சனி, 27 ஜனவரி, 2018

மலேசியாவில் ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு குரு பூசை விழா








Sage agathiyar guru pooja held in Sri sakthi karpga vinayagar temple,Malasiya on Jan30th,2018.

For More details,Please find the invitation.

Recent aasi reading for Mr.Pathavachalam Sundram in conjunction with 11th annual guru pooja ..
MESSAGE FROM SAGE AGASTHYA THROUGH HIS NAADI LEAVES READ BY NAADI READER N.SIVASHANGER

On the 3rd Jan 2018@10pm

PRAISES TO THE FEET OF THE ELEPHANT FACED (LORD GANESHA) I, Agasthya will speak about the message part, listen my son Baktha and also for my devotees to know, my blessings and guidance to all.

My pooja prayers to be held in the Sithi Vinayagar Temple to be carried out successfully, the siddhars give their blessings. The 18 siddhars, rishis, give their blessings together with the 90 million Maahans (souls that have achieved salvation) blessings. Together with all these blessings, in the year of Avelambi in the Tamil calendar, in the month of Thai and the date 17th and in the stainless Mangalan vaaram which falls on 30th Jan 2018 on Tuesday in the star of Poonarpoosam do the prayers for me in a fitting manner, do the Abhishegam for me in the morning. Do Abhishegam and Aaradhanai while singing our praises on that day in the Sithi Vinayagar Temple. The siddhar pooja prayers will take place led by my son Baktha, the devotees and my disciples will gather for the prayers. This year’s prayers which is incomparable, many will talk about their achievements. For the prayers to be successful many devotees of various races will help you out. Monetary help and materialistic help you will get, my son. We will make sure you receive help from other countries as well. Without mistake print my portrait, Vallal’s potrait, write also the history of the siddhars and sing the praises of the siddhars wholeheartedly. Recite the Moola Mantra (Arutperumjoothi Mantra). Do the recitals open heartedly and at the same time put forward your problems and pray in such manner and all your problems will go away.

For the devotees who pray in such manner, karmas will be removed, bad luck and sickness, debts and problems, family issues, childlessness, obstacles in marriage and also obstacles in business will vanish and also will receive spiritual life and ultimately receive Moksha (salvation). We will give blessings for all these on the day of the prayers. When you wholeheartedly recite and call us, we siddhars will be at the Sithi Vinayagar Temple in a split second. For those who are gathered at the temple and for my devotees I, Agasthya and other siddhars will give our blessings. We will touch you by our breath and also telepathically. All your problems will run away and all will receive goodness. Ok receiving our blessings, will make you live with fame and pride. At the prayers, the crowd will be full. In togetherness, the crowd of devotees will, in my congregation will receive grace and wisdom. You will receive these also on the weekly Thursday prayers (Guru vaara pooja). New devotees will come and remove their misgivings.

More and more devotees will come in waves and participate in my congregation, you will witness. You will see, my son Baktha, in this world my prayers will become famous. To that effect we have appointed you. You were born to serve the siddhars. In this birth, you have helped to remove the karmas of people from all over. Those who received benefits, praise you and you will have a long life. There will be lots of changes in the country because of the prayers. Many people will benefit from it.

-Thanks
-Cyntia Krishnan,Agasthiyar Arulgyna Sabai,Malaysia

சிவராத்திரியன்று சிதம்பரம் அருள்மிகு பால்வண்ண நாதர் மற்றும் பாசுபதேஸ்வரர் ஆலயத்தில் 1008 சக்திகள தீப விழா



அகத்தியர் ஆசியின் படியும்,ஸ்ரீ ஞான ஸ்கந்தர் நாடியில் முருகர் இட்ட கட்டளை படி உலக மக்களின் நன்மைக்காக மற்றும் பஞ்ச பூத சக்திகள் வலுப்பெறவும் ஸ்ரீ அகத்தியர் அதிஷ்ட தீபக் குழுவின் சார்பாக சிதம்பரம் அருள்மிகு பால்வண்ண நாதர் மற்றும் பாசுபதேஸ்வரர்  ஆலயத்தில்  வரும் 13.02.2018 அன்று1008 சக்திகள தீப விழா  நடை பெற உள்ளது.

உலக மக்களின் நன்மைக்காக  அட்ட வீரட்ட தலங்கள் மற்றும் பஞ்ச பூத தலங்களில் தீப வழிபாடு செய்ய வேண்டும். இதனால் இயற்கை சீற்றம் கணிசமாக  குறையும் என முருகப் பெருமான் ஜீவ அருள் நாடியில் உரைத்துள்ளார்கள்.

அதன்படி அட்ட வீரட்ட தலங்கள்,திருக்காளகஸ்தி,காஞ்சி  திருவண்ணாமலை மற்றும் திருவானைக்காவலில்  தீப வழிபாடு நடைபெற்றது. வருகிற 13.02.2018 அன்று சிதம்பரம் அருள்மிகு பால்வண்ண நாதர் மற்றும் பாசுபதேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற  உள்ளது. அனைவரும் வருக.

தீபத் திருவிழாவில் பங்கு பெரும் அனைவருக்கும் தீராத நோய் தீரும் ,தொழில் இல்லாதோருக்கு தொழில் கை கூடும்,வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும்,திருமணம் தடை பட்டவர்களுக்கு திருமணம் நடைப் பெறும்,புத்திர பாக்கியம் வேண்டுவோருக்கு  புத்திரன் கிட்டும்,ஞானம் வேண்டுவோருக்கு ஞானம் அளிப்போம்,அனைத்து குறைகளும் நீங்கும்,என்ன கோரிக்கை வைக்கிறார்களோ அது நிறைவேற்றுவோம் என முருகக்கடவுள் உரைத்துள்ளார்.

ஆகவே அனைவரும் கலந்து கொள்க.

சிதம்பரம் அருள்மிகு பால்வண்ண நாதர் தல வரலாறு


சிவஸ்தலம் பெயர்: திருக்கழிப்பாலை (தற்போது சிவபுரி என்று வழங்குகிறது)
இறைவன் பெயர்: பால்வண்ண நாதர்
இறைவி பெயர்: வேதநாயகி
பதிகம்: திருநாவுக்கரசர் - 5,திருஞானசம்பந்தர் - 2,சுந்தரர் - 1

இத்தலத்தில் சிவலிங்கப் பெருமான வெண்ணிறமுடையவராக விளங்கிறார். அதனாலேயே இறைவன் பால்வண்ண நாதேஸ்வரர் என்ற திருநாமத்துடன் இத்தலத்தில் அருட்காட்சி தருகிறார். வன்மீக முனிவர் இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார். கொள்ளிட நதியில் ஏற்பட்ட வெள்ளத்தில் தேவார காலத்து பழைய ஆலயம் அடித்துச் செல்லப்பட்டதால் அக்கோவிலில் இருந்த பால்வண்ணநாதேஸ்வரர் சிதம்பரத்திலிருந்து தென்கிழக்குத் திசையில் சுமார் 5 கி.மி. தொலைவிலுள்ள சிவபுரி என்றும் திருநெல்வாயல் என்றும் வழங்கும் மற்றொரு சிவஸ்தலத்தில் இருந்து தெற்கே தனி ஆலயத்தில் தனது மற்ற பரிவார தேவதைகளுடன் தற்போது எழுந்தருளியுள்ளார்.

3 நிலை ராஜகோபுரத்துடன் இவ்வாலயம் காட்சி அளிக்கிறது. வாயிலின் இருபுறங்களிலும் அதிகார நந்தியர் துணைவியருடன் தரிசனம் தருகின்றனர். கொடிமரம் ஏதுமில்லை. பிராகாரத்தில் சூரியன், விநாயகர், கிராதமூர்த்தி, மகாவிஷ்ணு, சுப்பிரமணியர், மகாலட்சுமி, நவக்கிரகம், காலபைரவர், சந்திரன் சந்நிதிகள் உள்ளன. உள்பிரகார நுழைவு வாசலின் இருபுறமும் அதிகார நந்தியர் தமது துணைவியருடன் உள்ளனர். உள் மண்டபத்துள் சென்றால் துவாரபாலகர்களைத் தரிசிக்கலாம். மண்டபத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கிய அம்பாள் சந்நிதி உள்ளது. நடராசசபையில் சிவகாமி அம்மையின் திருமேனி தன் தோழியர் இருவர் சூழ ஒரே பீடத்தில் காட்சி தருகிறாள். துவார விநாயகரை, தண்டபாணியைத் தொழுது உட்சென்றால் மூலவர் தரிசனம். மூலவர் சந்நிதி நுழைவாயிலில் இருபுறமும் துவாரபாலகர்கள் காட்சி அளிக்கின்றனர். மூலவர் பெயருக்கேற்ப வெண்ணிறமாக சுயம்பு மூர்த்தியாக மிகச் சிறிய பாணத்துடன் காட்சியளிக்கிறார். மேற்புறம் சதுரமாக, வழித்தெடுத்தாற்போல் நடுவில் பள்ளத்துடன் அதிசயமான அமைப்புடன் இலிங்கத் திருமேனி காட்சி தருகின்றது. அபிஷேகத்தின்போது பால் மட்டும்தான் இப்பள்ளத்தில் தேங்கும். மற்ற அபிஷேகங்கள் அனைத்தும் ஆவுடையாருக்குத்தான் நடைபெறுகிறது. குதிரையின் கால் குளம்பு பட்டு பிளந்து போன வெண்ணிற லிங்கத்திற்கு தான் இன்றும் பூஜை நடக்கிறது. லிங்கத்திற்கு பின்னால் சிவனும் பார்வதியும் திருமணக்கோலத்தில் உள்ளனர்.

இவ்வாலயத்திலுள்ள காலபைரவர் இப்பகுதி மக்களால் மிகவும் பூஜிக்கப்பட்டு வருகிறார். பைரவர் கோவில் என்றே இப்பகுதி மக்கள் இவ்வாலயத்தை அழைக்கின்றனர்.

சிதம்பரத்தில் இருந்து 13 கி.மி. தென்கிழக்கே கொள்ளீடம் நதியின் வடகரையில் காரைமேடு என்ற இடத்தில் இருந்து வந்த இந்த சிவஸ்தலம் ஒரு சமயம் கொள்ளிடத்தில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக சேதம் அடைந்த போது அருகில் உள்ள திருநெல்வாயல் என்ற மற்றொரு பாடல் பெற்ற சிவஸ்தலம் கோவிலின் அருகே ஒரு புதிய ஆலயத்தின் உள்ளே மூலவர் பால்வண்ண நாதர் பிரதிஷ்டை செய்யப்பட்டார். திருநெல்வாயல் சிவஸ்தலத்தில் இருந்து சுமார் 1 கி.மி. தொலைவில் திருக்கழிப்பாலை ஆலயம் உள்ளது.

முகவரி:

அருள்மிகு பால்வண்ண நாதர் திருக்கோவில்
திருக்கழிப்பாலை - சிவபுரி
சிவபுரி அஞ்சல்
வழி அண்ணாமலை நகர்
சிதம்பரம் வட்டம்
கடலூர் மாவட்டம்
PIN - 608002

சிதம்பரம் அருள்மிகு பாசுபதேஸ்வரர் தல வரலாறு


மூலவர்:பாசுபதேஸ்வரர்
அம்மன்:சத்குணாம்பாள், நல்லநாயகி
பாடியவர்கள்:திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், அருணகிரி நாதர்
மரம்: மூங்கில்
குளம்: நள தீர்த்தம்

தேவராப்பதிகம்

அல்லல் இல்லை அருவினை தானில்லை மல்கு வெண்பிறை சூடும் மணாளனார் செல்வனார் திருவேட்களம் கைதொழ வல்ல ராகில் வழியது காண்மினே. 

திருநாவுக்கரசர் தேவாரப்பாடல் பெற்ற காவிரி வடகரைத்தலங்களில் இது 2வது தலம்.

தேவாரப்பபாடல் பெற்ற சிவத்தலங்களில் முதலானது சிதம்பரம். இரண்டாவது திருவேட்களம். இத்தல இறைவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

சாஸ்திரப்படி கோயில் எப்படி அமைக்க வேண்டும் என்று உள்ளதோ, அதன்படி அமைக்கப்பட்ட கோயில் இதுவாகும். பல்லவ அரசர்களால் செங்கற்களால் கட்டப்பட்ட இக்கோயில் 1914ல் கானாடுகாத்தான் பெத்த பெருமாள் செட்டியாரால் கருங்கற்களால் செப்பனிடப்பட்டது. தற்போது மூன்றடுக்கு ராஜகோபுரத்துடன் கிழக்கு பார்த்து அமைந்துள்ளது.

அம்பிகையின் சன்னதியில் 4 தூண்களிலும் அர்ஜுனன் தன் ஆயுதங்களை வைத்தல், ஒரு காலில் நின்று தவம் புரிதல், இறைவன் வேடன் வடிவம் எடுத்தல், சிவனும் அர்ஜுனனும் சண்டையிடுதல் போன்றவை சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன.

கோயிலின் சுற்றுப்பகுதியில் நர்த்தன விநாயகர், தல விநாயகர்-சித்தி விநாயகர், அனுக்கிரக தெட்சிணாமூர்த்தி, சூரியன், சந்திரன் ஆகியேகர் உள்ளனர். தெட்சிணாமூர்த்தியின் காலடியில் உள்ள முயலகன் இடப்பக்கம் தலைவைத்துள்ளார்.

சூரியனும் சந்திரனும் அருகருகே இருப்பதால் சூரிய, சந்திர கிரகணங்களின் போது இங்கு வழிபாடு செய்வது சிறப்பு.

சிதம்பரத்தை அடுத்துள்ள திருவேட்களம். இரண்டாயிரம் ஆண்டு பழமையான இங்கு தான் அர்ஜுனனுக்கு இறைவன் பாசுபதம் வழங்கினார். அம்மன் நல்லநாயகி நான்கு திருக்கரங்களுடன் அருள்பாலிக்கிறாள். முன் இரண்டு கைகளில் ஒரு கையில் தாமரையும், ஒரு கையில் நீலோத்பவ மலருடனும் அருளுகிறாள். இவளுக்கு எதிரிலும் நந்தி உள்ளது.

ஒரு முறை சம்பந்தர் சிதம்பரம் நடராஜரை தரிசிக்க வருகிறார். அப்போது அவர் திருவேட்களத்தில் தங்கி சிதம்பரம் நடராஜரை தரிசித்துள்ளார்.

திருவேட்களம் பற்றி சம்பந்தர் பாடும் போது,"வேட்கள நன்னகர்' என்று குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,"சிறப்புடன் வாழ வாழ்வில் ஒரு முறையாவது திருவேட்களம் போ', என்றும், அம்பிகையை
"பெண்ணில் நல்லாள்' என்றும் குறிப்பிடுகிறார். அருணகிரிநாதர் இத்தல முருகனை திருப்புகழில் பாடியுள்ளார்.

பாரதப்போரில் வெற்றிபெறுவதற்காக அர்ஜுனன் பாசுபதம் பெற விரும்புகிறான். அப்போது கிருஷ்ண,""நீ அனைத்து அஸ்திரங்களையும் உனது மானசீக தந்தையான இந்திரனிடமிருந்து பெற்றாய். ஆனால் பாசுபதாஸ்திரத்தை மட்டும் நீ சிவனிடமிருந்து தான் பெற வேண்டும். அதற்கு இந்திரனின் அனுமதி பெற வேண்டும்,''என்றார்.

இதற்காக அர்ஜுனன் மூங்கில் காடாக இருந்த இத்தலத்தில் தவம் செய்தான்.அர்ஜுனனின் தவத்தை கலைக்க துரியோதனன் மூகாசுரனை பன்றி வடிவில் அனுப்பினான். உடனே சிவன் பார்வதியுடன் வேடன் உருவில் வந்து பன்றியை கொன்றார்.

நான்கு வேதங்களும் நாய்களாக மாறி இறைவன் பின்னே வந்தன. அதே பன்றியின் மீது அர்ஜுனனும் அம்பு எய்தான். பன்றியை யார் கொன்றார்கள் என்பது குறித்து சிவனுக்கும், அர்ஜுனனுக்கும் சொற்போரும் விற்போரும் நடந்தது. போரில் அர்ஜுனனின் வில் முறிந்தது.

கோபமடைந்த அர்ஜுனன் முறிந்த வில்லால் வேடனை அடித்தான். அந்த அடி மூவுலகில் உள்ள அனைத்து உயிர்களின் மீதும் விழுந்தது. வேடுவப்பெண்ணாக வந்த பார்வதி கோபமடைந்தாள். சிவன் பார்வதியிடம்,""உமையவளே! நீ லோகமாதா! நீ கோபப்பட்டால் இவ்வுலகம்
தாங்காது,''என சமாதானப்படுத்தி "சற்குணா' (நல்லநாயகி) தள்ளி நில் என்கிறார். சிவன் தன் திருவடியால் அர்ஜுனனை தூக்கி எறிகிறார். சிவனின் பாத தீட்சை பெற்று அன்னையின் கருணையால் இத்தல  கிருபாகடாட்ச தீர்த்தத்தில் விழுகிறான்.

சிவன் பார்வதியுடன் காட்சி கொடுத்து பாசுபதாஸ்திரத்தை தந்தருளினார். அர்ஜுனன் வில்லால் அடித்த தடத்தை இன்றும் லிங்கத்தின் மீது காணலாம்.

பேச்சில் குறைபாடு உள்ளவர்கள் இங்குள்ள இறைவனை வழிபாடு செய்து இங்கு பிரசாதமாக தரப்படும் மண் உருண்டையை சாப்பிட்டால் விரைவில் பேச்சு வரும் என்பது நம்பிக்கை.
திருமணத்தடை உள்ளவர்கள் வழிபாடு செய்து பலனடைகிறார்கள்.

கல்வெட்டு

சகம் 1488-ல் (கி.பி. 1556-ல்) சிதம்பரேசுவர சிவகாமி கோயிலுக்குத் திருவேட்களங் கிராமத்தை அச்சுதப்பநாயக்கர் அளித்த வரலாறு அறியப்படுகிறது.(259 of 1913).

கருவளா்ச்சேரியில் ஸ்ரீலோபமுத்ரா சமேத ஸ்ரீஅகத்திய பெருமானுக்கு திருக்கல்யாண விழா


கும்பகோணம் மருதாநல்லூா் அருகிலுள்ள,கருவளா்ச்சேரி  ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரசுவாமி திருக்கோயிலில் அருள்பாலிக்கும்

அருள்மிகு ஸ்ரீ அகத்தியருக்கும், ஸ்ரீ லோபாமுத்ரா அம்மைக்கும் நிகழும் ஏவிளம்பி வருடம் தை மாதம் 17ம் நாள் (30-1-2018 )  செவ்வாய்க்கிழமை சதுர்த்தி திதி பூனர்பூசம் விண்மீன் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் மகர லக்கினத்தில் காலை 10:30 மணி முதல் 12:00 மணிக்குள் திருக்கல்யாணமும் தொடா்ந்து திருக்கல்யாண விருந்தும்  நடைபெற உள்ளது.

பக்தா்கள் அனைவரும் திருக்கல்யாணத்தில் கலந்து கொண்டு எல்லா நலன்களையும் பெற அன்புடன் அழைக்கிறோம்.

ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி அம்பாள் உடனாகிய ஸ்ரீஅகத்தீஸ்வரசுவாமி திருக்கோயில் வரலாறு 


லோக மாதாவாம் அம்பிகை 'கரு' காக்கும் நாயகியாக, சுயம்பு மூர்த்தமாக, அகிலாண்டேஸ்வரி எனும் திருநாமத்துடன் அருள்பாலிக்கும் அற்புதத் திருத்தலம் இது. குழந்தை வரம் தருவதுடன், கர்ப்பப்பையில் வளரும் கருவையும் பாதுகாப்பவள் ஆதலால் அம்பிகைக்கு, 'கருவளர்நாயகி' என்றும் ஒரு பெயர் உண்டு. 

புற்று மண்ணால் ஆன சுயம்புத் திருமேனி ஆதலால் அம்பிகைக்கு அபிஷேக- ஆராதனைகள் கிடையாது; புனுகுச் சட்டம், சாம்பிராணி மற்றும் தைலக்காப்பு மட்டுமே செய்யப்படுகிறது. ஆவணி மாதம் புனர்பூச நட்சத்திரம், நவராத்திரி நாட்கள், மாசி மாதம் மகா சிவராத்திரி ஆகிய நாட்களில் மட்டுமே அன்னையின் முழு உருவத்தை தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் திருமுக தரிசனம் மட்டுமே. மாதந்தோறும் பௌர்ணமி அன்று அகிலாண்டேஸ்வரிக்கு சிறப்பு தைலக்காப்பு அலங்காரம் செய்யப்படுகிறது. 

குழந்தை வரம் தவிர, திருமணம் விரைவில் கைகூடவும் இவளை மனமுருகி வேண்டிச் செல்கின்றனர். அம்மனின் பாதத்தின் அருகே, காஞ்சி மகா பெரியவர் வழங்கிய சக்ரமும், சக்ரமேருவும் உள்ளன.

தேவியின் கருவறை வாசற்படியில், பித்தளைக் காப்பு போடப்பட்டுள்ளது. அம்பாளை உளமார வேண்டிக் கொண்டு இந்தப் படியை சுத்தம் செய்து பசு நெய்யால் மெழுகி கோலமிட்டு வழிபட்டால், பிரார்த்தனைகள் பலிக்கும் என்கின்றனர். இந்த அம்பிகையின் அருளால் கருவுற்றவர்கள், வளைகாப்பு விழாவின்போது, அகிலாண்டேஸ்வரிக்கு ஏழு வளையல்களை காணிக்கை யாகச் செலுத்தி செல்கின்றனர். தொட்டில் காணிக்கை செலுத்தும் வழக்கமும் உண்டு. 

ஏராளமான பேருக்கு குல தெய்வமாகவும் திகழும் இந்த அன்னையை, தொலைவில் உள்ள ஊர்களில் வசிக்கும் மகப்பேறு மருத்துவர்களும் வந்து வணங்கிச் செல்கின்றனர். தவிர, தங்களிடம் சிகிச்சைக்காக வரும் மகளிரையும் அன்னையின் தரிசனம் பெற வேண்டி இங்கு அனுப்பி வைக்கிறார்கள்.

அகத்திய முனிவரும் அவர் மனைவி லோபமுத்திரையும் பூஜித்ததால் இங்கு அருள்பாலிக்கும் இறைவனுக்கு, அகஸ்தீஸ்வரர் என்று திருநாமம். இங்கு, அகத்தியருக்கு திருமணக் கோலத்தில் சிவபெருமான் காட்சி அளித்ததாகக் கூறுவர். லோபமுத்திரை சமேத அகத்திய முனிவருக்கும் இங்கு மூலவர் மற்றும் உற்சவர் விக்கிரகங்கள் உண்டு என்பது குறிப்பிடத் தக்கது. பௌர்ணமி மற்றும் ஆயில்ய நட்சத்திர தினங்களில் இவர்களுக்கும் விசேஷ வழிபாடுகள் உண்டு. 

அம்பிகையும் ஈசனும் ஒரே வரிசையில் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர். இந்தக் கோயிலுக்கு அருகிலேயே லட்சுமிநாராயண பெருமாள் கோயிலும் அமைந்துள்ளது. அரியையும், சிவனையும் வழிபட விரும்பிய அகத்தியருக்காக இருவரும் இப்படி அருகருகே கோயில் கொண்டதாக ஐதீகம்.

அகத்திய பெருமானின் கிரந்த நாடியில் 

 " குருவளர்சேரி என்று குறிப்பிடப் படுகிறது.புண்ணிய தலமான இது  குரு பக்தியை வளர்க்கும் தலம் என கூறப் பட்டுள்ளது.குரு பக்தி மென்மேலும் பெருக வணங்க வேண்டிய தலம். அகத்திய பெருமானின்  குரு பாதுகா சக்தியின் மூலம் ஆணவம் அழிந்து அருட்கடாட்சம் கிட்டும் தலம்."  

என்று இத்தலத்தை பற்றி கூறப்பட்டுள்ளது. 

செல்லும் வழி: 



முகவரி :

அருள்மிகு அகிலாண்டேஸ்வரி தேவஸ்தானம் திருக்கோயில், 
கருவளர்சேரி 612402, கும்பகோணம் வட்டம், தஞ்சை மாவட்டம் . 
+91 435-2430598, 9843899924, 9443873137. 

புதன், 24 ஜனவரி, 2018

குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்களின் 232ஆம் ஆண்டு சந்தன விழா


ராமநாதபுரம் மாவட்டம் குணங்குடி என்ற சிற்றூரைப் பூர்வீகமாகக் கொண்டவர் இவர். பூர்வீகப் பெயர் சுல்தான் அப்துல்காதிர். குணங்குடி மஸ்தான் சாகிப்பின் காலம் கிபி 1788 – 1835க்கு இடைப்பட்டது. அவருடைய தாய்மாமன் புதல்வி மைமூனை மணமுடிக்கக் குடும்பத்தார் கோரிக்கை வைத்த போது, அதை நிராகரித்து விட்டு 17ஆம் வயதில் குடும்பத்தைத் துறந்தார்.

இஸ்லாமிய மார்க்கப் பிரிவுகளில் ஒன்றான காதிரிய்யா தரீகாவின் செயக்ப்துல் காதிரிலெப்பை ஆலிமிடம் மார்க்கக் கல்வி பெற்றார். திரிசிரபுரத்து ஆலிம் மௌலவி ஷாம் சாகிபுவிடம் தீட்சைபெற்றார். தொண்டி மரைக்காயர் தோப்பில் யோக நிஷ்டையிலும் ஆழ்ந்தார். சிக்கந்தர் மலைக்குகையில் சிராசனம் இருந்தார். பல ஊர்களுக்கு நாடோடியாக அலைந்தார். இறைக்காதலால் முற்றும் கவரப்பட்டவராகவும், தெய்வீகத்தில் நாட்டம் கொண்டவராகவும் அவர் இருந்ததால் உலகநடை நீங்கிப் பித்தநடை கொண்டார்.

குப்பை மேடுகள்கூட அவர் குடியிருக்கும் இடங்களாகின. அவருடைய பித்த நடையையும் அற்புதச் சித்துகளையும் கண்ட மக்கள் அவரை ‘மஸ்தான்' என அழைத்தனர். அப்பெயரே பின்னர் அவருக்கு நிலைத்தது. இவர் சென்னையில் வாழ்ந்த தொண்டியார் பேட்டை என்ற இடம்தான் பிற்காலத்தில் தண்டையார்பேட்டையானது. ராயபுரத்தில் இவர் அடக்கம் செய்யப்பட்ட இடம் உள்ளது.

குணங்குடியார் இஸ்லாமியச் சூபி ஞானியாக அறியப்பட்டாலும்கூட அவரது சீடர்களாக இருந்த பலரும் இந்து சமயத்தைச் சார்ந்தவர்களே என்பதில் இருந்து இந்து - இஸ்லாமிய பாரம்பரிய உறவை அறிய முடிகிறது. குணங்குடி மஸ்தான் சாகிப் எழுதிய 24 கீர்த்தனைகள் உட்பட 1057 பாடல்களும் முக்கியமானவை. முகியத்தீன்சதகம் 100 பாடல்களைக் கொண்டது. இஸ்லாமியச் சமயத்தை நடைமுறைப்படுத்திய முகமது நபி பற்றிய பாடல்கள் முக்கியமானவை.

இதேபோல அகத்தீசன் சதகமும் 100 பாடல்களைக் கொண்டது.குருவருள் நிலை,தவ நிலை, துறவு நிலை, நியம நிலை, வளி நிலை, தொகை நிலை, பொறை நிலை, காட்சி நிலை, தியான நிலை, சமாதி நிலை வேண்டி உருவான மனத்தின் பதிவுகளாக இப்பாடல்கள் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

 முகமது நபியாண்டவரை சுகானுபவமுற துதித்தல், தவமே பெறவேண்டுமெனல், குறையிரங்கி உரைத்தல் வானருள் பெற்றோர் மனநிலை உரைத்தல், ஆனந்தக் களிப்பு பாடல் பகுதிகளும் இவரது பாடல்களில் அடக்கம்.


தாயனைய இன்பந் தனைத்தந்து தந்துகை
தழுவிநின் றருள் புரியவுந்
தந்தைதா யுந்தானே யாகவு மிருந்தெனைத்
தற்காத்து னருள்பு ரியவுஞ்
சேயென் றிரங்கியணை காலியின் கன்றெனச்
சீராட அருள்பு ரியவுஞ்
செங்கீரை யாடுசிறு மதலைபோற் கொஞ்சிநான்
செல்வமிட அருள்பு ரியவும்
பாயுமடை கால்கண்டு கரைபுரள வருமதிப்
பால்கொடுத் தருள்பு ரியவும்
பக்குவத் தோடுமவு னத்தொட்டி லுக்குட்
படுக்கவைத் தருள்பு ரியவும்
வாயுவைக் கட்டவுந் தவராஜ சிங்கமே
வரவேண்டும் மென்ற னருகே
மாகுணங் குடிவாழு மென்னகத்தீசனே
மவுனதே சிகநா தனே.
-குருவருள் நிலை,அகத்தியர் சதகம்

இத்தகைய பெருமையும் ,அகத்திய பெருமானின் தரிசனமும் கண்ட மற்றும் அவரின்  அன்புக்கும் பாத்திரமான  மஸ்தான் அவர்களுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் இந்த விழா  நடைப் பெறுகிறது.மேற்கண்ட பத்திரிக்கையில் குறிப்பிட்டுள்ள தேதிகளில்  பங்கு கொண்டு அவரின் அருள் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம். 

வடலூர் சத்திய ஞானசபையில் தைப்பூச ஜோதி தரிசனப் பெருவிழா-2018



கடலூர் மாவட்டம் வடலூர் அருகே உள்ள மருதூர் என்ற கிராமத்தில் பிறந்தவர் வள்ளலார். பின்னர் அவர் சென்னை, கருங்குழி, வடலூர் ஆகிய பகுதிகளில் வசித்து வந்தார். 14 ஆண்டுகள் கருங்குழியில் தங்கிய வள்ளலார் திருவருட்பாவை அருளினார்.

இறைவன் ஒளி வடிவானவர் என்பதை உலகிற்கு எடுத்துரைக்கும் வகையில் வடலூரில் சத்திய ஞானசபையை வள்ளலார் நிறுவினார். மேலும் ஏழை, எளிய மக்களின் பசியை போக்க சத்தியஞான சபை அருகிலேயே தருமச்சாலையை நிறுவினார். அன்று முதல் இன்று வரை அந்த தருமச்சாலையில் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் வள்ளலார் வடலூர் அருகே உள்ள மேட்டுக்குப்பத்தில் தை மாதம் பூச நட்சத்திரத்தன்று சித்தி பெற்றார்.

இதை தொடர்ந்து மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று சத்திய ஞானசபையில் 6 திரைகளை நீக்கி ஜோதி தரிசனம் நடைபெற்று வருகிறது. தை மாதத்தில் வரும் பூச நட்சத்திரத்தன்று தைப்பூச திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டுக்கான தைப்பூச திருவிழா வருகிற 30-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அன்று காலை 5 மணிக்கு அகவல்பாராயணமும், 7.30 மணிக்கு தருமச்சாலை, மருதூர் இல்லம், கருங்குழி இல்லம், மேட்டுக்குப்பம் ஆகிய இடங்களிலும், காலை 10 மணிக்கு ஞானசபையிலும் சன்மார்க்க கொடி ஏற்றப்படுகிறது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொள்கிறார்கள். தொடர்ந்து சன்மார்க்க சொற்பொழிவுகள் நடைபெறுகிறது.

பின்னர் 31-ந் தேதி (புதன்கிழமை) காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7 மணி, 10 மணி, மறுநாள் காலை 5.30 மணி ஆகிய 6 காலங்களில் 7 திரைகளை நீக்கி தைப்பூச ஜோதி தரிசனம் காண்பிக்கப்படுகிறது.

பின்னர் 2-ந் தேதி (வெள்ளிக்கிழமை) மேட்டுக்குப்பத்தில் மதியம் 12 மணி முதல் மாலை 6 மணி வரை வள்ளலார் சித்தி பெற்ற திருஅறை தரிசனம் நடைபெறுகிறது. 

தில்லை சிதம்பரம் மணலூரில் ஸ்ரீ ராஜேஸ்வரி ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் பதினெண் சித்தர்கள் ஆலய அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம்



ஆன்மீக அன்பர்களே,

இவ்வுலகின் நடுமையமாக கொண்டுள்ள பூலோக கைலாயம் என்றழைக்கப்படும் தில்லை எனும்  சிதம்பரம் ஷேத்திரத்தில் தமிழ் மொழியை பரமேஸ்வரனிடம் பெற்று  இவ்வுலகில் தமிழ் எங்கும் தழைத்தோங்க மாமுனிவராகவும் சித்தர்களின் தலையாய சித்தராகவும் விளங்கக்கூடிய ஸ்ரீ அகத்திய பெருமானுக்கு நம் பதியில் ஊமையொருபாகமாகவும் ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர்  பெருமானுக்கு ஆலயம் புனரமைத்தும்,புதியதாக கன்னி மூலையில் கன்னி மூல கணபதியும்,அகில உலகையும் காத்து ரட்சித்து அருளமுதம் புரியும் அன்னை அலைமகள்,கலைமகள்,மலைமகள் என முப்பெரும் தேவியின் ரூபமாக விளங்கக் கூடிய பராசக்தியை இங்கு ஸ்ரீ ராஜேஸ்வரியாக அமைத்தும் துவாரத்தில் பால கணபதி,பாலமுருகன்,கலியுக கண் கண்ட தெய்வமாம் மாருதி என பெயர் பெறும் சஞ்சீவி மலையை தாங்கி கொண்டும் மக்கள் இன்னல் தீர இங்கு சப்தமுக ஆஞ்சனேயராக  வடிவெடுத்து ஆலயம் கொண்டுள்ள மூர்த்திகளுக்கும் மற்றும் பதிணெட்டு சித்தர்கள் பிரதிஷ்டை செய்து அஷ்ட பந்தன மஹா கும்பாபிஷேகம் விழாவானது ஏவிளம்பி வருடம் தை மாதம் 22ம் நாள் (04-02-2018) ஞாயிற்றுக்கிழமை சதுர்த்தி திதி உத்திரம் விண்மீன் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 09:30 மணிக்குமேல் 09:45க்குள் மீன லக்கினத்தில்   ஸ்ரீ ராஜேஸ்வரி ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் பதினெண் சித்தர்கள் ஆலய அஷ்ட பந்தன  மஹா  கும்பாபிஷேகம் சீரும் சிறப்புமாக நடைபெறவுள்ளது.

இது சமயம் அகத்தியர் அடியவர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

முகவரி:

 ஸ்ரீ ராஜேஸ்வரி ஸ்ரீ லோபாமுத்ரா சமேத ஸ்ரீ அகஸ்தீஸ்வரர் மற்றும் பதினெண் சித்தர்கள் ஆலயம்
செந்தாமரை நகர் ,மணலூர், சிதம்பரம்.
தொடர்புக்கு :   9442968555,9080557302             






திங்கள், 1 ஜனவரி, 2018

ஆருத்ரா பற்றிய கேள்விக்கு ஸ்ரீ அகத்திய பெருமானின் ஜீவ வாக்கு


சிவனை வணங்கும்போது அம்பாளுக்கு உரிய “பூரம்” நக்ஷத்திரத்திலும்,அம்பாளை வணங்கும்போது,சிவனுக்குரிய “ஆருத்ரா(திருவாதிரை)” நக்ஷத்திரத்திலும் வணங்குவது சிறப்பு.