கேளடா அகஸ்தியனே கிருபையாகக்
கெடியான பராபரமே யொன்றேதெய்வம்
ஆளடா அதுநிலையை யறியவேணும்
அண்டசரா சரங்களெல்லாந் தெரியவேணும்
நாளடா பூரகத்தில் லேறவேணும்
நல்வினையும்ந் தீவினையும் போக்கவேணும்
காளடா கருவுகளைக் கொல்லவேணும்
காலனையுங் கட்டறுத்துக் கொள்ளுவாயே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 3
விளக்கம்:
அகஸ்தியனே கேளடா ! வெட்ட வெளியில் பரம்பொருள் உள்ளதே அது போன்று பராபரத்தில் அதாவது சகஸ்ர ஹாரத்தில் கிருபையான,புகழ் பெற்ற தெய்வம் ஒன்று உள்ளது.அதுவே தெய்வம்.அதின் நிலையை பற்றி அறிய வேண்டும்.அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உள்ளது என்று அறிய அண்டசரா சரங்களை பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். நல்வினை என்கிற சூரிய கலையும், தீவினை என்ற சந்திரகலையும் போவதற்கு பூரகத்தில் ஏற வேண்டும். நல்வினையும்,தீவினையும் அழிந்தால்தான் பிறவி இல்லா நிலை கிடைக்கும்.காலன் என்கிற எமன் வீசுகின்ற கயிற்றை அறுத்து தப்பித்து கொள்ள முடியும் என்று கூறி மூன்றாம் பாடலை நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக