வரும் சனிக்கிழமை(11-08-2018) அன்று ஆடி அமாவாசை வருவதால் அன்று முன்னோர்களுக்கு செய்யவேண்டிய தர்ப்பணத்தை முறையாக செய்ய வேண்டும்.அகத்தியர் தன் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பிதுர் கடமைகளை சரி வர செய்ததால் அன்னை லோபாமுத்ரையை மணக்கும் வாய்ப்பை பெற்றார்.ஆகவே அவரின் வழி நிற்கும் நாமும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பயன் பெறுவோம்.
திருச்சி உஜ்ஜீவநாதர் உய்யங்கொண்டான் மலையில் அகத்திய பெருமான் உத்தரவுப்படி மாலை 06:00 மணிக்கு மேல் மோட்ச தீபமும் ஏற்றப் படுகிறது.வாய்ப்புள்ளவர்கள் பயன்படுத்தி கொள்ளவும்.
ஸ்ரீ அகத்திய பெருமான் அருளிய ஜீவ வாக்கு
அமாவாசை அன்று தர்ப்பணம் செய்வதால் ஏற்படும் பலன்கள் என்ன ?
இறைவனின் கருணையைக்கொண்டு, அன்றுதான் செய்யவேண்டும் என்பதல்ல. அன்று செய்தால் சிறப்பு என்பதை நாங்கள் மறுக்கவில்லை. அதற்காக ஏனைய தினங்களில் செய்தால் சிறப்பல்ல என்றோ, அதனால் நல்ல பலன்கள் வராது என்றோ பொருளல்ல. என்று வேண்டுமானாலும் செய்யலாம், தவறொன்றுமில்லை. நன்றாக கவனிக்க வேண்டும். அன்றைய தினம் உள்ள புற ஈர்ப்பு சூழலிலே உலகியல் பணிகளை செய்வதைவிட, இதுபோன்ற ஆன்மீக தொடர்பான பணிகளை செய்யும்பொழுது அவனுக்கு மிக எளிதாக அதனை செய்வதற்குண்டான சூழலும், அதை செய்வதால் நல்ல விளைவுகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. அவ்வளவே. அதற்காக அந்த தினத்தை மட்டுமே குறிவைத்துக் கொண்டு செய்வதை யாங்கள் ஒருபொழுதும் ஏற்புடைய செயலாக ஏற்றுக்கொள்ளவில்லை.
அமாவாசை தர்ப்பணத்தை அதற்குரிய மனிதரைக் கொண்டுதான் செய்ய வேண்டுமா? அல்லது நாமே செய்யலாமா?நாமே செய்தால் அதற்குரிய பலன் கிடைக்குமா?
பக்தியை நேர்மையாக அவனவன் அறிந்த வகையில் செலுத்தினால் இறையருள் கிட்டும்.எல்லா வகையான தோஷமும் குறையும் என்பதை நாங்கள் மறுக்கவில்லை.ஆனால்,அதே சமயம்,உலகியல் ரீதியாக ஒரு பணி செய்ய வேண்டும் என்றால் அதற்குரிய தொழில் வல்லுனரை மனிதன் நாடுகிறானே?.ஒரு வாது மன்றம் என்றால் பெரும்பாலும் தானே சென்று யாரும் வாதாடுவதில்லை.ஒரு வழக்கறிஞனை நாடுகிறான்.கடுமையான பிணி ஏற்பட்டால்,மருத்துவனை பார்க்கிறான்.ஒரு இல்லத்தை உருவாக்க வேண்டுமென்றால் அதற்குரிய தொழிலாளியைப் பார்க்கிறான்.ஆனால் ஆன்மீகம் என்று வரும்பொழுது மட்டும் ஏன் அதற்குரிய ஒரு மனிதனை தேர்ந்து எடுத்து,ஒரு வேளை அதில் பலர் தவறான மனிதர்களாக இருக்கலாம்,போராடி ஒரு நல்ல மனிதனை தேர்ந்தெடுத்து அவனுக்கு உண்டான உதவிகளை செய்து அந்த பணியைப் பூர்த்தி செய்துகொண்டால் என்ன? என்பதுதான் எமது வினா.அதற்காக சுயமாக செய்யக்கூடாது என்று நாங்கள் கூறவில்லை.தாராளமாக அவரவர்களால் இயன்றதை செய்யலாம்.அதற்கும் பலன் உண்டு.
வீட்டில் அமாவாசை தர்ப்பணம் செய்த பிறகு கோலம் போடலாமா ?
தாராளமாக.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக