வெள்ளி, 4 ஆகஸ்ட், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 4


கொள்ளடா வாசியொன்றே முத்தியாகுங்
கொடியதொரு மற்றலமு முத்தியில்லை
அள்ளடா வாசிதனை யடுத்துமைந்தா
ஆதிவஸ்தை யனுதினமும் மனதில்வைத்து
மெள்ளடா மறுபடியும் யோகம்பார்த்து
மேன்மையுள்ள ஞானமதை மேவிக்கொள்ளு
வள்ளடா வல்லவனாகக் கண்டிராகில்
வஸ்தான வஸ்துவும் வாய்குந்தாமே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 4


விளக்கம்:

என் மகனே அகத்தியா ! வாசியால் மட்டுமே முக்தி என்ற நிலையை அடைய முடியும்.அதை தவிர வேறு வழியில்லை.ஆகையால் ஆதி வஸ்தான பரம்பொருளை, சதாசிவம் எனும் புருவமத்தியில் நிலை நிறுத்தி வாசியை நாள் தவறாது தினமும் செய்ய வேண்டும்.வாசி என்கிற யோகத்தால் மட்டுமே ஞானநிலை கிட்டும்.வாசி யோகம் செய்து வல்லவன் ஆனால், வஸ்தான வஸ்து என்கின்ற ஜோதி சொருபத்தை அடைய முடியும் என்று கூறி நான்காம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக