சனி, 12 ஆகஸ்ட், 2017

அகத்தியர் ஜீவ அருள் நாடி



ஜீவ நாடி என்றால் என்ன? இதற்கும் பரவலாக காணப்படும் காண்ட நாடிக்கும் என்ன வேறுபாடு?

‘ஜீவன்’ என்றால் உயிர் (LIVE). அப்படி உயிரோட்டமாக இருக்கக்கூடிய ஒரு விஷயம். இந்த ஓலையிலே, வருகின்ற அன்பர்களின் தன்மைக்கு ஏற்ப சித்தர் பெருமக்கள் உயிரோட்டமாக வந்து அந்தத் தருணத்தில் அடியேன் கண்களுக்கு எழுத்து வடிவமாகவும், சில சமயம் உள் உணர்வாகவும் அருள்வாக்கை கூறுகிறார்கள். இது தொடர்பான  ஓலைக்கு ‘ஜீவ நாடி’ என்று பெயர்.குறிப்பாக இந்த சுவடியிலே சித்தர்கள் கூறுகின்ற அருள்வாக்கின் தன்மைக்கு,சித்தர்களே இட்ட பெயர்தான் ‘ஜீவ அருள் நாடி’ என்பது.

இந்த ஜீவ அருள் நாடியில் எந்தெந்த சித்தர்கள் வாக்கை அருளுகிறார்கள்?

இந்த ஜீவ அருள் ஓலையிலே அகஸ்தியர், காக புஜண்டர், வசிஷ்டர் – இந்த மூவரும் பிரதானமாக வாக்கை அருள்வது உண்டு. ‘மூன்று’ என்பதற்கு சித்தர்களின் பரிபாஷையிலே ‘சூலம்” என்ற பொருள் வரும். இந்த மூவரையும், ‘சூலமாமுனிவர்கள்’ என்றும் சிலர் அழைப்பார்கள். இம்மூவர் மட்டும் அல்லாமல், ஏனைய சித்தர்களும் வாக்கை கூறினார்கள். கூறினார்கள் என்று ஏன் கூறுகிறேன்? என்றால் இப்பொழுது அகஸ்தியர் மட்டும் வாக்கைக் கூறிக்கொண்டு இருப்பதால், மீண்டும் மற்ற முனிவர்களும்,மகான்களும் வாக்கு கூறுவார்கள் என்ற எதிர்பார்ப்பில், கூறினார்கள் என்று கூறியிருக்கிறேன். இப்பொழுது அகஸ்தியம்பெருமானின் அருள் வாக்கை மட்டும் நாம் பெற்றுக்கொண்டு இருக்கிறோம்.

தன்னை அதிகம் வெளிக்காட்டிக் கொள்ளாது, ஜோதிடத்தை ஒரு சேவையாக எண்ணிச் செய்து வருபவர் திரு கணேசன். பல ஆண்டுகளாக இவர் தன்னிடம் இருக்கும் ஜீவநாடி மூலம் பலன் சொல்லி வருகிறார்.  இதற்காக இவர் ”கட்டணம் இவ்வளவு கொடு” என்று கேட்டு வாங்குவதில்லை. கொடுப்பதைப் பெற்றுக் கொள்கிறார். அவ்வாறு வரும் பணத்தையும் நாடியில் வரும் கட்டளைப்படி அன்னதானத்திற்கும், தீப வழிபாட்டிற்கும், யாகங்கள் போன்றவற்றிற்கும் பயன்படுத்தி வருகிறார். ஒரு ஆன்மீக சேவையாகவே எண்ணி இதைச் செய்து வருகிறார்.


Mr. J.Ganesan,Siddhar Arut KudilNo. 33/56,2nd streetco-operative colonyopp. co-operative bus stopThanjavur-7Phone: 9443421627

பெரும்பாலான நேரங்கள் அவர் நாடி படித்துக் கொண்டிருப்பதாலும், பூஜை செய்து கொண்டிருப்பதாலும் செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்ட நிலையிலேயே இருக்கும். அவருக்கு உங்கள் பெயர் விவரங்களை அளித்து எஸ்.எம்.எஸ் அனுப்பினால் பின்னர் அவரே உங்களைத் தொடர்பு கொள்வார்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக