புதன், 2 ஆகஸ்ட், 2017

ஆடிப்பெருக்கு உலக நல சங்கல்பம்




இந்த உலகம் நலம் பெற வேண்டி இந்த ஆடிப்பெருக்கு நன்நாளில் அகத்திய பெருமானையும் காவிரியாய் நின்ற தாயார் லோபாமுத்ரா தேவியையும் வணங்கி சங்கல்பம் ஏற்போம்.

நீரின்றி அமையாது உலகு 

ஆடிபட்டம் தேடி விதை என்ற மூதுரையை இந்நிலத்தில் நிறைவேற்றிடவும் 

தாவர சங்கமங்கள் சுழற்ச்சி தவறாது நிறைவேறவும் 

பூமி தாயின்மடியில் எண்ணற்ற சீவராசிகள் இன்புற்று இருக்கவும் விண்ணுக்கும் மண்ணிற்கும் சீவ தொடர்பாய் இருக்கும் நீர்எனும் உயிறாற்றல் சக்தியே இவ்வையகம் வளம்பட மழையாய் வந்திறங்கி நதிகளை நீர்நிலைகளை உயிர்பிப்பாய். 

ஆற்றல் மிக்க  வருணசக்தியே ஆடி திங்களை அழகாக்கும் காவிரி தாயே நீயே அகத்தியரின் விருப்பமான தேவியே கரைபுரண்டு ஓடி எங்கள் நிலம் செழிக்கவும் ,தீர்த்தங்கள் நிரம்பவும் தாயே தவழ்ந்து வருகவே.

உங்கள் பிள்ளைகள் உங்களை வரவேற்க காதோலை கருகமணி மங்களபண்டங்களுடன் காத்து இருக்கிறோம். 

எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் ஆசிர்வதிக்க நீர் சக்தியே நதிதேவியே நுரை பொங்க  ஆறுகள் நிறைய வருக தேவியே உமக்கு ஆரத்தி செய்ய காத்திருக்கிறோம். 

கடக திங்கள்முதல் மும்மாரி பொழிய  எங்கள் பிழை பொருத்து உலகம் செழிக்க வேண்டுகிறோம் தாயே. 

இவ்வுலகமென்ற சாம்ராச்சிய்தில் எள்ளவு எங்கள் இனம் ஆயினும் ஆணவமும் மாயையும் கொண்ட  இனம் இதை வாழ வைப்பதும் வீழ வைப்பதும் உந்தன் கருணை மனம்.

நன்றி:துர்க்கை தாசன் தாமரை செல்வம் அய்யா அவர்கள்,சென்னை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக