தங்கியே மனதிலேயும் நிலையாய்த்தங்கித்
தமர் திறக்கும் வாசலுட கதவு கண்டு
அங்கியேஆறுதல மடுத்தேறி
ஆதிவஸ்தை யனுதினமு முன்னுட்கொண்டு
எங்கியே யீராறு தலமுந்தாண்டி
யிடகலையும் வலகலையும் அழியச்செய்து
பங்கியே பரமான நதியுந்தாண்டிப்
பச்சைமயி லேறியுந்தான் பாடுவாயே.
-சுப்ரமணியர் ஞானம் இருநூறு,பாடல் 6
விளக்கம்:
முன் சொன்ன மந்திரத்தை மனதில் வைத்து நிலைத்து
நின்றால்,சுழி முனை என்கிற கதவு திறக்கும்.அதன் பின் ஒவ்வொரு தலமாக ஏறி ஆதி வஸ்து
என்று சொல்லக்கூடிய ஓங்காரத்தை தினமும் தியானித்து சிவ சக்தி பூஜை எனும் தச தீட்சை
பெற்று இட கலையையும், வலகலையும் அழிய செய்து பச்சை மயில் எனப்படும் வாலையின் துணை
கொண்டு சுழி முனை நாடி ஏறிடுவாய் என்று கூறி ஆறாம் பாடலை முருகப்பெருமான் நிறைவு
செய்கிறார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக