ஸ்ரீ அகத்தியர் ஸ்ரீ உலோபமுத்ரா தேவியருக்கு, முக்தி தரும் நகர் ஏழினுள் முக்கிய நகராம் நகரேஷ { காஞ்சி என்று மகாகவி காளிதாசரால் புகழப் பெற்றதும், சப்த ரிஷிகள் வழிபட்டதும், ஷண்மதத்தில் (ஆறு மதம்) நான்கு மதங்கள் சங்கமிப்பதும் சைவம் - பஞ்சப பூதத் தலங்களுள் ப்ருதி (மண்) ஸ்தலம், சமயக்குரவர்களால் (நால்வர்) பதிகம் பெற்ற தலமும், சாக்தம் - 108 சக்தி பீடங்களில் நாபிஸ்தானமாக விளங்குவதும், வைணவம் - 108 திவ்ய தேசத்தில் பதினைந்து திவ்ய தேசங்களைக் கொண்டதும், கௌமாரம் - கச்சியப்ப சிவாச்சாரியார் அருளிய கந்தபுராணம் அரங்கேறியதும், ஸ்ரீ அகத்தியருக்கு பங்குனி உத்திர நன்னாளில் சிவபெருமான் பார்வதி தேவியர் தமது திருமண கோலத்தில் காட்சி அளித்ததுமாகிய இத்தகைய காஞ்சிபுரத்தில் உள்ள பாலாற்றங்கரைக்கு அருகில் திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் வேண்டியவர்க்கு வேண்டியவற்றை அருளும் அபிராமி உடனுறை அபிமூர்த்தீஸ்வரர் ஆலயத்தில் தமிழகத்தில் சில பகுதிகளில் மட்டுமே உள்ள ஸ்ரீ அகத்தியர் - ஸ்ரீ உலோபமுத்ரா தேவி ஆலயம் பழமையை பறைசாற்றும் வகையில, தொன்மைவாய்ந்த கட்டிட கலையில் முற்றிலும் கருங்கற்களால் நிர்மாணிக்கப்பட உள்ளது. எட்டு திசைகளை குறிக்கும் வகையில் எட்டு யானைகள், இந்த ஆலயத்தை தாங்கி நிற்பது போல் வடிவமைக்கப்பட்டு உள்ளது. ரிஷிகள், ஞானிகள், யோகிகள் ஆற்றங்கரையோரம் வாசம் புரிவதை கருத்தில் கொண்டு (காஞ்சி ஸ்ரீ மகாபெரியவாள் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகள் மணிமண்டபம் அருகில்) அமைந்து உள்ளது.
ஸ்ரீ அகத்திய மாமுனிவர் திரிசடையுடன் அமர்ந்த கோலத்தில் வலது கையில் சின் முத்திரை, ஜபமாலையுடனும், இடது கையில் கமண்டலத்துடனும் காட்சி அளிக்கிறார். ஸ்ரீ உலோபமுத்ரா தேவி அமிர்தகலசம் தாங்கி பத்மாசனத்தில் அமர்ந்த கோலத்தில் காட்சி அளிக்கிறார்.
அத்தகைய ஆலயத்தில் எதிர்வரும் 04-01-2018 அன்று ஸ்ரீ உலோபமுத்ரா தேவி சமேத ஸ்ரீ அகத்தியர் பெருமானுக்கு குரு பூஜை நடைப் பெற உள்ளது.அனைவரும் கலந்து கொண்டு குருவருளும் திருவருளும் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம் .


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக