சனி, 12 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ துலா காவேரி மஹாத்மியம் - காவிரியின் பெருமை


ஸ்ரீ துலா காவேரி மஹாத்மியம்
காவிரியின் பெருமை

தூய்மையான வெண்பட்டை ஆடையாகக் கொண்டு பத்மாசனத்தின் (தாமரை மலரின் மேல்) அமர்ந்திருக்கின்ற காவேரி என்னும் தெய்வ பொன்னி,தன் கைகளில்  முறையே,அபய வரத முத்திரையுடன்,தாமரை மலர்,கலசம் இவைகளைக் கொண்டும் கோடி சந்திரன் ஒன்று கூடினால் உண்டாகும் பிரகாசத்தை ஒத்த மலர் போன்ற அழகிய முகத்தைக் கொண்டும் சிறப்புற விளங்குகின்றாள்.

முன்னர் பிரம்மாவின் புத்திரியாகவும்,பின்னர் காவேர ராஜரிஷிக்கு புத்திரியாகவும் ,அகத்திய முனிவரின் பத்தினியாகவும் இருந்து,பின் அவர் மூலம் ஒரு புண்ணிய நதியாக உருவெடுத்து ஸ்ரீரங்கம், கும்பகோணம், மத்யார்ஜீனம்,மாயூரம்,சுவேதாரண்ய ஷேத்திரங்களை பவித்ரமாய் செய்து கொண்டு,பெருமையோடு ஸஹ்ய மலையில் ஸ்ரீ காவேரி விளங்குகின்றாள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக