ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

முருகப்பெருமானுக்கு வைரவேல் சாற்றுவது ஏன்?



அகத்திய பெருமான் ஜீவ நாடியில் கூறியதாவது

வைரவேல் சாற்றும் ஒரு மரபு முருகன் ஸ்தலங்களில் இருக்கிறது. பொதுவாக குருவாரங்களிலே அல்லது சஷ்டி போன்ற நாட்களிலே வைர வேலை சாற்றுவார்கள். அஃதொப்ப வைரமே பல்வேறு தோஷங்களை நீக்கக்கூடிய ஒரு பொருள்தான். ஆனால் அந்த வைரம் தவறான அலைவரிசையைக் கொண்டிருந்தால் தோஷத்தை நீக்குவதற்கு பதிலாக தோஷத்தைக் கொண்டுவந்துவிடும். இதனால்தான் சில நவரத்னங்களை மனிதர்கள் வைத்துக்கொள்வதைவிட இறைவனிடம் இருந்தால் நல்ல பலனுண்டு என்று முன்னோர்கள் இறைவனுக்கு நகைகளை அணிவித்து மகிழ்ந்தார்கள். அஃதொப்ப அந்த வைரத்தைக் கண்டுவந்தால், எந்த பிராயச்சித்தமும் செய்ய முடியாத நிலையில் இருக்கக்கூடிய மனிதன், முதலில் வைரவேலைக் காணுகின்ற பழக்கத்தை ஏற்படுத்திக்கொண்டால் அது சில பாவங்களைக் குறைக்கும். ஒரு சில பாவங்கள் குறைந்தால் சற்றே மூச்சுவிடக்கூடிய நிலை வரும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக