புதன், 26 ஜூலை, 2017

அரசண்ணாமலை ஸ்ரீ லோபாமுத்திரை சமேத சத்குரு ஸ்ரீ அகஸ்தியர் லிகித ஜெபம்

ஈரோடு மாவட்டம் பெருந்துறை வட்டம் விஜயமங்கலம் அருகில் உள்ள அரசண்ணாமலையில் அகஸ்தியர் அய்யா லோபாமுத்திரை அம்மா விக்கிரகம் ப்ரதிஷ்ட்டை செய்ய இறைவன் அருள் அனுமதி கொடுத்து உள்ளார்.இதன் பொருட்டு லிகித ஜெபம் எழுத அருளாணை இட்டுள்ளார். "ஓம் அகத்தீசாய நம, ஓம் மாதா லோபாமுத்ராய நம " என்ற மந்திரத்தை குளித்து  விட்டு, ப்ரம்ம முகூர்த்தத்தில் ஒரு தீபம் ஏற்றி எழுத வேண்டும்.  உண்மையில் ஆர்வம் உள்ளவர்கள்  எழுத தொடங்கலாம்.கருப்பு  மை தவிர பிற வண்ணங்களில் எழுதலாம்.  இந்த மலை வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளதால் கும்பாபிஷேக தேதி வனத்துறையின் அனுமதிக்கு பின் முடிவு செய்யப்படும்.  எனவே, எப்போது லிகித ஜெபத்தை ஆலயத்தில் சேர்க்க வேண்டும் என்பதை பின்னர் உரைக்கிறோம்.









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக