 |
| ஸ்ரீ தன்வந்தரி |
யாருக்கெல்லாம் சீதளத் தொல்லை இருக்கிறதோ, நுரையீரலிலே நீர் கோர்த்துக்கொண்டு இருக்கிறதோ, நுரையீரல் தொடர்பான பிரச்சினை இருக்கிறதோ, சுவாசம் செய்யவே கடினமாக இருக்கிறதோ அவர்கள் எல்லாம் தூய்மையான செம்பு கலசத்திலே சிறிதளவு கருந்துளசியை இட்டு, தூய்மையான நீரை இட்டு அதை 24 நிமிடம் அல்லது ஒன்றரை மணி நேரம், இயன்றால் சில மணி நேரம் வைத்திருந்து பலமுறை கீழ்க்கண்ட தன்வந்த்ரி நாமத்தை உருவேற்றி அந்த நீரையும், நீரில் ஊற வைத்த துளசியையும் உண்டால் கட்டாயம் தேகம் நலமாக இருக்கும்.
தன்வந்த்ரி நாமம்
ஓம் ஸ்ரீ தன்வந்தரி பகவானே போற்றி
அமுதத்தை ஏந்திநிற்கும் அருள்கரத்தோய் சரணம்குமதச் செல்வி மணவாளன் மறுவடிவே சரணம்சேய் எங்கள் நோய் நீக்கி காத்திடுவாய் சரணம்தாய் போலே தரணிக்கும் தன்வந்த்திரியே சரணம்.
ஓம் நமோ பகவதே
வாசுதேவாய தன்வந்த்ரயே
அம்ருத கலச ஹஸ்தாய
ஸர்வாமய விநாசனாய
த்ரைலோக்ய நாதாய
ஸ்ரீ மஹா விஷ்ணவே நம
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக