செவ்வாய், 1 ஆகஸ்ட், 2017

அகத்திய பெருமானுக்கு முருகப்பெருமான் உபதேசித்த சுப்ரமணியர் ஞானம் இருநூறு



அண்டபரா பரமான பரையின் பாதம்
ஐயனெங்க ளாதிவஸ்து பதமும் போற்றி
தொண்டர்கள்மெய்ஞ் ஞானியுட பதமும் போற்றிச்
சொல்லுமுப தேசமிரு நூறுதன்னை
மண்டலீகர் மகாயோகி மதிக்கவென்று
மருவில்லா ஞானமதை மாட்டுவேன்யான்
கண்டபடி கண்டகோ டாலியாகக்
கணக்காக ஞானமதைக் காட்டுவோமே
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 1


விளக்கம்:

இந்த அண்டத்திற்கு எல்லாம் பராபரமான பரம்பொருளின் பாதம்,பஞ்ச பூத சக்திகளை வேண்டி போற்றியும்,தொண்டர்கள், மெய்ஞ் ஞானிகளையும் வேண்டி போற்றுகிறார்.உபதேசமாக சொல்லும் இந்த இருநூறை மண்டலத்தலைவர்கள் ,மகாயோகிகள் மதித்தால் மருவில்லாத ஞானத்தை  காட்டுவேன்.நான் கண்ட ஞானத்தை கண்டபடியே கோடாலி கொண்டு செதுக்குவது போன்று செதுக்கி கணக்காக ஞானத்தை காட்டுவோம் என்று கூறி முருகப்பெருமான் அகத்திய பெருமானுக்கு ஞானத்தை போதிக்க ஆரம்பிக்கிறார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக