ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

சர்க்கரை நோய் கட்டுப்பட ஜீவ நாடியில் அகத்தியர் கூறிய வழி




இந்தப் பிணி, வாழ்நாளில் ஒரு முறை வந்துவிட்டால் முற்றிலும் அகற்றிவிட முடியாது. ஆனால் உணவு பழக்கங்களினாலும், யோகாசனங்களினாலும், உடற்பயிற்சியினாலும் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளலாம். இன்னவன் கூறியதுபோல சிறுகுரிஞ்சானோடு, நில வேம்போடு வெந்தயத்தையும் சேர்த்து அதிகாலையிலே ஏக தினம் விட்டு ஏக தினம் மிக சிறிய அளவு உண்டு வந்தால் நன்மையைத் தரும். ஆனால் எத்தனை மருத்துவம் செய்தாலும்கூட இவற்றோடு மிக, மிக, மிக, மிக உயர்வான முறையிலே இனிப்புகளை செய்து அவைகளை ( தனம் கொடுத்து வாங்கி ) உண்ண முடியாத ஏழைகளுக்கு, ( இந்த நோயால் ) பாதிக்கப்பட்டவன், அவனவன் கையால் பவ்யமாக சென்று தொடர்ந்து தானமாக அளித்துக்கொண்டே வந்தால் இந்த நோய் கட்டுக்குள் இருக்கும். தரம் குறைந்த, விலை மலிவான உணவுப் பொருள்களை அளிப்பதால் பாவங்கள் நீங்குவதற்கு பதிலாக பாவங்கள் சேர்ந்துவிடும் என்பதையும், ஏற்கனவே இருக்கின்ற புண்ணியங்கள் குறைந்துவிடும் என்பதையும் மனிதர்கள் புரிந்துகொள்ளவேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக