புண்ணிய பூமியான இந்த பாரத தேசமும்,ஆன்மீக பூமியான இந்த தமிழகமும் தொற்று நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகின்றது.எந்த மருத்துவமும் கை கொடுக்கவில்லை மற்றும் மக்களும் கலியின் பிடிக்கு ஆட்பட்டு இறை நினைப்பை விடுத்து உலகமே துன்பத்தில் ஆழ்ந்து அடைபட்டு கிடக்கிறது.
பல சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள் தோன்றிய இந்த புண்ணிய பூமிக்கு ஏன் இந்த இழிநிலை?.
அவர்களை நாம் மறந்ததுதான்.
கருவூரார் சித்தர் தன் வாதகாவியம் பாடல் 147ல் சொல்கிறார்...
கலியன் வந்தானென்று ககன ரிஷிகளும்
கலியனைக் கண்ணிலும் காணாதிருக்க
கலியனை விட்டு கயிலைக்கு சென்றே
கலியுக மட்டுங் கடுந்தூக்கங்கொண்டார்
என சொல்கிறார்..அதாவது இப்போது இருக்கும் கலியுகத்தை கன்ணிலும் பார்க்க கூடாது என்றும் வாழப்பிடிக்காமலும் கயிலை மலையில் யோக நிஷ்டைக்கு சென்று விட்டார்களாம்..அவ்வளவு அராஜகங்களும் கொடூரங்களும் தர்மத்துக்கு இடையூறுகளும் நடக்குமாம் இந்த கலியுகத்தில்.கலியுகத்தில்உண்மையானசித்தர்களும்,முனிவர்களும்,
சாமியார்களும் காண முடியது என்றும் அப்போதே சொல்லி இருக்கிறார்.
ஆனால் உண்மையாக தன் குருமார்களிடம் பக்தி கொண்டோர் வேண்டினால் அவர்கள் தங்களின் தூக்கத்தை கலைத்து தம் சேய்களான நம்மை காப்பாற்ற மாட்டார்களா?
இந்த குரு பூர்ணிமா நிகழும் நன்னாளான
04-07-2020 மதியம் 12:02ல் இருந்து நாளை காலை 05-07-2020 10:58 க்குள்
அவர்களை வேண்டி துதிப்போமா?
நம்மை படைத்த தெய்வம் நம்மை காக்காதா?.ஏன் குருமார்களை வேண்ட வேண்டும் என்று கேட்கலாம்.
நீங்கள் குருவிடத்து வேண்டும் போது,உங்களின் வேண்டுதல் அவரின் பரம குருவிடம் செல்லும்.பின் பரமகுருவின் வேண்டுதல் பராபர குருவின் குருவிற்க்கு செல்லும்.பராபர குருவின் வேண்டுதல் பராபரத்திடம் செல்லும்.
நம்முடைய வேண்டுதலால் மட்டும் இந்த தொற்று நோயை ஒழிக்க இயலாது.நம்முடைய குருமார்களும்,அவர்தம் குருமார்களும் துணை நின்றால் மட்டுமே சாத்தியம்.
வேண்டுதல்.
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!.
ஓம் ஸ்ரீ லோபாமுத்ரா தேவி சமேத சத்குரு ஸ்ரீ அகத்தீசாய நமக !
அப்பனே!எங்கள் குருமார்களே,முனிவர் பெருமக்களே,ரிஷிமார்களே,முனிபுங்கவர்களே,சித்த புருஷர்களே மற்றும் ஆச்சாரிய பெருமக்களே இது காலும் தங்களை மறந்து நாங்கள் இறை நினைப்பு சற்றும் இன்றி கலியின் ஆட்டத்திற்கு உட்பட்டு கிடக்கின்றோம்.இறையும் குருவும் ஒன்றென உணர்ந்தோம்.ஆகையால் எங்களை எல்லோரும் உங்கள் சேய்களாக ஏற்று
மானிட ரூபமுள்ள ருத்ர பசுபதியும்
சிவ தத்துவம்,ஆத்ம தத்துவம்,வித்யா தத்துவம் மற்றும் சர்வ தத்துவங்களுக்கு மத்தியில் பிந்துவில் மும் மூர்த்திக்களையும்,பஞ்ச பூதங்களை ஆசனமாக கொண்ட அன்னை லலிதாம்பிகையும்
இந்த தொற்று நோயின் பிடியில் இருந்து அனைத்து உலக மக்களையும் காப்பாற்றி உய்வித்து அருள தங்களின் பொற்கமல பாதார விந்தங்களை பணிகின்றோம்.
ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
திருவடிகள் போற்றி ! போற்றி !
ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
திருவடிகள் போற்றி ! போற்றி !
ஓம் அனைத்து சித்தர்கள்,ரிஷிகள்,முனிவர்கள்,ஆச்சாரியர்கள்
திருவடிகள் போற்றி ! போற்றி !
