சனி, 12 ஆகஸ்ட், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 4



தாமடா வாசிஎன்ற குதிரையேரறி
தத்துவந்தொண் ணூற்றாறு தனையறுத்து
ஓமடா ஓங்காரத் துள்ளோடிங்கி
ஓம் நமசி வாயமென்றுமனதிற்றங்கி
நாமடா நமனுடையப்பட் டணமுந்தாண்டி
நாதாந்தச் சுடரிலே நாடிச்சென்று
வாமடா வாமத்தை கண்டுபோற்றி
வாலைஎனும் பராபரையை மனதிற்றங்கே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 5

விளக்கம்:

வாசி என்ற குதிரையின் மீது ஏறி 96 தத்துவங்களை அறுத்து, ஓம் என்கிற ஓங்காரத்துள் ஒடுங்கி ஓம் நமசிவாய என்று மனதில் வைத்து நமனாகிய எமனின் பட்டணம் என்கிற புருவ மத்தியின் ஒளியை கண்டு பின்னர் வாம ஜோதியை கண்டு போற்றி வாலை எனும் பராபரத்தை மனதில் வைக்க வேண்டும் என்று கூறி ஐந்தாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு செய்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக