புதன், 16 ஆகஸ்ட், 2017

கொசுவும் இறைவனின் படைப்புகளில் ஒன்று. அவற்றைக் கொல்லாமல் எங்களை தற்காத்துக்கொள்ள என்ன வழி



தன்வந்த்ரி வழிபாடு. தன்வந்த்ரி பூஜை, இயன்றால் தன்வந்த்ரி யாகம், இல்லம்தோறும் கலப்பில்லா சாம்பிராணி நறுமணப்புகை, இஃதொப்ப செய்வதோடு பேய்ப்புடலை (பேய் புடல்)  என்ற மூலிகை ஒன்று இருக்கிறது. இஃதோடு நிலவேம்பு, மிளகு, கீழ்காய் நெல்லி(கீழா நெல்லி) என்ற மூலிகை சேர்த்து ‘  எங்கள் நன்மைக்காக உங்களை பயன்படுத்துகிறோம். எனவே எங்களை மன்னியுங்கள் ‘  என்று மானசீகமாக மன்னிப்பை வேண்டி பிரார்த்தனை செய்துவிட்டு அன்றாடம் கலுவத்தில் இட்டு கஷாயமாக செய்து அதிகாலை வெறும் வயிற்றில் அருந்திவந்தால் கொசுவால் ஏற்படும் பாதிப்புகள் பரவாது, குறையும், மட்டுப்படும். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக