எண்ணுகின்ற எண்ணமெல்லாம் நீயே " என் செயல் அதற்கும் மூலம் அது நீயே
"சித்தர்களெல்லாம் பணியும் அகத்திய மகாகுருவே . உன் திருவடிகளுக்கு நமஸ்காரம் .. உயரிய சொல் அது உன் சொல்லே . உன்னதம் அது உன் செயலே . ஆணையிடுகின்ராய் பணிகிறேன் . ஆட்டுவிக்கின்றாய் ஆடுகிறேன் .மகாகுருவே .. உன் பார்வை ஒன்றே போதும் தர்மங்கள் எல்லாம் தழைக்க . ஐயனே .நீ இட்ட புதிய பணி தற்போது நிகழ இருக்கின்றது .சிங்கப்பூர் நாட்டில் சென்று அங்கு வரும் அன்னையின் பாதத்தை பணிவாய் என ஆணையிட்டாய் . உன்ஆணைக்கு இணங்க சிங்கப்பூர் நாட்டிலே சித்தர்களின் தலைவி அன்னை பாலா , பவனி வரஇருக்கிறாள் .
ஸ்ரீ ருத்ர காளி அம்மன்கோயில் வளாகத்தில் எதிர்வரும் 31.03.2018 சனிக்கிழமை காலை 8 மணிக்கு ஸ்ரீ பாலா மகாயாகமும் . மாலை 6 மணிக்கு 151 பாலா கன்னிகா பூஜையும் உன் ஆணைப்படி நிகழ்த்த இருக்கின்றோம். வாலை மனோன்மணி . புவனை திரிபுரை என சித்தர்களால் போற்றப்பட்டவள் பாலா திரிபுரசுந்தரி .அன்னைக்கு சிங்கப்பூர் மாநகரில் முதன்முதலாக 151 பாலா பூஜையை மகாகுரு அகத்தியரின் ஆணைப்படி நடத்த இருக்கிறோம் . பரம ரகசியமான அற்புத ஆற்றல் கொண்ட மஹா மூலிகைகள் .அன்னை பாலாவிற்கு பிரியமான சமித்துக்கள் .அன்னைக்கு பிரியமான தர்மங்களும் தா னங்களும் நிகழ இருக்கிறது .151பெண் குழந்தைகள் மத்தியில் நானே வந்து அமர்வேன் என அன்னை பாலா வாக்களித்து இருக்கிறாள் . அன்னையின் கோலம் காண என் மகாகுரு அகத்தியரும் வருகிறார் . அன்னை லோபாமுத்ரா தேவி 151 சுமங்கலிகளில் ஒருவரை இருப்பதாக வாக்களித்து இருக்கிறாள் . காண கண் கோடி வேண்டும் தாயே வாலை குமரியே உன் வருகையை காண .எல்லோரும்வாருங்கள் என் அன்னையை காண .
இந்தமகா யாகத்தை நடத்தி தரும் ருத்ர காளி அம்மன் கோயில் நிர்வாகத்திற்கும் , அகத்திய கிருபாசிங்கப்பூர் அமைப்பின் பொறுப்பாளர்களான திரு .அறுமுகம்,அறிவரசன்,மனோகரன் மற்றும் அனைத்து அகத்திய கிருபா நண்பர்களுக்கும் என் பணிவான வணக்கங்கள் . தொடரட்டும் அகத்தியரின் தர்மங்கள் .வளம்பெறட்டும் தேசம் .வருகின்ற அன்னை வாலை மனோன்மணியை வரவேற்று பணிவோம் .
ஒளி வடிவாக விளங்கி சித்தர்களுக்கு எல்லாம் தலைவியாக இருக்கும் ஸ்ரீ பாலா த்ரிபுரசுந்தரியே . தாயே .ஒளிமயமான சிறு பெண் வடிவமே உன்னை அகத்தியரின் அடிமைகள் பண்ணிகின்றோம் . வரவேண்டும் தாயே .யாகத்தில் இந்த யுகத்தின் தர்மங்கள் தழைக்க வரவேண்டும் .மக்களின் துயரங்கள் எல்லாம் தீர்க்க வருவாய் தாயே உன் சின்னஞ்சிறு பாதங்கள் ஸ்ரீ ருத்ரமா காளி ஆலயத்தில் வலம் வந்து இந்த உலகம் நலம்பெற வருவாய் அன்னையே . உனக்கென ஒளிவிடும் வில்வ மர நெல்லி மர கட்டைகள் எல்லாம் உன் யாகத்தீயில் பூரணமாக காத்துகொண்டு இருக்கிறது .பரிசுத்தமான மனங்களில் வாழும் சிறு குழந்தையே பாலா . உனக்கென யாகத்தில் இட காமதேனுவின் வம்சத்தில் வந்த பரிசை என்னும் பசுவின் பரிசுத்தமான நெய் காத்துஇருக்கிறது தாயே . தாமரையை கைகளில் ஏந்தியவளே .உன்னக்கென தாமரைகள் காத்துஇருக்கின்றன .பரிசுத்தமான செவ்வாழை பழங்களால் ஆன உன்னதமான உணவுகள் இருக்கின்றன தாயே .வருவாய் அம்மா.
எங்களை வாழவைக்க .உன்னை வரவேற்க 151 சுமங்கலிகள் காத்து இருக்கிறோம் . உன் பாதங்களில் நலங்கிட.அம்மா உன் பிஞ்சு பாதங்கள் இந்த உலகம் செழிக்க வரவேண்டும் இந்த யாகத்திற்கு தாயே .இந்திய தேசத்தின் காடுகளில் உள்ள அதி அற்புதமான பிரபஞ்சத்தை வாழவைக்கும் மூலிகைகள் உன் யகத்திற்காக காத்திருக்கிறது . தாயே வருவாய் உனக்கு பிரியமான மாதுளை முத்துக்களை அருந்துவாய் தாயே . உனக்கென பரிசுத்தமான அன்னங்கள் தயாராக இருக்கும் தாயே .அன்னை பாலாம்பிகையே உனக்கென 1லட்சம் உன் நாமங்களால் உருவேற்றிய , மகாபாலா எந்திரம் பொறிக்கப்பட்ட பட்டு வஸ்திரம் காத்து இருக்கிறது தாயே .அன்னையே உன்னை வரவேற்க உன்னைப்போல் வேடமிட்ட 151 சிறு பெண் குழந்தைகள் அன்போடு இருக்கிறார்கள் அன்னையே .உனக்கென பரிசுத்தமான வெற்றிலைகளில் பரிமளம் கலந்த தாம்பூலம் தயாராக இருக்கிறது அம்மா . வருவாய் என் மகாகுரு அகத்தியனையும் அழைத்துக்கொண்டு .வரவேண்டும் அம்மா .இந்த யுகத்தின் தர்மங்கள் தழைக்க வருவாய் சித்தர்கள் மனம் மகிழ வருவாய் .எங்களின் துயர் தீர்க்க வருவாய் .
அன்னைஸ்ரீ பாலா திரிபுரசுந்தரியே சரணம் சரணம் சரணம் .
முகவரி:
Sri Ruthra Kaliamman Temple,100 Depot Rd, Singapore 109670
நன்றி
அகத்திய கிருபா அறக்கட்டளை

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக