வெள்ளி, 29 செப்டம்பர், 2017

ஸ்ரீ பிரம்மாம்பிகை உடனுறை ஸ்ரீபிரம்மேஸ்வரர் ஆலய சோமாஸ்கந்தர்,மஹாலிங்கம் மற்றும் மஹா மண்டல அகத்தியர் யந்திர பிரதிஷ்டை





1166 ஆண்டுகள் கடந்து ஒரு அற்புதமான தருணத்தை உருவாக்கி உள்ளார் அப்பன் ஸ்ரீபிரம்மேஸ்வரர் எங்கும் காண கிடைத்திடாத சோமாஸ்கந்தர் திருமேனி அறிய வகையான கல்லை தேர்வு பழமை மாறாமல் புதுமை புகாமல் சிற்ப சாஸ்திர மரபுகளை மீறாது பெரும் பொருட்செலவில் உருவாக்கி பிரதிஷ்டை செய்ய உள்ளோம் ஆயிரம் ஆலயங்கள் செல்லலாம் ஆனால் கருவறை பிரவேசம் காண கிடைத்திடாத காட்சிகள் ஏராளம் வாருங்கள் சிவமே இரவு தங்க வசதியும், அன்ன உபசரிப்பும் ஆலய வளாகத்தின் அருகில் செய்துள்ளோம் 4-10_2017 அன்று மாலையே வாருங்கள் நட்பும் உறவும் சூழ ஒரு மகா அற்புதமான தருணம் மஹாலிங்கம் மற்றும் சோமாஸ்கந்தர் பிரதிஷ்டை.

  ஒர் அற்புதமான இறைப்பணி
சிவமே
                                                    வாருங்கள் வாழ்த்துக்கள்
                                                      உமது வரவே சிறப்பு.

4-10-2017 அன்று மாலை வரும் அடியார் பெருமக்களுக்கு தங்கும் வசதி மற்றும் அன்னபாளிப்பும் செய்யப்பட்டுள்ளது.

 நன்றி
இவன் சிவ லட்சுமிபதி
9444753444

வியாழன், 14 செப்டம்பர், 2017

நவராத்திரியின் தாத்பர்யம் என்ன என்பது பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



இவற்றை தொடர்ந்து சொல்லிக்கொண்டே போகலாம். அன்னையின் பெருமை வார்த்தைகளில் அடங்காது. தொடர்ந்து நவராத்திரி பூஜை என்பது மிக, மிக உயர்வான பூஜையாகும். இதை கடைபிடிப்பது ஒவ்வொரு மனிதனுக்கும் மிகவும் சிறப்பை தரும். பக்தி என்பதை விட்டுவிட்டு முதலில் மனிதர்கள் தமக்குள் ஒற்றுமையையும், தமக்குள் சக்தியை வளர்த்துக்கொள்ள இது உதவும். அது மட்டுமல்ல. இஃதொப்ப நிலையிலே ஒரு இல்லத்திலே இது போன்ற இறை ரூபங்களையெல்லாம் வைத்து பலரையும் அழைத்து பூஜை செய்து பலருக்கும் ஆடைதானம், அன்னதானம் இவற்றை தருவதன் மூலம் அங்கே இருப்பவர்கள், இல்லாதவர்களுக்கு தர வேண்டும் என்கிற தாத்பர்யம் மறைமுகமாக உணர்த்தப்படுகிறது. ஒரு காலத்திலே வறுமையில் ஆட்பட்டாலும் கூட சில மனிதர்கள் யாசகமாக யாரிடமும் எதையும் பெறமாட்டார்கள். அப்படி பெறுவதை தரக்குறைவாக எண்ணுவார்கள். தானம் தந்தாலும் வாங்க மாட்டார்கள். இது போன்றவர்களை எப்படி காப்பாற்றுவது ?

பூஜை, பிரசாதம் என்றுதான் தர வேண்டும் என்பதற்காகத்தான் இது போன்ற கூட்டுவழிபாடுகளும், பூஜைகளும் ஏற்படுத்தப்பட்டன. இன்னும் நவராத்ரியின் பரிபூரண பூஜைகள் எல்லாம் வழக்கொழிந்து போய் வெறும் ஆர்பாட்டம் மட்டுமே இப்பொழுது ஆங்காங்கே நடக்கிறது. அங்கே யாகங்கள், கூட்டு பிரார்த்தனை செய்ய வேண்டும். குறிப்பாக நாக தோஷம், களத்திர தோஷம், செவ்வாய் தோஷம் போன்ற பல்வேறு தோஷங்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் இந்த பூஜை செய்வது மிகவும் அவசியம். குறிப்பாக இளம் பெண்கள் மாலைபொழுதிலே ஒன்றுகூடி நல்ல முறையிலே அன்னையின் நாமத்தை உருவேற்றுவது அவர்கள் ஜாதகத்தில் உள்ள தோஷங்களை நீக்குவதற்கு மிகவும் உதவும். இது போன்ற பூஜைகள்தான் கலாசாரத்தையும், பக்தியையும், சமூக மேம்பாட்டையும் வளர்க்கக் கூடியது. ஆனால் அதில் உள்ள நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் ஒரு மனிதன் வெறும் தவறான புற சடங்கை மட்டும் பார்த்தால் குழப்பம்தான் எதிரொலிக்கும்.  

கோவிலில் உழவாரப்பணி செய்யும்போது,செடி,கொடிகளை அகற்றினால் தோஷமா?




இதைக் கூறும்போதே,இது பாவம்தான் என்றாலும்,இறை,இதை மன்னிக்கிறது,அகற்றப்பட்ட செடிகள் மீண்டும் துளிர்க்கின்ற தன்மையைப் பெறுவதால்.(அந்த செயல்,அந்த செடி,கொடிகளுக்கு பூரணமான அழிவை ஏற்படுத்துவதில்லை).ஒரு ஆட்டையோ,மாட்டையோ ஒரு மனிதன் கொலை செய்யும்போது,அது பரிபூரணமாக மரித்து விடுகிறது.ஆனால் செடி,கொடிகளை அகற்றும்போது அதன் அடிவேரோ,மாற்று விதைகளோ சற்று உயிர் பெறுவதால்,அந்த ஜீவன் அதற்கு இடம்பெயர்ந்து விடுவதால்,இதனால் வரக்கூடிய தோஷம், மன்னிக்கப்படக்கூடிய தோஷமாகி விடுகிறது. என்றாலும் கூட இதிலும் பாவம் சேர்வதால்தான்,பிறவியற்ற தன்மை வேண்டுமென்று கூறுகிறோம்.ஏனென்றால் ஒரு மனிதனால் இந்த பூமியிலே,சிறிய பாவம் கூட செய்யாமல் வாழ முடியாது. (வீடுகளைப் பொருத்தவரை),வீட்டைச் சுற்றிலும் “சிறியா நங்கை” போன்ற மூலிகைகளை வளர்த்தால்,பூச்சிகள் வராது.வேறு வழியின்றி வீட்டினுள் இருக்கும் பூச்சிகளைக் கொல்ல நேர்ந்தால்,ஒருவன் செய்கின்ற தர்மங்கள் காரணமாக,அந்த தோஷமானது மன்னிக்கப்படும்

திருத்திய மலை பற்றிய அகத்தியர் ஜீவ வாக்கு



ஒவ்வொ௫ மனிதனும் வாழ்க்கையில் செய்கின்ற தவறுகள் அநேகம். ஒவ்வொ௫  ஸ்தலமும் அந்தந்த பகுதி மக்களுக்கு மட்டுமல்லாமல், தூர தூர பகுதியிலி௫ந்து வ௫ம் மாந்தர்களுக்காக ஏற்பட்டது.அவற்றிலே ஒன்றுதான் இந்த "பிழை தி௫த்தும் கிரியாகும்".மனிதன் மீண்டும் பிழை செய்யாமல் வுள் அன்போடு மனம் வ௫ந்தி  ,மன்னிப்பை கேட்டு கொண்டால், இந்த இடத்திலே, அவனுடைய விதி தி௫த்த படும்.எனவே மனிதன் பிழையை மட்டும் அல்ல.அவன் தலை எழுத்தையே தி௫த்த கூடிய மலை ஆகும். அபிஷேகங்கள் தொடர்ந்து செய்ய பிதுர் தோஷங்களும்,பிரம்ம ஹத்தி தோஷங்களும் குறைய வாய்ப்பு வுண்டு

ஸ்தல வரலாறு 

‘ஏகபுஷ்பப் பிரியநாதன்’ என்னும் திருப்பெயரோடு ஈசன் அமர்ந்து அருளும் தலம்  தரை மட்டத்திலிருந்து சுமார் 200 மீட்டர் உயரத்தில் உள்ள திருதேசமலை (எ) திருத்தியமலை ஆகும்.

திருத்தியமலைக்கு வந்து ஏகபுஷ்பப் பிரியநாதரையும் தாயினும் நல்லாளையும் தரிசித்து வழிபட்டனராம்
அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபாமுத்திரையும்.

திருமணத்தடை, கல்வித்தடை, மணமக்களிடையே ஏற்படும் பிரச்னைகள் முதலான எல்லாப் பிரச்னைகளையும் தீர்த்து அருளும் அன்னையாகத் திகழ்கிறாள்,  தாயினும் நல்லாள்

மூலவர் :சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார்.
அம்மன் :தாயினும் நல்லவள்
கோயில் கட்டப்பட்ட ஆண்டு : 5050 வருடங்களுக்கு முன்பு.
அமைவிடம்  :  திருதேசமலை (எ)  திருத்தியமலை

செல்லும் வழி

திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில்,திருப்பைஞ்சீலியிலிருந்து 12 கி.மீ.
திருச்சி-துறையூர் பேருந்துப் பாதையில் பெரமங்கலத்திலிருந்து 10 கி.மீ.
முசிறியிலிருந்து மூவானுர் பாதையில் 15 கி.மீ.
துறையூரிலிருந்து 17 கி.மீ.
 
 முகவரி:-

 அருள்மிகு.ஏகபுஷ்ப பிரியநாதர் & தாயினும் நல்லாள் திருக்கோவில்,திருத்தியமலை  (அஞ்சல்),
 முசிறி (வட்டம்),
 திருச்சி (மாவட்டம்),
 தமிழ்நாடு -621006.

புதன், 13 செப்டம்பர், 2017

அகத்திய பெருமான் ஜீவநாடியில் அருளிய பொது வாக்கு



1.மங்கள(செவ்வாய் கிழமை) வாரத்தோடு ஹஸ்த நக்ஷத்ரம் வரும் நாளில்,தீவிர விரதமிருந்து,முருக பெருமானை வழிபட,புத்திர தோஷம் நீங்கும்.

2.ப்ரஹலாதனின் பக்தி,ராவணனின் பக்தி,நாயன்மார்களின் பக்தி,ஆழ்வார்களின் பக்தி,மன உறுதி,மன வலிமை,சித்தர்களைப் போன்ற பற்றற்ற தன்மை வந்துவிட்டால்,கட்டாயம் இறை காட்சி கிடைக்கும்.

3.ஒரு மனிதனை பக்குவப்படுத்துவது என்பது,இரசவாதத்தை விட கடினமானது.வெளியில்
 இருந்து வரும் விமர்சனங்களுக்கு கோபப்பட்டால்,ஒருவனால் எப்படி ஆன்மீகத்தில்
 மேலே வரமுடியும்?

 4.குருவைத் தேடி அலைபவர்கள்,குருவருள் வேண்டும் என்பவர்கள்,ஒன்பது முக தீபத்தை,குரு தட்சிணாமூர்த்திக்கு,புனர்பூசம் நக்ஷத்திர நாளில்,ஏற்றி,அவரின் மந்திரங்களை அதிகமதிகம் உருவேற்ற நன்மை உண்டு.

திங்கள், 4 செப்டம்பர், 2017

அஷ்டாவக்ரரைப் பற்றி அகத்தியர் ஜீவ வாக்கு


இறைவனின் கருணையால், உடல், அஃதாவது தேகம் எட்டு விதமாகத் திரிந்து, பார்ப்பதற்கு அவலட்சண தோற்றத்தோடு தன்னை இருக்குமாறு இறையிடம் வரம் கேட்டு வந்த மிகப்பெரிய ரிஷி, அஃதொப்ப அஷ்டாவக்ர ரிஷியாகும். இஃதொப்ப பலரும் அவரைப் பார்த்து பரிகாசம் செய்த பொழுது, மௌனமாக அதனை அவர் எதிர்கொண்டார். இஃதொப்ப, அஃதொப்ப அந்த மகான் மட்டுமல்ல, ஒவ்வொரு ஞானியும் தான் உணர்ந்ததை, தான் அடைந்ததை, தான் எந்த நிலையை நோக்கி நகர்ந்து வந்திருக்கிறோமோ, அந்த நிலைக்கு ஒவ்வொரு ஆத்மாவும் வர வேண்டும் என்ற பரந்த எண்ணத்தோடு உபதேசம் செய்கிறார்கள். ஆனால், சிக்கல் எங்கே இருக்கிறது ? மாயையும், அறியாமையும் விடாத வரை, ஓரே கணத்தில் உயர்ந்த நிலை எந்தவொரு ஆத்மாவிற்கும் சித்திக்காது. இன்னவன் கூறியது போல எஃதும் தேவையில்லை. அஃதொப்ப அஷ்டாவக்ரரின் முறைகளைக் கடைபிடித்தால் மேலேறி விடலாம் என்பது மெய்யிலும் மெய்யே. ஆனால் அதைக் கண்டு, உணர்ந்து, கேட்டு, புரிந்து கொள்வதற்கே ஒரு ஆத்மாவிற்கு கோடிக்கணக்கான பிறவிகள் தாண்டிவிடுமே ? எனவே அப்படியொரு நுழைவாயில் இருப்பவனுக்குதான் இஃதொப்ப உபதேசம் உண்மையாக, மெய்யாக புரியுமப்பா. இல்லையென்றால் வெறும் செவியாடல்களாக, எத்தனையோ ஞான நூல்களை மனிதன் வாசிக்கிறானல்லவா ? என்ன வாசித்தாலும் அவையெல்லாம் வெறும் ஏட்டோடு, செவியோடு என்று வைத்து விட்டு, நடைமுறை என்று வரும்பொழுது மிக,மிக,மிக,மிக கீழ்த்தரமாக நடந்து கொள்கிறானே ? அதை விடாதவரை எந்தவொரு ஆத்மாவும் மேலேறுவது கடினம். எனவே உன்னதமான, உயர்ந்த அஷ்டாவக்ர மகரிஷியை அன்றாடம் நினைத்து, குறிப்பாக குருவாரம்(வியாழக்கிழமை) விரதமிருந்து, அன்னவரை நினைத்து மானசீகமாக வழிபாடு செய்தால், கனவிலோ, நேரில் வேறு வடிவிலோ வந்து மேலும் பல உபதேசங்களை அவர் செய்ய, இறைவனருளால் காத்திருக்கிறார்.


அஷ்டாவக்ர மகரிஷி வழிபாடு:

ஓம் அஷ்டாவக்ர மகரிஷி திருவடிகள் போற்றி

என்று கூறி  மானசீகமாக வழிபட்டால் கனவிலோ, நேரில் வேறு வடிவிலோ வந்து மேலும் பல உபதேசங்களை அருள்வார்.