ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

ஸ்ரீ சக்ர பூஜை மகிமை பற்றி அகத்தியர் ஜீவ நாடியில் கூறியது



இறைவன் அருளால் இன்னவன் கூறிய பூஜைக்கு மட்டுமல்ல,எல்லா வகையான பூஜைகளுக்கும் அடிப்படை ஒழுக்கம் அவசியம்.பூஜையே செய்யாவிட்டாலும் போதும்.ஒரு மனிதன்,ஒழுக்கமாக,நேர்மையாக  வாழ்ந்தால்,அதுவே ஒரு பூஜைதானப்பா.”பூஜை செய்கிறேன்” என்று ஒருவன் பிறரை இடர்படுத்துவதோ,தன்னை இடர்படுத்திக்கொள்வதோ அல்ல.மனோரீதியாக ஒருவன் மனித நேயத்தை வளர்த்துக்கொண்டு மனதை செம்மைப்படுத்த,மனதை உறுதிப்படுத்த,மனதை வைராக்கியப்படுத்த,மனதை வைரம் போல் உறுதிப்படுத்ததான்  பூஜைகளெல்லாம் ஏற்படுத்தப்பட்டன.ஆனால்,அந்த பூஜையை செய்து அதனால் மனசோர்வுதான் மிச்சம் என்றால்,அவன் அந்த பூஜையை செய்யத் தேவையில்லை.சரியான வழிமுறை என்பதைவிட,ஒரு மனிதனின் மனநிலைதான் அங்கே  முக்கியம்.இஃதொப்ப “ஸ்ரீ சக்ர”மந்திரங்களை முறையாக உபதேசமாக தக்க மனிதர்களிடம் பெற்று,முறையாக ஒருவன் அந்த பூஜையை செய்து வந்தால் நல்ல பலன் உண்டு.இதை நாங்கள் ஒருபொழுதும் மறுக்கவில்லை.ஆனால் அங்கே வெறும் பூஜை என்ற அளவில் மட்டும் நின்று,மனித நேயம் புறக்கணிக்கப்பட்டால்,அந்தப் பூஜையால் எந்தப்பலனும் இராது என்பதை கூறிக்கொள்கிறோம்.எனவே இஃதொப்ப பூஜையும் ஒரு மனிதனின் பல்வேறு பிறவிப்பாவத்தைப் போக்கும்.போக்குவதோடு,அவன் குண்டலினி சக்தியையும் மேலே ஏற்றும். முறையாக “ஸ்ரீ சக்ர”உபதேசம் பெற்று தன் வாழ்நாள் முழுவதும் நித்திய “ஸ்ரீ சக்ர”பூஜையை ஒருவன் செய்தால்,அதுவே பரிபூரண தவத்திற்கு சமமாகுமப்பா.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக