வெள்ளி, 29 செப்டம்பர், 2017

ஸ்ரீ பிரம்மாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மேஸ்வரர் ஆலய சோமாஸ்கந்தர்,மஹாலிங்கம் மற்றும் மஹா மண்டல அகத்தியர் யந்திர பிரதிஷ்டை





1166 ஆண்டுகள் கடந்து ஒரு அற்புதமான தருணத்தை உருவாக்கி உள்ளார் அப்பன் ஸ்ரீபிரம்மேஸ்வரர் எங்கும் காண கிடைத்திடாத சோமாஸ்கந்தர் திருமேனி அறிய வகையான கல்லை தேர்வு பழமை மாறாமல் புதுமை புகாமல் சிற்ப சாஸ்திர மரபுகளை மீறாது பெரும் பொருட்செலவில் உருவாக்கி பிரதிஷ்டை செய்ய உள்ளோம் ஆயிரம் ஆலயங்கள் செல்லலாம் ஆனால் கருவறை பிரவேசம் காண கிடைத்திடாத காட்சிகள் ஏராளம் வாருங்கள் சிவமே இரவு தங்க வசதியும், அன்ன உபசரிப்பும் ஆலய வளாகத்தின் அருகில் செய்துள்ளோம் 4-10_2017 அன்று மாலையே வாருங்கள் நட்பும் உறவும் சூழ ஒரு மகா அற்புதமான தருணம் மஹாலிங்கம் மற்றும் சோமாஸ்கந்தர் பிரதிஷ்டை.

  ஒர் அற்புதமான இறைப்பணி
சிவமே
                                                    வாருங்கள் வாழ்த்துக்கள்
                                                      உமது வரவே சிறப்பு.

4-10-2017 அன்று மாலை வரும் அடியார் பெருமக்களுக்கு தங்கும் வசதி மற்றும் அன்னபாளிப்பும் செய்யப்பட்டுள்ளது.

 நன்றி
இவன் சிவ லட்சுமிபதி
9444753444

வியாழன், 14 செப்டம்பர், 2017

நவராத்திரியின் தாத்பர்யம் என்ன என்பது பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



இவற்றை தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் பெருமை வார்த்தைகளில் அடங்காது. தொடர்ந்து நவராத்திரி பூஜை என்பது மிக, மிக உயர்வான பூஜையாகும். இதை கடைபிடிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் சிறப்பை தரும். பக்தி என்பதை விட்டுவிட்டு முதலில் மனிதர்கள் தமக்குள் ஒற்றுமையையும், தமக்குள் சக்தியை வளர்த்துக்கொள்ள இது உதவும். அது மட்டுமல்ல. இஃதொப்ப நிலையிலே ஒரு இல்லத்திலே இது போன்ற இறை ரூபங்களையெல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூஜை செய்து பலருக்கும் ஆடைதானம், அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு தர வேண்டும் என்கிற தாத்பர்யம் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு காலத்திலே வறுமையில் ஆட்பட்டாலும் கூட சில மனிதர்கள் யாசகமாக யாரிடமும் எதையும் பெறமாட்டார்கள். அப்படி பெறுவதை தரக்குறைவாக எண்ணுவார்கள். தானம் தந்தாலும் வாங்க மாட்டார்கள். இது போன்றவர்களை எப்படி காப்பாற்றுவது ?

பூஜை, பிரசாதம் என்றுதான் தர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கூட்டுவழிபாடுகளும், பூஜைகளும் ஏற்படுத்தப்பட்டன. இன்னும் நவராத்ரியின் பரிபூரண பூஜைகள் எல்லாம் வழக்கொழிந்து போய் வெறும் ஆர்பாட்டம் மட்டுமே இப்பொழுது ஆங்காங்கே நடக்கிறது. அங்கே யாகங்கள், கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக நாக தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற பல்வேறு தோஷங்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் இந்த பூஜை செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக இளம் பெண்கள் மாலைபொழுதிலே ஒன்றுகூடி நல்ல முறையிலே அன்னையின் நாமத்தை உருவேற்றுவது அவர்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்குவதற்கு மிகவும் உதவும். இது போன்ற பூஜைகள்தான் கலாசாரத்தையும், பக்தியையும், சமூக மேம்பாட்டையும் வளர்க்கக் கூடியது. ஆனால் அதில் உள்ள நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு மனிதன் வெறும் தவறான புற சடங்கை மட்டும் பார்த்தால் குழப்பம்தான் எதிரொலிக்கும்.  

கோவிலில் உழவாரப்பணி செய்யும்போது,செடி,கொடிகளை அகற்றினால் தோஷமா?




இதைக் கூறும்போதே,இது பாவம்தான் என்றாலும்,இறை,இதை மன்னிக்கிறது,அகற்றப்பட்ட செடிகள் மீண்டும் துளிர்க்கின்ற தன்மையைப் பெறுவதால்.(அந்த செயல்,அந்த செடி,கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை).ஒரு ஆட்டையோ,மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும்போது,அது பரிபூரணமாக மரித்து விடுகிறது.ஆனால் செடி,கொடிகளை அகற்றும்போது அதன் அடிவேரோ,மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால்,அந்த ஜீவன் அதற்கு இடம்பெயர்ந்து விடுவதால்,இதனால் வரக்கூடிய தோஷம், மன்னிக்கப்படக்கூடிய தோஷமாகி விடுகிறது. என்றாலும் கூட இதிலும் பாவம் சேர்வதால்தான்,பிறவியற்ற தன்மை வேண்டுமென்று கூறுகிறோம்.ஏனென்றால் ஒரு மனிதனால் இந்த பூமியிலே,சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. (வீடுகளைப் பொருத்தவரை),வீட்டைச் சுற்றிலும் “சிறியா நங்கை” போன்ற மூலிகைகளை வளர்த்தால்,பூச்சிகள் வராது.வேறு வழியின்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளைக் கொல்ல நேர்ந்தால்,ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக,அந்த தோஷமானது மன்னிக்கப்படும்

திருத்திய மலை பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



ஒவ்வொ௫ மனிதனும் வாழ்க்கையில் செய்கின்ற தவறுகள் அநேகம். ஒவ்வொ௫  ஸ்தலமும் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தூர தூர பகுதியிலி௫ந்து வ௫ம் மாந்தர்களுக்காக ஏற்பட்டது.அவற்றிலே ஒன்றுதான் இந்த "பிழை தி௫த்தும் கிரியாகும்".மனிதன் மீண்டும் பிழை செய்யாமல் வுள் அன்போடு மனம் வ௫ந்தி  ,மன்னிப்பை கேட்டு கொண்டால், இந்த இடத்திலே, அவனுடைய விதி தி௫த்த படும்.எனவே மனிதன் பிழையை மட்டும் அல்ல.அவன் தலை எழுத்தையே தி௫த்த கூடிய மலை ஆகும். அபிஷேகங்கள் தொடர்ந்து செய்ய பிதுர் தோஷங்களும்,பிரம்ம ஹத்தி தோஷங்களும் குறைய வாய்ப்பு வுண்டு

ஸ்தல வரலாறு 

‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’ என்னும் திருப்பெயரோடு ஈசன் அமர்ந்து அருளும் தலம்  தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள திருதேசமலை (எ) திருத்தியமலை ஆகும்.

திருத்தியமலைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம்
அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.

திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள்,  தாயினும் நல்லாள்

மூலவர் :சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அம்மன் :தாயினும் நல்லவள்
கோயில் கட்டப்பட்ட ஆண்டு : 5050 வருடங்களுக்கு முன்பு.
அமைவிடம்  :  திருதேசமலை (எ)  திருத்தியமலை

செல்லும் வழி

திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில்,திருப்பைஞ்சீலியிலிருந்து 12 கி.மீ.
திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் பெரமங்கலத்திலிருந்து 10 கி.மீ.
முசிறியிலிருந்து மூவானுர் பாதையில் 15 கி.மீ.
துறையூரிலிருந்து 17 கி.மீ.
 
 முகவரி:-

 அருள்மிகு.ஏகபுஷ்ப பிரியநாதர் & தாயினும் நல்லாள் திருக்கோவில்,திருத்தியமலை  (அஞ்சல்),
 முசிறி (வட்டம்),
 திருச்சி (மாவட்டம்),
 தமிழ்நாடு -621006.

புதன், 13 செப்டம்பர், 2017

அகத்திய பெருமான் ஜீவநாடியில் அருளிய பொது வாக்கு



1.மங்கள(செவ்வாய் கிழமை) வாரத்தோடு ஹஸ்த நக்ஷத்ரம் வரும் நாளில்,தீவிர விரதமிருந்து,முருக பெருமானை வழிபட,புத்திர தோஷம் நீங்கும்.

2.ப்ரஹலாதனின் பக்தி,ராவணனின் பக்தி,நாயன்மார்களின் பக்தி,ஆழ்வார்களின் பக்தி,மன உறுதி,மன வலிமை,சித்தர்களைப் போன்ற பற்றற்ற தன்மை வந்துவிட்டால்,கட்டாயம் இறை காட்சி கிடைக்கும்.

3.ஒரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது,இரசவாதத்தை விட கடினமானது.வெளியில்
 இருந்து வரும் விமர்சனங்களுக்கு கோபப்பட்டால்,ஒருவனால் எப்படி ஆன்மீகத்தில்
 மேலே வரமுடியும்?

 4.குருவைத் தேடி அலைபவர்கள்,குருவருள் வேண்டும் என்பவர்கள்,ஒன்பது முக தீபத்தை,குரு தட்சிணாமூர்த்திக்கு,புனர்பூசம் நக்ஷத்திர நாளில்,ஏற்றி,அவரின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.

திங்கள், 4 செப்டம்பர், 2017

அஷ்டாவக்ரரைப் பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு


இறைவனின் கருணையால், உடல், அஃதாவது தேகம் எட்டு விதமாகத் திரிந்து, பார்ப்பதற்கு அவலட்சண தோற்றத்தோடு தன்னை இருக்குமாறு இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப்பெரிய ரிஷி, அஃதொப்ப அஷ்டாவக்ர ரிஷியாகும். இஃதொப்ப பலரும் அவரைப் பார்த்து பரிகாசம் செய்த பொழுது, மௌனமாக அதனை அவர் எதிர்கொண்டார். இஃதொப்ப, அஃதொப்ப அந்த மகான் மட்டுமல்ல, ஒவ்வொரு ஞானியும் தான் உணர்ந்ததை, தான் அடைந்ததை, தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ, அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வர வேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், சிக்கல் எங்கே இருக்கிறது ? மாயையும், அறியாமையும் விடாத வரை, ஓரே கணத்தில் உயர்ந்த நிலை எந்தவொரு ஆத்மாவிற்கும் சித்திக்காது. இன்னவன் கூறியது போல எஃதும் தேவையில்லை. அஃதொப்ப அஷ்டாவக்ரரின் முறைகளைக் கடைபிடித்தால் மேலேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால் அதைக் கண்டு, உணர்ந்து, கேட்டு, புரிந்து கொள்வதற்கே ஒரு ஆத்மாவிற்கு கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே ? எனவே அப்படியொரு நுழைவாயில் இருப்பவனுக்குதான் இஃதொப்ப உபதேசம் உண்மையாக, மெய்யாக புரியுமப்பா. இல்லையென்றால் வெறும் செவியாடல்களாக, எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறானல்லவா ? என்ன வாசித்தாலும் அவையெல்லாம் வெறும் ஏட்டோடு, செவியோடு என்று வைத்து விட்டு, நடைமுறை என்று வரும்பொழுது மிக,மிக,மிக,மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே ? அதை விடாதவரை எந்தவொரு ஆத்மாவும் மேலேறுவது கடினம். எனவே உன்னதமான, உயர்ந்த அஷ்டாவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து, குறிப்பாக குருவாரம்(வியாழக்கிழமை) விரதமிருந்து, அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால், கனவிலோ, நேரில் வேறு வடிவிலோ வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய, இறைவனருளால் காத்திருக்கிறார்.


அஷ்டாவக்ர மகரிஷி வழிபாடு:

ஓம் அஷ்டாவக்ர மகரிஷி திருவடிகள் போற்றி

என்று கூறி  மானசீகமாக வழிபட்டால் கனவிலோ, நேரில் வேறு வடிவிலோ வந்து மேலும் பல உபதேசங்களை அருள்வார்.

கோவில் கும்பாபிசேகம் தடை ஏற்படுவது குறித்து அகத்தியர் ஜீவ வாக்கு



எந்தவொரு கலச விழாவும் தடைபடுவதற்கு இறை ரீதியான காரணம், விதி ரீதியான காரணம், தெய்வீக சூட்சுமம் ஒருபுறம் இருந்தாலும்கூட மனிதர்கள் தமக்குள் ஒன்றுபட்டு செயல்பட்டால் நன்மைகள் நடக்கும். எனவே இஃதொப்ப கலச விழா எந்த ஆலயத்திலே தடைபட்டாலும்கூட நல்ல முறையில் கணபதி யாகத்தை செய்துவிட்டு மீண்டும் பணியில் இறங்கினால் தடை நீங்கும்.

திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் ஆலயத்தின் சிறப்புகள் பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு




எல்லா ஸ்தலங்களிலும் எல்லாவகையான பாக்கியங்களையும் ஒரு மனிதன் பெறலாம். இது பொது நியதி. பிறகு எதற்கு இந்த பிரச்சினை என்றால் இந்த ஸ்தலம் செல்ல வேண்டும் என்றெல்லாம் வகுத்து வைத்திருக்கிறார்கள் ? என்றால் அப்படியாவது அந்த பிரச்சினை யாருக்கு இருக்கிறதோ, அந்த பிரச்சினை யாரை வாட்டுகிறதோ அந்த மனிதன் அதனை ஒருமுகமாக எண்ணி ‘ இதோ ! இந்த ஆலயத்திற்கு வந்துவிட்டேன். இதோ ! மனம் ஒன்றி இந்த இறைவனை வணங்கிவிட்டேன். எனவே இந்த பிரச்சினை இனி என்னை விட்டுப்போகும் ‘ என்று ஒரு தீவிர நம்பிக்கையை கொண்டு வருவான். அதற்காகத்தான் இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கிறது. மற்றபடி எல்லா ஆலயங்களும் சிறப்புதான். இருந்தாலும் இன்னவன் கூறுகின்ற ஆலயமும் இஃதொப்ப ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள், புதன் தோஷம் இருப்பவர்கள் இஃதொப்ப அதனை சார்ந்து ( லோகாய ரீதியாக மட்டும் கூறுகிறோம். இதனை வேறுவிதமாக புரிந்துகொள்ளக்கூடாது ) லோகாய ரீதியாக எத்தனைதான் உழைத்தாலும் செல்வம் சேரவில்லை. செல்வம் வந்தாலும் நேரிய வழியில் செலவை விருப்பம்போல் செய்யமுடியாமல் வீண் வழியில் செல்கிறது என்று வருந்தக்கூடிய மனிதர்கள் சென்று வணங்கவேண்டிய ஆலயங்களில் இதுவும் ஒன்று. இன்னும் பல்வேறு சிறப்புகளை காலப்போக்கில் புரிந்துகொள்ளலாம்.


ஸ்தல வரலாறு

இரண்டாயிரம் வருடங்களுக்கு முற்பட்ட புறநானூறு என்னும் சங்கத் தமிழ் இலக்கியத்தில் திருவட்டாறு ஊர் பற்றிய குறிப்பு வருகிறது. கி.பி. 9 ஆம் நூற்றாண்டு நம்மாழ்வார் இவ்வூரில் நிலை பெற்ற பெருமானை "வாட்டற்றன்" கேசவன் என்கிறார்.

முதலாம் குலோத்துங்க சோழனின் கல்வெட்டு உட்பட 45க்கும் மேற்பட்ட கல்வெட்டுக்கள் இக்கோவிலில் உள்ளன. இக்கோவில் சோழர்கள், வேணாட்டு அரசர்கள், திருவிதாங்கூர் அரசர்கள் ஆகிய மூன்று மன்னர்களின் காலத்தில் கட்டப்பட்டது. இக்கோவிலின் உண்ணாழியைச் சுற்றி அமைந்துள்ள திருசுற்று மாளிகை, தஞ்சை பெரிய கோயில் திருசுற்று மாளிகை பாணியில் சிறிய அளவில் அமைந்து சோழர் கலைப் பணியை நினைவூட்டுகிறது.
இத்திருத்தலத்தைச் சுற்றியோடும் ஆற்றின் நடுவே 18படிகளின் மேல் அமைந்த பூமி அரங்கத்தில் 3 ஏக்கர் ௨௧ செண்டு நிலப்பரப்பில் இத்திருக்கோயில் அமைந்துள்ளது. கேரளப் பாணி கலந்து உருவாக்கப்பட்ட இக்கோவிலில் நான்கு வெளிப்பிரகாரங்களிலும் 224 தூண்களில் பாவை விளக்குகள் உள்ளன. இப்பாவை விளக்குகள் தீப லட்சுமி என அழைக்கப்படும். இவற்றில் ஒன்றிலிருந்து இன்னொன்று வேறுபட்டது இதன் சிறப்பு. இந்த தூண்களில் 2300 சிற்பங்களுக்கு மேல் உள்ளன. பிரகாரம் 80 மீட்டர் நீளமுடையது. இதன் அகலம் 6.10 மீட்டர்.

இக்கோவிலின் ஸ்ரீபலி மண்டபத்திலும் நாலம்பலத்திலும் அபூர்வமான சிற்பங்கள் உள்ளன. ஸ்ரீபலி மண்டபம் 13.15 மீட்டர் நீளமும் 12.40 மீட்டர் அகலமும் உள்ளது. நாலம்பலம் 42.50 நீளமும் 36.50 அகலமும் உடையது.

புராண இதிகாச காட்சிகளை விவரிக்கும் மிக அற்புதமான மரச் சிற்பங்கள், ஒற்றைக்கல் மண்டபம், உதய மார்த்தாண்ட நமஸ்கார மண்டபம் மற்றும் சாஸ்தா கோவில் முன் மண்டப விதானங்களை அலங்கரிக்கும். கருவறையின் எதிரே உள்ள 18அடி "18அடி" 1 அடி அளவில் ஒரே கல்லால் ஆன ஒற்றைக்கல் 12ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்டது.

கோவில் கருவறைத் தெய்வம் 22அடி (6.60 மீட்டர்) நீளமுடையது. பாம்பணை மேல் பள்ளி கொண்ட மூலவர் 16008 சாளக் கிராமம் உள்ளடங்கிய கடு சக்கரைப் படிமம் ஆகும். ஆதி கேசவன் மேற்கு நோக்கிப் பள்ளி கொண்டுள்ளார். அவரது நாபியில் பிரம்மா இல்லை. ஸ்ரீ கோயில் அற்புத விமானம், வகையைச் சார்ந்தது. செம்பு தகட்டால் வேயப்பட்டது. இதில் தங்க மூலம் பூசப்பட்ட ஐந்து கலசங்கள் உள்ளன

முகவரி:

அருள்மிகு திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயில், திருவட்டாறு-629 17


ஊட்டத்தூர் கோவில் பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு




இது அபூர்வமான ஸ்தலங்களுள் ஒன்று.ஆன்மாவுக்கு அதிகம் புண்ணியத்தை ஊட்டும் ஊர் அப்பா.இந்த நடராஜர் சிறப்பானவர்.கலைகளிலே தேர்ச்சி பெற வேண்டும்,விற்பன்னர் ஆக வேண்டும் என்றால்,அதற்கு வழிபட வேண்டிய ஸ்தலம்.அந்தக் கலைஞானத்தை முக்கண்ணன்,ஆடல்வல்லான் மூலம் வழங்குவார்.அவரவர் ஜென்ம நக்ஷத்திரத்து அன்றோ அல்லது வாய்ப்பு உள்ள பொழுதோ உயர்வான முறையிலே வழிபாடு செய்ய வேண்டும்.ஆன்மீகமும் கலைகளுள் ஒன்றாகும்.பிறவி அற்ற நிலை,ஞானம்  போன்ற கலைகளைப் பெற வேண்டினாலும் இங்கு சென்று நடராஜரை கலப்படம் இல்லாத பொருள்களினாலே அபிஷேகம் செய்வதும்,தூய சந்தனக்காப்பு செய்வதும் சிறப்பாகும்.

கோவில் செல்லும் வழி:

திருச்சியில் இருந்து சென்னை செல்லும் சாலையில் திருப்பட்டூர், சிறுவாச்சூருக்கு அருகில் உள்ளது ஊட்டத்தூர். மெயின் ரோட்டில்  இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் உள்ளது இந்த கிராமம். இங்குதான் பிரமாண்ட ஆலயத்தில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார் ஸ்ரீசுத்தரத்தினேஸ்வரர்.

ஸ்தல வரலாறு

பழங்கால வரலாற்று சிறப்பு மிக்க ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ராஜராஜ சோழ மன்னரால் கட்டப்பட்டது. முற்காலத்தில் ஊற்றத்தூர் என கல்வெட்டில் குறிக்கப்பட்ட இவ்வூர் தற்போது ஊட்டத்தூர் என்று அழைக்கப்படுகிறது. ராஜராஜ சோழ மன்னர் ஊட்டத்தூரின் மேற்கு பகுதியில் சோலேச்சுவரர் என்ற மேட்டுக்கோவில் ஒன்றை எழுப்பினார். வில்வ வனமாக இருந்த அப்பகுதிக்கு ராஜராஜ சோழ மன்னரின் வருகை அவ்வப்போது நிகழ்வது உண்டு.


காயத்துடன் சிவலிங்கம்

. ஒருமுறை அவரது வருகையையட்டி மன்னர் செல்லும் வழியில் இடையூறுகளை நீக்க வேண்டி புல் செதுக்கும் பணி நடைபெற்றது. அந்த தருணத்தில் ஓரிடத்தில் எதிர்பாராது ரத்தம் பீறிட்டெழுந்தது. உடனே பணியாட்கள் மன்னரிடம் செய்தியை தெரிவித்தனர். மன்னர் வந்து பார்த்தபோது ரத்தம் பீறிடுவது நின்று தடைபட்ட தழும்போடு கூடிய ஒரு சிவலிங்கம் காட்சியளித்தது.

அந்த சிவலிங்கம் காணப்பட்ட இடத்திலேயே கோவில் கட்ட நிர்மாணம் செய்யப்பட்டது. இதன் காரணமாக ராஜராஜ சோழனால் குறிப்பிட்ட இடத்தில் எழுப்பப்பட்டதே ஊட்டத்தூர் அருள்மிகு சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோவில் ஆகும். இன்றும் லிங்கத்தின் தலைப்பகுதியில் பார்த்தால் மண்வெட்டி பட்ட காயம் தெரியும். கோவில் மூலஸ்தானத்தில் தீபாராதனை நடை பெறும்போது கற்பூர ஜோதி லிங்கத்தில் பிரதிபலிக்கும். இக்காட்சி மூலவர் ஜோதி வடிவானவர் என்றும், சுத்தரத்தினேஸ்வரர் தூயமாமணி என்றும், மாசிலாமணி என்றும் அழைக்கப்படுகிறார்.

அப்பர் பெருமான் தனது ஆன்மிக சுற்றுப்பயணத்தின் போது ஊட்டத்தூருக்கு செல்ல நினைத்து 5 கிலோ மீட்டர் எல்லையிலேயே திகைத்து மகிழ்ந்து நின்று விட்டார். காரணம், அந்த எல்லையில் இருந்து பார்த்தபோது வழியெல்லாம் சிவலிங்கங்கள் இருப்பதாக உணர்ந்தார். சிவலிங்கத்தின் மீது அவரது பாதங்கள் படுவது சிவ குற்றம் என எண்ணி, எல்லையில் நின்றபடியே ஊட்டத்தூர் பெருமானை நினைத்து பதிகம் பாடியருளினார். இவ்வாறு எல்லையில் இவர் பாடியதால் அந்த இடம் பாடாலூர் என அழைக்கப்பட்டது.

இந்திரன் மீண்டும் பதவி பெற்ற திருத்தலம்.......... ஆசிய கண்டத்திலேயே அபூர்வ நடராஜர் திருக்கோவில் இது. சிறுநீரகம் சம்மந்தமான கோளாறுகளை நீக்கக்கூடியவர். இந்திரன் பதவி இழந்தவுடன் இந்த நடராஜ பெருமானை தரிசித்து மீண்டும் இந்திர பதவியை பெற்றார். பதவியை இழந்தவர்கள் இந்த கோவிலுக்கு வந்து வழிபாடு செய்தால் மீண்டும் இழந்த பதவியை பெறலாம் என்பதை கல்வெட்டு செய்திகள் தெரிவிக்கிறது.

அந்தக நரிமணம் என்கிற வேர் பல கோடி கற்களில் ஒன்றை பிளக்கும். அப்படி பிளக்கக்கூடிய கற்கள்தான் பஞ்சநதன பாறை. ஆதலால் இவர் பஞ்சநதன நடராஜர் என்று அழைக்கப்படுகிறார். இவருக்கு என்ன சக்தி என்றால், சூரியன் காலையில் புறப்படும்போது வெளிப்படுத்தும் கதிர்களை ஈர்க்கக்கூடிய சக்தி இங்கு உள்ள நடராஜருக்கு உண்டு.

ஆதலால் நாம் இவரை என்ன நினைத்து வணங்குகின்றோமோ அது அப்படியே நடக்கிறது. பிரம்மாவுக்கு இந்த ஊரில்தான் சாப விமோசனம் கிடைத்தது. ஆதலால் சிவன் எதிரில் பிரம்ம தீர்த்தம் உள்ளது. வேறு எந்த கோவிலிலும் சிவன் எதிரில் தீர்த்தம் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

கோவில் அமைப்பு

ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களிலும் சூரிய ஒளி கர்ப்பகிரகத்தில் உள்ள லிங்கத்தின் மேல் படுகிறது. இதேபோல் வைகாசி மாதம் விசாக திருவிழாவின்போதும் சூரியனின் கதிர்கள் சுத்தரத்தினேஸ்வரர் மீது 3 நிமிடங்கள் பட்டு வழிபடுகிறது.

ஆப்பூர் மலையின் சிறப்பு பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு


இறைவனின் கருணையைக்கொண்டு இயம்புவது யாதென்றால் அஃதொப்ப ஆப்பூர் கிரி என்று யாம் பலரையும் அங்கு செல்ல அருளாணை கூறியிருக்கிறோம். அங்கே எம்பெருமான் பெருமாள் வடிவிலே அருள்பாலித்துக் கொண்டிருக்கிறார். முன்பு ஒருவன் ஓங்கி உரத்த குரலில் புலம்பினானே, ( பெண்களுக்கு ) திருமணம் ஆகவில்லை என்று, அந்த ஆப்பூர் கிரிக்கு சென்று நல்ல முறையிலே குறிப்பாக சுக்ர வாரம், எத்தனை முறை இயலுமோ அத்தனை முறை அங்கு சென்று மானசீகமாக பிரார்த்தனை செய்து, அங்குள்ள வானரங்களுக்கு நிறைய உணவுகளைத் தந்து வேண்டிக்கொண்டு வந்தாலே திருமண தோஷம் நீங்கும். அடுத்தபடியாக ‘ நாங்கள் சுக்ர வாரம் சென்றோம். ஆலயம் திருக்காப்பிட்டு இருக்கிறது. என்ன செய்வது ? ‘ என்று எம்மை நோக்கி வினவினால் அதற்கு நாங்கள் என்ன செய்ய இயலும் ? பலரும் வந்து தட்சிணை நிறைய வந்தால்தான் ஆலயத்தைத் திறக்க இயலும் என்பது மனிதர்களின் நிலை. ஆனால் ஆலயம் திறந்திருந்தாலும், சாத்தியிருந்தாலும் பக்தன் ஒருவன் பரிபூரண சரணாகதியோடு சென்றால் இறைவன் அருள் உண்டு என்பது எமது வாக்கு. எனவே ‘ வெள்ளிக்கிழமை செல்ல இயலவில்லை ஐயா. எனக்கு அனலிவாரம்தான் விடுப்பு இருக்கிறது ‘ என்றால் தாராளமாக அன்றும் செல்லலாம். உலகியல் ரீதியான எத்தனையோ சிறப்புகளில், திருமண தோஷம் நீங்குவதற்கும், திருமணத்திற்கு பிறகு கருத்து வேறுபாட்டால் பிரிந்திருக்கும் தம்பதிகள் ஒன்று சேர்வதற்கும், குழந்தை பாக்கியம் தருவதற்கும், லோகாயத்திலே சுக்ரனின் அனுக்ரஹம் வேண்டும் என்று எண்ணக்கூடியவர்கள் செல்ல வேண்டிய ஸ்தலங்களில் அதுவும் ஒன்று. அதையும் தாண்டி, இன்றும் 64 சித்தர்கள் அரூபமாக அங்கு தவம் செய்து கொண்டிருக்கிறார்கள். முழுமதி தினமான பௌர்ணமி அன்று அங்கு சென்று மானசீகமாக வேண்டினால் வாய்ப்புள்ள பக்தர்களுக்கு, ஆத்மாக்களுக்கு ஒளி வடிவில் சித்தர்கள் தரிசனம் தருவார்கள். எனவே அது ஒரு சித்த பூமி, ஜீவ பூமி, அது ஒரு மூலிகை வனம். அங்குள்ள மூலிகைகளில் பட்டு வருகின்ற சுவாசக்காற்று மனிதர்களின் பிணிகளை போக்க வல்லது.


முகவரி:

ஆப்பூர் சென்னை சிங்கப்பெருமாள் கோவிலில் இருந்து ஒரகடம் செல்லும் வழியில் திருகச்சூரை அடுத்த கிராமம் ஆப்பூர்மலை.

குருக்கள்: பாலாஜி பட்டர்,9444142239 

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 10


போற்றடா கற்பமுண்டா  எனைப்போலாவாய்
புருவத்தின் ஞானமெல்லாம் பொருந்ததோணும்
ஏற்றடா சிங்குவையும் பிடித்துமைந்தா
என்மக்காள் நித்தமுந்தான் பீசங்கூட்டி
வாற்றடா பதின்மூன்று வருசந்தானும்
மைந்தனே கற்பமதை மனதிற்கொள்ளு
சாற்றடா சரவணையு முனக்குத்தோணும்
சண்முகந்தா னென்றுசொல்லி சாற்றலாமே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 10

விளக்கம்:

முன் சொன்னதுதான் போல கற்பம் உண்டா.இதை நாள்தோறும் செய்து வந்தால் எனை போல நீயும் ஆவாய்.எல்லா ஞான சூட்சுமங்களும் உனக்கு புரியும்.இந்த கற்பத்தை தொடர்ந்து பதி மூன்று ஆண்டுகள் சிங்குவையும் அதன் பீஜ மந்திரத்தையும் சேர்த்து சொன்னால் இந்த சராசரத்தின் பொருள் உனக்குள் தோணும்.அப்படி நீ கண்டால் அவனை சண்முகன் என்று கூறலாம் என்று கூறி பத்தாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.