பசு மாடு வளர்ப்பது பற்றி:
பசு கன்றுக் குட்டியை ஈன்றவுடன் மனிதனுக்குப் பால் தருவதில்லை.கன்றுக்குத்தான் பால் தருகிறது.பல பசுக்கள் மகரிஷிகளின் அவதாரங்கள்தான்.முதலில் கன்று திருப்தியாக திகட்ட,திகட்ட உண்ட பிறகு,மிச்ச்சத்தைத்தான் மனிதன் எடுக்க வேண்டும்.”பாவத்தில் உச்சக்கட்ட பாவம்,கன்றை பால் குடிக்க விடாமல் செய்வது.இந்த பாவத்திற்கு மன்னிப்பே கிடையாது.பரிகாரமும் கிடையாது.ஆனால்,”இப்படியெல்லாம் பார்த்தால் நாங்கள் வாழ முடியுமா?” என்று மனிதன் விதண்டாவாதம் பேசுவான்.எனவேதான்,பசுக்கள் காப்பகங்களுக்குச் சென்று உதவி செய்வது,குறிப்பாக,பரசுராம தேசத்திற்கு(கேரளா) எடுத்துச் செல்லப்படும் பசுக்களை வாங்கி,எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காமல் வளர்ப்பது மிகப்பெரிய புண்ணியமப்பா.கோடிக்கணக்கான காலங்கள் யாகம் செய்தாலும்,ஹிமாசலத்தில் தவம் செய்தாலும் கிடைக்காத இறையருள்,பசுக்களை பராமரிப்பதில் கிடைக்கும்.அதிலும் பசுக்களால் இனி நமக்கு நன்மை இல்லை.அதனால் கொலை களத்திற்கு அனுப்புகிறோம் என்று அனுப்பப்படும் அந்த மாடுகளை, எவன் ஒருவன் அழைத்து வந்து பராமரிக்கிறானோ,அவன் வேறு எந்த பூஜையும் செய்ய வேண்டாம்.வேறு எந்த யாகமும் செய்ய வேண்டாம்.அதை வளர்ப்பதே போதும்.அது இறைவனிடம்,அவனை,அழைத்துச் செல்லும்.
பசுவைக் கட்டிப் போடுவது குறித்து:
ஒரு குழந்தையை,தாய் தன் இடுப்பில் தூக்கி வைப்பதன் காரணம்,அதன் நன்மையைக் கருதியே.பசுவின் நன்மையைக் கருதி அதை அடைத்து வைத்தால்,அது பாவமல்ல.மனிதனின் நன்மையைக் கருதி,பசுவை அடைத்து வைத்தால்தான் பாவம்.
கன்று குடித்த பிறகு,மிச்சத்தை இறைவனுக்கு அபிஷேகம் செய்தால்,அது பாவம் அல்ல.அதனால்தான்,முன்காலத்தில் மன்னர்கள் ஒரு ஏற்பாடு செய்து,ஆலயத்திற்கு அருகிலேயே “கோசாலை”அமைத்து,பாலை அபிஷேகத்திற்கு எடுத்துக் கொள்வார்கள்.பசுவிற்கு பால் எதற்காகடா ஊறுகிறது?அதை தடுத்தால்...மனிதனுக்கு மட்டும்தான் தான் பெற்ற குழந்தை,பாலை வயிறு முட்ட குடிக்க வேண்டும்.அப்பொழுது யாராவது அதை தடுத்தால்,மனிதன் சும்மா இருப்பானா?ஆனால்,இவன் மட்டும் எல்லா உயிர்களிடமும்,அசுரன் போல நடந்து கொள்வான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக