சனி, 12 ஆகஸ்ட், 2017

அகத்தியர் ஜீவ நாடி


ஜீவ நாடிகள் என்பது  அவ்வப்போது தோன்றி கொண்டே இருக்கும்.சித்தர்கள் தாங்கள் விரும்பிய நபர்களை தேர்ந்து எடுத்து அவர்களை நன்றாக பயிற்சி கொடுத்து,அவர்கள் மூலமாக வாக்குகளை உரைக்க செய்வது.பொதுவாக தெய்வ அருள் பெற்ற அருளாளர்கள் மட்டும் வாசிக்க இயலும்.அவர்களுக்கு எழுத்துக்கள் தங்க நிறத்தில் புலப்படும்.இத்தகைய நாடிகள் சமீப காலத்தில்,சென்னையில் மறைந்த திரு.அனுமந்தாசன்,தஞ்சாவூரில் திரு.கணேசன்,மற்றும் ஸ்ரீ காக புஜண்டர் நாடியில் படிக்கும் ஸ்ரீ ரமணி குருஜி ,ஸ்ரீ அகத்திய ஜீவ நாடி ஆகிய இடங்களில் புகழ் பெற்று விளங்குகின்றன .

       நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால்,எப்போது இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன.ஒவ்வொரு மகா சிவராத்திரியிலும் இந்த ஜீவ நாடிகள் தோன்றுகின்றன (ஸ்ரீ வெங்கடராம சித்தர்).சில ஜீவ நாடிகள் ரகசியமாக படிக்க படுகின்றன .சில ஜீவ நாடிகள் சித்தர்களின் ஆணைப்படி பொது மக்களுக்கும் படிக்க படுகின்றன.ஆனால் ஜீவ நாடி இயக்குவதில் சில சூட்சுமங்கள் உண்டு.அவையே ஜீவ நாடியை திறக்கும் சாவிகளாகும்.
 இந்த சூட்சுமங்களை புரிந்து கொள்ளாவிட்டால்,ஜீவநாடிகள் இயங்காது.தற்போது திரு.அனுமந்தாசன் வாசித்த நாடியில் நிலைமையும்  அப்படித்தான்.சித்தர்களின் அருள் இன்றி நாடியை படிக்க எந்த நபராலும் இயலாது.மேலும் ஜீவ நாடிகள் ஒரு குறிப்பிட்ட காலத்தில் படிக்கும் நபரிடம் இருந்து வேறொரு நபருக்கு சித்தர்களின் ஆணைப்படி மாறி கொண்டேயிருக்கும் அல்லது சில தருணங்களில் மறைந்துவிடும்.

    ஜீவ நாடி சித்தர்கள் நம்முடன் தொடர்பு கொள்ள கூடிய ஒரு மீடியம் ஆகும்.மீடியமாகிய சுவடியை பயன்படுத்தும் மிகுந்த  பக்தி,சிரத்தை தான தருமங்கள் போன்ற வற்றை செய்யும் மனிதர்களாக தான் இருப்பார்கள் .மற்ற சாதாரண மனிதர்களால் படிக்க இயலாது.

   ஒவ்வொரு ஜீவ நாடியும் ஒவ்வொரு வகைப்படும்.சில ஜீவ நாடிகள் தருமத்துடனும் சில மந்திர மார்கங்களும்,சில பிராயசித்த மார்க்கங்களை  உரைகின்றன.சில ஜீவ நாடிகள் ஆலயம் மற்றும் வழிபாடு முறைகளை பற்றி தெரிவிகின்றன(மிஸ்டிக் செல்வம்).சில ஜீவ நாடிகள் மடாலயங்களால் பாதுகாக்க படுகின்றன.

          தற்போது தமிழ் நாட்டில் பல ஜீவ நாடிகள் இருந்தும் பெரும்பாலும் அவை இயங்குவதில்லை.நாடி வாசிப்பவரின் அலட்சிய சுபாவமும் கேட்பவரின் அசிரத்தையாலும் தான்  சித்தர்கள் வாக்கு உரைப்பதில்லை.தொடர்ந்து செய்யும் தான தருமங்களை  பொறுத்துதான் ஜீவ நாடியில் தெள்ளிய முறைகளில் வாக்கு வரும்.


-நன்றி
அகஸ்திய கிருபா அறக்கட்டளை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக