையவர்கள் எல்லாம்,நறுமணமிக்க புகையை (சாம்பிராணி) ஆலயங்களிலே அதிகம் இட்டு,இட்டு,இந்தக் குறைக்கான பரிகாரம் செய்து கொள்ள வேண்டும்.இன்னும் இப்படி,எத்தனை,எத்தனையோ யாங்கள் கூறலாம்.இவற்றை மனதில் பதிய வைத்தால் நன்றாக இருக்கும்.

வேல் வழிபாடு பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு


வேல் வழிபாடு என்பது,துவக்க காலத்தில் இருந்தே இருக்கிறது.இடையிலேதான் வேல் வழிபாட்டின் முக்கியத்துவம் குறைந்து விட்டது.வேல் யார் தெரியுமா?அன்னைதான்.அன்னையின் அம்சம்தான் வேல்.வேலை வணங்குவதும்,அன்னை பராசக்தியை வணங்குவதும் ஒன்றுதான்.எனவே,முருகனின் ஆயுதமாக மட்டும் பார்த்து பழக்கப்பட்ட விஷயம் வேல் என்பதால்,மனிதனுக்கு,அதைத் தாண்டிய விஷயங்கள் தெரியாமல் போய்விட்டது.எதிர்ப்புகளும்,தோஷங்களும்,கடுமையான கர்மாக்களும் குறைவதற்கு,இந்த வேல் வழிபாடு உதவும்.வேலை பவித்ரமாக வைத்து,அதை வணங்கினால்,பல்வேறு வேதனைகள் தீரும்.

அது மட்டும் அல்லாது,மனிதன் ஆசைப்படுகிறானே,வைரம்,வைடூரியம்,முத்து,கனகம் போன்ற (நவரத்னங்களின் மீது மதிப்பு வைத்திருக்கிறானே)உலோகங்கள் எங்காவது,தனக்குத்தானே மதிப்பு வைத்திருக்கிறதா?மனிதன்தான்  அவற்றின் மீது மதிப்பு வைத்திருக்கிறான்.இந்த நவரத்னங்கள்,உலோகங்களில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சுகள் எல்லாம் மனிதனுக்கு நன்மையைத் தராது.

அதனால், பலருக்கு நன்மை தரும் நோக்கிலேதான் சுவாமிக்கு வைரக் கிரீடம்,தங்கக் கவசம்,வெள்ளிக் கிரீடம்,நவரத்னம் பதிக்கப்பட்ட வேல் வைப்பதன் காரணம் இதுதான்.இவற்றை தரிசனம் செய்தாலே,கற்கள்,உலோகங்களின் தோஷங்கள் குறையும்.சில தோஷங்களை, தரிசனம்,நயன தீக்ஷையாலே ஒரு குரு நீக்குவதுபோல,நீக்கிக் கொள்ளலாம்.அதுபோலே,ஐம்பொன்னால்   செய்யப்பட்ட வேல்,செம்பால்,பித்தளையால் செய்யப்பட்ட வேல் – எதுவாயினும் உரு ஏற்றி பூஜை செய்தால்,கடுமையான எதிர்ப்பு (முக்கியமாக காவல்துறை,ரணகளத் துறையில்) உள்ளவர்களுக்கு இந்த வழிபாடு நன்மையைத் தரும்.

ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் 347வது குரு பூஜை விழா



"பூஜ்யாய ராகவேந்திராய சத்ய தர்ம ரதா யச ! 
பஜதாம் கற்பக விருக்ஷ்யாய நமதாம் காமதேனுவே!"


விஜயநகரப் பேரரசர்களின் ஆட்சிக்கு உள்பட்ட ஹம்பி எனும் சின்னஞ்சிறு கிராமம். அங்கே இருந்த வீடுகளுள் ஒன்றிலிருந்து வேத மந்திரங்களின் ஒலி எழுந்து, அந்த கிராமம் முழுதும் நிறைந்து கொண்டிருந்தது. அதற்குக் காரணமான திம்மண்ணபட்டர், தம் வீட்டின் நடுவே அமர்ந்து, தன்னைச் சுற்றி அமர்ந்திருந்தவர்களுக்கு, வேதத்தினை சொல்லித் தந்து கொண்டிருந்தார். வேத விற்பன்னரான திம்மண்ணபட்டர், வீணையை மீட்டி இனிமையாக நாதம் எழுப்புவதிலும் வல்லவர். வேதமும், வீணை நாதமும் இணைந்து ஒலித்துக் கொண்டிருந்தாலும், வேதனையும் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது, திம்மண்ணபட்டரின் மனதில். வேதஒலியும், வீணை இசையும், ஒரு குழந்தையின் அழுகைக் குரலுக்கு ஈடாக முடியுமா? அப்படியோர் அழுகைச் சங்கீதம் தம் வீட்டில் ஒலிக்கவில்லையே...! என்பதுதான், அவரது வேதனைக்குக் காரணம். 

வேதனையைப் போக்கவல்லவன், வேங்கடவனே என நினைத்த திம்மண்ணர், மனைவி கோபாம்பாளையும் அழைத்துக்கொண்டு, திருப்பதிக்குச் சென்றார். வேங்கடாசல பதியை வேண்டினார். திருமாலின் அருளால், திருமகள் ஒருத்தி பிறந்தாள் திம்மண்ணருக்கு. வெங்கடம்மாள் என்று பெயரிட்டு வளர்த்தார். மீண்டும் திருப்பதிமலையானை வேண்டினார். "திருப்தியாக வாழ்" என்று, ஆண் மகவு ஒன்றை அருளினான், திருமலையான். குருராஜன் எனப் பெயரிட்டார்கள் குழந்தைக்கு. அந்தச் சமயத்தில், ஹம்பியை விட்டு புவனகிரி எனும் கிராமத்திற்குக் குடி வந்திருந்தார் திம்மண்ணா. சிறிது காலத்திற்குப் பின், "மனை சிறக்க மகப்பேறு" தந்த மலையப்பனுக்கு நன்றி சொல்லி வணங்க, மனைவியோடு மீண்டும் திருமலைக்குச் சென்றார், திம்மண்ணா. ஆனால், திருப்பதி சென்றதும் அவர் மனதுள் ஏதோ உள்ளுணர்வு தோன்றியது. அதனால், வேங்கடவனை வேண்டினார், ""மாதவா... மாதவம் புரிந்தோர் பெற்றிடும் பேறு போல், மகா மேதையான மகனைப் பெற்றிடும் வரம் தா!"" வேண்டுவோர் வேண்டுவன தருபவன் அல்லவா வேங்கடவன்! திம்மண்ணர் விஷயத்திலும், அப்படியே செய்தான்.

 அதன் பலனாக, 1598_ம் வருடம், பால்குண ஆண்டு, சுக்லபட்ச சப்தமி, வியாழக்கிழமையன்று, மிருகசீர்ஷ நட்சத்திரத்தில், திம்மண்ணபட்டர், கோபாம்பாள் திருமனையில், ஆண்குழந்தை ஒன்று பிறந்து, அழுதது! அந்த அழுகை, திம்மண்ணர் மீட்டும் வீணை இசையை வீணாக்கிவிட்டு சங்கீதமாய் எதிரொலித்தது. வெங்கடேசன் அருளால் பிறந்த குழந்தைக்கு, அவன் பெயரையே சூட்டி, ""வெங்கட நாதா"" என்று வாய்நிறைய அழைத்தார், அப்பா! பாலூட்டி, தாலாட்டி, சீராட்டினாள் அம்மா...! நாட்கள் நகர்ந்தன... குழந்தை வெங்கடநாதனுக்கு பல் முளைக்க ஆரம்பித்தது... கூடவே, சொல்லும் முளைத்தது. 

அதுவும், வேதச் சொல். அதனால், முத்துப் பற்கள் முளைத்து அவனுக்கு மூன்று வயது நிரம்பியதுமே வித்யாப்பியாசம் செய்துவைத்தார், திம்மண்ணர். சரஸ்வதி இருக்குமிடத்தில், தனக்கு இடம் கிடைக்குமோ கிடைக்காதோ என நினைத்தோ என்னவோ, திம்மண்ணரின் வீட்டுக்குள் நுழைய மகாலட்சுமி தயங்கினாள். எனவே, குழந்தை வெங்கடநாதனின் கல்விஞானம் வளர்ந்தபோது, வீட்டில் வறுமையும் சேர்ந்து வளர்ந்தது. குழந்தைகள் கஷ்டப்படுவதைப் பார்க்கப் பிடிக்காமலோ என்னவோ, சீக்கிரமே திருமாலின் திருவடி சேர்ந்தார் திம்மண்ணபட்டர். அம்மாவுடன் அண்ணன் குருராஜர் தங்கிவிட, அக்கா வெங்கடம்மாளின் புகுந்த வீட்டுக்கு அனுப்பப்பட்டான் வெங்கடநாதன். வெங்கடம்மாளின் கணவர் லட்சுமி நரசிம்மாசாரியார், மைத்துனனை மகனாகவே பாவித்து பாசம் காட்டி வளர்த்தார். அதோடு, ஆசானாக இருந்து அனைத்தையும் போதித்தார். கற்பிக்கப்பட்ட அனைத்தையும் கற்பூரமாய்ப் பற்றிக் கொண்டான், வெங்கடநாதன். 

ஆண்டுகள் வளர்ந்தன... வெங்கடநாதனின் அறிவு வளர்ந்தது... கூடவே, அவனும் வளர்ந்தான். தம்பியைப் பார்க்க வந்த குருராஜர், அவனது அறிவுத் திறமையைப் பார்த்து மகிழ்ந்தார். சரஸ்வதி கடாட்சம் நிரம்பப் பெற்றிருந்த வெங்கடநாதனுக்கு, "சரஸ்வதி" என்ற பெண்ணைத் திருமணம் செய்து வைத்தார். இல்லறத்தில் இறங்கிய பின்னரும், இரை தேடலைவிட, இறைதேடலே பிடித்திருந்தது வெங்கடநாதனுக்கு. அதனால், ஏற்ற குருவைத் தேடி அலைந்தவன், கும்பகோணத்திற்குச் சென்றான். அங்கே, ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் எனும் மத்வ மகானைக் கண்டான். அவரே தமக்கு ஏற்ற குரு எனக் கொண்டான். ஒளி இருக்கும் திசை நாடி, செடி வளைந்து செல்வதுபோல், ஞானஒளி நிறைந்திருந்த வெங்கடநாதன் வந்தது முதல், அவன்மேல் தனி அன்பு காட்டினார், சுதீந்திரர். 

அதுவே, மற்ற சீடர்களின் பொறாமை விதைக்கு உரமிட்டது. அதனால், எப்போதும் உறங்குகிறான் வெங்கடநாதன் என்று, சுதீந்திரரிடம் பழி கூறினர். கோள் மூட்டியவர்களின் வார்த்தைகளின் உண்மை அறிய அன்று இரவு, வெங்கடநாதன் என்ன செய்கிறான் எனப் பார்க்கப் போனார், குருதேவர். அங்கே, பழைய ஓலைகளை தீமூட்டி எரித்து, அந்த வெளிச்சத்தில் எதையோ எழுதிவிட்டு, ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தான் வெங்கடநாதன். அவன் விழித்துக் கொண்டு விடாதபடி, மெதுவாக அருகே சென்றார், சுதீந்திரர். 

எழுதிவைக்கப்பட்டிருந்த சுவடியை எடுத்துப் பார்த்தார். சுவடியில் வெங்கடநாதன் எழுதிவைத்திருந்ததைப் படித்ததுமே அவருக்குப் புரிந்து போனது, உறங்கிக் கொண்டிருக்கும் அவன், உலகை விழிப்புறச் செய்யப் பிறந்தவன் என்பது. அன்போடு தன் போர்வையை அவனுக்குப் போர்த்திவிட்டுப் போனார். விடிந்தது. விழித்தெழுந்த வெங்கடநாதன், திடுக்கிட்டான். "தான் எழுதிவைத்த சுவடியைக் காணவில்லை... அதைவிட அதிர்ச்சி, குருநாதரின் போர்வை, தன்மீது போர்த்தப்பட்டுள்ளது...!" பதட்டத்தோடு சென்று, குருநாதரிடம் சொன்னான் வெங்கடநாதன். தாமே அவற்றைச் செய்ததாகச் சொன்னார், சுதீந்திரர். அதோடு, மற்ற சீடர்களுக்கும் அவனைப்பற்றி எடுத்துச் சொல்லி விளக்கினார். வெங்கடநாதன் தங்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குவதை உணர்ந்து தலைகுனிந்தார்கள் அவர்கள்.

 கற்க வேண்டியவற்றை கசடறக் கற்றுத் தேர்ந்த வெங்கடநாதன், இல்லறத்தை நல்லறமாக நடத்த எண்ணி, குருவிடம் அனுமதி பெற்று புவனகிரிக்குத் திரும்பினான். மனைவியுடனான மகிழ்வான வாழ்வின் பயனாக ஆண்மகவு ஒன்று பிறந்தது வெங்கடநாதனுக்கு. தொடர்ந்த வறுமையின் கொடுமையைத் தாங்க முடியாமல் தவித்த வெங்கடநாதன், குரு சுதீந்திரரையே தேடிப்போய் வழிகேட்டான். பிறரிடம் பொருள் கேட்டுத் தேடிப் போக வழி தெரியாத அவன் நிலை உணர்ந்து, போதுமான பணம் கொடுத்து அனுப்பினார் குருதேவர். அதேசமயம், அவர் உள்மனம் ஒன்றைச் சொன்னது. 

"வெங்கடநாதன், எனக்குப்பின் மத்வ பீடத்தை அலங்கரிக்க வேண்டியவன்!" உள்ளம் சொன்னதை மறைத்துக் கொண்டு, உவகையோடு அவனை ஊருக்குச் செல்ல அனுமதித்தார் சுதீந்திரர். சிலகாலம் சென்றது... சுதீந்திரரின் உடல்நலம் குன்றியது. தம் சீடர்களை அழைத்து, ""எனக்குப்பின் இந்த பீடத்திற்கு தலைமை வகிக்கும் தகுதி, வெங்கடநாதனுக்கு மட்டுமே உள்ளது. அவனை அழைத்து வாருங்கள்!"" என்றார் சுதீந்திரர். கும்பகோணம் வந்து குருதேவரைப் பணிந்த வெங்கடநாதன், துறவறம் ஏற்க மறுத்தான். பாசம், பந்தம் எனும் கட்டுகள் தன்னைப் பிணைத்திருப்பதாகச் சொன்னான்.

அப்போதைக்கு அதனை ஏற்று, வெங்கடநாதனைத் திருப்பி அனுப்பினார், சுதீந்திரர். ஆனால், அவருக்கு நம்பிக்கை இருந்தது_வெங்கடநாதன் நிச்சயம் திரும்பிவந்து சந்நியாசம் ஏற்பான் என்று. அதனால், யாதவேந்திரர் என்ற சீடரிடம் தலைமைப் பொறுப்பை சிலகாலம் ஒப்படைத்தார். சுதீந்திரரின் நம்பிக்கை சீக்கிரமே பலித்தது. மீண்டும் சுதீந்திரரின் உடல் நலம் பாதிக்கப்பட, இப்போதும் வெங்கடநாதன் அழைத்து வரப்பட்டான். இந்தமுறை சந்நியாசம் ஏற்க, அவன் மறுக்காமல் சம்மதித்தான். அதேசமயம், மகனுக்குத் தந்தை ஆற்ற வேண்டிய கடமையைச் செய்துவிட்டு வருவதாகக் கூறி குருவிடம் அனுமதி பெற்றுத் திரும்பினான். விரைவிலேயே, தன் மகனுக்கு உபநயனம் செய்துவைத்துவிட்டு, இல்லாளிடமும் சொல்லாமல் வந்து சந்நியாசம் பெற்ற வெங்கடநாதனுக்கு, "ராகவேந்திர தீர்த்தர்" என்று தீட்சா நாமம் சூட்டப்பட்டது. கரம் பிடித்த கணவன், சந்நியாசம் பெற்றுவிட்டார் என்பதை அறிந்த சரஸ்வதி, வாழ்வை வெறுத்து, கிணற்றில் குதித்தாள். பேயுருவாகி கணவரைத் தேடிப்போனாள். தன்னை நெருங்க முடியாமல் தவிக்கும் மனைவி சரஸ்வதியின் ஆவியைக் கண்ட ராகவேந்திரர், அவள் அவதியைப் போக்க மனம் கொண்டார். புனித நீரை அவள் மீது தெளித்து, புண்ணிய லோகம் செல்ல வழி செய்தார். 

அதோடு, அவளது பெயரால் வஸ்திர தானம் நடத்தப்பட வேண்டும் என்றும் நியமம் செய்தார். சுதீந்திரரின் சீடராக இருந்தபோதே, தமது ஞானஅறிவு, பூவின் மணம்போல் பரிமளிப்பதை உணர்த்தி பரிமளாச்சாரியார் என அழைக்கப்பட்ட ராகவேந்திரர், குருவின் மறைவுக்குப்பின் தலைமை ஏற்றபோது, மேலும் அதனை நிரூபித்தார். மத்வ பீடாதிபதியாகப் பொறுப்பேற்ற சில ஆண்டுகளுக்குப்பின், தீர்த்த யாத்திரை புறப்பட்டார் ராகவேந்திரர். உடுப்பி, பண்டரி புரம், கொல்லாபுரம், கர்நூல் என அவர் பாதம் பதித்த தலங்கள் யாவும் புண்ணியத் தலங்களாயின. அவரது பயண வேகத்தை விடவும் வேகமாக, அவரது ஞானமும், அறிவும், உயர்வும், பெருமையும் எங்கும் பரவியது. 

புனிதப் பயணத்தின்போது கர்நாடகாவில் உள்ள ஆதாவானி எனும் ஆதோனிக்குச் சென்றார், ராகவேந்திரர். அங்கே அநாதைச் சிறுவன் ஒருவன் தன் சோகத்தினை அவரிடம் சொன்னான். அவன் பெயரைக் கேட்ட ராகவேந்திரர், ""வெங்கண்ணா, இனி உனக்கு எந்தத் துன்பம் வந்தாலும் என்னை நினைத்துக்கொள்... உயர்வடைவாய்!"" என்று சொல்லிவிட்டு, பயணத்தைத் தொடர்ந்தார். சில மாதங்களுக்குப் பின், அந்த வழியே வந்த ஹைதராபாத் நவாப், தனக்கு வந்த கடிதம் ஒன்றை வெங்கண்ணாவிடம் தந்து படிக்கச் சொன்னார். படிப்பறிவில்லாத வெங்கண்ணா, ராகவேந்திரரை மனதால் நினைத்தான். மறுகணம், ""மன்னா, இன்னும் சில நாட்களில் உங்கள் ஆட்சியின் கீழ் மேலும் சில நாடுகள் வரப் போவதாக இதில் எழுதியுள்ளது!"" என்று கடிதத்தைப் படித்துச் சொல்ல முடிந்தது அவனால்... நவாப் மகிழ்ந்தார். வெங்கண்ணாவை அவ்வூரின் திவானாக நியமித்தார். "ஒருமுறை நினைத்ததற்கே இத்துணை உயர்வா...!" ராகவேந்திரரின் திருநாம மகிமையை வியந்த வெங்கண்ணா, அப்போதுமுதல் தன் சுவாசமாகவே அவரது திருநாமத்தை நினைத்தான். செல்லும் இடமெல்லாம் பலர் சீடர்களாகி ராகவேந்திரரைப் பின்தொடர்ந்தார்கள். 

பொதுவாக, மகான்கள் மட்டுமே மகிமைகளைப் புரிவார்கள். ஆனால், ராகவேந்திரரோ, தான் மட்டுமல்ல, தன் சீடர்கள், தன் பக்தர்களும்கூட மகிமைமிக்கவர்களே என்பதை பல்வேறு சமயங்களில் உணர்த்தினார். அவரது காஷாய ஆடைகள், அவர் கைப்பட்ட அட்சதை, அவர் தரும் பிரசாதம், மிருத்திகை எனப்படும் புனிதமண் என அனைத்துமே அற்புதங்களை நிகழ்த்தின. ராகவேந்திரர், தமது திருத்தல யாத்திரைக்கு இடையிடையே, வியாசராஜரின் சந்திரிகைக்கு "பிரகாசம்" எனும் உரை,தந்திர தீபிகை எனும் நூலுக்கு "நியாய முக்தாவளி" எனும் உரை என்பதுபோல் பல நூல்களை எழுதினார். வேதத்தின் சாரத்தை பாமரரும் உணரும்படிச் சொல்லும் ஆற்றல் பெற்றிருந்த ராகவேந்திரர், வேதாந்த உலகுக்கும், கல்விக்கும், மத்வ சித்தாந்தத்திற்கும் உதவும்படி ஏராளமான கிரந்தங்களை இயற்றினார். "புதிது புதிதாக எழுதவேண்டும்; பழைய நூல்களுக்கு புதியதாக அதுவும் எளியதாக வியாக்யானங்கள் (விளக்க உரைகள்) சொல்ல வேண்டும்" என்பதையே குறிக்கோளாகக் கொண்டவர்போல், இரவு பகல் பாராமல் எழுதினார் பரிமளாச்சாரியார். அவரது நூல்களும் பரிமளம் மிக்கவையாகவே திகழ்ந்தன. 

ஒருசமயம், ராகவேந்திரரைக் காண வந்த ஜோதிடர்கள் மூவரிடம், தமது ஆயுள் குறித்து கணக்கிட்டுச் சொல்லுமாறு கேட்டார் ராகவேந்திரர். ""தங்களுக்கு 100 வயது"" சொன்னார் ஒரு ஜோதிடர். ""ஸ்வாமிகள் 300 வருடங்கள் இருப்பீர்கள்!"" என்றார் மற்றவர். ""700 ஆண்டுகள் உங்கள் ஆயுள்!"" மூன்றாமவர் சொன்னார். "எப்படி மூவரும் வெவ்வேறு விதமாக கணித்திருக்க முடியும்?" புரியாமல் குழம்பினார்கள் சீடர்கள். அவர்களுக்குப் புரியும்படி ஸ்வாமிகள் சொன்னார். ""என் சரீரத்துக்கு வயது நூறு ஆண்டுகள்... என் நூல்கள் 300 வருடங்களுக்குப் பின் பிரசுரமடையும்... பிருந்தாவனத்தில் நான் 700 ஆண்டுகள் வாசம் செய்வேன்!"" ""எங்கே இருக்கிறான் உன் ஹரி!?"" என்று இரண்யன் கேட்டபோது, ""எங்கும் இருக்கிறான்!"" என்று சொன்ன பிரகலாதனின் அம்சமாகவே கருதப்படும் ராகவேந்திரர், சென்ற இடமெலாம் இறைவனின் பெருமையை உணர்த்தினார். பல்வேறு இடங்களில் காலடி பதித்த பின்னர், மீண்டும் ஆதோனிக்கு வந்தார் ராகவேந்திரர். 

அவரது வருகையை அறிந்து பக்தியோடு ஓடிவந்து பணிவோடு வரவேற்றான் வெங்கண்ணா. அதோடு, பெருமைக்குரிய மகான் வந்திருப்பதாக நவாப்பிடமும் சொன்னார். ராகவேந்திரரின் மகிமையைச் சோதிக்க விரும்பிய நவாப், மாமிசங்கள் நிறைந்த கூடையை, மலர்க்கூடை எனச் சொல்லி அளித்தான். புன்முறுவலோடு, புனித நீரைத் தெளித்து அதனை ஏற்றுக்கொண்டார் ராகவேந்திரர். பின்னர், தம் சீடர்களை அழைத்து அந்தக் கூடையைத் திறக்கச் சொன்னார். நவாப்பின் எதிர்பார்ப்புக்கு மாறாக, கூடையில் இருந்த புலால், புஷ்பமாக மாறி மணந்து கொண்டிருந்தது. தன் செயலுக்காக வருந்திய நவாப், மன்னிக்கும்படி வேண்டி மகானைப் பணிந்தார். ஆதோனி முழுவதையும் அவருக்கே அளிப்பதாகச் சொன்னார். ஆனால், மாஞ்சாலம் (இன்றைய மந்திராலயம்) கிராமம் மட்டுமே போதும் எனக் கூறி அதனைப் பெற்றுக் கொண்டார் மகான். துங்கபத்ரா நதிக்கரையில் இருந்த அந்த கிராமமே, கிருதயுகத்தில் தாம் பிரகலாதனாக இருந்தபோது யாகம் செய்த பூமி என்பதை உணர்ந்திருந்த மகான், தாம் பிருந்தாவனம் கொள்ள ஏற்ற இடமும் அதுவே என நினைத்தார். அங்கே தமக்கு ஒரு பிருந்தாவனம் அமைக்கும்படி வெங்கண்ணாவிடம் சொன்னார். அப்படியே அமைக்கப்பட்டது. 

கி.பி. 1671_ம் ஆண்டு (விரோதிகிருது) ஆவணிமாதம், கிருஷ்ணபட்சம், துவிதியை திதியுடன் கூடிய வியாழக்கிழமையன்று, தம் சீடர்களையழைத்த ராகவேந்திரர், தாம் பிருந்தாவனப் பிரவேசம் செய்யப் போவதாகச் சொன்னார். அதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் நடந்தபின், சுற்றிலும் பக்தர்கள் சூழ்ந்திருக்க, சீடர்கள் துக்கத்தில் ஆழ்ந்திருக்க, பிருந்தாவனப் பிரவேசம் செய்தார் ராகவேந்திர மகான். 

அவரது வாக்குப்படியே, இதோ, இன்றும் பிருந்தாவனத்தில் வாசம் செய்து கொண்டுதான் இருக்கிறார். கற்பக விருட்சமாக, காமதேனுவாக, தன்னை வேண்டுவோர் வேண்டுவன யாவும் தருகிறார். 



வரும் ஆகஸ்ட் 25ம் தேதி முதல் 31ம் தேதி வரை ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகளின் குரு பூஜை விழா மந்திராலயத்தில் நடைபெற உள்ளது.முக்கிய ஆராதனை நாட்கள் கீழே தரப்பட்டுள்ளது. 



புதன், 8 ஆகஸ்ட், 2018

இல்வாழ்க்கையில் எப்படி வாழ வேண்டும் என்று ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு



மதியாமை செய்கின்ற மாந்தனை,துதியாமை செய்வாய் ஆயினும்,

மிதியாமை செய்யாய் பதியாமை இறையை உள்ளத்தில் வாழ்ந்தால் நல் கதியாமை தொடராது.உணர்வாய்.சதியாமை செய்யும் மாந்தன் பிறன் நலன் கருதாமை செய்து வாழுங்கால்,கர்மாவை சேர்த்து,சேர்த்து தர்மத்தை மறக்கிறான்.அறத்தை,சத்தியத்தை புரியாமை வாழ்ந்து இவற்றை எல்லாம் விளங்காமை கொண்டு கல்லாமையில்,நல்லவற்றை கருதாமையால் பொல்லாமை கொண்டு, புகழாமை தேடி பிறரை புகழாமை வாழும் மாந்தன் நற்பண்பு அவனிடம் புகலாமையில்,மெய் புகழாமை அவனுக்கு வராது.எத்தனை அறியாமை தலை கனத்தால்,பிறரை மதியாமை,பொல்லாமை,பொறாமை என்று உணராமை காரணம். சித்தன் வாக்கு நடவாமை ஆனால் மட்டும் எம்மீது சின ஆமை கொண்டு,வெறுப்பாமை தொடர ,கர்மாவை மறக்கிறான் மாந்தன்.உண்மையை சொல்லாமை,அறத்தை செய்யாமை,சினத்தை விடாமை,கடமையை தொடராமை,காலத்தை பயன்படுத்தாமை என்று பல ஆமை மனிதன் கொள்ள,இவற்றால் உயராமை கொள்கிறான்.பொறாமை விட்டு போதாமையிலும்,பொல்லாமை கொள்ளாது, உள்ள ஆமையை நில் ஆமை என்று கட்டளையிட்டு,இவ்வுலகில் எல்லாம் நிலையாமை என உணர்ந்து பதவி கிடைக்காமல் போனால் அவற்றால் பலனாமை இல்லை.பதவி நிலையாமை,தனம் நிலையாமை, அழகு நிலையாமை,அறமே நிலைத்த ஆமை என்று உணர்ந்து துயிலாமை கொண்டு துடிக்கின்ற காலத்தை பயிலாமை,உள் அடங்கி மனதை சாந்தி ஆக்கி,தள்ளாமையிலும் தாளாமை கொள்ளாது,தேகத்தை வலுவாமை ஆக்க தேவையற்றதை ஏற்காமை,உண்மையாக நல்லனவற்றை ஏற்காமை இருக்காமை, என்றும் எதிலும் எவர் மீதும் சினவாமை, தேவை.தேவையல்லா பொறாமை,ஆற்றாமை, அடிக்கடி உள்ளத்தை மாற்றாமை,நல்ல செயலை தொடர்ந்து செய்யாமை இருக்காமையாக இருக்க,இறை தோழமை உண்மையாக தொடரும் என்பதை மெய்ம்மை மனத்தோடு உணர்ந்து,தேகம் நிலையாமை என்பதை உணர்ந்து, ஆத்மா உணராமை வாழாமை,தொட்டதற்க்கு எல்லாம் வருத்தாமை,வாழும் வழி தொடர, புரியாமை நடக்கின்ற செயல் எல்லாம் பரந்தாமன் திருவடி பற்ற புரியாமை,பரியாமை.தொடர்ந்து நரியாமை நகர்ந்து தெரியாமை,தொலைந்து உன் உள்ளத்தில் எரியாமை,அணைந்து பரியாமை வளர்ந்து, தெரியாமை,எது குறித்தும் வாழாமை,வாழும் மெய் கொண்டு வாழ அனைத்தும் நலமாம்.

ஆசிகள்.

புருவ மத்தி தியானத்தை எப்படி செய்வது என்பது பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு




வடகிழக்கு திசை நோக்கி பிரம்ம முகூர்த்தத்தில் பத்மாசனமிட்டு அமர்ந்து குறைந்தபட்சம் ஏக நாழிகையாவது (24 நிமிடங்கள் ) உடல் சோர்வில்லாமல் அமர இயலுகிறதா ? என்று முயற்சி செய்து, பிறகு மனதிலே உள்ள எல்லா வகையான எண்ணங்களையும் விட்டுவிட்டு, முதலில் இஷ்ட தெய்வ நாமாவளியை மனதிற்குள் சொல்லிக்கொண்டே வந்தால் பின்னால் இந்த தவ முறை மெல்ல, மெல்ல சாத்தியமாகும். 

அமாவாசை அன்று முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய தர்ப்பணம் பற்றி ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு


வரும் சனிக்கிழமை(11-08-2018) அன்று ஆடி அமாவாசை வருவதால் அன்று முன்னோர்களுக்கு செய்யவேண்டிய தர்ப்பணத்தை முறையாக செய்ய வேண்டும்.அகத்தியர் தன் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடமைகளை சரி வர செய்ததால் அன்னை லோபாமுத்ரையை மணக்கும்  வாய்ப்பை பெற்றார்.ஆகவே அவரின் வழி நிற்கும் நாமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பயன் பெறுவோம்.   

திருச்சி உஜ்ஜீவநாதர் உய்யங்கொண்டான் மலையில் அகத்திய பெருமான் உத்தரவுப்படி மாலை 06:00 மணிக்கு மேல் மோட்ச தீபமும் ஏற்றப் படுகிறது.வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.  

ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு 


அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன ?

இறைவனின் கருணையைக்கொண்டு, அன்றுதான் செய்யவேண்டும் என்பதல்ல. அன்று செய்தால் சிறப்பு என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதற்காக ஏனைய தினங்களில் செய்தால் சிறப்பல்ல என்றோ, அதனால் நல்ல பலன்கள் வராது என்றோ பொருளல்ல. என்று வேண்டுமானாலும் செய்யலாம், தவறொன்றுமில்லை. நன்றாக கவனிக்க வேண்டும். அன்றைய தினம் உள்ள புற ஈர்ப்பு சூழலிலே உலகியல் பணிகளை செய்வதைவிட, இதுபோன்ற ஆன்மீக தொடர்பான பணிகளை செய்யும்பொழுது அவனுக்கு மிக எளிதாக அதனை செய்வதற்குண்டான சூழலும், அதை செய்வதால் நல்ல விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வளவே. அதற்காக அந்த தினத்தை மட்டுமே குறிவைத்துக் கொண்டு செய்வதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்புடைய செயலாக ஏற்றுக்கொள்ளவில்லை.   

அமாவாசை தர்ப்பணத்தை அதற்குரிய மனிதரைக் கொண்டுதான் செய்ய வேண்டுமா? அல்லது நாமே செய்யலாமா?நாமே செய்தால் அதற்குரிய பலன் கிடைக்குமா?

பக்தியை நேர்மையாக அவனவன் அறிந்த வகையில் செலுத்தினால்  இறையருள் கிட்டும்.எல்லா வகையான தோஷமும் குறையும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.ஆனால்,அதே சமயம்,உலகியல் ரீதியாக ஒரு பணி செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய தொழில் வல்லுனரை மனிதன் நாடுகிறானே?.ஒரு வாது மன்றம் என்றால் பெரும்பாலும் தானே சென்று யாரும் வாதாடுவதில்லை.ஒரு வழக்கறிஞனை நாடுகிறான்.கடுமையான பிணி ஏற்பட்டால்,மருத்துவனை பார்க்கிறான்.ஒரு இல்லத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்குரிய தொழிலாளியைப் பார்க்கிறான்.ஆனால் ஆன்மீகம் என்று வரும்பொழுது மட்டும் ஏன் அதற்குரிய ஒரு மனிதனை தேர்ந்து எடுத்து,ஒரு வேளை அதில் பலர் தவறான மனிதர்களாக இருக்கலாம்,போராடி ஒரு நல்ல மனிதனை தேர்ந்தெடுத்து அவனுக்கு உண்டான உதவிகளை செய்து அந்த பணியைப் பூர்த்தி செய்துகொண்டால் என்ன? என்பதுதான் எமது வினா.அதற்காக சுயமாக செய்யக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.தாராளமாக அவரவர்களால் இயன்றதை செய்யலாம்.அதற்கும் பலன் உண்டு.

வீட்டில் அமாவாசை தர்ப்பணம் செய்த பிறகு கோலம் போடலாமா ?

தாராளமாக.