ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

பர்மா, யாங்கூனில் நடை பெற்ற மகாயாகத்தை பற்றி யாகம் நடை பெறுவதற்கு முன் ஸ்ரீ அகத்தியர் அருளிய அருள்வாக்கு:




பர்மா, யாங்கூனில் நடை பெற்ற மகாயாகத்தை பற்றி யாகம் நடை பெறுவதற்கு முன் ஸ்ரீ அகத்தியர் அருளிய  அருள்வாக்கு:

 மங்களகரமாக இருக்கின்ற நிகழ்வுகளுக்கு மூலகாரணமாக விளங்குகின்றவன் இறைவன்.இறைசக்தி என்பது பிரபஞ்சம் முழுவதும் பரவி தான் கிடக்கின்றது. கிடக்கின்ற இறைசக்தி எல்லாம் உலக நன்மைக்காக எப்போதுமே இயங்கிக் கொண்டு தான் இருக்கின்றன. கால காலமாக சித்தர்கள் யாங்கள் எங்கெங்கு பயணித்தாலும் எங்கள் பயணங்கள் யாவும் அதி அற்புதமான உலக நன்மைக்காகவே அமையும் என்பதை அறிந்து கொள்வாய் கருணையே.

கருணையே உரைக்கின்றேன் கேளடா மைந்தா.இத்தலமதில் இருக்கின்ற பல சூட்சும ரகசியங்களை அன்னவன் உரைக்கின்றேன்.உலகம் என்பது தற்போது பார்வையில் பார்த்து கொண்டிருக்கின்ற நிலை என்பதை மட்டும் எண்ணி விடாதே.இது பிரபஞ்சத்தின் ஒரு துளி தான் என்பதை நீ அறிவாய் அப்பா. பிரபஞ்சம் என்பது இது போன்று கிட்டத்தட்ட 17 உலகங்களை அடக்கியதடா கருணையே. இந்த 17 உலகங்களுக்கும் இறையே மகா பரம்பொருளாய் வீற்றிருக்கின்றானடா. உலகத்தில் இருக்கின்ற எல்லா ஜீவராசிகளும் உங்களுடைய கணிப்பின்படி ஓருலகம் என்றெல்லாம் இல்லாமல் சகல உலகங்களுக்கும் இறைவனே பிரதானமாய் நிற்கின்றானடா. அந்த இறைசக்தி ஆட்கொள்ளும் போதும் ஒருவன் ஏகாந்தத்தை உணர்கின்றானடா. அவ்விதம் உணர்கின்ற ஏகாந்தமானது எப்பொழுதுமே அன்னவனுடைய ஆற்றலை பலவித எண்ணங்களுக்கு உட்பட்டு கொண்டு செல்லும் அற்புத ஆற்றலை உடையதாக தான் இருக்கின்றதடா.

உரைக்கின்றேன் கேளடா மைந்தா இத்தலமதில் நிகழ்கின்ற ஒவ்வொரு அபூர்வ நிகழ்வுகளை பற்றி யாங்கள் எப்போது , எச்சூழலில் இந்த உலகத்திற்கு நன்மை பயக்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டு சப்த ரிஷிகளும் ஓரிடத்தில் அமர்ந்து செய்கின்ற மகா யாகங்களை தற்போது தன்னையே உணராத மானுடருக்கு அளிக்கின்ற காலம் ஒன்று உண்டடா கருணையே. அது தான் தற்போது நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.

பர்மிய தேசம் என்று நாங்கள் அழைக்கபடுகின்ற தேசத்தில் மிகச் சரியாக இந்திய எல்லையின் ஈசானிய பகுதியில் இருக்கின்ற இப்பகுதியில் நடக்கப் போகின்ற இந்த மகா யாகத்தின் அதி நுட்பத்தை விவரிக்கின்றேன் கேளடா மைந்தா. நுட்பத்தின் நுட்பமென்று நாங்கள் உரைக்கின்றோமடா இதை. இப்போது அமைந்துள்ள இந்த ஸ்தலம் மிகச்சரியாக 17000 ஆண்டுகளுக்கு முன்னால் யாங்கள் யாகம் செய்த பூமியப்பா இது. இந்த பூமியில் எவரெவர் கால் வைக்கின்றார்களோ அவருடைய முற்பிறவி வினைகலெல்லாம் தானே அழிந்து விடும் தன்மையை கொண்டதடா. அத்தடம் பூமியின் கீழ்மட்டத்தில் காணப்படுகின்ற நுட்பமான மிகச்சிறந்த எரிமலை பகுதிகளை உள்ளடக்கிய பகுதியடா. அத்தடத்தின் மேல் தான் அத்தடத்தின் மேல் தான் தற்போது நீ மகாயாகத்தினை ஏற்றிருக்கின்றாயடா. இத்தலத்தில் நிகழ்த்தப் படுகின்ற மகாயாகமானது உலகத்திற்கே மிக அற்புதமான நன்மையை தரக்கூடியதாக இருக்குமப்பா. பேராற்றலை கொண்டு நடக்கின்ற ஆழி மற்றும் ஊழி என்று எங்களால் வர்ணிக்கப் படுகின்ற நீரால் அழியக்கூடிய சூழலை இந்த மகா யாகமானது நிச்சயம் தடுக்கும் என்பது தான் எங்களுடைய கூற்றடா.
ஆதலால் தான் இத்தலத்தில் யாங்கள் இதற்கான முன்னேற்பாடுகளை செய்திருக்கின்றோமடா. பூர்வ புண்ணியத்தின்படி எவனொருவன் இந்த தலத்திற்கு சென்று தரிசிக்கின்றானோ, அதனால் அன்னவனுடைய பாவ வினைகள் கழியப்படுகின்றன என்பதனை அறிந்து கொள்வாய். மேலும் கருணையே அற்புதமான இரகசிய மூலிகைகளை எல்லாம் யாங்கள் உங்களுக்கு அளித்து விட்டோம். அவைகளை எல்லாம் கொண்டு அத்தலத்தில் இருக்கின்ற மகா யாகத்தில் பூரண பஸ்பமாகும்படி அகோர மத்திரத்தை உச்சரித்து பிரயோகித்தால் நிச்சயம் உலகமே நற்பயனைப் பெறும் என்பதை தெரிந்து கொள்வாயடா.

மேலும் ஒன்றை விவரிக்கின்றேன் கருணையே. இத்தலத்தில் இருந்து கொண்டு எவனொருவன் இறையை மனமுருகப் பிரார்த்திக்கின்றானோ, அன்னவனுடைய பிரார்த்தனைகள் யாவும் பரிபூரணமாக ஜெயமாகும் என்பது திண்ணம். மேலும் இத்தலத்தில் மிகப்பெரிய மாற்றங்களை உள்ளடக்கக்கூடிய அற்புத யாகமப்பா இது. இந்த யாகத்தின் போது இடப்படுகின்ற பொருள்களின் மூலம் வெளிப்படுகின்ற சக்தியானது பிரபஞ்ச வெளியின் எல்லையைத் தாண்டி நிச்சயமாய் ஊடுருவுகின்ற சக்தியை பெற்றதாகுமப்பா இது. மேலும் 36 வகையான கூட்டு மருந்துகளை உன்னிடம் பகிர்ந்திருக்கின்றோமடா. இந்த கூட்டு மருந்துகளைக் கொண்டு நிச்சயமாக மகா பூர்ணாகுதியின் போது அதில் வெளிப்படுகின்ற கதிர்வீச்சுக்கள் நீல நிறமாகவும், வெண்ணிற நிறமாகவும் மற்றும் வெளிர் பச்சை நிறமாகவும் வெளிப்படும். அது இங்கே இந்த காற்றிலே கலந்து அதனுடைய சப்த ஒலிகளின் மூலம் ஈர்க்கப்பட்டு இந்த பிரபஞ்சத்தில் இருக்கின்ற ஜீவராசிகளை எல்லாம் திரும்பவும் பூலோகத்திற்கு கொண்டு வரக்கூடிய அதி அற்புத ஆற்றல் வாய்ந்த ஒளிக்கதிர்களாக அது மாறுமப்பா. இவ்வொளிக்கதிர்களை எவன் அருகில் இருந்து தரிசிக்கின்றானோ அல்லது இந்த ஹோமப்புகையில் இருந்து வருகின்ற அற்புத சுகந்தத்தை எவனொருவன் நுகர்கின்றானோ அன்னவன் உலகில் இருக்கின்ற அணுக்கதிர்கள் எல்லாம், அணுவால் செய்யப்பட்ட மூலங்களெல்லாம் எல்லாம் நிச்சயம் உயிர் பெறும் என்பது தான் உண்மையடா.

தள்ளாத வயதிலும் அல்லது சிறு குழந்தையாய் இருப்பினும் இந்த தலத்திற்கு வந்து இந்த மகா யாகத்தின் போது எழுகின்ற அற்புத கதிர்வீச்சுகளை எவனொருவன் நுகர்கின்றானோ அன்னவனுடைய உடலில் இருக்கின்ற நோய்கள் எல்லாம் நீங்கும் என்பது தான் உண்மையடா.தற்போது உலகத்தில் மிகப்பெரிய எதிரியாய் காணப்படும் புற்று நோய்கான தீர்வும் இத்தலத்திலே உண்டு என்பதை அறிவாயப்பா. புற்று நோய் கொண்ட ஒரு மாந்தன் இத்தலத்திற்கு அருகே அமர்ந்து இந்த மகா யாகத்தின் போது இச்சூழலில் அமர்ந்து சுவாசித்தாலே போதுமப்பா. அன்னவன் உடலிலே இருக்கின்ற எதிர்வினை கதிர்கள் யாவும் நிச்சயமாய் நீங்கிப் போகும். இத்தலத்திலே பஞ்சதேக மூர்த்தியாய் அமரும் ஸ்வாமியும், பஞ்சதேக மூர்த்திக்கு துணையாய் பாலாம்பிகையும் வீற்றிருப்பதால் எட்டுத்திக்கிலும் இருக்கும் பரம யோகிகளும் அங்கு வந்து அடைவார்களப்பா. இதுவும் இறை சூட்சமப்பா. இத்தலத்தில் இருந்து எவனொருவன் மகா யாகத்தை தரிசனம் செய்து எம்மை பிரார்த்திக்கின்றானோ அன்னவனுடைய பாவ சக்திகளில் இருந்து விடுபடுகின்றான். யாங்கள் கைலையிலேயே இதை யாங்கள் சூக்கும சித்தால் இந்நிகழ்வை இத்தலத்திற்கு மாற்றியிருக்கிறோமடா இதை. போதுமப்பா கருணையே இத்தலத்தில் நடக்கின்றன தருமங்கள் எல்லாம் விரைந்து நிறைவேறட்டுமப்பா. என் ஆசி எப்போதும் இறை ஆசியோடு கலந்து பிரபஞ்சத்தில் இருக்கின்ற மக்களுக்கு உண்டடா.

கருணையே எக்காரணம் கொண்டும், கருணையே எக்காரணம் கொண்டும் உரைக்கின்றேன் கேளடா. இத்தலத்தில் இருந்து கொண்டு பூமியில் உள்ள கலியுக மாந்தர்கள் எல்லாம் நான் சித்தன் என்றும், மற்றும் சித்தனை பூசை செய்பவன் எல்லாம் சித்தன் என்றும், மகா யாகங்களை செய்தவனெல்லாம் சித்தன் என்றும், நான் அகத்தியன் மறு அவதாரம் என்றும் எவனொருவன் கூறுகின்றானோ அவனெல்லாம் பொய் என்பதை அறிவாயடா. எவனொருவன் தன்னை அறிந்து கொண்டு உலக நன்மைக்காக பாடுபடுகின்றானோ அவனே எங்களால் உணரப்படுகின்றான். எங்களால் உணர்த்தப்படுகின்றான், எங்களால் உயர்த்தப்படுகின்றான் என்பதை அறிந்து கொள்வாய். கருணையே பரிபூரண நல்லாசிகளப்பா இத்தலமதில் இருந்து. பரமபவித்திரமான மூலிகைகளை சேகரித்துக் கொண்டிருக்கிறாய். அத்தனையும் கடல் கடந்து சென்று சேருமப்பா. என் ஆசி எப்போதும் உந்தனுக்கு உண்டடா.பரிபூரண ஆசிகள் . சுபம் பல.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக